”குரான் இறைவேதமா..”என்ற தலைப்பில் இன்று சென்னையில் வைத்து நடக்க இருந்த விவாதம் காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது அறிந்ததே.இது இருதரப்புக்கும் பொதுவானதாகும்.
ஆனால் உண்மைக்கு மாறாக இஸ்லாமியர்களின் தளத்தில் தவறான தகவல் இணைய உலகுக்குக் கொடுக்கப்படுகிறது.அதில் நம்மை சிறுமைப்படுத்தும் வண்ணமாக “சென்ற தலைப்பில் திணறிப் போனவர்கள் இந்த விவாதத்திற்கு வராமலே ஓடிவிட்டனர்” என்று பொய்ப் பிரச்சாரம் செய்வதுடன் அவர்களுடைய அலுவலகத்தில் வைத்து விவாதம் நடப்பதுபோன்ற மாயையையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இது எல்லாவித அடிப்படை தர்மங்களுக்கும் விரோதமானது என்பதுடன் இதனால் இஸ்லாமியர்களின் இதுபோன்ற போக்கு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம். http://onlinepj.com/Ho-live/medium.php
TNTJ அமைப்பினர் தங்கள் அலுவலகத்தில் நிகழ்ச்சியை நடத்தி அதை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டு விவாதம் செய்வது போல தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.
சாக்ஷி அமைப்பு TNTJ அலுவலகத்திற்கு சென்று நேரடி ஒளிபரப்பு இல்லாமல் விவாதிக்க தயாராக இருந்தது.ஏனென்றால் விவாதம் நடைபெறாமல் காவல் துறை தடை செய்வதற்கு நேரடி ஒளிபரப்பும் ஒரு காரணமாக இருந்தது.நேற்று மாநகர காவல் ஆணையர் விவாதம் நடத்துவதை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
TNTJ அமைப்பினர் ”குரான் இறைவனின் வார்த்தையா?” என்ற தலைப்பில் விவாதிக்க தயராக இருந்திருந்தால் நேரடி ஒளிபரப்பை மட்டும் தவிர்த்து அவர்கள் அலுவலகத்தில் வைத்து விவாதிக்க ஏன் தயாராகவில்லை.அல்லது எங்களிடம் அவர்கள் சொன்னது போல் TNTJ வின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காவல் துறை அனுமதி பெற்று பொது இடத்திலேயே முன்பு நடத்தியது போல் விவாதம் நடத்த ஏன் முன்வரவில்லை.இதிலிருந்தே TNTJ வினர் இந்த தலைப்பில் விவாதிக்க தயாராக இல்லை என்பதே தெரிகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நாளை காலை முதல் ”குரான் இறைவேதம் இல்லை" என்ற தலைப்பில் சென்னையில் வைத்து நடைபெற இருந்த விவாதம் காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தினால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதில் நாம் தார்மீக வெற்றி பெற்றிருக்கிறோம்... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..!
எப்படி..???!!!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மேற்காணும் வசனம் மிகவும் பிரபலமானது.வழக்கமாக நம்முடைய மீடியா ஊழியர்கள் இந்த வசனத்தின் அடிப்படையில் 11 மணி முதல் 2 மணிவரை ஒரு சூப்பர் உபவாச கூட்டத்தை நடத்துவதுண்டு.ஆனால் உண்மையிலேயே ஒரு உபவாச நாளை நியமித்து ஆண்டவரை நோக்கி கதறவேண்டிய காலக்கட்டத்துக்குள் வந்திருக்கிறோம்.ஆம்,கடந்த சுமார் பத்துவருடத்துக்கும் மேலாக ஊடகங்களிலும் தெருமுனைக்கூட்டஙக்ளிலும் நம்முடைய மார்க்கத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி வந்த இஸ்லாமியர்களை விவாதத்துக்கு அழைத்திருக்கிறோம்.இது ஒரு மாபெரும் யுகப்புரட்சிக்கு வித்திடும் காரியமாக மாறும் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறோம்.
மதசார்பற்ற தேசமான நம்முடைய தேசத்தில் அவரவர் தத்தமது மார்க்க நம்பிக்கைகளைப் பின்பற்றுவது அடிப்படை உரிமையாகும்.அதில் இன்னொருவர் குறுக்கிடுவதில்லை.ஆனால் இஸ்லாமியரோ இந்த அடிப்படை உரிமையை மீறும்வண்ணமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் குரான் எனும் அவர்களின் வேதமே.அதன் அடிப்படையில் நம்முடைய வேதத்தை பொய்யானது என்றும் இட்டுக்கட்டப்பட்டது என்றும் திருத்தப்பட்டது என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்வது அவர்களுடைய முழுநேர பணியாகும்.இதுவரை அவர்களைக் கண்டும் காணாமல் நாம் இருந்துவந்தோம்.ஆனால் நவீன ஊடகங்களின் படையெடுப்புக்குப் பிறகு அவர்களுடைய தாக்குதல் அதிகமாகிவிட்டது.இதனை உடனே தடுத்தாகவேண்டிய நிலையில் இப்போது தான் நாம் நம்முடைய வேதத்தின் இரகசியங்களையே ஆராயத் துவங்கியிருக்கிறோம்.
பெரும்பாலான சபையாருக்கு முதலில் இரு மார்க்கத்துக்கும் இடையே இருக்கும் கால நேர கலாச்சார இடைவெளிகளை எடுத்துக்கூறி அதற்குப் பிறகு அவர்களுக்கு வேதத்தின் மகத்துவங்களை எடுத்துக்கூறவேண்டும்.அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை சபையானது எடுக்கவில்லை என்றே கூறலாம்.ஆனால் இஸ்லாமியருக்கோ அப்படியல்ல,அவர்கள் ஏறக்குறைய தங்கள் பணிகளை நிறைவுசெய்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தமிழ் அறியாதிருந்தும் நம்முடைய் மொழியின்மீதும் மாநிலத்தின் மீதும் அக்கறை கொண்ட மாபெரும் வேத அறிஞர்கள் நம் சார்பாக நிற்க முன்வந்திருக்கிறார்கள்.எத்தனை இலட்சம் கொடுத்தாலும் பெருமதியான இந்த அறிஞர்கள் எந்தவித உள்நோக்கமோ லாப நோக்கோ சுயநலமோ இல்லாமல் தியாகத்துடன் இந்த சவாலை மேற்கொண்டிருக்கின்றனர்.தமிழ் கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களுக்கு பெரிய உதவி எதையும் செய்யாவிட்டாலும் தார்மீக ஆதரவையும் வரவேற்பையும் கொடுத்து உற்சாகப்படுத்த முன்வரவேண்டும்.மற்ற காரியங்களை பரிசுத்த வேதாகமத்தை நமக்குக் கொடுத்த பரிசுத்த தேவனே பார்த்துக்கொள்ளுவார். ஏனெனில் அவருடைய வேதத்தை பாதுகாக்கவேண்டிய முக்கிய பொறுப்பு அவரையே சாரும் அல்லவா ?கடந்த சனி மற்றும் ஆகிய தினங்களில் பைபிள் இறைவேதமில்லை என்று அத்தனை தைரியமாக பேனரை எழுதி பின்னணியில் தொங்கவிட்டு இஸ்லாமியர் ஒரு பெரும் அலப்பறையை நடத்தினர். அதில் நம்முடைய அறிஞர்கள் முதலாவது தங்கள் மாண்பையும் கிறிஸ்துவானவரின் சாயலையும் காத்துக்கொண்டதில் மாபெரும் வெற்றிபெற்றனர். பெரும்பாலான நண்பர்கள், முதல் நாளில் நாம் மிகவும் அவமானப்பட்டதாகச் சொன்னார்கள்.ஆனால் இன்று விடிய விடிய முதல் நாளின் வீடியோ தொகுப்புகளைப் பார்வையிட்ட பிறகு தான் தெரிகிறது,நம்முடைய அறிஞர்கள் கடுமையான சவால்களை எதிர்தரப்புக்கு முன்பு வைத்திருக்கிறார்கள். ( இத்தனைக்கும் நம்முடைய அறிஞர்கள் எடுத்துவைத்த முக்கியமான வாதங்கள் அதில் தணிக்கை செய்யப்பட்டிருந்தது. நடுநிலையுடன் தணிக்கை செய்யப்பட்ட வீடியோ தொகுப்பு இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை.) எதிர்தரப்பினரோ அதன் உஷ்ணத்தை எதிர்கொள்ளமுடியாமல் அழுகுணி ஆட்டம் ஆடி தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது புயபெலத்தில் மேற்கொள்ளும் யுத்தம் அல்ல, ஜெயபெலமானவரின் தயவினால் அவரே நடத்தும் யுத்தம், என்பதால் எதிர்தரப்பினர் மண்ணைக் கவ்வப்போவது நிச்சயம். அவர்கள் முகத்தில் படர்ந்த எரிச்சலையும் பகையுணர்ச்சியையும் பார்க்கும்போதே அவர்களுடைய தோல்வி தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இஸ்லாமிய மார்க்கநெறிப்படி குரானுக்கு விரோதமாகவோ நபிக்கு எதிராகவோ அல்லாவுக்கு எதிராகவோ பேசுவதும் எழுதுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் பரிசுத்த வேதாகமத்தை யார் வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் பேசலாம் என்ற தைரியத்தில் இஷ்டம்போல பேசிவிட்டார்கள். அதேபோன்ற தொனியில் அல்லாவிட்டாலும் சத்தியத்தையே கூட ஆதாரத்துடன் நாம் பேசினால் எதிர்தரப்பின் எரிச்சல் நம்முடைய சகோதரர்கள் மீது பாயும் என்பது நிச்சயம்.எனவே எதிர்வரும் சனி ஞாயிறு விவாதம் நமக்கு சவால் மிகுந்ததாக இருக்கும்.காரணம் அதன் தலைப்பு, ”குரான் இறைவேதம் அல்ல” என்பதாகும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று ஒரு சங்கிலித் தொடர் உபவாச ஜெபத்தை அறிவித்து நண்பர்கள் அனைவரும் இணைந்து ஜெபிக்கவேண்டும்.ஏனெனில் நம்முடைய சகோதரர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை அவர்களுக்கும் விசேஷித்த தொழுகை நாள் என்பதால் அந்த நாளில் நாம் உபவாசித்து ஜெபிக்க சகோதரர்களை அன்போடு வேண்டுகிறேன். நன்றி.
”அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.” (எண்ணாகமம்.23:21)
I சாமுவேல் 15:29 இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
மத்தேயு 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)