Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வலைகளை அலசுங்கள்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
வலைகளை அலசுங்கள்
Permalink  
 


சகோதரர்களே.,
 
கசப்பு உணர்ச்சியெல்லாம் துளி அளவும் இல்லை..அவரது கருத்துகளை நான் எதிர்த்தால் அவருக்கு எதிரி ஆகிவிடுவதில்லை..எனக்காக மரித்த கர்த்தராகிய கிறிஸ்து அவருக்காகவும் மரித்துள்ளாரே!!
 
சகோ.சில்சாம் அவர்களே.,
 
வசன அடிப்படையிலானான வியாக்கியானங்கள் சுகத்தை ஏற்படுத்துமா? அல்லது மனித நம்பிக்கை,பாரம்பரியத்திற்கு அடுத்த வசன வியாக்கியானங்கள் (விமர்சனங்கள்) சுகத்தை ஏற்படுத்துமா?.. வசனத்திற்கு அப்பாற்பட்டு பாம்பரியதினால் கற்ற வியாக்கியானன்களால் சுகம் உண்டானால் சுகமே சுகமற்றிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து..


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

chillsam wrote:
எந்தவொரு வேதப்பகுதியையும் வியாக்கியானம் செய்யும்போது அதிக கவனம் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். சர்ச்சைக்கிடமில்லாத வியாக்கியானங்களால் சுகம் உண்டாகும். அவசரமான வியாக்கியானங்கள் சங்கடத்துக்கிடமாகும். 

 ஆம் சகோதரர்களே கசந்துகொள்ளவேண்டாமே...!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அன்பான நண்பர்களே,

இளைஞர்களான தாங்கள் இருவரும் ஒரு முக்கிய வேதபகுதியை வியாக்கியானம் செய்யும் பாங்கை நினைத்து நானே மெய்மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனவே நான் இதில் இடைபட்டு எதையும் செய்யவில்லை. ஆனாலும் நீங்கள் புதிய நண்பர்களாக இருப்பதால் கசந்துகொள்ளாதிருக்க அன்போடு வேண்டுகிறேன்.

எந்தவொரு வேதப்பகுதியையும் வியாக்கியானம் செய்யும்போது அதிக கவனம் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். சர்ச்சைக்கிடமில்லாத வியாக்கியானங்களால் சுகம் உண்டாகும். அவசரமான வியாக்கியானங்கள் சங்கடத்துக்கிடமாகும். பொதுவாகவே ஆபிரகாம், யோபு போன்ற பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் சரி யோவான் ஸ்நானன், பேதுரு, பவுல் போன்ற புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் சரி எல்லை மீறி விமர்சிப்பது சரியல்ல. நாம் ஏதோ ஒரு சத்தியத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்தினால் சமய சந்தர்ப்ப சூழல்களை வைத்து வேத புருஷர்களை விமர்சிப்பது சரியாக இருக்காது .(என்று கருதுகிறேன்..biggrin - சுந்தர் ஸ்டைல்..!)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
Permalink  
 

நண்பர் ஜான் அவர்களுக்கு, 

உங்கள் எல்லா விவாதங்களும் அடிப்படை இல்லாதவை. உங்களுக்கு புரிந்து கொள்ளும் திறன் இல்லாதது தான் பிரச்சனை. 

உங்களுக்கு உண்மையாக நான் சொல்ல வரும் கருத்துக்கள் புரியவில்லையா? அல்லது புரியாதது போல நடிகிரீர்களா? உங்கள் சாமர்த்தியத்தை காட்ட முயற்சி செய்தால் அதற்கு எல்லாம் என் நேரத்தை செலவு செய்து பதில் தர முடியாது. 

உங்கள் அறியாமை விலக நான் கபடற்ற உள்ளத்தோடு முயற்சி செய்கிறேன். உங்கள் உள்நோக்கம் இப்போது தான் புரிகிறது. உங்கள் பணி தொடரட்டும். உங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் விலகுகிறேன் என்று என்ன வேண்டாம். உங்களுக்கு பதில் சொல்லி பிரயோஜனம் இல்லை என்றே விலகுகிறேன். 

செவிடன் காதில் சங்கு ஊதலாமா. 

 

அன்பு யுவன ஜனம் தள நண்பர்களே,

ஜான் அவர்களின் வாதம் ஏதாவது ஒரு இடத்தில் அர்த்தம் உள்ளதாக இருந்தால் சொல்லுங்கள், என் வாதத்தை தொடர்கிறேன். 

உண்மையாய் வேதத்தை குறித்து அறிய வாஞ்சையாய் இருப்போருக்கு பதில் தரலாம். எல்லாம் எனக்கு தெரியும் என்று திறமை காட்ட முயற்சிப்போருக்கு நேரம் செலவு செய்வதே பாவம். 

 

அன்புடன், 

ராஜன் 



__________________
Rajan


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

அன்பு நண்பர் ராஜன்,

என் விவாதங்களுக்கு வசனவிளக்கங்கள் உண்டு .தந்துள்ளேன்..நீங்கள் கர்த்தரின் முன் நின்று காரியங்களை அறிந்து பேசுங்கள்...
எல்லாம்   தெரிந்தவன்  நான் அல்ல.ஆனால் எல்லாம் தெரிந்த தேவன் எனக்கு உண்டு..ஆகவே படிக்கிறவர்கள் அறியும்படி காரியங்களை தந்துள்ளேன்..வசனத்தை வளைதுள்ளதாகவோ, தவறாய் தங்களை வருணித்து இருப்பதாகவோ நிர்வாகம் என்னை கண்டால் கண்டிக்கலாம்..
நான் நடிகனும் அல்ல,செவிடனும் அல்ல., யாரும் எனக்கு சங்கு ஊதும் படிக்கு காதை காட்டி நானும் வரவில்லை. கற்பனைகளுக்கு எப்போதும் நான் செவிகொடுப்பதில்லை. ஆகவே வசனத்துடன் காரியங்களை எதிர்த்து பேசுங்கள்., பிரதான பங்கை மறந்து கற்பனைகளை கலவாதிருங்கள்..நல்லதல்ல..
இனிவரும் விவாதங்களில் பொறுமையுடன் விவாதிக்க முயற்சியுங்கள்.. நிச்சயம் நேரவிரயம் அனைவர் சார்பிலும் இல்லாதிருக்கும்..
அன்புடன்,
JOHN12
கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

வலைகளை அலசுங்கள் என்ற தலைப்பில் பொதுவான கட்டுரைகள் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுரையானது, இரு நண்பர்களால் காரசாரமாக (காரத்துடனும் சாரத்துடனும்..) விவாதிக்கப்பட்டு வருவதால் இதனை விவாதங்கள் பகுதிக்கு மாற்றியிருக்கிறேன்.

<நிர்வாகி>



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

தேவாலயத்தை விட பெரிய ஆளா?

அப்போஸ்த்தலர் மாத்திரம் அல்ல, தேவனுடைய பார்வையில் நீங்களும் நானும் விசேஷமானவர் தான். அதற்கென்று நீங்களோ, நானோ சபைக்கு முன்னோடி அல்ல. உங்களையும் என்னையும் பெதுருவோடு ஒப்பிட்டால் யார் பெரியவர் என்று நீங்கள் சொல்வீர்களா ? பெரியவனாய் இருக்க விரும்பியவன் எல்லாருக்கும் ஊழியம் செய்தான். எனவே தான் பெரியவர் என்று சொன்னேன். அவருடைய கனத்தை யாராலும் பறிக்க இயலாது. 

அதுபோலவே கேபா, ஆதிசபையில் எல்லோரிலும் உயர்ந்தவர. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளாததினால் பொய் ஆகிவிடாது.  

ஏன் கோபப்படுகிறீர்கள் நண்பரே..ஆதி திருச்சபையில் தேவன் மாத்திரம் உயர்ந்தவர்.எந்த திருச்சபையிலும் தேவன் மாத்திரம் உயர்ந்தவர்.தேவாலயத்திலும் பெரியவர் மாத்திரமே திருச்சபையில் பெரியவராய் இருக்கமுடியும். 

மத்தேயு 12:6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசு தான் தேவாலயத்திலும் பெரியவர்..நித்திய பிரதான் ஆசாரியர்.. நீங்கள் பேதுருவை பிராதானபடுத்துவதை; பேதுருவே விரும்பமாட்டார் என அறியுங்கள்..

அப்போஸ்தலர்களுக்கு கால்களை கழுவி ஊழியம் செய்தாரே அவரே பெரியவர்.வேறொரு முதன்மையானவர் இல்லை. அவரை உங்களுக்கு ஹீரோ ஆக்காதீர்கள்..அப்போஸ்தலர்களுக்குள் உயர்வு தாழ்வு பிரச்சனை வந்த போது நிகழ்ந்ததை தியானியுங்கள் நண்பரே..

மத்தேயு 20:26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

அப்போச்தலர்களுக்குள் உயர்வு தாழ்வு இருக்கலாகாது என தேவன் கூறியதை நீங்கள் மறந்து விட்டு,அவன் பெரியவன் இவன் சிறியவன் என நியாயதீர்ப்பை எவ்வாறு தோற்றத்தின்  படி செய்கிறீர்கள்..கர்த்தர் எவனை பிரதானபடுதுகிராரோ நியாயதீர்பின் போது அவனே பெரியவன்..அதற்குள் முந்த வேண்டாம்.வேறெந்த தேவையற்ற ஒப்புமையும் வேண்டாம் நண்பரே..

தாலி கட்டின மாப்பிள்ளையா?

//அனேக காரியங்களை அவர் முன் நின்று நடத்தின படியினால் அவர் முதன்மையானவர் என கருதிவிட முடியுமா!!?//

கல்யாண மேடையில் ஒருவர் உட்கார்ந்து தாலி கட்டிவிட்டால் மாப்பிளை ஆகி விட முடியுமா? என்று கேட்பது போல உள்ளது உங்கள் கேள்வி./// 

கேட்கலாமே!!! கலியாண மேடையில் உட்கார்ந்து தாலி கட்டினாலும் சம்பந்த பட்ட மணபெண்ணிற்கு தான் அவன் மாப்பிள்ளை.. அடுத்தவருக்கு அல்ல!!

சபைக்கு மணவாளன் ஏசுவே..அப்போஸ்தலர்களும்,மற்ற ஊழியர்களும் மணமகன் தோழர்கள்.. நீங்கள் அப்போச்தலர்களுக்குள் தேவையட்ற்ற பிரதானதுவதை ஏற்படுத்தி மணமகன் அந்தஸ்திற்கு உயர்ததிருங்கள் நண்பரே!!! 

மத்தேயுவா? மத்தியாவா?

//அன்பு நண்பரின் மேலான கவனத்துக்கு சீட்டு மத்தேயுவின் பேரில் அல்ல. மத்தியாவின் பேரில் விழுந்தது. //

பொதுவாக வேதம் ஒரே பாஷையில் எழுதாபடாததினால் வரும் basic confusion என்கிறார்கள்.

Hebrewמתתיהו ,מתיתיהו ‎ (Matityahu)

GreekΜατθαίος (Matthaios).

மத்தேயு என வருகிற ஹிப்ரு பெயர் மத்தியாஸ் என கிரீக்கில் ஒலிக்க படுகிறது...இந்த அடிபடையில் தான் நான் மேற்கண்டவாறு கூறினேன்.

இயேசுவின் உண்மை பெயர் யஹுஷ்வ்ஹா (ஹிப்ரு )ஆனால் கிரீக்கில் ஜெசுஸ் என தவறாய் மொழிபெயர்த்து பரப்பிவிட்டார்களே அதை போல!!!

GLORY TO GOD

 

//மத்தியா எழுதிய எந்த குறிப்பும் நம்மிடம் இல்லை. அதற்காக அவர் எதுமே எழுதவில்லை என்று சொல்ல முடியுமா? எழுதவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் எதுவும் எழுதவில்லை என்பதற்காக எதுவும் செய்யவில்லை என்று அர்த்தமா?//

//பலருடைய ஊழியம் வேதத்தில் இல்லை. அதற்காக அவர்கள் உபயோகம் அற்றவர்கள் அல்லது பின்மாற்றக் காரர்கள் என்று தீர்ப்பது கண்டனத்துக்குரியது.///

முக்கியமானவர்கள் வேதத்தில் இடம்பெறாமல் போக தேவன் விட்டுவிடுகிறார் என நான் அறிக்கை செய்கிறதில்லை..வேதத்தில் பாத்திரங்களை சேர்க்கிறவர் தேவனே என பின் வரும் வசனத்தினால் விசுவசிக்கிறேன்..

மாற்கு14 :9. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆகவே வேதத்தில் உள்ள பாத்திரங்களை கர்த்தர் தான் அனுமதிக்கிறார் என்பதை சகோதரர் அறிவாரக!!

//பலருடைய ஊழியம் வேதத்தில் இல்லை. அதற்காக அவர்கள் உபயோகம் அற்றவர்கள் அல்லது பின்மாற்றக் காரர்கள் என்று தீர்ப்பது கண்டனத்துக்குரியது.//

யார் அவ்வாறு கூறினார்கள் ,யாராவது கூறி இருந்தால் நானும் என் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன் சகோதரரே!!! 

// வேதம் தொகுப்பட்ட வரலாறு, நாம் இழந்த நிருபங்கள் குறித்து நண்பர் அறிந்து கொண்டால் நல்லது. "FOXES BOOK OF MARTYRS" என்ற புத்தகத்தை வாசிக்க அன்பு நண்பருக்கு பரிந்துரைக்கிறேன்.//// 

நிச்சயம் படிக்கிறேன் நண்பரே.



-- Edited by JOHN12 on Sunday 4th of March 2012 06:27:40 PM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

Bro//மத்தியா, யுதாசுக்கு பதிலாக தேர்தெடுக்கப் பட்டவர். இந்த கேள்வியை ஏன் இங்கு சம்பந்தம் இல்லாமல் கேட்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.//

நீங்கள் பேதுரு முன் நின்று அனேக காரியங்களை நடத்தினார் என்றீர்கள்.அதில் சிலவிசயங்களின் முடிவு எப்படி இருந்தது என காண்பித்தார்.

பேதுருவின் தலைமையில் அப்போஸ்தலனாக  தெரிந்தேடுக்கபட்டவர் அப்போஸ்தலன் என கர்த்தரின் கருதபட்டிருபாறேயானால்  பவுல் பதிமூன்றாம் அப்போஸ்தலனாக இருப்பார்.எனவே கர்த்தர் தெரிந்தெடுத்த  பணிரண்டாம் அப்போஸ்தலர் பவுலே..

எந்த அப்போஸ்தலனும் மனிதனால் தெரிந்தேடுக்கபடாதிருக்க பவுலும் மனிதரால் தெரிந்தெடுக்க படவில்லை என சகோதரர் அறியவேண்டியும், மனித தலைமை தாங்குதல்களால் சில சமயங்களில் நேரிடும் பிழைகளையும் உணர்த்தவேண்டி இக்காரியத்தை பதித்தேன் நண்பரே...

 Bro/ பிந்தினோர் முந்தினோர் ஆவர்கள்//

எனக்கு யார் முந்தினவர்கள்,யார் பிந்தயவர்கள் என தெரியாது நண்பரே..கர்த்தரின் நியாயதீர்ப்பு தான் வெளிபடுத்தவேண்டும்..

ஆகவே நான் மஹா பிரதானத்தில் இன்னொரு பிரதானதுவதை கற்பிக்கிரதில்லை..

நன்றி,

John12 

கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!



-- Edited by JOHN12 on Sunday 4th of March 2012 02:02:04 PM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

நிறைவான வேதம் வாழ்க்கை வரலாறும்கூட !!!:

// அன்பு நண்பரே வேதம் எந்த மனிதனின் வாழ்க்கை குறிப்பை சொல்லும் வரலாற்று புத்தகம் அல்ல. லூக்கா வால் எழுதப்பட்ட அப்போ. நடபடிகள் பேதுருவை குறித்து அநேக குறிப்புகளை சொல்கிறது. இந்த புத்தகம் எதற்கு, யாருக்கு எழுதப்பட்டது என்று நண்பர் அறிந்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டார்? 

மீதம் உள்ள எல்லா புத்தகமும் நிருபங்கள்.நிருபம் ஏன் எழுதப்பட்டது என்று நண்பர் அறிவார் என்று நம்புகிறேன். ///

வேதம் வரல்லாற்று புத்தகமும் கூட!! மறுகிறீர்களா!!!

அப்பா இயேசு உலகத்திற்கு வந்த போது உலக வரலாறையே இரண்டாக பகுத்தார்..AD ,BC என்று..

குர்ரான் இன்றும் நம் வேதத்தின் முன் மொக்கை வாங்கும் அனேக காரியங்களில் வரலாற்று,கால குறிப்புகள் பிரதானமானவைகள்..

வேதம் அனேகரது வாழ்க்கையை உள்ளடக்கியது..நாளாகமத்தை சகோதரர் என்னவென்பீர்கள்?

///பேதுரு தூங்கினார் என்று வேதம் எங்கும் சொல்லவில்லை ,எனவே அவர் சாகும் வரை தூங்கவே இல்லை என்று சொல்வீர்கள் போல. ஏன், எதற்கு, யாருக்கு சொல்லப்பட்டது என்று நாம் சிந்திக்க வேண்டும்.///

சகோதரரே..வேதம் குறைவற்றது என்பதை நான் வேதத்தின் மேன்மையை உணர்ந்துள்ளவன். பேதுருவின் தூக்கம் அல்ல மோசமான கணநித்தரை வேதத்தில் உள்ளது.பாருங்கள்.

மத்தேயு 26:40 பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?

மாற்கு 14:37 பின்பு, அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?

என் தேவனின் சோதனை நேரத்தில் ஒருமணிநேரம் யாரும் விழித்திருந்து நம் கர்த்தரை திடபடுத்தவில்லை.பரத்திலிருந்து தேவதூதன் வரவேண்டியதாயிற்று.   

லூக்கா 22:43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

பிரயோஜனமானவைகளை போதிக்கிற கர்த்தரின் பரிசுத்த வேதாகமம் குறைவற்றது.எல்லா அங்கிகரிப்பிர்க்கும் பாத்திரமுள்ளது,அனேக புடமிடுதல்களில் இன்னும் நிலை நிற்ப்பது. இன்றும் பிரியோஜனமானவைகளை நமக்கு போதிக்கிறது..மலஜலாதி காரியத்திலும் படிப்பினை இருந்தால் வேதம் போதிக்கும் என சகோதரர் அறிவீர்களாக!!

 

மூன்றாந்தரம் என்பதற்க்கும், மூன்றாம் முறை என்பதாகும் ஒரு வித்தியாசமும் இல்லை:


//அன்பு நண்பரே வசனத்திலேயே இதற்க்கு பதில் உள்ளது , மூன்றாம் முறை கேட்க்கும் போது ஏன் தூக்கப்பட்டார் ? மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு.  இதன் அர்த்தம் என்னவென்றால் " ஆண்டவரே நான் உம்மை உண்மையாய் நேசிக்கிறேன் . நீர் என்னை நம்பாதது போல மறுபடியும் மறுபடியும் கேட்கிறீர் என்ற தான் தூக்கப்பட்டார்( குத்தப்படவில்லை)

மூன்றாம் முறை கேட்டதினால் தான் தூக்கப்பட்டார். மூன்றாம் முறை கேட்கும் போது என்று நீங்களே வசனத்தை திருத்த வேண்டாம் .///

நான் வசனத்தை எப்படி திருத்தினேன் என்கிறீர்கள்!!

நீங்களே பாருங்கள் உங்கள் மேற்கோளை !!

'மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு' என வசனத்தை காண்பித்து விட்டு மூன்று முறை கேட்டதினால் துக்கப்பட்டார் என்கிறீர்கள்..

மூன்றாம் முறை கேட்டதினால் துக்கமடைந்தார் என நான் கூறினேன்.'மூன்றாந்தரம்' என்பதன்  அருஞ்சொற்பொருள் தான் மூன்றாம் முறை..

மூன்றாம் முறை வேறு .மூன்று முறை வேறு.. நீங்கள் தான் தவறாய் பொருள் கொண்டீர்கள் சகோதரா!!

 

GLORY TO GOD...



-- Edited by JOHN12 on Sunday 4th of March 2012 01:56:10 PM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

சகோதரர்.ராஜன் அவர்களே.,

பழசு நிச்சயம்  வேணாம் புதுசு நிறைவானது !!!
//சத்ருக்களை சங்கரித்து கொண்டிருந்து,சங்கீதம் பாடிகொனு,சோதனைகளை சகித்து கொண்டிருந்தார்//
 
//ஜென்ம தொழிலுக்கு இவர் திரும்பினதாக வசனம் உள்ளதா?? //
 

அன்பு நண்பரின் கூற்றுப் படி அபிஷேகம் பெற்றவன் பழைய தொழிலுக்கு செல்லக் கூடாது, புது தொழில் செய்யலாம். உங்கள் பழைய தொழில் ஆடு மெய்ப்பதாய் இருந்தால் இப்போது பாடலாம், சண்டை போடலாம் . ஆடு மட்டும் மேய்க்க போய்விட கூடாது. இது நல்ல இருக்கே!

சகோதரரின் புரிதல் வித்தியாசமாய் எனக்கு தோன்றுகிறது..கவனியுங்கள்..

சங்கீதம்

45 :10 -11. குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

தகப்பன் வீடு என்ன என்பதை சகோதரர் இப்போது அறிவீர்களா!!(தகப்பன் வீடு என்பது தகப்பன் வீட்டு கிரியைகள்,தொழில் அனைததையும் உள்ளடக்கியது என நான் கூற அவசியம் இல்லை என எண்ணுகிறேன்.)

அதே போல கர்த்தருக்குள் நாம் வரும்போது அல்லது கர்த்தர் நமக்குள் வரும்போது நாம் செத்த கிரியைகளை தொடராதிருக்க வேண்டும் எனவும் வேதம் போதிக்கிறது..

எபிரெயர்6 :1. ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,

கிரியை உள்ளவரை நாம் கர்த்தர் நம்மை முருரூபமாக்க நாமே எதிர்த்து நிற்கிறோம் என்பதை சகோதரர் அறிவீர்களாக!!!

 



-- Edited by JOHN12 on Sunday 4th of March 2012 10:03:40 AM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

சகோ.ராஜன் ///நண்பரின் கூற்றுப் படி ஆண்டவரோடு கூட இருந்த சில மணி நேரங்களில் பேதுரு மேற்கூறிய தகுதியை பெற்று விட்டார். மூன்று ஆண்டுகள் நம் ஆண்டவரிடம் இருந்து, உண்டு உறங்கி, சத்தியத்தைக் கேட்டு, ஆண்டவரின் வாழ்க்கை, மரணம் எல்லாவற்றையும் பார்த்த பேதுருவுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இல்லை என்று சொல்ல காரணம் என்னவோதன் சகோதரரின் பசியை ஆற்ற முயற்சி செய்தார்தன் உந்தன் சகொதரரின் தேவையை புரிந்து கொண்டார்.//

சகோதரர் மேலான கவனத்திற்கு,

ஆண்டவரோடு பேதுரு சில மணிநேரங்களில் இருந்ததால் தகுதிகளை பெற்றதாக நான் கூறவில்லை.அத்தகுதிகள் பேதுருவின் சுவாபங்கள்.இத்தகுதிகள் அதிகமான மீன்களை பிடிக்க ஆண்டவரிடத்தில் இருந்து அற்புதத்தை பெட்டரு தந்திருகின்றன. அத்தகுதிகள் பேதுருவிடம் இருந்து சுவிஷேகர்கள் வெவ்வேறான மக்களை சபைக்குள் கொண்டு சேர்க்க கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள்..

இயேசு உயிர்த்தது அப்போ.பேதுரு அறியவில்லை!!

சகோ.ராஜன் //மனிதர்களை பிடிக்கும்படி அழைப்பை பெற்றிருந்த சீமான் பேதுரு, கர்த்தராகிய இயேசு மரித்து உயிர்த்ததை அறியாமல் மீண்டும் தன் பழைய தொழிலாகிய மீன் படிக்கும் தொழிலுக்கு போனார்//

இந்த சம்பவம் நடக்கும் போது இயேசு உயிர்த்தது பேதுருவுக்கு தெரியாதா? எல்லா சீஷருக்கும் தெரியும்.

இந்த சம்பவம் மூன்றாவது தரிசனம். முதல் தரிசனம் பெற்ற அப்போஸ்த்தலர் பேதுருவே என்று உங்கள் அபிமான பவுலே சொல்கிறார். என் முந்தின பதிலை சற்று கவனிக்கவும் ///

என் அபிமானம் கிறிஸ்து மாத்திரமே சகோதரரே..ஒரு காரியத்தை பார்த்தால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா?? பாருங்கள்.. பேதுரு நாம் விவாதிக்கும் மீன்பிடி சம்பவத்தின் போது, இயேசுவை பார்த்தும் அறிந்திருக்கவில்லை.மூன்றாவது தரிசனமானபோதும் நம் கர்த்தரை அவன் அறிந்திருக்கவில்லை..சீஷன் சொல்லி அறிய வேண்டிய ஆவிக்குரிய நிலை அருமை அப்போஸ்தலனுக்கு !!

ஆகவே இயேசு மூன்று முறை காட்சி அளித்திருந்த போதும்,தம்மை வெளிப்படுத்தி இருந்த போதும் உயரத்த இயேசுவை அறியாதவர் என அன்பு சகோதரர் அறிந்து கொள்வீர்களாக...(நான் மூன்றாம் தரிசனம் என அறிந்தவனாக தான் கருத்துகளை பதித்தேன் நண்பரே).

ஊழியத்தை மறந்துட்ட நீ :

//அப்போஸ்தலரான பேதுரு தாம் பெற்றிருந்த ஊழியத்தை மறந்து, தம்முடைய பழைய வாழ்க்கையின் காரியங்களுக்கு பின்வாங்க முற்படுகிறார்..//

வேதத்தில் சொல்லப்படாத இந்த முடிவுக்கு சகோதரர் எப்படி வந்தாரோ? பரிசுத்த ஆவி பொலிந்தருள்ளப்பட்ட பின் தான் ஊழியமே தொடங்கியது . இயேசுவுக்கும் தான் சகோதரரே. இயேசுவே காத்திருக்க சொல்கிறார். உங்களுக்கு ஏன் பொறுமை இல்லை.///

///பரிசுத்த ஆவியை பெரும் முன் பேதுரு என்ன வகை  மேய்ப்பனின்  ஊழியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?///

காரியம் இல்லாமல் அவர் பின்வாங்க முற்படுகிறார் என நான் கூறவில்லை சகோதரரே..ஊழியம் என்பது சகோதரர் பார்வையில் என்ன!!

வேதத்தில் சொல்லப்பட்ட காரியத்தை தான் விளக்குகிறேன் நண்பரே.,

இருவகையான ஊழியத்தை தான் வேதம் காட்டுகிறது..

ஒழிந்துபோகிற மகிமையையுடைய ஊழியம் மற்றும் ஆவிக்குரிய ஊழியம்.

மோசே பெற்றிருந்தது ஒளிந்து போகிற மகிமையுள்ள  ஊழியம் (புதிய உடன்படிக்கைக்கு  முன்னானது).

புதிய உடன்படிக்கைக்கு  பின்னான ஊழியம் ஆவிக்குரிய ஊழியம்..

II கொரிந்தியர்3:8. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால்,ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?

புது உடன்படிக்கை நிறைவேறும்வரை(இயேசுவின் பரமேற்றம் வரை) செய்யப்பட்ட அனைத்து ஊழியங்களும் ஒழிந்துபோகிற மகிமையையுடைய ஊழியங்களே!!

இயேசு பரமேரும் வரை செய்யப்படவேண்டிய ஊழியம் ஒழிந்துபோகிற மகிமையையுடைய ஊழியம் தானே. நானும் பேதுரு செய்திருக்கவேண்டிய ஊழியமாக காண்பிக்கிறது இந்த ஊழியம் தானே..

///பரிசுத்த ஆவி பொலிந்தருள்ளப்பட்ட பின் தான் ஊழியமே தொடங்கியது///

ஆனால் சகோதரர் இயேசு பரமேறிய பின் தான் அனைத்து ஊழியங்களும் உருவானதாக காண்பிக்கிற காரியம் எப்படிபட்டது??

இயேசு மரித்து நாள் முதல்,பரமேரும் நாள் வரைக்கும் செய்திருக்கபடவேண்டிய ஊழியம் ஒழிந்துபோகிற மகிமையையுடைய ஊழியம் தான்!!!

ஊழியதைவிடுங்கள் இயேசுவின் மரணத்திற்கு பின் நம் அப்போஸ்தலர்களாலும்,சிஷர்களாலும் ஒரு கூட்டு ஜபம் கூட ஏறேடுக்கமுடியவில்லை..

இவர்களை திடபடுத்த,நிகழ்ந்தவைகளை திருஸ்டாந்தபடுத்திக்காட்ட நம் தேவனாகிய கர்த்தருக்கு 40 நாள் தேவைபட்டிருகிறது.. 

சகோதரர் காட்டும் ஊழியம் பரமேறியபின்,நாற்பது நாள் ஜெப காலத்திற்கு பின் தேற்றரவாளன் வருகிறார்.அதன் பின்னான ஊழியம் ஆவிக்குரிய ஊழியம்.. அதைபற்றியவைகளை நாம் இந்த விவாதத்தில் பேச அவசியம் இல்லை..

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!

 



-- Edited by JOHN12 on Sunday 4th of March 2012 10:05:53 AM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

அன்பு நண்பர் ராஜன் அவர்களே,

என்னுடைய முதல் கட்டுரை வலைகளை அலசுதல் பற்றியது..இரண்டாவது கட்டுரை அதன் தொடர்பானது என தெளிவாய் குரிபிட்டுள்ளேனே !!

//இந்த உவமை வலைகளை அலச சொல்லப்பட்ட உவமையா? இதில் வலை என்பது எது? இதில் சுயமா வலைக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே அது போல அல்லவா இருக்கிறது. ///

வலை வீசப்பட்டு வெவ்வேறான மீன்களை அள்ளுதல் பரலோக ராஜ்யத்திற்கு  உவமையாக சொல்லப்பட்ட காரியம்..

வெவ்வேறான மீன்கள் -வெவ்வேறான இன மக்கள்.
வலை- சுவிஷேஷகனான கர்த்தரின் ஊழியக்காரன் ).

அனேக மீன்கள்(வெவ்வேறான ஜனங்கள் ) ஆதாயபடுத்தபட வலை என சொல்லபடுகிற சுவிசேஷகன் கர்த்தரின் வார்த்தையை பிரயோகிக்க சரியான பாத்திரமாய் எப்போதும் விவேகியாய் தன் வழிகளின் மேல் கண்ணுடையவனாய் இருக்கவேண்டும்..கர்த்தரின் கிரியைகள் சுயத்தில் வெளிப்படும் சரியான பாத்திரமாய் தன்னை காத்துக்கொள்ளவேண்டும்..

கர்த்தரின் மகிமையை விட்டு வேறுபடுத்தும் தீட்டனவைகளில் ஈடுபாடுகொண்டு ஊழியர்தையும் செய்ய அவனால் கூடாதே..

மத்தேயு6:24இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

ஊழியம் என்று வந்துவிட்டு, உலக பொருட்களின் மேல் கவனத்தை பறக்கவிட்ட காரணத்தினால், என்றோ மிகவும் வளர்ந்ததாக காணப்பட்ட ஊழியங்கள் இன்றைக்கு ஆத்துமா ஆதாயம் செய்யாமல்,சபையில் இருக்கிறவர்களின் அனலற்ற வாழ்க்கைக்கு அடிகோலுகின்றன..

இத்தகைய சபைகளின் வலைகள் அலசப்படவேண்டும்..தேவ சமுகத்தில் (பேதுருவை போல் ) அலசபடுமேயானால் அதிகமான,வெவ்வேறான  மக்களைப்   பிடிக்க இயலும்..
முதல் கோணல், முற்றும் கோணல் என்கிற வர்ணனை தேவையற்றது  என எண்ணுகிறேன்..

ஆராயாமல் கோணல் என்றெல்லாம் சொல்லிவிடக்கூடாது நண்பரே..
GLORY TO GOD..

 



-- Edited by JOHN12 on Sunday 4th of March 2012 02:01:23 PM

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
Permalink  
 

 

அன்பு நண்பரே, 

பேதுருவும் மற்றவர்களும் பரிசுத்த ஆவியை பெற காத்திருந்தார்கள் என்பதை விசுவாசிக்கிரீர்களா? 

பரிசுத்த ஆவி தரப்பட்ட பின் தான் மேய்ப்பனின் ஊழியம்/ சபை ஊழியம் ஆரம்பிக்கிறது என்று அறிவீர்களா? இயேசு அதற்கு முன்பே பிசாசை துரத்த அனுப்பினார் என்று சொல்லாதீர்கள். அது வேறு, மேய்ப்பன் என்று ஊழியம் வேறு.

பரிசுத்த ஆவியை பெற்ற பின் தான் பாவ மன்னிப்பை குறித்தும், நீதியை குறித்தும், நியாத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் என்று விசுவாசிக்கிரீர்களா?

பரிசுத்த ஆவியை பெரும் முன் பேதுரு என்ன வகை  மேய்ப்பனின்  ஊழியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 

முதல் கோணல் முற்றும் கோணல்

//இதையே தான் நம் கர்த்தராகிய ஏசுவும் பின்வருமாறு கூறுகிறார்.ஆகவே சுயத்தை ஆராய்ந்து வலைகளை அலசுங்கள்..மத்தேயு 13:47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிற// 

 

இந்த உவமை வலைகளை அலச சொல்லப்பட்ட உவமையா? இதில் வலை என்பது எது? இதில் சுயமா வலைக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே அது போல அல்லவா இருக்கிறது. 

தகுதியே கிடையாது 

//தேவனுக்கு தம்முடையவைகளில் இடம் தருதல்.

தம்முடைய காரியங்களை கபடு இல்லாமல் பகிர்தல்

வலைகளையும்,தன சுயத்தையும் அலசுதல்.

கட்டளையின் நுகத்தை சோர்விலும் சுமத்தல்.//

நண்பரின் கூற்றுப் படி ஆண்டவரோடு கூட இருந்த சில மணி நேரங்களில் பேதுரு மேற்கூறிய தகுதியை பெற்று விட்டார். மூன்று ஆண்டுகள் நம் ஆண்டவரிடம் இருந்து, உண்டு உறங்கி, சத்தியத்தைக் கேட்டு, ஆண்டவரின் வாழ்க்கை, மரணம் எல்லாவற்றையும் பார்த்த பேதுருவுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இல்லை என்று சொல்ல காரணம் என்னவோ?

 

  1. தன் சகோதரரின் பசியை ஆற்ற முயற்சி செய்தார்
  2. தன் உந்தன் சகொதரரின் தேவையை புரிந்து கொண்டார்.

இயேசு உயிர்த்தது தெரியாதா?

//மனிதர்களை பிடிக்கும்படி அழைப்பை பெற்றிருந்த சீமான் பேதுரு, கர்த்தராகிய இயேசு மரித்து உயிர்த்ததை அறியாமல் மீண்டும் தன் பழைய தொழிலாகிய மீன் படிக்கும் தொழிலுக்கு போனார்//

இந்த சம்பவம் நடக்கும் போது இயேசு உயிர்த்தது பேதுருவுக்கு தெரியாதா? எல்லா சீஷருக்கும் தெரியும்.

 இந்த சம்பவம் மூன்றாவது தரிசனம். முதல் தரிசனம் பெற்ற அப்போஸ்த்தலர் பேதுருவே என்று உங்கள் அபிமான பவுலே சொல்கிறார். என் முந்தின பதிலை சற்று கவனிக்கவும் 

ஊழியத்தை மறந்துட்ட நீ :

//அப்போஸ்தலரான பேதுரு தாம் பெற்றிருந்த ஊழியத்தை மறந்து, தம்முடைய பழைய வாழ்க்கையின் காரியங்களுக்கு பின்வாங்க முற்படுகிறார்..//

 

வேதத்தில் சொல்லப்படாத இந்த முடிவுக்கு சகோதரர் எப்படி வந்தாரோ? பரிசுத்த ஆவி பொலிந்தருள்ளப்பட்ட பின் தான் ஊழியமே தொடங்கியது . இயேசுவுக்கும் தான் சகோதரரே. 

இயேசுவே காத்திருக்க சொல்கிறார். உங்களுக்கு ஏன் பொறுமை இல்லை.

பழசு வேணாம் புதுசு இருக்கு 

//சத்ருக்களை சங்கரித்து கொண்டிருந்து,சங்கீதம் பாடிகொனு,சோதனைகளை சகித்து கொண்டிருந்தார்//

 

//ஜென்ம தொழிலுக்கு இவர் திரும்பினதாக வசனம் உள்ளதா?? //

 

அன்பு நண்பரின் கூற்றுப் படி அபிஷேகம் பெற்றவன் பழைய தொழிலுக்கு செல்லக் கூடாது, புது தொழில் செய்யலாம். உங்கள் பழைய தொழில் ஆடு மெய்ப்பதாய் இருந்தால் இப்போது பாடலாம், சண்டை போடலாம் . ஆடு மட்டும் மேய்க்க போய்விட கூடாது. இது நல்ல இருக்கே! 

வேதம் ஒன்றும் வாழ்க்கை வரலாறு அல்ல :

//நீங்கள் POSITIVE ஆக காண்பிக்கிற காரியதின்படி பார்த்தால்,மேய்ப்பனாக  அழைக்கபட்ட பேதுரு பின் ஏன் மீன்பிடிக்க செல்லவில்லை!!! வேதம் ஏன் பேதுருவின் மற்றொரு மீன்பிடிப்பை போதிக்கவில்லை???// 

 

நான் எதையும் POSITIVE ஆக காண்பிக்கவில்லை. இருக்கிறதை தான் சொல்லி இருக்கிறேன். அன்பு நண்பரே வேதம் எந்த மனிதனின் வாழ்க்கை குறிப்பை சொல்லும் வரலாற்று புத்தகம் அல்ல. லூக்கா வால் எழுதப்பட்ட அப்போ. நடபடிகள் பேதுருவை குறித்து அநேக குறிப்புகளை சொல்கிறது. இந்த புத்தகம் எதற்கு, யாருக்கு எழுதப்பட்டது என்று நண்பர் அறிந்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டார்? 

 

மீதம் உள்ள எல்லா புத்தகமும் நிருபங்கள்.நிருபம் ஏன் எழுதப்பட்டது என்று நண்பர் அறிவார் என்று நம்புகிறேன். கலாத்தியருக்கும், கொரிந்தியருக்கும் பேதுரு மீன் பிடிக்கும் கதையோ , வஸ்திரம் துவைக்கும் கதையோ அவசியமானது இல்லை. பேதுரு தூங்கினார் என்று வேதம் எங்கும் சொல்லவில்லை ,எனவே அவர் சாகும் வரை தூங்கவே இல்லை என்று சொல்வீர்கள் போல. ஏன், எதற்கு, யாருக்கு சொல்லப்பட்டது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

மூன்றாம் முறை கேட்கும் போது அல்ல, மூன்று முறை கேட்டதினால்:

//மூன்று முறை என்னை நேசிகிறாயா?'என ஒரே மாதிரியான கேள்வியை கேட்டார் என அறிந்து கொள்வீர்கள்.? மூன்றாம் முறை இயேசுவால்  அதே  கேள்வி கேட்கப்படும்போது  பேதுரு விசனப்பட அவசியம் என்ன??காரியம் இல்லாமலா just like that என விசனப்பட்டார்?? இயேசு ஏன் பேதுரு விசனப்பட்ட பின் நான்காம் முறை அதே கேள்வியை  கேட்கவில்லை.அவரது பின் மாற்றத்தை உணர்ந்ததாலேயே அல்லவா !!// 

 

அன்பு நண்பரே வசனத்திலேயே இதற்க்கு பதில் உள்ளது , மூன்றாம் முறை கேட்க்கும் போது ஏன் தூக்கப்பட்டார் ? மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு.  இதன் அர்த்தம் என்னவென்றால் " ஆண்டவரே நான் உம்மை உண்மையாய் நேசிக்கிறேன் . நீர் என்னை நம்பாதது போல மறுபடியும் மறுபடியும் கேட்கிறீர் என்ற தான் தூக்கப்பட்டார்( குத்தப்படவில்லை)

மூன்றாம் முறை கேட்டதினால் தான் தூக்கப்பட்டார். மூன்றாம் முறை கேட்கும் போது என்று நீங்களே வசனத்தை திருத்த வேண்டாம் .

பெரிய ஆளா?

//அப்போஸ்தலர் ஓவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் விஷேமானவர்களே//

 

அப்போஸ்த்தலர் மாத்திரம் அல்ல, தேவனுடைய பார்வையில் நீங்களும் நானும் விசேஷமானவர் தான். அதற்கென்று நீங்களோ, நானோ சபைக்கு முன்னோடி அல்ல. உங்களையும் என்னையும் பெதுருவோடு ஒப்பிட்டால் யார் பெரியவர் என்று நீங்கள் சொல்வீர்களா ? பெரியவனாய் இருக்க விரும்பியவன் எல்லாருக்கும் ஊழியம் செய்தான். எனவே தான் பெரியவர் என்று சொன்னேன். அவருடைய கனத்தை யாராலும் பறிக்க இயலாது. 

அதுபோலவே கேபா, ஆதிசபையில் எல்லோரிலும் உயர்ந்தவர. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளாததினால் பொய் ஆகிவிடாது.  

தாலி கட்டின மாப்பிள்ளையா?

//அனேக காரியங்களை அவர் முன் நின்று நடத்தின படியினால் அவர் முதன்மையானவர் என கருதிவிட முடியுமா!!?//

கல்யாண மேடையில் ஒருவர் உட்கார்ந்து தாலி கட்டிவிட்டால் மாப்பிளை ஆகி விட முடியுமா? என்று கேட்பது போல உள்ளது உங்கள் கேள்வி. 

மத்தேயுவா? மத்தியாவா?

//சீட்டு போட்டு யுதாசுக்கு பதிலாக மத்தேயுவை தெரிந்தேடுதார்கள்.தேவ சித்தத்தை கேட்பதாக சீட்டுபோட்டார்கள்...ஆனால் சீட்டு போட்டு தெரிந்தெடுக்க பட்ட மத்தேயுவின் ஊழிய மகிமை வேதத்தில் எங்கே!?? 

 

வைத்தியனான லூக்கவை போல ஒரு ஆகமத்தை மாத்திரம் எழுதினார்..//

 

அன்பு நண்பரின் மேலான கவனத்துக்கு சீட்டு மத்தேயுவின் பேரில் அல்ல. மத்தியாவின் பேரில் விழுந்தது. மத்தியா எழுதிய எந்த குறிப்பும் நம்மிடம் இல்லை. அதற்காக அவர் எதுமே எழுதவில்லை என்று சொல்ல முடியுமா? எழுதவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் எதுவும் எழுதவில்லை என்பதற்காக எதுவும் செய்யவில்லை என்று அர்த்தமா? 

மத்தேயு யாரால்? எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நண்பர் அறிவாரா? பலருடைய ஊழியம் வேதத்தில் இல்லை. அதற்காக அவர்கள் உபயோகம் அற்றவர்கள் அல்லது பின்மாற்றக் காரர்கள் என்று தீர்ப்பது கண்டனத்துக்குரியது. வேதம் தொகுப்பட்ட வரலாறு, நாம் இழந்த நிருபங்கள் குறித்து நண்பர் அறிந்து கொண்டால் நல்லது. "FOXES BOOK OF MARTYRS" என்ற புத்தகத்தை வாசிக்க அன்பு நண்பருக்கு பரிந்துரைக்கிறேன்.

 

//மத்தேயு 12 ஆம் அப்போஸ்தலன் என்றால், பவுல் 13  ஆம் அப்போஸ்தலன் என என்னபட வேண்டியதாகுமே..ஆனால் வேதம் வெளிப்படுத்தும் புதிய எருசலேமின் அப்போஸ்தல தூண்கள் 12 மாத்திரமே..அவ்வாறு இருக்க 13 அப்போஸ்தலர்கள் ஆளும்படிக்கு எங்கிருந்து வருவார்கள்..//

 

மத்தியா, யுதாசுக்கு பதிலாக தேர்தெடுக்கப் பட்டவர். இந்த கேள்வியை ஏன் இங்கு சம்பந்தம் இல்லாமல் கேட்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.

 

// பிந்தினோர் முந்தினோர் ஆவர்கள்//

 

இதில் பிந்தினோர் யார் ? முந்தினோர் யார்? பேதுரு , பவுலா? 

மீண்டும் இந்த வசனத்தையும் யாருக்கு சொல்லப்பட்டது என்று ஆராயுங்கள். 



-- Edited by Rajan In Christ on Sunday 4th of March 2012 02:13:50 AM

__________________
Rajan


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

அன்பு சகோ.ராஜன் அவர்களே..

கட்டுரை கேள்விகளால் புடமிடபட்டு இறுதியில் சரியான கருத்துக்கள் நிலைநாட்டபடுமேயானால் நல்லது தானே.வருத்தம் தேவை இல்லை. நான் உங்கள் கருத்துகளை தியானித்து தான் பதில் அளித்தேன், சில கேள்விகளையும் சரியான புரிதலுக்காக முன் வைத்தேன்..

///நான் எப்போதுமே விவாதிக்க விரும்ப மாட்டேன். உங்கள் கட்டுரையை வாசிக்கும் போது என் கருத்தை பதிக்க இது நல்ல இடமாக இருக்கும் என்றே பதித்தேன். "பொதுவான கட்டுரை" பகுதி "விவாதம்" ஆனது வருத்தமே. இருப்பினும் உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டேன். நான் சொல்ல வரும் காரியத்தை தியானிக்க இடம் கொடுக்காமல் பதில் கேள்வி கேட்பதில் நீங்கள் ஆர்வமாக இருப்பது போல தெரிகிறது.///

சகோதரே நான் கேட்கும் கேள்விகள் விவாதத்திற்கு பிரியோஜமானவைகளே.. இயேசு ஏன் பேதுருவிடம் மூன்று முறை கேள்வி கேட்டார் எனவும், மூன்றாம் முறை கேள்வி கேட்கும் போது பேதுரு ஏன் விசனமடைந்தார் எனவும், நான்காம் முறை இயேசு ஏன் அதே கேள்வியை கேட்காமல் பேதுரு தேவனை மரணத்தால் மகிமைபடுத்தபோகிறதை  குறித்து பேசுகிறார் என நீங்கள் தியானித்தீர்களா?!

என்ன பதில் பெற்றீர்கள் நண்பரே?

பேதுரு விஷேஷமான அழைப்பை பெற்றதால் முதன்மையானவர் என்கிறீர்கள்..அப்போஸ்தலர்கள் யாவரும் மஹா பிரதானமானவர்கள் என்றால் அதிலும் பேதுரு பிரதானம் என எவ்வாறு வசன அடிப்படையில் உங்களால் முன் நிறுத்த இயலும்?!

அனேக காரியங்களை அவர் முன் நின்று நடத்தின படியினால் அவர் முதன்மையானவர் என கருதிவிட முடியுமா!!?

சரி நான் முன் வைத்த கேள்விக்கான பதிலை இக்காரியதிர்காக உதாரணமாக்குவது சிறந்தது என எண்ணி பகிர்கிறேன்,

சீட்டு போட்டு யுதாசுக்கு பதிலாக மத்தேயுவை தெரிந்தேடுதார்கள்.தேவ சித்தத்தை கேட்பதாக சீட்டுபோட்டார்கள்...ஆனால் சீட்டு போட்டு தெரிந்தெடுக்க பட்ட  மத்தேயுவின் ஊழிய மகிமை வேதத்தில் எங்கே!?? 
வைத்தியனான லூக்கவை போல ஒரு ஆகமத்தை மாத்திரம் எழுதினார்..அவருடைய அப்போஸ்தல ஊழியம் வேதத்தில் எங்கே..அவர் மனிதரால் அப்போஸ்தலராக்கபட்டவர்  அவ்வளவே.

ஆனால் கர்த்தரின் தெரிந்தெடுப்பு வேறு,
ஆனால் கர்த்தர் தம்முடைய உத்தம ஊழியனாய் தெரிந்துகொண்டவர்,ஸ்தோவானின் மரணத்தின் வேலையில் அங்கே இருந்த சவுல் தானே..மகிமையின் தரிசனம்  தந்து,சவுலை பவுல் என மாற்றி தம் புறஜாதியின் அப்போஸ்தல  ஊழியத்திற்கு முன்குறித்தவரும் நம் கிறிஸ்துவானவர் தாமே..

கலாத்தியர் 2:7 அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி  பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,
மத்தேயு 12 ஆம் அப்போஸ்தலன் என்றால், பவுல் 13  ஆம் அப்போஸ்தலன் என என்னபட வேண்டியதாகுமே..ஆனால் வேதம் வெளிப்படுத்தும் புதிய எருசலேமின் அப்போஸ்தல தூண்கள் 12 மாத்திரமே..அவ்வாறு இருக்க 13 அப்போஸ்தலர்கள் ஆளும்படிக்கு எங்கிருந்து வருவார்கள்..
ஆக., கர்த்தரின் நாம மகிமைக்காக எலியாவை போல முன் நிற்கும் காரியமே வாய்க்குமே அல்லாமல் மனித தெரிந்தேடுப்புகள் அல்ல என சகோதரர்கள் அறிவார்களாக!!  
அதே போல விக்கிரகத்திற்கு படைத்ததை பற்றிய கூட்டத்தில் புறஜாதியின் அப்போஸ்தலன் பவுல் அழைக்கப்படவில்லை, ஆகவே அவர் பின்னாளில் நியாயபிரமாணத்தின் காரியத்தை முன் நிறுத்தாமல் விசுவாசிகள் உணரும்படிக்கு,மற்றவர்களுக்கு இடறல் வராமல் காரியத்தை மாற்றி அமைத்தார்.
புறஜாதிகளுடன் உணவு உண்ணும் போது பேதுரு பண்ணின மாய்மாலத்தையும்  பவுல் எதிர்த்ததாக கலாதிரின்  நிருபத்தில் தெளிவாய் உள்ளது..

கலாத்தியர்(2 :12 ,13.) எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.

         மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். 

ஆகவே இருப்பதை இருப்பதை போல பேசுவோம் சகோதரரே, பிந்தினோர் முந்தினோர் ஆவர்கள் என வசனம் இருக்க அப்போஸ்தலனானாலும்,விசுவாசியானாலும் அவர்களின் செயல்பாடுகளை கொண்டு முதன்மையையை நியமிப்பது நம் காரியம் அல்ல.அது கர்த்தரின் காரியம் என கர்த்தருக்குள் சகோதருக்கு நினைவுபடுத்துகிறேன்.(நேரம் குறைவால் சுருக்கமாய் தரவேண்டியாயிற்று)

கர்த்தாதி கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!  

-- Edited by JOHN12 on Saturday 3rd of March 2012 11:31:52 AM



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

Rajan In Christ wrote:

இந்த சம்பவத்தை பலரும்"பேதுருவின் பின்வாங்கிப் போன நிலை" என்றே வியாக்கியானம் செய்கின்றனர். எனக்கு இது குறித்து பல காலமாகவே வருத்தம் உண்டு. 

அங்கே என்ன நடந்தது?

தங்களுடைய தொழிலை விடுத்து இயேசுவினுடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அவருக்குப் பின் சென்ற சீஷர்கள் அவர் சிலுவையில் மரித்து உயிர்தெழுந்த பின் கூடிவருகின்றனர். இதன் மூலம் யோவானோடு இடைபட்ட பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்து தங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரும் சீஷர்கள் சிதறுண்டு செல்லாமல் ஒருவரை ஒருவர் சார்ந்து இணைந்து இருந்ததை நமக்கு அறியத் தருகிறார்.

(யோவான் 21:2) சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது 

இயேசு அவர்களுடன் இருந்த வரையில் தங்கள் போஜனத்திற்கு அவரையே சார்ந்து இருந்தார்கள். ஒரு குறைவும் இல்லாமல் நம் நல்ல மேய்ப்பர் அவர்களை நடத்தினார். இப்போதோ அவர் தங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதால் மிகுந்த பசியினால் வாடி இருக்க வேண்டும். ஏனென்றால் போஜனம் வாங்கவோ தயார் செய்யவோ தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலை. அவர்கள் தங்கள் தொழிலை விடுத்து வந்துவிட்டனரே! 

தம்மோடு இருக்கும் சகோதரர்களின் உள்ளம் அறிந்த பேதுரு "மீன் பிடிக்க போகிறேன்" என்றான். இரவு வேளையில் மீன் பிடிக்க தனியே செல்ல துணிவது தம் சகோதரர் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறது. இது ஒரு நல்ல மேய்ப்பனுக்கான தகுதி.

"மீன் பிடிக்க போகிறேன்" என்று பேதுரு சொன்னதுமே மற்ற அனைவரும் "நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள்". இதில் பலருக்கு மீன் பிடிக்கும் அனுபவம் இல்லாதிருக்கலாம். இரவு வேளையில் ஒரு முறையேனும் கடலுக்கு செல்லாதவர்கள் இருந்திருக்கலாம். பேதுரு மீன் பிடித்து கொண்டு வருவார் நாம் அனைவரும் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று நினைக்காமல், தங்கள் இயலாமையை தள்ளிவிட்டு அவனுக்கு உதவ முன் வந்த மற்ற சகோதர்கள் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. 

சீஷர்க்ளின் இந்த அன்பும், ஒற்றுமையும் தேவனின் உள்ளத்தை சந்தோஷத்தால் நிறைத்திருக்குமே! 

தேவன் அவர்களை உலகமெங்கும் சென்று இந்த நற்செய்தியை அறிவிக்க தெரிந்து கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவி அவர்களிடத்தில் வர காத்திருக்கச் சொல்கிறார். இயேசுவும் பரிசுத்த ஆவியினால் நிரப்படும் வரை தம் தந்தையின் தொழிலை செய்தார். 



 This is what I was expecting. Really amazing to view your views. Excellent. I also planned to write about the words from God. I will write when I have sufficient time.

 

Thanks for your views....




-- Edited by sjchristopher on Friday 2nd of March 2012 06:49:45 PM

__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
Permalink  
 

அன்பு சகோதரர் sjchristopher, 
நம் பிரதான ஆசாரியர் இயேசு கிறிஸ்துவே நமக்கு சொல்லிருக்கும் அருமையான வசனத்தை மேற்கோள் காட்டி உள்ளீர்கள். 
sjchristopher wrote:

Rajan In Christ wrote:

//நமக்கு கர்த்தரின் நாமம் தான் தரிக்கபடுமே தவிர வேறெந்த மேய்ப்பனின் நாமமும் அல்ல// 

உண்மையே. இந்த உலகில் இருக்கும் வரை நமக்கு ஆவிக்குரிய மேய்ப்பர்கள் அவசியம் என்று தான் இந்த சம்பவத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவே எங்கள் மேய்ப்பர் அதனால் என் சபை போதகரோ, மூப்பரோ என்னிலும் மேற்பட்டவர் அல்ல என்று நினைப்பதே இன்று பல பிரச்சனைக்கும் காரணம். 


மத்தேயு 23
2. வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

3a. ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்;

 



__________________
Rajan


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
Permalink  
 

spetersamuel wrote:

 நன்றாக எழுதுகிறீர்கள் சகோதரர் Rajan அவர்களே... வாழ்த்துக்கள்...!


 அன்பு சகோதரர் spetersamuel ,

தங்கள் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி,



__________________
Rajan


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

Rajan In Christ wrote:

//நமக்கு கர்த்தரின் நாமம் தான் தரிக்கபடுமே தவிர வேறெந்த மேய்ப்பனின் நாமமும் அல்ல// 

உண்மையே. இந்த உலகில் இருக்கும் வரை நமக்கு ஆவிக்குரிய மேய்ப்பர்கள் அவசியம் என்று தான் இந்த சம்பவத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவே எங்கள் மேய்ப்பர் அதனால் என் சபை போதகரோ, மூப்பரோ என்னிலும் மேற்பட்டவர் அல்ல என்று நினைப்பதே இன்று பல பிரச்சனைக்கும் காரணம். 


மத்தேயு 23
2. வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

3a. ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்;


__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

Rajan In Christ wrote:
நான் அப்போ. பேதுருவை பிரதான அப்போஸ்தலர் என்று சொல்லவில்லை. முதன்மையானவர் என்றே குறிப்பிட்டுள்ளேன். அப்போச்தலருக்குள் மிகுந்த மரியதைகுரியவராய் விளங்கியதை வேதத்தில் நாம் காணலாம்.


 நன்றாக எழுதுகிறீர்கள் சகோதரர் Rajan அவர்களே... வாழ்த்துக்கள்...!



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
Permalink  
 

அன்பு நண்பர் ஜான் அவர்களே, 

நீங்களும் அருமையாக உங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தீர்கள். வாழ்த்துக்கள். 

நான் எப்போதுமே விவாதிக்க விரும்ப மாட்டேன். உங்கள் கட்டுரையை வாசிக்கும் போது என் கருத்தை பதிக்க இது நல்ல இடமாக இருக்கும் என்றே பதித்தேன். "பொதுவான கட்டுரை" பகுதி "விவாதம்" ஆனது வருத்தமே. இருப்பினும் உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டேன். நான் சொல்ல வரும் காரியத்தை தியானிக்க இடம் கொடுக்காமல் பதில் கேள்வி கேட்பதில் நீங்கள் ஆர்வமாக இருப்பது போல தெரிகிறது.


உங்கள் கருத்தக்களை ஜெபத்தொடு தியானிக்கிறேன். நீங்களும் என் கருத்துக்களை ஜெபத்தொடு தியானியுங்கள். ஒருவரில் ஒருவர் கற்றுக் கொள்ளலாம். 

தேவன் உங்களோடு இருப்பாராக!

அன்புடன்,

ராஜன் 



-- Edited by Rajan In Christ on Friday 2nd of March 2012 01:05:36 AM

__________________
Rajan
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard