BRO WROTE///பேதுரு நல்ல மேய்ப்பன் இல்லையா? ஒரு கெட்ட மேய்ப்பனிடத்தில் தேவன் தம் ஆடுகளை கொடுக்கமாட்டார்.///
பேதுருவிற்கு மேய்ப்பு பணி கொடுக்கபட்டுள்ளது,மறுக்க இடமில்லை..ஆனால் அவர் நல்ல மேய்ப்பர் என வேதம் காட்டாத முடிவினை நீங்கள் எவ்வாறு எடுக்கிறீர்கள் !!!
யோவான் 10:11நானேநல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
மேற்கூறிய வசனத்தில் "நானே" எனும் பதம் நான் ஒருவரே என்பதை தான் குறிக்கும் அல்லாமல் பேதுருவையும் சேர்த்து என பொருள் வராதே!!! நல்ல மேயப்பரான இயேசு ஆடுகளாகிய நமக்காக மரித்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால் பேதுரு ரத்தசாட்சியாய் மரித்தவர்.மரணத்தில் தேவனை மகிமை படுதினவர்.
யோவான் 21:19 இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனைமகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.
ஆக., ஆடுகளுக்காக மரித்த ஒரே மேய்ப்பர் இயேசு என்பதை சகோதரர் அறிந்து, அவரை உடன் வேலையாளுடன் ஒப்பிடவேண்டாம்..பேதுரு யேசுவுடன் சேர்ந்து அறுக்கிறவர்..அவரது பலன் அவருக்கு தேவனால் தரப்படும் மாற்றுகருத்தில்லை ..
BRO WROTE////பேதுரு நல்ல மேய்ப்பன் இல்லையா? ஒரு கெட்ட மேய்ப்பனிடத்தில் தேவன் தம் ஆடுகளை கொடுக்கமாட்டார்.///
இன்றைக்கு 'ஆவிக்குரிய சபை' என அநேகர் கடை விரித்து வைத்துள்ளனர் சகோதரரே..சபையில் நிறைய ஆடுகள் இருக்கின்றன என்பதால் மேய்ப்பர் நல்லவர் என பொருள் அல்ல..வைக்கோல் ஊழியங்கள் அநேகம்,விலை உயர்ந்த கல் போன்ற ஊழியங்கள் மிக குறைவு..
I கொரிந்தியர் 3:12 ,13 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,.. அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
அவனவன் வெளிபாட்டை வெளிகாட்டும் நாளை தேவன் நியமித்துள்ளார்.
//I WROTE ஆடு மேய்த்து கொண்டிருந்த தாவீது கர்த்தரால் ராஜாவாய் அபிஷேகம் பண்ணப்பட்டார். தாவீது ராஜ்யபாரம் கையில் கிடைக்கும் வரைக்கும் சவுலுக்கு மறைந்து வனாந்திரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருக்கவில்லை.//
BRO WROTE தாவீது அபிஷேகம் பண்ணப்பட்ட பின்னர் ஆடு தான் மேயத்தார்.//
நான் குறிப்பிட்டதை பாருங்கள்..சவுலுக்கு மறைந்து,வனாந்திரத்தில் மறைந்து இருக்கும்போது ஆடுகளை மேய்க்கவில்லை..சத்ருக்களை சங்கரித்து கொண்டிருந்து,சங்கீதம் பாடிகொனு,சோதனைகளை சகித்து கொண்டிருந்தார்.. ராஜ்யபாரம் கைமாறியதை சவுல் அறிந்த போது(தாவிதின் அபிஷேகத்தை தாவீதும்,சவுலும் உணர்ந்த பிற்பாடு)சவுலுக்கு தாவீது பகைஞன் ஆகிறானே!! அப்போது தானே வனாந்திர வாழ்க்கை தாவீதுக்கு!!
BRO WROTE////ஆமாம், சுவிசேஷம் சொல்ல வேண்டியது தேவ சித்தம், பசிக்கு உணவு தேடுவது தேவன் மனிதனுக்கு தந்திருக்கும் வடிவமைப்பு. சுவர் இருந்தாலே சித்திரம் வரைய முடியும்.
இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது "அப்போ. பவுலும் பின் வாங்கிப் போனவர் தான்". ஏனென்றால் பவுலும் திடீர் திடீரென அவர் தொழிலுக்கு திரும்பிசென்று விடுகிறார்.
1 தெசோ 2:9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். ///
பவுல் திரும்பி சென்றுவிடவில்லை.,இல்லாமையில் இருந்தும் ஊழியம் செய்கிறார்.சகோததரரே இரவும் பகலும்,உழைத்து உண்டு,சுவிஷேத்தை அன்றாடம் பிரசங்கித்த நல்ல ஊழியர் தான் பவுல்..இவரது ஜென்ம தொழிலுக்கு இவர் திரும்பினதாக வசனம் உள்ளதா?? இவரை எப்படி பின்னிட்டு போனவர் என நான் கூறுவதாக கேட்கிறீர்கள்!! பவுல் என்றும் உழைத்தே ஊழியம் செய்கிறார்.
சரி உங்களிடம் ஒரு கேள்வி..நீங்கள் POSITIVE ஆக காண்பிக்கிற காரியதின்படி பார்த்தால்,மேய்ப்பனாக அழைக்கபட்ட பேதுரு பின் ஏன் மீன்பிடிக்க செல்லவில்லை!!! வேதம் ஏன் பேதுருவின் மற்றொரு மீன்பிடிப்பை போதிக்கவில்லை???
இக்காரியத்தை நீங்கள் தியானித்தால் இயேசு ஏன் பேதுருவை பார்த்து 'மூன்று முறை என்னை நேசிகிறாயா?'என ஒரே மாதிரியான கேள்வியை கேட்டார் என அறிந்து கொள்வீர்கள்.? மூன்றாம் முறை இயேசுவால் அதே கேள்வி கேட்கப்படும்போது பேதுரு விசனப்பட அவசியம் என்ன??காரியம் இல்லாமலா just like that என விசனப்பட்டார்?? இயேசு ஏன் பேதுரு விசனப்பட்ட பின் நான்காம் முறை அதே கேள்வியை கேட்கவில்லை.அவரது பின் மாற்றத்தை உணர்ந்ததாலேயே அல்லவா !!
BRO WROTE///நான் அப்போ. பேதுருவை பிரதான அப்போஸ்தலர் என்று சொல்லவில்லை. முதன்மையானவர் என்றே குறிப்பிட்டுள்ளேன். அப்போச்தலருக்குள் மிகுந்த மரியதைகுரியவராய் விளங்கியதை வேதத்தில் நாம் காணலாம். ///
நாம் பேதுருவின் குறிப்பிட்ட சமயத்தில் நடந்த நடவடிக்கைகளை மாத்திரம் பேசிகொண்டிருக்கிறோம்.,பின்னாளின் மகிமையின் ஊழியங்களை பற்றி அல்ல சகோதரரே..அப்போஸ்தலர் பணியில் இருந்து நீங்கள் காண்பித்திருக்கும் அனைத்து வசனங்களும் நாம் விவாதித்து கொண்டிருக்கும் மீன்பிடி சம்பவத்திற்கு அடுத்து நடந்த சம்பவங்களே.. விஷேசித்த ஊழியம் பேதுருவிற்கு உண்டு சகோதரரே.மறுக்க நான் யார்!!சபையை அவர் மீது அல்லவே தேவன் கட்டுகிறார்..
புதிய எருசலேமின் 12 தூண்களில் அவரும் ஒரு தூண்.மறுக்கவில்லை.அப்போஸ்தலர் அனைவரும் மகா பிரதானமானவர்களே!! இவர் பெரியவர் அவர் சிறியவர் என்றும் இல்லை..அனைவர்க்கும் தலை,அஸ்திபாரம் கிறிஸ்துவே..பட்சபாதம் இல்லை.
பேதுரு முன் நின்று நடத்திய 12 ஆம் அப்போஸ்தலருக்கான சீட்டு போடப்பட்ட காரியம் வித்தியாசமானது..பேதுருவின் தெரிந்தெடுப்பு,கர்த்தரின் தெரிந்தேடுபாக முடியவில்லை என தாங்கள் அறியவில்லையா.. விக்கிரகத்திற்கு படைக்கும் காரியத்தை பற்றி 12 அப்போஸ்தலர்கள் ஏற்படுத்தின முடிவு ,பவுலினால் வேறுமாதிரியாக முடிவு கட்டப்பட என்ன காரணம் என நீங்கள் அறிந்திருந்தால் பகிருங்கள் சகோதரரே..ஒருவரும் கூட்டப்பட்ட கூட்டத்தின் போது எதிர்க்கபடாத பேதுருவின் கருத்து பவுல் மூலமாய் சிலகாலம் கழித்து மாற்றப்பட காரியம் என்ன!!?? பேதுருவின் கருத்து குறைவுள்ளதாய் இருந்தா காரணத்தினால் தானே!!!
அப்போஸ்தலர் ஓவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் விஷேமானவர்களே.. இவர்களுக்கு பிரதானமான அப்போஸ்தலர் நம் நித்திய பிரதான ஆசாரியனும்,அப்போஸ்தலருமான கிறிஸ்து..
BRO WROTE///நீங்கள் கேட்பது "இயேசு தெய்வமே" என்று எழுதி இருக்கும் ஒரு வசனத்தை காட்டுங்கள் என்பது போல இருக்கிறது. இயேசு தெய்வம் என்பதை நாம் பல வசன்களில் உள்ள கருத்துகளிக் கொண்டும், அவரால் செயப்பட்ட காரியங்களை வைத்தும் நிதாநிக்கிறோம்.///
நிச்சயம் இவ்விசயத்தில் நாமாக நிதானிக்க அவசியம் இல்லை சகோதரரே., இயேசுவே மெய்யான தேவன் என வசனமே உள்ளது..
I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
BRO WROTE//பின்மாற்றத்திற்கு தேவன் யாரையும் முன் குறிப்பாரா? இந்த தலைப்பில் உங்களிடம் இருந்து ஒரு கட்டுரை எதிர்பார்க்கிறேன். :)// நிச்சயம் தருகிறேன் சகோதரரே !!!! சகோதரரே!!
பக்தி வைராக்கியத்தில் நாம் அனைவரும் வளர தேவன் உதவ வேண்டிகொள்வோம்.
தேவ கிருபை உங்களோடு இருப்பதாக , ஜான்
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!
-- Edited by JOHN12 on Friday 2nd of March 2012 12:24:56 AM
பேதுரு நல்ல மேய்ப்பன் இல்லையா? ஒரு கெட்ட மேய்ப்பனிடத்தில் தேவன் தம் ஆடுகளை கொடுக்கமாட்டார்.
//லூக்கா 6:40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.//
பேதுரு தேரினவன் என்று தான் நான் விளக்க முற்பட்டுள்ளேன்.
//நமக்கு கர்த்தரின் நாமம் தான் தரிக்கபடுமே தவிர வேறெந்த மேய்ப்பனின் நாமமும் அல்ல//
உண்மையே. இந்த உலகில் இருக்கும் வரை நமக்கு ஆவிக்குரிய மேய்ப்பர்கள் அவசியம் என்று தான் இந்த சம்பவத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவே எங்கள் மேய்ப்பர் அதனால் என் சபை போதகரோ, மூப்பரோ என்னிலும் மேற்பட்டவர் அல்ல என்று நினைப்பதே இன்று பல பிரச்சனைக்கும் காரணம்.
//பேதுருவிற்கு கர்த்தர் காட்சி அளிக்கும் முன்புவரை கர்த்தர் உயிர்த்தார் என அவர் விசுவாசிதிருந்தாரா? வேத ஆதாரம் தாருங்கள்.//.
முதல் தரிசனம் வரை அறியாதிருந்தார் --> யோவான் 20: 9
யோவான் 21இல் நடந்த சம்பவம் மூன்றாவது தரிசனம்.
//இப்போது பேதுருவிற்க்கும், மற்ற சிஷருக்கும் என்னவாயிற்று..உணவிற்காக கடலை சார்ந்துகொள்ளுங்கள் என தேவன் கட்டளை இடவில்லையே.. சுவிஷேத்தை பிரசங்கித்து தேவ சித்தம் செய்யாமல் உணவை இரவு வேலையில் தேடி ஜீவனை வளர்க்க நம் கர்த்தராகிய இயேசு அவர்களை பழக்கு வித்தாரா.//
ஆமாம், சுவிசேஷம் சொல்ல வேண்டியது தேவ சித்தம், பசிக்கு உணவு தேடுவது தேவன் மனிதனுக்கு தந்திருக்கும் வடிவமைப்பு. சுவர் இருந்தாலே சித்திரம் வரைய முடியும்.
இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது "அப்போ. பவுலும் பின் வாங்கிப் போனவர் தான்". ஏனென்றால் பவுலும் திடீர் திடீரென அவர் தொழிலுக்கு திரும்பிசென்று விடுகிறார்.
1 தெசோ 2:9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
அப்போ 20:34,35 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
//ஆடு மேய்த்து கொண்டிருந்த தாவீது கர்த்தரால் ராஜாவாய் அபிஷேகம் பண்ணப்பட்டார். தாவீது ராஜ்யபாரம் கையில் கிடைக்கும் வரைக்கும் சவுலுக்கு மறைந்து வனாந்திரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருக்கவில்லை.//
தாவீது அபிஷேகம் பண்ணப்பட்ட பின்னர் ஆடு தான் மேயத்தார்.
அபிஷேகம் பண்ணப்பட்டார்:
1 சாமு 16:13அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்
சவுலுக்கு ஆயுததாரி ஆனார்:
1 சாமு 16: 21 தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்
மீண்டும் ஆடு மேயத்தார்:
1 சாமுவேல் 17:15 தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்
//சகோதரரே அப்போஸ்தலர்களில் தலைவன் என்று ஒருவர் இல்லை என்பதை அறிவீர்களாக ..//
நான் அப்போ. பேதுருவை பிரதான அப்போஸ்தலர் என்று சொல்லவில்லை. முதன்மையானவர் என்றே குறிப்பிட்டுள்ளேன். அப்போச்தலருக்குள் மிகுந்த மரியதைகுரியவராய் விளங்கியதை வேதத்தில் நாம் காணலாம்.
அவரே சபையில் பல காரியங்களுக்கு முன்னோடி என்ற கண்ணோட்டத்தில் தான் அப்படி குறிப்பிட்டேன்.
நீங்கள் கேட்பது "இயேசு தெய்வமே" என்று எழுதி இருக்கும் ஒரு வசனத்தை காட்டுங்கள் என்பது போல இருக்கிறது. இயேசு தெய்வம் என்பதை நாம் பல வசன்களில் உள்ள கருத்துகளிக் கொண்டும், அவரால் செயப்பட்ட காரியங்களை வைத்தும் நிதாநிக்கிறோம்.
அதுபோலவே, கீழ்க்கண்ட வசனங்களை சிரமம் பாராமல் ஜெபத்தொடு ஆராய்ந்து பாருங்கள்.
அப்போ 1:13 - மேல் வீட்டில் இருந்தவர்களின் பட்டியலில் பேதுருவுக்கே முதல் இடம்.
அப்போ 1:15 -யூதாஸின் இடத்தில் மற்றொரு சீஷனை தேர்ந்தெடுக்க பேதுருவே எழுந்து நின்று பேசுகிறார். ஒருவரும் அவரை எதிர்த்து பேச துணியவில்லை.
அப்போ 2:14 - பரிசுத்த ஆவியை பெற்ற பிறகு சுவிசேஷத்தை பிரசங்கம் செய்த முதல் அப்போச்த்தலர் பேதுருவே.
அப்போ 2:38 -சபையில் பாவ மன்னிப்பை குறித்தும், ஞான ஸ்நானத்தை குறித்தும் பிரசங்கித்த முதல் அப்போச்த்தலர் பேதுருவே.
அப்போ 3:1,3,4 - ஜெப ஆலயத்துக்கு சென்ற சம்பவத்தில் சொல்லப்பட்ட முதல் அப்போச்த்தலர் பேதுருவே..
அப்போ 3:6-7 - சபை ஸ்தாபிக்கப்பட்ட பின் முதல் சுகமாக்கும் அற்புதம் செய்தவர் அப்போச்த்தலர் பேதுருவே..
அப்போ 3:12-26, 4:8-12 - ஆதி சபைக்கு கிறிஸ்துவினால் உண்டாகும் சுகத்தையும், பாவ மன்னிப்பையும் பிர்சங்கித்தவர் அப்போச்த்தலர் பேதுருவே.
அப்போ 5:15 - பேதுருவின் நிழலாகிலும் சுகம் ஆக்குமா என்ற எதிப்பார்ப்ப்பு இவர் வாழ்க்கையில் நடந்தது வேறு எந்த அப்போச்தலருக்கும் இந்த கனம் கொடுக்கப்படவில்லை.
அப்போ 8:14 - சபையின் முதல் திடப்படுத்துதல் இவர் மூலமே நடந்தது.
அப்போ 9:38-40 - மரிதவரை எழும்பப் பண்ணின முதல் அப்போஸ்தலர்..
அப்போ 10:5 - தரிசனம் கண்ட முதல் அப்போச்தலன்.
அப்போ 10:34-48, 11:1-18 - புற ஜாதிக்கு சுவிசேஷம் பிரசங்கித்த முதல் அப்போச்த்தலன்
அப்போ 12:5 -முழு சபையும் அவனுக்காக வேண்டுகிறது
அப்போ12:6-11 - அதிசபையில் தூதர்கள் இடைப்பட்ட முதல் மனிதன்
அப்போ 15:7-12 - விருத்த சேதனம் குறித்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தவன். ஒருவரும் இவனை எதிர்த்து பேசவில்லை.
அப்போ 15:13-14 - யாக்கோபு பேதுருவின் கருத்தை வலியுறுத்துகிறார்.
1 கொரி. 9:5 – கேபா என்பது பேதுருவை குறிக்கிறது. மற்ற அப்போச்தலரிலும் வித்த்யாசப்படுத்தி பவுல் குறிப்பிடுகிறார்..
1 கொரி 15:4-8 - இயேசு தரிசனம் கொடுத்த முதல் அப்போச்த்தலர்.
/// இரவு வேளையில் மீன் பிடிக்க தனியே செல்ல துணிவது தம் சகோதரர் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறது. இது ஒரு நல்ல மேய்ப்பனுக்கான தகுதி.///
சகோதரரே நல்லமேய்ப்பன் பேதுரு என்கிறீர்களா??
நல்ல மேய்ப்பன் இயேசு மாத்திரமே.. மற்றவர்கள் அவருடன் சேர்ந்து அறுகிறவர்கள்..அவ்வாறில்லாதவர்கள் சிதறடிக்கிரவர்கள் தான்..
மத்தேயு 12:30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
தேறினவன் எவனும் குருவை போல் இருக்கலாம் தவிர: நம் குருவாகிய இயேசுவை மிஞ்ச இயலாது..
லூக்கா 6:40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
நமக்கு கர்த்தரின் நாமம் தான் தரிக்கபடுமே தவிர வேறெந்த மேய்ப்பனின் நாமமும் அல்ல..
///இது யோவானால் எழுதப்பட்டிருந்தாலும் , பேதுருவுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதை நாம் காணலாம். ஆகவே தான் பேதுரு இயேசுவானவரோடு கூட செய்த பல உரையாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளது. (யோவான் 6:66-69, 13:6-37, 18:10-27, 20:2-10, 21:2-22) . இதன் மூலம் அப்போஸ்தலரின் தலைவன் என்று எண்ணப்பட்ட பேதுருவின் தகுதியை தம் வாசகருக்கு சொல்ல முற்படுகிறார்.///
சகோதரரே அப்போஸ்தலர்களில் தலைவன் என்று ஒருவர் இல்லை என்பதை அறிவீர்களாக ..
சபைக்கு அப்போஸ்தலர்கள் பிரதானமானவர்கள்.. அவர்கள் அனைவரும் பிரதானமானவர்களே என பொருள் கொள்ளலாம்..வசன ஆதாரம் பாருங்கள்..
II கொரிந்தியர் 11:5 மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
பவுல் கூறிய இவ்வசனத்தில் "மகா பிரதான அப்போஸ்தலரிலும்" என பன்மை பதத்தில் வர காரணம் அப்போஸ்தலர்களுக்குள் ஏற்றதாழ்வு இல்லை, கத்தோலிக்கர்களின் தவறான வியாக்கியானம் தான் இந்த தவறான புரிதலுக்கு காரணம்..
அவர்கள் பேதுரு தான் முதலாம் போப்பாண்டவர் என கணக்குகளை அடுக்கி பாவமன்னிப்பின் போது குருவானவர் யேசுவாகவே மாறுகிறார் என தவறாய் விதைக்கின்றனர்.. இவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள்..
அதேபோல இன்னொறு கருத்து என்னெவெனில் யேசுவும் அப்போஸ்தலரே..ஆனால் தம் நண்பர்களை பார்க்கிலும் அதிகமான அபிஷேகம் பெற்ற அப்போஸ்தலர்.
எபிரெயர் 3:1 இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
எபிரெயர் 1:9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;
தங்களிடம் ஒரு கேள்வி., பேதுருவிற்கு கர்த்தர் காட்சி அளிக்கும் முன்புவரை கர்த்தர் உயிர்த்தார் என அவர் விசுவாசிதிருந்தாரா? வேத ஆதாரம் தாருங்கள்..
இயேசு அனைவருக்கும் கட்டளை தந்து சுவிசேஷத்திற்கு அனுப்பின போது அவர்கள் மாற்று வஸ்திரமோ,பணமோ,பொருளோ,வாகனமோ,இருப்பிடதிற்கானமுன்பதிவோ செய்யாமல் அல்லவா அற்புத அடையாளங்களை செய்து குறைவில்லாமல் யேசுவிடம் திரும்பினார்கள்..
இப்போது பேதுருவிற்க்கும், மற்ற சிஷருக்கும் என்னவாயிற்று..உணவிற்காக கடலை சார்ந்துகொள்ளுங்கள் என தேவன் கட்டளை இடவில்லையே.. சுவிஷேத்தை பிரசங்கித்து தேவ சித்தம் செய்யாமல் உணவை இரவு வேலையில் தேடி ஜீவனை வளர்க்க நம் கர்த்தராகிய இயேசு அவர்களை பழக்கு வித்தாரா.
கர்த்தர் உயிர்த்ததை மற்றவர்கள் அறிவித்தும் பேதுரு நம்பாமல்,சுவிஷேத்தை பிரசிங்கிக்காமல் உணவை தேடி என்ன செய்து கொண்டிருக்கிறார்??
சரி...அப்போஸ்தலனான பேதுரு இயேசுவின் மரணதிற்கு பின்னும் இயேசு உயிர்ப்பதற்கு முன்னும் தேவ மகிமை வெளிப்படும்படி பேதுரு செய்த அற்புதங்கள் யாவை? அவ்வாறு இருந்தால் வேத ஆதாரங்கள் தாருங்கள்.. கர்த்தர் இறந்தாலும்,உயிர்தாலும் உன்னதமானவர் நிழலில் சிஷர்களும்,பேதுருவும் இருப்பதை மறந்துவிட்டார்கள்.
இல்லையென்றால் சுயத்தை குறித்த கவலை இல்லாமல் பரம பிதாவை எதிர்நோக்கி தேவைகளை சந்திதிருப்பார்களே!!
///எழுதப்பட்டதன் காரணம்:
இயேசுவானவர் உயிர் தெழுந்த பின் செய்த அநேக அடையாளங்கள், அற்புதங்களை யோவான் சொல்ல முற்படும் போது இந்த சம்பவம் எழுதப்படுகிறது. யோவானுடைய பார்வையில் இது இயேசுவால் செய்யப்பட்ட அற்புதம் என்று எண்ணப்படுகிறது. பேதுருவின் பின் வாங்கி போன நிலை என்று எண்ணப்படவில்லை. ///
ஆடு மேய்த்து கொண்டிருந்த தாவீது கர்த்தரால் ராஜாவாய் அபிஷேகம் பண்ணப்பட்டார். தாவீது ராஜ்யபாரம் கையில் கிடைக்கும் வரைக்கும் சவுலுக்கு மறைந்து வனாந்திரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருக்கவில்லை.
அபிஷேகம் பெற்றவன் புத்தியீனமாய் ஜென்ம தொழிலுக்கு திரும்ப தேவன் கட்டளை போதித்தாரா??
கலப்பையில் கைவைத்த பின் திரும்பி பார்க்ககூடாது என்று தானே போதித்தார்..
பேதுரு கடலுக்கு திரும்பினத காரியம், அவரது மாம்ச பலவீனத்தினால் அன்றியே தவிர வேறில்லை..
எலியா, ராணிக்கு பயந்து வனாந்திரத்தில் பயந்து ஓடி வந்தபோது,நம் கர்த்தர் அவரை வரவேற்காமல்...
எலியாவே!!! உனக்கு இங்கு என்ன வேலை என்றல்லவா கேட்டார்!!
I இராஜாக்கள் 19:9 அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
I இராஜாக்கள் 19:13 அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
கர்த்தர் தம் மகிமைக்காக அளித்த தம் ஊழியர்கள் மாம்ச பலவீனத்தில் பல்வேறு சோதனைகளில் சிக்குண்டு தவிக்கும் போது தேவன் இடைபடுகிறார்..
பின்மாற்றத்திற்க்கு முன்குரிக்கப்பட்டவர்கள் பின்மாற்றதிற்க்கு திரும்பும் போது தேவன் இடைபடுகிறதில்லை..இதுவே இதுவே இந்த இரண்டாம் கட்டுரையின் சாராம்சம்..
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!!
-- Edited by JOHN12 on Thursday 1st of March 2012 02:09:44 PM
இந்த சம்பவத்தை பலரும்"பேதுருவின் பின்வாங்கிப் போன நிலை" என்றே வியாக்கியானம் செய்கின்றனர். எனக்கு இது குறித்து பல காலமாகவே வருத்தம் உண்டு.
குறிப்பாக பரி.யோவான் எழுதின சுவிசேஷத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரியங்கள் உண்டு.
இது யோவானால் எழுதப்பட்டிருந்தாலும் , பேதுருவுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதை நாம் காணலாம். ஆகவே தான் பேதுரு இயேசுவானவரோடு கூட செய்த பல உரையாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளது. (யோவான் 6:66-69, 13:6-37, 18:10-27, 20:2-10, 21:2-22) . இதன் மூலம் அப்போஸ்தலரின் தலைவன் என்று எண்ணப்பட்ட பேதுருவின் தகுதியை தம் வாசகருக்கு சொல்ல முற்படுகிறார்.
இந்த சுவிசேஷம் கி.பி 96 - 100 ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம். எழுதப்பட்ட வருடம் நமக்கு குறிப்பாக தெரியாத போதும், பேதுரு இரத்த சாட்சியாய் மரித்த பிறகு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
எதற்கு?
இந்த சம்பவம் எதற்காக யோவானால் எழுதப்பட்டது என்று ஆராய்ந்தால், (யோவான் 21:1,14) இன் படி இயேசு சீஷர்களுக்கு தம்மை உயிரோடிருக்கிறவராக கான்பித்ததை தம் வாசகருக்கு யோவான் அறிய தருகிறார். இதன் மூலம் இதை வாசிப்போர் இயேசு உயிரோடு இருப்பதை விசுவாசிக்க ஆதாரமாக அமைகிறது.
எழுதப்பட்டதன் காரணம்:
இயேசுவானவர் உயிர் தெழுந்த பின் செய்த அநேக அடையாளங்கள், அற்புதங்களை யோவான் சொல்ல முற்படும் போது இந்த சம்பவம் எழுதப்படுகிறது. யோவானுடைய பார்வையில் இது இயேசுவால் செய்யப்பட்ட அற்புதம் என்று எண்ணப்படுகிறது. பேதுருவின் பின் வாங்கி போன நிலை என்று எண்ணப்படவில்லை.
(யோவான் 20:30)இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
(யோவான் 21:25)இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.
அங்கே என்ன நடந்தது?
தங்களுடைய தொழிலை விடுத்து இயேசுவினுடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அவருக்குப் பின் சென்ற சீஷர்கள் அவர் சிலுவையில் மரித்து உயிர்தெழுந்த பின் கூடிவருகின்றனர். இதன் மூலம் யோவானோடு இடைபட்ட பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்து தங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரும் சீஷர்கள் சிதறுண்டு செல்லாமல் ஒருவரை ஒருவர் சார்ந்து இணைந்து இருந்ததை நமக்கு அறியத் தருகிறார்.
(யோவான் 21:2) சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது
இயேசு அவர்களுடன் இருந்த வரையில் தங்கள் போஜனத்திற்கு அவரையே சார்ந்து இருந்தார்கள். ஒரு குறைவும் இல்லாமல் நம் நல்ல மேய்ப்பர் அவர்களை நடத்தினார். இப்போதோ அவர் தங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதால் மிகுந்த பசியினால் வாடி இருக்க வேண்டும். ஏனென்றால் போஜனம் வாங்கவோ தயார் செய்யவோ தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலை. அவர்கள் தங்கள் தொழிலை விடுத்து வந்துவிட்டனரே!
தம்மோடு இருக்கும் சகோதரர்களின் உள்ளம் அறிந்த பேதுரு "மீன் பிடிக்க போகிறேன்" என்றான். இரவு வேளையில் மீன் பிடிக்க தனியே செல்ல துணிவது தம் சகோதரர் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறது. இது ஒரு நல்ல மேய்ப்பனுக்கான தகுதி.
"மீன் பிடிக்க போகிறேன்" என்று பேதுரு சொன்னதுமே மற்ற அனைவரும் "நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள்". இதில் பலருக்கு மீன் பிடிக்கும் அனுபவம் இல்லாதிருக்கலாம். இரவு வேளையில் ஒரு முறையேனும் கடலுக்கு செல்லாதவர்கள் இருந்திருக்கலாம். பேதுரு மீன் பிடித்து கொண்டு வருவார் நாம் அனைவரும் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று நினைக்காமல், தங்கள் இயலாமையை தள்ளிவிட்டு அவனுக்கு உதவ முன் வந்த மற்ற சகோதர்கள் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
சீஷர்க்ளின் இந்த அன்பும், ஒற்றுமையும் தேவனின் உள்ளத்தை சந்தோஷத்தால் நிறைத்திருக்குமே!
தேவன் அவர்களை உலகமெங்கும் சென்று இந்த நற்செய்தியை அறிவிக்க தெரிந்து கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவி அவர்களிடத்தில் வர காத்திருக்கச் சொல்கிறார். இயேசுவும் பரிசுத்த ஆவியினால் நிரப்படும் வரை தம் தந்தையின் தொழிலை செய்தார்.
(அப்போ 1:4,5) அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
ஆகவே நாம் பேதுரு அழைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து தன் தொழிலுக்கு சென்றதாக சொல்ல முடியுமா? பேதுரு தன் பசியையும் தன் சகோதரரின் பசியையும் ஆற்ற முயல்கிறார். இதை உணர்ந்த நம் ஆண்டவர் அவர்களிடம் வந்து சொன்ன வார்த்தைகளை மட்டும் கவனியுங்கள்
6. நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும்
தேவனும் அவர்கள் முயற்ச்சியில் இணைந்து கொண்டு உதவுகிறார். இது ஒற்றுமையின் உன்னத நிலையை உணர்த்துகிறது. நாம் ஒன்றுபட்டால் தேவனும் நம்மோடு இணைந்து செயல்படுவார் என்பது நிச்சயம்.
10. நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்
11. "வாருங்கள், போஜனம்பண்ணுங்கள்"
தம் சீஷர்களின் தேவையை அறிந்த தேவன் அவர்களுக்கு நல்ல போஜனம் கொடுத்து மகிழ பண்ணுகிறார்.
பேதுரு ஒரு நல்ல மேய்ப்பன்,
அவர்கள் போஜனம் பண்ணின பின்பு, இயேசு பேதுருவை நோக்கி "என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்று சொல்கிறார். ஏன், ஆண்டவர் இந்த அன்பின் கட்டளையை இந்த சூழலில் பேதுருவிடம் சொல்ல வேண்டும்?
தன் சகோதரரின் தேவை அறிந்து துயர் துடைக்கும் உள்ளம் தேவனை கவர்ந்திருக்க வேண்டும். ஆகவே தான் "மேய்ப்பன்" என்ற உன்னத ஸ்தானம் பேதுருவுக்குக் கொடுக்கப்பட்டது. பின் வாங்கிப் போனவனிடத்தில் அல்ல சகோதரருக்காக தன்னையே தந்தவனுக்கு கிடைக்கப்பட்ட அழைப்பை யோவான் வருணித்துக் கூறுகிறார்.
இதை யோவான் எழுதும் போது பேதுரு மரித்து இருக்கலாம். ஆனால் அப்போஸ்தலரில் பெரியவராக எண்ணப்படும் பேதுரு தேவனால் அந்த பட்டத்துக்கு அழைக்கப்பட்ட விதத்தையும், நல்ல மேய்ப்பனான பேதுருவின் தன்மைகளையும் நமக்கு அறிய தருகிறார்.
பரிசுத்த ஆவியை பெற்ற பிறகு இந்த அழைப்பை பேதுரு நிறைவேற்றியதை இந்த உலகமே அறியும். "நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறான்"
-- Edited by Rajan In Christ on Wednesday 29th of February 2012 09:27:48 PM
மனிதர்களை பிடிக்கும்படி அழைப்பை பெற்றிருந்த சீமான் பேதுரு, கர்த்தராகிய இயேசு மரித்து உயிர்த்ததை அறியாமல் மீண்டும் தன் பழைய தொழிலாகிய மீன் படிக்கும் தொழிலுக்கு போனார்.
யோவான் ( 21 :3 )
சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
அப்போஸ்தலரான பேதுரு தாம் பெற்றிருந்த ஊழியத்தை மறந்து, தம்முடைய பழைய வாழ்க்கையின் காரியங்களுக்கு பின்வாங்க முற்படுகிறார்..
ஆனால் அவரை ஊழியத்திற்கு அழைத்த நம் தேவன் உண்மையுள்ளவர்.பின்வாங்கும் சமயத்தில் கர்த்தர் இடைபட்டார்.
யோவான் ( 21 :3 ) விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
யோவான் ( 21 :5 ) இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
பின்வாங்க முற்படுகிரவர்களை பிள்ளைகளே என அழைக்கும் நம் தேவன் தம் மகிமைகென அழைத்தவர்களில் ஒருவரையும் இழந்துவிடுபவர் அல்ல.
சிஷர்களின் நிலைமையை அவர்களுக்கு உணர்த்தி, தம்மை வெளிபடுத்த நம் இயேசுவானவர் செய்த அற்புதமானது ஏற்கனவே பேதுருவின் அழைப்பின் போது செய்யப்பட்ட அற்புதத்தை போன்றது ..பின் வரும் வசனங்களை பாருங்கள்..
யோவான் ( 21 :6)அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
இப்படி இரண்டாம் முறை அதே மாதிரியான அற்புதத்தை பேதுரு பார்த்திருந்தும்,அற்புதம் செய்தவர் இயேசு என்பதை யோவான் எனும் சீஷன் கூறி பேதுரு அறியும்படியாயிற்று.
ஆனால் கர்த்தரின் முன் தன்னை நிர்வாணி என்பதை உடனே அறிந்து தக்கதை செய்கிறார்.
யோவான் ( 21 :7) அவர் கர்த்தரென்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
இவ்வாறாக அங்கு கூடியிருந்த சிஷருக்கும்,பேதுருவிற்கும் தம்மை வெளிபடுத்தினார்.
பந்தியிருந்த பின்பு,இயேசு மூன்றுமுறை பேதுருவை நோக்கி என்னை நேசிகிறாயா என அதே வார்த்தைகளை கொண்டு கேட்டார்..
மூன்று முறை மறுதலித்து, வாழ்வானாலும்,சாவானாலும் உம்மை பின்பற்றுவேன் என கர்த்தரிடம் கூறிய கூற்றிற்கு மாறாக மனுஷருக்கு பயந்து,பின்வாங்கிய பேதுருவால் இரண்டு முறை சலனம் இல்லாமால் பின்வருமாறு பதில் கொடுக்க முடிந்தது..
யோவான் ( 21 :15,16) அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
மூன்றாம் முறை அதே கேள்வியை கர்த்தர் கேட்டபோது அவன் துக்கமடைந்ததாக வேதம் கூறுகிறது.இந்த துக்கம், தேவன் மூன்று முறை அவனை நோக்கி கேட்ட காரணத்தை காட்டியிருக்கும்.
தன உண்மையட்ட்ற தன்மையை உணர்ந்த அவன் ,உணர்வோடு அவன் கூறிய பதில் போதுமானதாக தேவ சந்நிதியில் கருதப்பட்டது.இயேசுவின் கேள்வி அத்துடன் முடிகிறது.மனிதர்களை பிடித்தவர் மேய்ப்பராக கர்த்தரால் உயர்த்தபடுகிறார்..
யோவான் ( 21 :17) மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
தேவன் தம் மகிமைகென அழைத்தவர்களை பின்வாங்குபவர்களாக விடுகிறதில்லை.பின்மாற்றகாரர்களே பின்வாங்குகிறார்கள்.
ஊழியத்தில் பின்வாங்கும் படிக்கு அனேக சோதனை வரலாம்,பழைய வாழ்க்கை சிறப்பானது என நமக்கும் தோன்றலாம்.திராணிக்கு அதிகமான சோதனைகளை அனுமதிக்காத தேவன் உண்மையுள்ளவர்.பின்வான்காதபடிக்கு தம்முடையவர்களை காப்பார்.
தேவனே !!! வரபோகும் மோசமான காலங்களில் தேவனுக்காக நிற்பவர்களின் கூட்டமாய் நாங்கள் சோதனையிலும் உம்மை மகிமைபடுத்த கிருபை தாரும்..
அருமை சகோதரர் ஜாண்12 அவர்களின் நல்லதொரு பதிவுக்காக நன்றி.தாங்கள் தமிழில் எழுத ஏதேனும் பிரச்சினை இருக்குமானால் பின்வரும் லிங்கிலிருந்து ஒரு மென்பொருளை தரவிறக்கி அதனை உங்கள் கணிணியில் அமைத்துக்கொண்டு அதன்மூலம் நேரடியாக தமிழில் எழுதலாம்,முயற்சிக்கவும்.அடுத்தும் ஒரு ஆலோசனை நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு தொடர்புள்ள குறிச்சொற்களை சுமார் மூன்றாகிலும் அமைக்கவும்.இதனால் நாம் பிறிதொரு சமயத்தில் சம்பந்தப்பட்ட கட்டுரையை எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பு:தங்கள் கட்டுரையை அமைப்பும் (Justify) அளவும் (font size) மாத்திரம் மாற்றியிருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இன்றைக்கு அனேக ஊழியங்கள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடனே ஒரு பாரம்பரிய லிமிடெட் கம்பெனி போல அப்படியே வளராமல்,. தங்களது நிலையில் நிலைகொண்டுள்ளது...
இதற்கு முழு காரணம் வலைகள் சரியாக பழுதுபார்க்கப்பட்டு அலசபடுவதில்லை,மனித கற்பனைகளுக்கு இடம் அளிக்கப்பட்டு தேவ வசனங்களுக்கு இடம் மறுக்கப்படும் தன்மை..
இதையே தான் நம் கர்த்தராகிய ஏசுவும் பின்வருமாறு கூறுகிறார்.ஆகவே சுயத்தை ஆராய்ந்து வலைகளை அலசுங்கள்..
மத்தேயு 13:47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
ஒரு முறை சொந்தமான படகை கொண்ட சீமோன் இயேசுவை அறிகிறதற்கு முன், இரா முழுதும் பிரயாசபட்டும் எந்த மீனும் அகப்படாமல் சகோதரர்களுடன் சோகமாய் வலையை பழுது பார்த்து அலசி கொண்டிருந்தான்.காரியம் தெளிவாய் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது
லூக்கா
5 அதிகாரம்
1-10 ஐ படியுங்கள்..
அறிவியலின் படி வெளிச்சம் மற்றும் வெப்பநிலை கடலின் மேற்பரப்பினில் இரவில் தான் குறைவாய் இருக்கும்.. அச்சமயங்களில் பெருமளவு மீன்கள் மேற்பரப்பிற்கு வரும். இதை அறிந்திருக்கிற மீனவர்கள் இரவில் படகை செலுத்தி மீன் பிடிப்பது வழக்கம்..
இம்மாதிரியான முறையை தான் நம் சீமோனும் பின்பற்றுகிறார்.அனால் பலன் இல்லை.. சோர்வுடன் தேவனின் பார்வையில் தன வலைகளில் ஏதேனும் கோளாறா என பழுதுபார்த்து அலசிகொண்டிருக்கிறார்.இதைபோல் மற்ற மீனவர்களும் அலசி கொண்டு தான் இருகின்றனர்.ஆனால் இயேசு தன படகில் தனக்கு இடம் தந்து படகை கடலில் சற்றே தள்ளி கீழ் படிந்த சீமொனுக்கும் அவன் படகில் இருந்தவர்க்கும் தான் அற்புதத்தை வழங்கினார்..
சோர்வுடன் காணப்பட்ட சீமோனை தேவன் மீண்டுமாய் ஆழ்கடலுக்கு சென்று வலையை வீசு என்றார்.அவன் தனக்கு இரவு நேரிட்ட அனுபவத்தை முன் வைத்தாலும்,இயேசுவின் போதகத்தை கண்டு அவர் மேல் நம்பிக்கை கொண்டு மீன் பிடிக்க சாதகம் குறைந்த நண்பகல் வேளையில் படகை ஆழ்கடல் நோக்கி செலுத்தினான்.. வலைகள் கிழியதக்கதாய் மீன்கள் அகபட்டவுடன் பேதுரு தன்னையும் அலசிப்பார்த்து பின்வருமாறு கூறுகிறார்.
லூக்கா 5:8 சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
ஏசுவோ அவனை நோக்கி தன்னை பின்சொல்ல கூறி மனிதர்களை பிடிக்கிறவனாக்கினார். இவைகளை பெற பேதுருவிற்கு தகுதி என காண்பது பின்வருபவைகளே.,
தேவனுக்கு தம்முடையவைகளில் இடம் தருதல்.
தம்முடைய காரியங்களை கபடு இல்லாமல் பகிர்தல்
வலைகளையும்,தன சுயத்தையும் அலசுதல்.
கட்டளையின் நுகத்தை சோர்விலும் சுமத்தல்.
இக்காரியத்தை அலசுகிற நாம்,மேற்கூறிய காரனங்களை நம் வாழ்வில் நடைமுறை படுத்தும் போது அதிகமான ஆசிர்வாதங்களையும்,ஆத்துமாக்களை ஆதாயமும் செய்துகொள்வோம்..
நீதிமொழிகள் 14:15 விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.