josephsneha@Tcs On 24-02-2012 14:26:03 சகோதரர் அருள்ராஜ்:இந்திய தொலைபேசி நிறுவனத்தில் பணி புரிந்தவர், 2 சிறு நீரகங்களும் பழுதுபட்ட பின்பும் தேவ தயவால் வல்லமையாக ஊழியம் செய்து வந்தவர். இயேசு அழைக்கிறார் ஊழியங்களின் மூலமாகவும் தனது தனிப்பட்ட ஊழியத்திலும் மிகவும் வல்லமையாக பிரசங்கித்தவர். தேவ ஆவியானவர் வல்லமையாக இவர் மூலமாக செயல்பட்டதை கண்டிருக்கிறேன். இவரது வாழ்விற்காகவும் விட்டு சென்ற பணிகளை குடும்பத்தார் வல்லமையாக எடுத்து செய்யவும் ஆண்டவரை துதித்து வேண்டுவோம்.
சகோதரர் டிஜிஎஸ் தினகரன் அவர்களின் நினைவு நாளான நேற்று அவரால் தேற்றப்பட்டவரான சகோதரர் அருள்ராஜ் அவர்களும் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டது,ஆச்சர்யமான ஒற்றுமையாகும். இவர்களைப் பெற்றுக்கொடுத்த தாய்மாருக்காகவும் அவர்களை வளர்த்துக்கொடுத்த திருச்சபைக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தருடைய வருகை பரியந்தம் இவர்கள் செய்த ஊழியம் பேசப்படும்.இவர்களால் எழுப்பப்பட்ட ஊழியங்களும் பரவிச்செல்லும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Condolence: Evangelist. D.Arul Raj (Jesus is refuge) gone to be with the Lord today 10.30 am. Funeral will be held on tomorrow-Monday 3pm at Andrew Church, Egmore.
பிரபல சுவிசேஷகர் டி.அருள்ராஜ் அவர்கள் கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 10:30 மணிக்கு அவர் கர்ததருடைய சமூகத்தில் இளைப்பாற கடந்துசென்றுவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம். அன்னாரது பிரிவின் நிமித்தம் துக்கத்திலிருக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
ஐயா அவர்கள் தனது சரீரத்தில் பல்வேறு உபாதைகளும் பெலவீனமும் இருந்தாலும் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்று அநேகம் உடைக்கப்பட்ட உள்ளங்களை அரவணைக்கும் கர்த்தருடைய அன்பினால் தேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரர் தானமாகத் தந்த சிறுநீரகத்துடன் க்டந்த 30 வருடத்துக்கு மேலாக அவர் செய்த ஊழியம் சவால் மிக்கது. அவர்தம் வழிநின்று அவரால் செய்யப்பட்ட ஊழியங்களைத் தொடர அநேகரை கர்த்தர் எழுப்புவாராக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)