Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஃபேஸ்புக் தளத்தில் உலவும் புல்லுருவிகள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
ஃபேஸ்புக் தளத்தில் உலவும் புல்லுருவிகள்..!
Permalink  
 


by Yauwana Janam on Wednesday, 25 January 2012 at 13:46

Ma Dhava Raj

/// ஊழியம் என்பது குளுகுளு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் தனக்கு தெரிந்தபடியெல்லாம் எழுதுவது அல்ல. தெருதெருவாகச் சென்று தேவனுக்கு தொண்டு செய்வது மட்டுமல்ல..., ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டும். ///

 இந்த வரிகள் யாருடையது தெரியுமா..? போலிகள் ஜாக்கிரதை..! - என்கிறார்: Yauwana Janam

இந்த Yauwana Janam யார் ? என்று, இங்கு FB - ல் உள்ள யாருக்காவது தெரியுமா?

மேற்கண்ட வரிகளுக்கு சொந்தமான நபர் யார் என்று தெரியாது.இந்த நபர் நாம் எழுதுவற்றைத் தொடர்ந்து திருத்தியும் கூட்டியும் குறைத்தும் தன் சொந்த கருத்துபோல வெளியிடுவதும் நண்பர்களுக்குள் சிண்டு முடிவதுமாக இருக்கிறார். குறிப்பாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள வரிகளில் முதல் வரி நிச்சயமாக இவருடையது அல்ல.நண்பர்கள் இணக்கமானதொரு சூழலுக்கு வருவதற்குத் தடையாக இருக்கும் இதுபோன்ற போலிகள் முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட நம்மைப் போன்றோரை சுற்றிசுற்றி வரும் காரணம் வேறொன்றுமில்லை, இவர்களுடைய நோக்கமெல்லாம் நன்மையானவைக் காட்டிலும் கலகத்துக்கேதுவானவைகளை ஊதிக்கொண்டிருக்கவேண்டும் என்பதே.இதுபோன்ற செயல்களைக் கண்டிக்கவும் இதுபோன்ற நபர்களைப் புறக்கணிக்கவும் வேண்டி இதன் விவரங்களை நண்பர்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.முக்கியமாக நம்முடைய அனுமதியின்றி நம்முடைய ப்ரொஃபைல் படங்களையெடுத்து ஆளுவதையும் தனிவிமர்சனம் செய்வதையும் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். இது ஃபேஸ்புக் விதிகளுக்கும் முரணானதாகும்.இதன் காரணமாகவே நாம் நமக்கு அருமையானவர்களிடம் கூட நம்முடைய புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளமுடியாத இறுக்கமான சூழ்நிலை காணப்படுகிறது.இதுபோன்ற போலிகள் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் உலாவருவது வருந்தத்தக்கது.யௌவன ஜனம்  தளமானது, ஒரு சிறு குழுவாக நண்பர்களின் ஆதரவுடன் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி இந்த போலிகளுக்கு எதிராக நாம் பதித்துள்ள பின்னூட்டங்களின் தொகுப்பு...

Yauwana Janam

கீழ்க்காணும் ஐடியை சூழ்ச்சியுடன் திருடி குழப்பம் விளைவித்த கள்ளனுக்கும் இந்த மாதவராவ் என்பவருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா..?

http://chillsam.activeboard.com/

ஒருவருடைய கருத்து மனதைக் கவரும்போது அதனை மேற்கோள் காட்டுவதும் நண்பர்களுக்குள் பகிர்வதும் தவறே கிடையாது.ஆனால் பெயரைப் போடாமல் அறிவுத் திருட்டு செய்வதையே குலத் தொழிலாக சிலர் மேற்கொண்டால் அதனை நாம் ஊக்குவிக்காமல் சுட்டிக்காட்டவும் வேண்டும். இதனால் வீணான குழப்பங்கள் தவிர்க்கப்படும்.அறிவுத் திருட்டும் கூட மன்னிக்கப்படலாம். ஆனால் அதனை மாடிஃபை செய்வது இட்டுக்கட்டுவதும் நண்பர்களுக்குள் சிண்டுமுடிவதும் எப்போது எவன் மோதிக் கொள்வான் ரத்தம் குடிக்கலாம் என்று கொம்பேறி மூக்கனைப் போல காத்திருப்பதும் நாகரீக சமுதாயத்துக்கு ஏற்புடையதல்ல.

நண்பர்கள் ஒருவரை விடாமல் துரத்தி துரத்தி தூஷித்து புகைப்படங்களை எடுத்துப்போட்டு அவமானப்படுத்தி கருத்து மோதலை முரட்டு மோதலாக்கி நட்பு வளர்க்கும் கலாச்சாரத்தை சில கிறிஸ்தவ பன்னிகள் கடைபிடித்து வருவதாலேயே பலரும் திரைமறைவிலிருந்து வெளியே வர தயங்குகிறார்கள். மற்றபடி இந்த பன்னிகளுக்கு பயந்து யாரும் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. 

http://yauwanajanam.activeboard.com/

இதுவே நமது உண்மையான முகவரியாகும்.நாங்கள் யாரோ வேற்றுகிரகவாசிகள் அல்ல. கடந்த மூன்று வருடத்துக்கும் மேலாக இங்கு தான் இருக்கிறோம். எங்கும் ஓடிவிடவில்லை. உண்மையான நண்பர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறோம்.

Ignatius Elango

/// தங்களின் சொந்த முகங்களை வெளியிடாமல் போலியான புகைப்படங்களுக்கு பின் மறைந்திருக்கும் அனைவரும் போலிகளே!! ///

போலிகளிடம் நிழல் முகத்தைக் காட்டினாலே போதும்; மற்றபடி தேசத்தின் அனைத்து சட்ட அமைப்புகளுக்கும் நாங்கள் உட்பட்டிருக்கிறோம். எங்களுக்கென்று பாஸ்போர்ட்/ வோட்டர் ஐடி/ ரேஷன் கார்டு/ பான் கார்டு போன்ற அனைத்து உண்மையான ஆவணங்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் உற்சாக மனதுடன் சேவிக்கும் ஆராதிக்கும் தேவனும் எங்கள் மனசாட்சிக்கு காவலாக இருக்கிறார்.

இதோ அசல் முகத்தை காட்டியவரின் பரிதாப நிலை..!

https://www.facebook.com/photo.php?fbid=152780231499295&set=a.119337268176925.20277.100003019575817&type=3&theater

கண்ட நாயும் வந்து மேய்வதற்காவா இங்கே நண்பர்கள் தங்கள் புகைப்படத்தைப் பகிருகிறார்கள் ?

https://www.facebook.com/photo.php?fbid=149631291814189&set=a.119337268176925.20277.100003019575817&type=3&theater

Devamanohar Michael

//நான் ஆசிரியராக பணிபுரிகிறேன். நான் தேர்வு தாளை திருத்தும்போது மாணவர்களின் முகம் அதில் தெரியும். ///

அற்புதமான வரிகள்..!

இறைவனைக் கண்டாலே நம்புவேன் என்று அடம்பிடிக்கும் சிலருக்கும் கூட இதையே சொல்லலாம், ’ அவர் அருளிய வேதத்தில் அவருடைய திருமுகம் உனக்குத் தெரியாவிட்டால் நீ கண்செருகிப்போன குருடன்,’ என்று. சிலர் அவர் தேவனே அல்ல,ஆதாமின் பாவத்தை மட்டுமே போக்க வந்த பிந்தின ஆதாம் மாத்திரமே என்ற அளவில் மட்டுமே அவரை அறிந்து வைத்திருக்கிறார்களே அதுவல்லவா உண்மையிலேயே ஆபத்தானது..??? இயேசு எனது பாவத்துக்கான பலியல்ல,ஆதாமின் பாவத்துக்கே கிரய பலியானார் என்பதுவா சுத்த சுவிசேஷம், சொல்லுங்கள் ஆசிரியரே...அதோ ஒருத்தன் ஓடறான் பாருங்க...பிடிங்க அவனை..! 

Ignatius Elango

/// நான் அவன் இல்லை என்று சொல்ல வசாதியாக இவர்கள் ...///

ஐயகோ...கிறிஸ்துவின் சாயலாயிருக்கிற மகிமையின் சுவிசேஷத்தை ஓயாமல் புரட்டி நீ எந்த உபதேசத்தின் பின்னணியிலிருந்து வந்திருக்கிறாய் என்று கேட்டால் நான் அவனில்லை என்று சொல்லுவதையே தாரக மந்திரமாகக் கொண்டு குளவிகளைப் போல தேசமெங்கும் படையெடுத்திருக்கும் ஆட்களின் வேஷத்தை பாரீர்..! 

@Ravi Lenin Stanley

/// IE/- supper Brother. இது போன்ற பொது இடங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பவர்கள், தங்களின் முகங்களை மறைக்கிறார்கள் என்றாலே அதில் போலித்தனம் தான் இருக்க முடியும்!! ///

அப்படியானால் இதுபோன்ற பொதுவிடங்களில் தங்கள் சொந்த முகத்துடன் கருத்து கூறுபவர்களின் கருத்து நிஜமானது என்கிறீர்களா,சூரியனாரே..? இம்மானுவேல் ஆபிரகாம் எனும் பெயரில் எழுத முடியாமற் போனதால் அவரே இன்னொரு போலி பெயரில் இங்குமங்கும் கலகமூட்டினால் பரவாயில்லையா, சாரே..? அந்த மனிதர் நிஜஸ்தர்களைப் படுத்தியபாடு உங்களுக்குத் தெரியும்தானே..?

(சாதி இன மத அரசியல் சினிமா போன்ற ) வேறொரு களத்தில் இதுபோல ஒருவரையொருவர் பழித்து தூஷிக்கும் ஒரே ஒருவரையாவது காட்டுங்கள் பார்ப்போம்..! அரவாணிகள் கூட ஒற்றுமையாக இருக்கிறார்கள் ஐயா..! நாமனைவருமே சத்தியத்துக்காக நிற்பது உண்மையானால் நிஜத்துக்கு சவால் விடும் போலிகளிடம் நிழல்முகத்தைக் காட்டினாலே போதுமானது.நிழலுக்குப் பின்னால் நிஜமும் போலிக்கு எதிராக நிஜமும் இருக்கிறது. நமக்குள் பரஸ்பர நம்பிக்கையும் புரிதலும் வரும்வரைக்கும் இது மாத்திரமே சாத்தியம்.

சத்தியமேவ ஜயதே..!

https://www.facebook.com/note.php?note_id=131522436965069

மேற்காணும் உரையாடல்களில் இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் யெகோவா சாட்சியினரின் ஒரு பிரிவான வேதமாணாக்கர் குழுவைச் சார்ந்த திருவாளரும் பெந்தெகொஸ்தே வட்டாரத்தில் புழங்கும் நண்பர்கள் சிலரும் நமக்கு எதிராகக் கைகோர்த்திருப்பதைக் காணலாம். இதன் உள்நோக்கம் என்னவோ நாம் அறியோம்.ஓரளவுக்கு யூகிக்கமுடிந்த காரண காரியம் என்னவென்றால் யெகோவா சாட்சி கூட்டத்தாரின் தந்திரங்களை நாம் போட்டு உடைத்ததில் கடந்த மூன்று வருட முன்விரோதம் நம்மீது (மேசியாவின்) எதிரிகளுக்கு இருக்கிறது.நியாயத்தை நியாயமாகவும் சத்தியத்தை சத்தியமாகவும் நிரூபிக்கப் போராடி முகதாட்சண்யமோ போலியான நட்புணர்வோ இன்றி நாம் உறுதியுடன் நிற்பதால் மற்ற புல்லுருவிகள் சிலருக்கு நம்மீது எரிச்சல் இருக்கிறது. இதன்காரணமாகவே தொடர்ந்து நம்மை தனிமைப்படுத்தும் வண்ணமாக பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் ஒன்றுக்கும் அடிபணியாமல் நிமிர்ந்து நிற்போம் என்று உறுதியளிக்கிறோம். ஒத்தகருத்துடைய நண்பர்களுடன் இணைந்து செயல்படும் ஆவலுடன் நம்முடைய கரம் நட்புணர்வுடன் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கிறது. உளவுபார்க்கவும் உரசிப்பார்க்கவும் தொடர்வோரை தொடர்ந்து புறக்கணிப்போம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard