கிறிஸ்தவம் என்பது கல்வியல்ல நண்பர்களே,அது அனுபவம். உங்களுக்கும் ஆண்டவருக்கும் நேரடியான தொடர்பு இருந்தால் சொல்லுங்கள்..!
அப்போஸ்தலருடைய அனுபவங்கள் நமக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது, பழைய ஏற்பாட்டு தலைவர்களுடைய அனுபவங்கள், ஆண்டவரோடு அவர்களுக்கு ஏற்பட்ட தொடர்புகள் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது... அதிலிருந்து ஆண்டவரை அறிந்துகொண்டு, அவர் குணாதிசயங்கள், அவர் நமக்காக ஏற்படுத்தியவைகள், நிறைவேற்றி முடித்தவைகள் போன்றவைகளை புரிந்துகொண்டு, அதை நம் வாழ்விலும் அனுபவமாக்கவே அவைகள் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலும் வேத ஆராய்ச்சி செய்பவர்கள் துரதிஷ்டவசமாக தங்கள் வாழ்வில் எதையும் அனுபவிக்க முயலாமல், அதை அனுபவிக்கிறவர்களிலும் குறைகளை தேடி, வேத ஆராய்ச்சியிலேயே காலத்தை கடத்திவிடுகிறார்கள்.
ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன்: அக்பரின் (அக்பர்தானா..!!!) அவையில் நான்கு கல்விமான்கள் தங்கள் அறிவை வெளிப்படுத்த வந்தனராம்... ஆனால் பீர்பாலோ அவர்கள் பரிசு பெறுவதை தடைசெய்து, அவர்கள் ஒரு நாள் சொந்தமாக சமையல் செய்து, சாப்பிட்டு வாழ்ந்துவிட்டு வந்து பரிசு பெற்றுச் செல்லட்டும் என கூறி அனுப்பினாராம். அதில் ஒருவர் வைத்தியர், ஒருவர் வானியலார், ஒருவர் இயற்பியல் அறிஞர், ஜோதிடர்.
அவர்களில் வைத்தியர் காய்கறி வாங்கச்சென்றார்.. ஒவ்வொரு காயாக பார்த்தவர், அவைகளில் ஒவ்வொரு காயிலும் மனிதனுக்கு தீமைதரும் குணநலன்கள் இருக்கக்கண்டு காய் வாங்காமலேயே திரும்பிவிட்டார்; இரண்டாமவர் இலை வெட்டச்சென்றவர் கிரகணத்தை கண்டு திரும்பிவிட்டார்; மூன்றாமவர் நெய் வாங்கச்சென்றார், வாங்கித் திரும்பும்போது நெய்யை தொன்னை தாங்குகிறதா அல்லது தொன்னை நெய்யை தாங்குகிறதா என ஆராய்ந்து கவிழ்த்துவிட்டார். வீட்டிலிருந்த நான்காமவர் அரிசியை உலையில் போடும்போது பல்லி சத்தமிட்டதால் அரிசியை போடாமலே இருந்துவிட்டார்.
இப்படித்தான் இன்றைய கிறிஸ்தவமும் இருக்கிறது. ஒரு எளிய மனிதன் பாவியாகிய எனக்காக என்னை உருவாக்கிய இறைவனே பாவம்போக்கும்பலியாய் தம்மை அர்ப்பணித்தார் என விசுவாசிக்கும்போது அவன் வாழ்வில் அந்த தெய்வத்தை, அவர் அன்பின் ஆழத்தை ருசிக்க முடிகிறது..! எந்த எழுத்தறிவோ, வேறு எந்த அறிவோ இல்லாத அனேக பேதையாய தாய்மார்ரை எனக்குத்தெரியும், அவர்கள் ஆண்டவர் அன்பில் மூழ்கி பலருக்கு பயன்படும் நல்ல வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் அதிகம் கற்றவர்கள் அந்த ஆண்டவரை தங்கள் வாழ்வில் ருசிக்க முயல்வதே இல்லை.
இயேசு: என்னைக் கண்டவன் பிதாவைக்கண்டிருக்கிறான் என்றார். என் நம்பிக்கை என்னவென்றால் இயேசுவின் மூலம் பிதா கனமடைகிறார் என்றால் இயேசுவை ஆராதித்தால் அந்த ஆராதனை பிதாவையே சென்றடைகிறது என்பதுதான். நான் இயேசு என்னோடிருப்பதை உணர்ந்து அவரிடத்தில் என்ன கேட்டாலும், அவர் நீ யாரை ஆராதிக்கிறாய் என்றெல்லாம் என்னிடத்தில் கேட்டதே இல்லை. அவர் சித்தத்தின்படியான எதைக்கேட்டாலும் அவர் எனக்கு கொடுத்துவருகிறார். அவர் எனக்காக ஜீவனை கொடுக்கும் அளவுக்கு என்மேல் அன்பு வைத்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இயேசுவை ஆராதிப்பதால் அவர் என்னை தள்ளிவிடவில்லை என்பது எனக்கு உறுதியாகத்தெரியும். காரணம் அவரில்லாமல், அவருடைய உதவியில்லாமல் என்னால் ஒரு நொடிப்பொழுதுகூட வாழ இயலாது. ஒவ்வொரு நாளும் என்வாழ்வு அற்புதங்கள் நிறைந்ததாய் இருக்கக்காரணம் அவர் என்னோடிருப்பதால்தான். இயற்கையாக உலக நியதிப்படி வாழ்வதானால் என்னால் இப்போது வாழ்ந்திருக்க (வாழ்ந்துகொண்டிருக்கவும்) முடியாது.
ஒரு inch அளவிற்கு என் மகனின் விதைப்பையில் இறங்கியிருந்த (சுமார் 3 மாதமாக) குடல் (ஹிரண்யா) ஒருநாள் இயேசுவின் நாமத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே மேலேறிச்சென்றதை என் கண்டவன் நான். இயேசுவின் தழும்புகளை அறிக்கை செய்தபோது, இரத்தத்தில் platelet count அற்புதமாய் ஒரே நாளில் அதிகரித்ததை கண்டவன் நான். இது மட்டுமல்ல என் வழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் அதி அற்புதமானவைகள். அந்த அற்புதங்களை என்வாழ்வில் செய்யும் தேவன் ஒருபோதும் என்னிடம் நீ ஏன் இயேசுவை ஆராதிக்கிறாய் என கடிந்துகொண்டதேயில்லை. அவரை தியானிக்கும் தியானம் எப்போதும் எனக்கு இனியதாகவே இருக்கிறது. நான் எப்போதும் அவர் பிரசன்னத்தில் மகிழ்கிறேன். நான் இம்மையிலும் அவரோடிருக்கிறேன், மறுமையிலும் அவரோடிருப்பேன் என்ற உறுதியும், விசுவாசமும், மகிழ்வும் எனக்கு எப்போதும் இருக்கிறது. நான் பிதாவை இயேசுவில் காண்பதால் எனக்கு பிதாவை ஆராதிப்பதிலோ, இயேசுவை ஆராதிப்பதிலோ எந்த குழப்பமுமே இல்லை.
வேதத்தை மொழிபெயர்ப்பின் அடிப்படையில் விவாதிப்பதை விட அனுபவ அடிப்படையில் விவாதிப்பதே சிறந்தது என்பது என் கருத்து.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)