Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இயேசுவுக்கு ஆராதனை செய்ய மறுக்கும் ஞானப்பிரகாசம் என்றொரு பெரியவர்
Permalink  
 


275424_534304366_175270919_n.jpg

இன்று திரு.ஞானப்பிரகாசம் என்பவருடைய பக்கத்தில் யாருக்கு ஆராதனை என்ற தலைப்பில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையைப் பார்வையிட நேர்ந்தது. இதனால் காலையிலேயே பல மணி நேரங்கள் இதில் செலவிடும்படியானது.ஐயா ஜாண்ஸன் ராஜூ அவர்களை கண்டபடி கேள்விகேட்டு மடக்குவதாக நினைத்துக்கொண்டு எப்படியெல்லாமோ வாதிக்கிறார், திரு.ஞானப்பிரகாசம் அவர்கள். ஆம்,அவர் விவாதிக்கவில்லை, வாதிக்கிறார். வழக்கம்போல நாம் அவரிடம் தோற்றுப்போய்விட்டோம், அவருடைய கூற்றின்படி..!

அதில் நாம் பதித்த கருத்துக்களை இங்கே தொகுத்தளிக்கிறேன்...

  • Yauwana Janam ‎Johnson Raju ///We are still counting it; hope it will be upto my expectation.//

    @Gnana Piragasam //உண்மையை நேர்மையுடன் சொன்னதற்கு நன்றி பாஸ்டர்.பொய்யான தேதியில் தேவன் வெறுக்கும் பண்டிகையை ஆசரித்து, தேவன் அகற்றச் சொன்ன பாட்டுக்களின் இரைச்சலை உண்டாக்கி, இவ்வளவாய் காணிக்கை வசூல் செய்த உங்கள் திறமையே திறமை! //

    திரு.ஞானப்பிரகாசம் அவர்களே,

    இந்த திரியை இப்போதுதான் முழுவதுமாக வாசித்தேன். நீங்கள் அநியாயத்துக்கு அடாவடி செய்கிறீர்கள்,இது நல்லதுக்கல்ல.

    பொய்யான தேதியில் அல்ல,நிர்ணயிக்கப்பட்ட தேதியில்... தேவன் வெறுக்கும் பண்டிகையை அல்ல,தூதர்கள் கொண்டாடிய நிகழ்வை... பரம சேனையின் திரள் இசைத்த இன்பமான பாடலகளைப் பாடி கிறிஸ்துவின் பிறப்பினை பக்திவிருத்தியுண்டாகும் நோக்கத்துடன் கொண்டாடினார்கள், கிறிஸ்தவர்கள். வசூல் செய்யப்பட்ட காணிக்கை முழுவதும் சபையாருக்கே செலவு செய்யப்படுகிறது.காணிக்கை என்பதே தன்னார்வமாகக் கொடுக்கப்படுவது என்பதால் அதில் பரியாசம் செய்ய ஒன்றுமில்லை.


    ”ஆவிக்குரிய தகப்பன்” என்றழைப்பது குறித்து மூலபாஷையின் அடிப்படையில் ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    http://yauwanajanam.activeboard.com/f499712/forum-499712/
  • Yauwana Janam
    ரோமர் 14:19 ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.

    ரோமர் 15:2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

     பண்டிகைகள் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கு இவ்விரண்டு அதிகாரங்களைவிட சிறப்பான வேதப்பகுதி இருக்கமுடியாது.குறிப்பாக இவ்விரண்டு அதிகாரங்களின் முதல் வசனங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.

    20 hours ago

  •  Yauwana Janam
    இயேசுவானவர் சபையில் நிறைவேற்றப்படவேண்டிய ஐந்து ஊழியங்களைக் குறித்து சொல்லாவிட்டாலும் அவர் மூலம் அகத்தூண்டல் பெற்ற பவுலடிகள் கூறுகிறார்.மேலும் மற்ற மார்க்கத் தலைவர்களைப் போல நம்முடைய ஆண்டவர் எல்லாவற்றையும் செய்து முடித்தவுடன் எங்கோ ஒய்ந்திருக்கவில்லை.இன்றும் நம்மோடு இருந்து கிரியை செய்கிறார்.எனவே அவருடைய மார்க்கத்துக்கு எதிராகவும் அவ்ருக்கு எதிராகவும் பேசுவோர் (தைரியமிருந்தால் ???) அவரையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

    எப்படியெனில் கோர்ட்டு நடைமுறைகளில் ஒரு வழக்கம் உண்டு.ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் தனது கருத்தையும் நியாயத்தையும் சொல்லவிரும்புகிறவர் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள கோர்ட்டாரிடம் முறையிடுவார்.கோர்ட்டும் அவசியம் கருதி அவரை அனுமதிக்கும்.இப்படியே சுப்ரமணியசாமி என்றொருவர் அடிக்கடி அலம்பல் பண்ணுவதுண்டு.
     
    அதுபோலவே நாம் யாரைக் குறித்து விவாதிக்கிறோமோ அவரையும் இந்த காரியத்தில் ஒரு நியாயம் சொல்ல கேட்கலாமே..ஏன்,நம்முடைய ஆண்டவர் இப்போதெல்லாம் யாருடனும் பேசுகிறதில்லையா ? ஜீவனோடு தானே இருக்கிறார்..?
ஐயா, உங்களது பதிலில் நான் எழுதியதில் ஒரு குறிப்பிட்ட பத்தியை முழுவதுமாக தவிர்த்திருக்கிறீர்களே,அதுவே உங்கள் தவறான நிலைகளுக்கு உதாரணமாக இருக்கிறது.

ஒரு தனிப்பட்ட மனிதனின் பக்திவிருத்தியை யார்- எதன் மூலம் தீர்மானிக்க இயலும்? ஒரு செத்த எலியின் மாம்சத்தை ரெண்டு காகங்கள் பக்கத்துக்கு ஒன்றாக இழுப்பதுபோல இங்கே எடுத்துக்கொண்ட தலைப்பு ஒன்று நீங்கள் வ்ந்து நிற்கும் இடம் இன்னொன்று.காரணம் எப்படியாவது எதிராளியை மடக்கிவிடவேண்டும் என்ற அவசரம்.ஆனாலும் இயேசுவின் சரீரம் செத்த எலியின் சரீரம் அல்ல என்பதை நாம் அறியவேண்டும்.அவரைக் குறித்த எல்லா பிரச்சினைக்கும் தீர்வு அவரே.வேதமும் அவரே என்பதை அறிவோம்.

முதலில் ஒருவரையொருவர் மதிக்கவேண்டும்.நம்ம ஊர் லோக்கல் பாஸ்டரும் கௌரவமானவர்கள் மத்தியில் ஒரு வேலைக்காரனைப் போல தனது பொறுப்பை நிறைவேற்றும் Pastor Johnson Raju.அவர்களும் சமமாக முடியுமா? நேற்று கூட ஒரு பாஸ்டர் பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதாக செய்தித்தாள் ஒன்றில் பார்த்தேன்.

இதேபோல அடிக்கடி விமானங்களும் விழுந்து நொறுங்குகிறது.அதற்காக யாரும் விமானத்தில் பயணம் செய்யவில்லையா ? இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மோசடியாளர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.எல்லா இடத்திலும் மோசடியாளர்கள் இல்லை. “தீய நோக்கம் பாவமாம்” என்று வேதம் சொல்லவில்லையா ? குடிப்பதற்காகவே காரல் பாடிச்செல்லுகிறார்கள் என்று உங்களால் தீர்க்கமுடியுமானால் உங்களைப் போன்ற குடிகாரர் யாரும் இருக்கமுடியாது. எப்படியெனில் மற்றவரைக் குற்றஞ் சாட்டுவது குறித்த காரியத்தில் வேதம் இப்படியே தீர்க்கிறது.

கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறுதல் மாத்திரமே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் நோக்கம் ஆகும்.அதுவே கத்தோலிக்கத்தின் ஆதிக்கத்திலிருந்து மார்க்கத்தை மீட்க சீர்திருத்த சபையார் எடுத்துக்கொண்ட நிலையாகும்.அது இன்னும் தூய்மையடைந்து அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது எல்லாம் சரியாகும். ஏனெனில் சீர்திருத்தம் உண்டாகவே பண்டிகை கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டதாக வேதமே கூறுகிறது.

தூதர்கள் கிறிஸ்துவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு அறிவித்து பாடி மகிழ்ந்தார்கள் என்பதை லூக்கா.2 பதிவுசெய்தாலும் அதன் இன்னொரு பார்வையை எபிரெயர்.1 ல் பார்க்கிறோம்.கத்தோலிக்க பாரம்பரியத்திலிருந்து வந்துசேர்ந்துகொண்ட சில தேவையற்ற காரியங்களை இதில் தொடர்புபடுத்த வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக கிறிஸ்தவ மார்க்கம் கத்தோலிக்கத்தின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது. தற்போது அதிலிருந்து மார்க்கம் மீட்கப்பட்டு (கடந்த சுமார் 200 வருடங்களுக்குள் ) தூய்மைபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.பொறுத்திருப்போம்.

Yauwana Janam

‎@Gnana Piragasam // நீங்கள், அற்புதம், ஜாண்சன் ராஜூ, கோல்டா போன்ற பலர் எனது விவாதங்களுக்குப் பதில் சொல்லாமல் அப்படியே நிற்பதை பல திரிகளில் நீங்கள் காணலாம்.//

மற்றவருக்கு எப்படியோ என்னைப் பொறுத்தவரையிலும் நான் சமதளத்திலிருந்து எல்லாவற்றுக்கும் பதிலளித்திருக்கிறேன். அதேபோல Pastor Johnson Raju அவர்களும் அவருடைய இயல்புக்கு மாறாக அதிகமாகவே பதிலளித்திருக்கிறார். ஆனால் நீங்கள் அவருடைய வாதங்களைப் புறக்கணித்துவிட்டு அவரையே போப்பாண்டவரைப் போல நினைத்துக்கொண்டு கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.ஆனால் அவருடைய கருத்துக்களோ எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறதே.

கத்தோலிக்கர்கள் செய்யும் தவறுகளுக்கு சீர்திருத்தவாதிகள் எப்படி பொறுப்பாக முடியும் என்பதே என்னுடைய கேள்வியாகும்.ஒரு பாலத்தைக் கட்டிக்கொண்டிருக்கும்போதே என்னத்த பெரிசா கட்டுறான் இதைவிட பெரிய பாலத்தையெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம்,இது இடிந்தே விழும் என்பதுபோல இருக்கிறது உங்கள் கருத்துக்கள். நாம் யாருடன் யாரை சேர்க்க இங்கே போராடிக்கொண்டிருக்கிறோம் ? உங்களுடைய நோக்கம் கிறிஸ்துவின் அன்பை அறியாதோர்க்கு அறிவித்து அவரோடு சேர்ப்பதாக இருந்தால் உங்கள் வாதமே வித்தியாச்மாக இருந்திருக்கும்.

நான் உஙகளைக் குற்றஞ்சாட்டவில்லை.என்னுடைய வரிகளை மீண்டும் படித்துப்பாருங்கள்,நீங்கள் ஒரு பத்தி முழுவதும் உள்நோக்கத்துடன் தவிர்த்திருப்பது தெரியும்.

மற்றொரு திரியில் நான் கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து வந்து தனது பாடல்களால் கிறிஸ்தவத்தில் எழுச்சியுண்டாகக் காரணமாக இருந்தவரைக் குறித்து என்ன எழுதியிருக்கிறேன் என்று பாருங்கள்.ஆனாலும் தந்தை பெர்க்மான்ஸ் என்று அறியப்பட்ட ஒருவரை நாம் சகோதரர் பெர்க்மான்ஸ் என்று அழைக்கவேண்டுமானால் சற்று சிரமமாக இருக்கும்.இதில் உச்சரிப்பைக் காட்டிலும் உணர்வே பிரதானம் என்பதை நினைவில் கொள்ளவும்.

உதாரணமாக நடிகர் ஏவிஎம் ராஜன் அவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டதும் தன்னை இயேசுவினடிமை என்று அறிவித்துக்கொண்டார்.இன்று வரை அப்படியே அழைக்கப்படுகிறார்.அதேபோல ஐயா பெர்க்மான்ஸ் அவர்களும் அறிவித்திருந்தால் சிறப்பாகவே இருந்திருக்கும்.ஆனால் அவரும் அதனை செய்யவில்லை,நம்முடைய சபையாரும் அதனை எடுத்துரைக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.ஆனாலும் அவரால் சபை எழுச்சி பெற்றது உண்மை.அவர் தனக்கென்று கூட்டம் சேர்க்காமல் மிக இயல்பாக ஊழியம் செய்வது உண்மை.உங்களுக்கு அவர்மீது இனம்புரியாத எரிச்சல் ஏற்பட்டிருப்பதும் உண்மை.இன்னும் ஏவிஎம் ராஜன் ஐயா தன்னை இயேசுவினடிமை என்று சொல்லிக்கொள்வது உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதும் உண்மை.இதுபோன்ற நீண்ட விவாதங்களை நடத்துவதில் நாங்கள் சோர்ந்துபோனோமே தவிர தோற்றுப்போகவில்லை என்பதும் உண்மை.

ஏனெனில் நீங்கள் எங்களை வஞ்சிக்கமுடியாதது போலவே நாங்களும் உங்களைத் திருத்தமுடியாது என்பதை அறிந்திருக்கிறோம்.ஆனாலும் உங்களுடைய பிழையான உபதேசங்களுக்கு பதிலில்லாத மாயை இங்கே தோற்றுவிக்கப்படக்கூடாது எனும் காரணத்தினாலேயே இயன்றமட்டும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

Yauwana Janam

‎@Gnana Piragasam // ஆம், விமானத்தில் பலரும் பயணம் செய்கின்றனர்தான். ஆனால் கோளாறான விமானம் என முன்னமேயே தெரிந்த விமானத்தில் யாரும் பயணம் செய்வதில்லையே! //

ஆம்,அதன்காரணமாகவே நாங்கள் உங்களைக் குறித்து முக்கியமாக சபையாரை எச்சரிக்கிறோம்.

ஒரு பாஸ்டர் மோசடியாளராக இருந்தால் அவர் பாஸ்டர் அல்ல என்பதையும் ஒரு நல்ல பாஸ்டர் மோசடிகளில் ஈடுபடமாட்டார் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.

இப்படியே நேர்மையான அதிகாரி லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்பார்.மோசடியான அதிகாரியோ லஞ்சம் வாங்குவார்.அவரை நேர்மையாளர் என்று யாரும் புகழமாட்டார்கள்.

இவ்வாறு அந்தரங்களை வெளிப்படுத்தி அவமானத்துகிறவரே பரிசுத்தாவியானவர் தானே..? அவருக்குத் தெரியும் தனது சபையை எப்படி பரிசுத்தமாக்கவேண்டும் என்பது.

  • Yauwana Janam

    YJ //குடிப்பதற்காகவே காரல் பாடிச்செல்லுகிறார்கள் என்று உங்களால் தீர்க்கமுடியுமானால் உங்களைப் போன்ற குடிகாரர் யாரும் இருக்கமுடியாது.//

    Gnana Piragasam

    // இது எனது தீர்ப்பல்ல. நாம் கொடுக்கும் அல்லது பிறரால் வசூலிக்கப்படுகிற காணிக்கை பணம் எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக நான் தந்த ஓர் உண்மைத் தகவல், அவ்வளவே.//

    நாளிதழில் பல்வேறு நல்ல செய்திகளும் வருகிறது. துர்ச்செய்திகளும் வருகிறது.உதாரணமாக ”சொந்த பேத்தியை கற்பழித்த தாத்தா,” “அண்ணியுடன் கள்ளக்காதல் வாலிபர் கொலை..” என்பன போன்ற செய்திகளையே ஒருவர் தேடிதேடி படித்தால் அவர் ஒரு மனநோயாளி என்று அர்த்தம்.

    அவ்வாறே கிறிஸ்மஸ் கேரல் பாடி பணம் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும்.சபை ஐக்கியத்தை நிலைநிறுத்தவும் தூதர்கள் இரவில் கீதம்பாடியதை நினைவுகூறவும் தங்கள் வாசலுக்கு வரும் நண்பர்களை கனப்படுத்த அவர்களுக்கு சபையார் இயன்ற காணிக்கை தருகிறார்கள்.

    இது கிறிஸ்துவை முன்னிட்டு செய்யப்படுவதால் தவறல்ல.இதனால் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகிறது என்பது நிச்சயம். இது தேவையில்லாவிட்டால் காலப்போக்கில் மறைந்துவிடும். இப்போதே சலிப்பான முணுமுணுப்புகள் தோன்றி காரல் வருவது குறைந்துவருகிறது. ஏனெனில் காரல் வருவோர் பலரும் வேலைக்கு செல்லுவோர் மற்றும் மாணவர்கள்.எனவே அவர்கள் அதிகம் பிரயாசப்பட்டே வருகிறார்கள்.

    காரல் காணிக்கை பணத்தில் குறிப்பிட்ட பணம் வண்டி வாடகைக்கு போய்விடும்.அடுத்து சபையில் நடைபெறும் சிறுவர் நிகழ்ச்சிக்கான பரிசு பொருள் மற்றும் அலங்காரத்துக்கு செலவிடப்படும்.இக்காலத்தில் சாதாரண பிளாஸ்டிக் பரிசுகளை சபையார் மதிக்கிறதில்லை.எனவே நல்ல பரிசுகள் தரப்படவேண்டும்.ஏன் பரிசு என்று தமிழர்களுக்குச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.மேலும் விதவைத் தாய்மார் மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்படுகிறது.புத்தாண்டுக்கான காலண்டர் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் கிறிஸ்மஸ் காலத்தின் நிர்வாக செலவுகள். இதற்கும் மேல் பணம் மீதம் இருந்து சிலர் குடித்தால் அதற்கான தண்டனை பரத்தில் அல்ல இகத்திலேயே தரப்படும்.உபாகமம்.28:15 முதல் அவர்கள் படிக்கட்டும். அவையனைத்தும் அவர்கள் மீதல்ல அவர்களுடைய சந்ததியின் மீதே வரும்.

    இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுப்போருக்கும் இது பொருந்தும். 11 hours ago
  •  Yauwana Janam

    YJ //கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறுதல் மாத்திரமே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் நோக்கம் ஆகும்.//

    Gnana Piragasam

    // கிறிஸ்துவின் பிறப்பு மறக்கக்கூடிய ஒரு விஷயமா? //மறக்கக்கூடாத ஒரு விஷயத்தை கொண்டாடாமல் இருக்கலாமா..? உங்கள் பேரன் பிறந்த நாளைக் கொண்டாடமாட்டீர்களா ?

    YJ //இன்னும் தூய்மையடைந்து அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது எல்லாம் சரியாகும்.//

    Gnana Piragasam

    // புண்ணை மேலாகத் துடைத்து எண்ணைய் தடவினால் அது சரியாகாது. புண்ணின் ஆணி வேர் வரை அறுத்தெடுத்தால்தான் அது சரியாகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எனும் ஆணி வேரை அறுத்துவிட்டால் அது நிரந்தர தூய்மைக்கு வழிவகுத்துவிடுமல்லவா?

     அப்படியல்ல, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கண்டிப்பாக வேண்டும் என நீங்கள் சொன்னால் அதற்கான முகந்தரத்தை வேத ஆதாரத்துடன் உங்களால் சொல்லமுடியுமா? //

     

    முகாந்தரமும் கட்டாயமும் வேதத்தில் இல்லை.ஆனால் சமுதாயத்தில் இருக்கிறது.இயேசுவானவர் மரித்த ஒரு மகான் அல்ல,அவர் மனிதனாக வந்த இறைவன் என்று சமுதாயத்துக்குச் சொல்ல இதனைப் பயன்படுத்துகிறோம்.ஏனெனில் இந்த சமுதாயம் கண்டவனுக்கு சிலைவைத்து கொண்டாடும் சமுதாயம்.இதனை தேவனிடமாகத் திருப்ப எதைச் செயதாலும் சரி.நோக்கம் நிறைவேறியாகவேண்டும்.மனிதனுக்கான அனைத்து வாய்ப்பு வசதிகளையும் செய்துகொடுத்திருக்கும் தேவன் அவனது ஒவ்வொரு அன்றாட காரியங்களிலும் தலையிடுகிறதில்லை.

     

    உதாரணமாக ஒரு சாதாரண டீச்சர் தனக்கு தற்செயல் விடுப்பு எடுக்க மாவட்ட கல்வி அதிகாரியிடம் செல்லவேண்டிய அவசியமில்லை.அதுபோலவே ஒரு கிராமத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சாதாரண கிராம நிர்வாக அதிகாரியை முதலமைச்சர் கட்டுப்படுத்துகிறதில்லை.ஆனாலும் இவர்களெல்லாரும் அந்த மேலான அமைப்புகுட்பட்டவர்களே.அதுபோலவே கிறிஸ்துவின் சபையில் அனைவருக்கும் சுயாதீனம் உள்ளது.உதாரணமாக ஒரு ஸ்திரீ ஆண்டவருடைய தலையில் தைலம் ஊற்றி கனப்படுத்த அனுமதியோ கட்டளையோ தேவைப்படவில்லை.அதேபோல என் இரட்சகரை நான் எப்படி கொண்டாடவேண்டும் என்று அப்போஸ்தலர்களோ தூதர்களோ அல்லது எந்தவொரு மார்க்க அமைப்போ கட்டுப்படுத்தமுடியாது.அவர்கள் செய்தார்களா,செய்யச் சொன்னார்களோ என்பதைப் போலவே செய்யக்கூடாது என்று சொன்னார்களா என்பதையும் கவனிக்கவேண்டும்.

     

    அதற்காகவே பக்திவிருத்தி எனும் வாதத்தை முன்வைத்துள்ளேன்.பக்திவிருத்தியுண்டாக்குமானால் எதுவுமே பாவமல்ல.அது ஒருவேளை சிறுபிள்ளைத்தனமான செயலாக இருக்கும்.ஆனால் அதுவும் காலப்போக்கில் மறைந்துவிடும்.

    11 hours ago · 1

  •  

    Yauwana Janam

    YJ //நான் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக கிறிஸ்தவ மார்க்கம் கத்தோலிக்கத்தின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது. தற்போது அதிலிருந்து மார்க்கம் மீட்கப்பட்டு (கடந்த சுமார் 200 வருடங்களுக்குள் ) தூய்மைபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.//

     

    Gnana Piragasam

    // தூய்மைப்படுத்தும் பணியில் ஒன்றுதான் கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் வேண்டாம் எனச் சொல்வது.//

     

    பண்டிகைகள் இல்லாவிட்டால் மார்க்கம் செத்துவிடும். வீட்டில் இருக்கும் கிழங்கள் அந்த காலத்து கதை எதையாவது பேசிக்கொண்டிருக்கும்.ஆனால் அதுகளால் ஒரு குண்டூசியைக் கூட எடுத்துப்போடமுடியாது.எல்லாம் முடிந்துபோன அவர்களுக்கு எல்லாம் மாயை போலவே இருக்கும்.என்ன கல்யாணமோ என்ன சாந்தி முகூர்த்தமோ என்று சலித்துக்கொள்ளுவார்கள். ஆனாலும் இளம்தலைமுறையினர் முதிர்ச்சியடையும்வரை அவர்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.

     

    வேதமானது பண்டிகைகளுக்கான தாற்பரியங்களைப் போதிக்கிறதேயன்றி பண்டிகைகளை ஒழிக்கவில்லை. சடங்குகள் மாத்திரமே ஒழிக்கப்பட்டது,ஆண்டவருடைய கடைசி பந்தியிலேயே அது பஸ்கா பண்டிகை விருந்தாக இருந்தும் அங்கே ஆட்டுக்குட்டி நியமம் இல்லை.ஆனால் புளிபில்லாத அப்பமும் இரசமும் இருந்தது.புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பலருக்கும் ஆண்டவருடைய வருகை இத்தனை தாமதமாகும் என்பதைக் குறித்த் தரிசனம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே ஆவியானவர் கட்டளையிடாதிருந்தும் சொந்த விருப்பத்தின்பேரில் அவரவர் தத்தமது சொத்துக்களை விற்று மடம் அமைத்தார்கள்.ஆனால் அந்த மடத்தில் பவுல் சேரவில்லை.நாங்கள் பவுல் வழியே புதுப் பரிமாணம் பெற்ற கிறிஸ்தவத்தையே பின்பற்றுகிறோம். சுவிசேஷம் உரைக்கப்பட்ட களமும் நோக்கமும் வேறு; நிருபங்களில் விளங்கும் தேவனுடைய நடத்துதலும் வேறு.உதாரணமாக உயிர்த்தெழுந்த இயேசுவையே முதன்முதலாக யோவான் கர்த்தர் என்கிறான்.

     

    எனவே கர்த்தருடைய வருகை பரியந்தமும் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தவிர்க்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.ஏனெனில் அவை மார்க்கத்தை உயிரோட்டத்துடன் வைத்துக்கொள்ளவே உதவுகிறது.ஆனால் இடைப்பட்ட காலத்தில் கலந்துவிட்ட அந்நிய மார்க்க சடங்குகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

     

    இன்னும் என்ன சொல்ல..?

Yauwana Janam

‎@Gnana Piragasam // நெடுநாட்களாக சகோதரர் என அழைக்கப்பட்டு வந்த அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் சமீபத்தில் ரெவரெண்ட் எனும் அடைமொழியை தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார். இதன் மூலம் அவரும் மோசடியாளர் லிஸ்டில் வந்துவிட்டார் எனச் சொல்வதற்கு நான் சற்றும் தயங்கவில்லை. //

 

அமைதி விரும்பிகள் விதண்டாவாதங்களுக்கு எப்போதுமே பதிலளிப்பதில்லை.அதனால் அவர்கள் தோற்றுவிட்டதாக அர்த்தமில்லை.அவரவருக்குக் கிடைத்த வெளிச்சத்தில் போய்க் கொண்டிருக்கிறோம்.

 

நீங்கள் பதிலளிப்பதிலும் வேதத்தை நிரூபிப்பதிலும் சிறந்தவராக இருந்தால் உடனே நீங்கள் செய்யவேண்டியது இஸ்லாமியரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே.

 

அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் ரெவரெண்ட் என்று போட்டுக்கொள்ளுவதற்கு முன்பே அவர் ரெவரெண்ட்டாகவே இருக்கிறார்.ஆனாலும் கர்த்தரைப் போலவோ கர்த்தருக்கோ அல்ல,கர்த்தருடைய ஜனத்துக்கோ அல்ல,சாத்தானின் ராஜ்யத்துக்கு எதிராக.

 

அண்மையில் ஒரு பெந்தெகொஸ்தே போதகரிடம் இதே காரியத்தை விசாரித்தபோது அவர் சொன்னது இதுதான்.அதாவது அடிக்கடி வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்கு இமிக்ரேஷனிலும் விசா நடைமுறைகளிலும் இதுபோன்ற பட்டங்கள் தேவைப்படுகிறதாம்.அது தற்கால பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள உலக நிலவரத்தில் ஏற்புடைய காரணமாகவே இருந்தது.

 

மேலும் வேதத்திலுள்ள் ஐந்துவிதமான ஊழியத்தையும் சிறப்பாக செய்துள்ள அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுக்கு ரெவரெண்டு பட்டம் தகுதி குறைவுதான்.

 

ஐயா @Gnana Piragasam அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் கிறிஸ்தவரே அல்ல, என்கிறோம்.அல்லது கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர் என்று வைத்துக்கொள்ளுவோம். நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் நீங்கள் ஏற்றுக்கொண்ட போதனைக்கு மாறாக நடப்பவரையே திருத்த முயற்சிக்கவேண்டுமே தவிர உங்களுக்கு எதிரியாக இருப்பவரைக் குறைகூறக்கூடாது.அது காழ்ப்புணர்ச்சியாகவே கருதப்படும்.

 

அடிப்படையிலேயே உங்கள் உபதேசத்துக்கு மாறானவர்களைக் குறைகூறி உங்களால் என்ன சாதிக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள் ? அவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் மலையைப் பார்த்து நாய் குலைக்கிறது என்று போய்க் கொண்டே இருப்பார்கள்.

 

Yauwana Janam

Gnana Piragasam // நீதிமொழிகள் 14:19 தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. //

 

அப்படியானால் பிலாத்துவுக்கு முன்பாகவும் பிரதான ஆசாரியனுக்கும் முன்பாகவும் ஆண்டவர் தலைதாழ்த்தி நின்றதற்குக் காரணம்,என் ஆண்டவர் துன்மார்க்கன் என்ற காரணத்தினாலா..?

 

// உங்களைப் போன்றோரிடம் ஆவிக்குரிய முதிர்ச்சி இல்லை என ஒத்துக்கொள்கிறீர்கள். //

 

நான் என்னைக் குறித்து இங்கே எழுதவில்லை. சமுதாயத்தைப் பார்வையிலேயே எழுதியிருக்கிறேன். நீங்கள் ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்தவர் என்று சொல்லிக்கொள்ளுவதை நினைத்தால் ஒரே சிரிப்பாக வருகிறது.உங்களுக்கு வந்த முதிர்ச்சிக்குக் காரணம் இயேசுவாக இருந்திருந்தால் நிச்சயம் பொறாமைப்பட்டிருப்பேன்.

 

மேலும் கிழவனெல்லாம் முதிர்ச்சியடைந்தவனுமில்லை முதிர்ச்சியடைந்தவனெல்லாம் கிழவனுமில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

 

//ஆக, இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம்போட அகஸ்டின் ஜெபக்குமாரும் ஒத்துக்கொண்டார் என்கிறீர்கள்.//

 

இதுபோலவே வேத வசனத்தையும் திரிக்கிறீர்கள்.நான் எழுதியிருப்பது என்ன,நீங்கள் அர்த்தம் கொள்வது என்ன..? நாம் இதுவரை எழுதியிருப்பவற்றை முதலில் வாசகர் வாசித்து முடிக்கட்டும்.ஓரிரு விருப்பக் குறியோ அல்லது ஓரிரு வரி பின்னூட்டங்களோ வரட்டும்.பிறகு நீங்களா,நானா பார்த்துவிடலாம்.

 

அல்லது வாசகருக்காக எழுதவில்லை எனக்கு மாத்திரமே எழுதுகிறீர்கள் என்றால் நேரத்தை வீணாக்காமல் உங்கள் வேலையைப் பாருங்கள்.உங்களிடம் கற்றுக்கொள்ள எனக்கு ஒன்றுமில்லை.நீங்கள் ஒரு போதக்ராகவோ குருவாகவோ தகப்பனாகவோ ஆகமுடியாது.கிறிஸ்துவே எனக்கு குருவாகவும் தகப்பனாகவும் போதகராகவும் இருக்கிறார்.அவரே சர்வ வல்ல தேவனாகிய கிறிஸ்து எனும் இரட்சகர். அவருக்கே நான் ஆராதனை செய்வேன். ஓகேவா..?!

 

பிதாவாக இருந்து சிருஷ்டித்தவர்.தந்தை என்பவர் பாதுகாவலர் மாத்திரமே என்பதை அறிந்திருக்கிறோம்.

போதகராக இருந்து பரலோகத்தின் விசேஷங்களைப் போதிக்கிறார்.அவரிடமிருந்து பெற்றதைப் போதிப்பவன் ஆசிரியன்.குருவாக இருந்து எனது பாவப் பரிகார பலியான அவரிடம் என்னை நடத்துபவர் மேய்ப்பராக இருக்கிறார்.எனவே பிரதான மேய்ப்பன் எனும் மற்றொரு மாறாத பதவி அவருக்குக் கொடுக்கப்பட்டது.

 

நீங்கள் கேட்ட வசனத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன்.இது எனது சொந்த விளக்கம் என்றால் நீங்கள் தருவதும் சொந்த விளக்கமே என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 

  • Yauwana Janam

    ‎// நீங்கள் கேட்ட வசனத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன்.இது எனது சொந்த விளக்கம் என்றால் நீங்கள் தருவதும் சொந்த விளக்கமே என்பதை கவனத்தில் கொள்ளவும்.//

     

    //மற்ற மார்க்கத் தலைவர்களைப் போல நம்முடைய ஆண்டவர் எல்லாவற்றையும் செய்து முடித்தவுடன் எங்கோ ஒய்ந்திருக்கவில்லை.இன்றும் நம்மோடு இருந்து கிரியை செய்கிறார்.எனவே அவருடைய மார்க்கத்துக்கு எதிராகவும் அவ்ருக்கு எதிராகவும் பேசுவோர் (தைரியமிருந்தால் ???) அவரையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

     

    எப்படியெனில் கோர்ட்டு நடைமுறைகளில் ஒரு வழக்கம் உண்டு.ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் தனது கருத்தையும் நியாயத்தையும் சொல்லவிரும்புகிறவர் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள கோர்ட்டாரிடம் முறையிடுவார்.கோர்ட்டும் அவசியம் கருதி அவரை அனுமதிக்கும்.இப்படியே சுப்ரமணியசாமி என்றொருவர் அடிக்கடி அலம்பல் பண்ணுவதுண்டு.

     

    அதுபோலவே நாம் யாரைக் குறித்து விவாதிக்கிறோமோ அவரையும் இந்த காரியத்தில் ஒரு நியாயம் சொல்ல கேட்கலாமே..ஏன்,நம்முடைய ஆண்டவர் இப்போதெல்லாம் யாருடனும் பேசுகிறதில்லையா ? ஜீவனோடு தானே இருக்கிறார்..?//

     

    பரிசேயர்கள் தான் அடிக்கடி பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுவார்கள்.ஆனாலும் இயேசுகிறிஸ்து நேற்றும் தேவனாக இருக்கிறார்,இன்றும் தேவனாக இருக்கிறார்,நாளையும் அவரே. (எபிரெயர்.13:8)

    11 hours ago · 1

  •  

    Yauwana Janam

    Gnana Piragasam //அமைதி விரும்பிகள் விதண்டாவாதங்களுக்கு எப்போதுமே பதிலளிப்பதில்லை.//

     

    நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்; ஆனால் வேதமோ இப்படிச் சொல்கிறது.

     

    நீதிமொழிகள் 14:19 தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.//

     

    மேற்காணும் வரிகளை நன்கு நிதானித்து சொல்லுங்கள்.உங்களுக்கு எதிராக எழுதுவோரெல்லாம் துன்மார்க்கர் நீங்கள் நீதிமானா ? உங்கள் பதிலளிக்காவிட்டால் நாங்கள் தீயவராகிவிடுவோமா ?

    11 hours ago · 1

  •  

    Yauwana Janam ”அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” (ஏசாயா.53:7)

    11 hours ago

  •  

    Yauwana Janam ”என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.” (சங்கீதம்.39:3)

Yauwana Janam ஐயா,நீங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும் அல்ல,நான் கைகட்டி நிற்க குற்றவாளியுமல்ல.நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை எல்லாம் என்னால் சொல்லமுடியாது.ஆனாலும் தகுந்த பதில் சொல்லியிருக்கிறோம்.அடிப்படையிலேயே தவறாக வேதத்தை வியாக்கியானம் செய்வோரிடம் நான் வசனத்தையெடுத்து பிரயோகிக்கிறதில்லை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard