இன்று (01.12.2011)உலக எய்ட்ஸ் தினமாம், இதே மாதத்தில் இயேசு பிறப்பின் நற்செய்தியினை அறிவிக்கும் சிறப்பு நாளான கிறிஸ்மஸ் வருகிறது.இவ்விரண்டு விசேஷித்த தினங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது தோன்றியது என்னவென்றால்,தற்கால உலக சமுதாயத்தினர் உலகத்தாரை ஒன்றிணைக்கும் முயற்சியாக பல்வேறு சிறப்பு தினங்களை ஏற்படுத்தி அனுசரிக்கிறார்கள். அதன்விளைவு என்ன,மேன்மை என்ன என்பதை யோசிப்பார்களா..?
உதாரணமாக இயேசுவானவரின் பிறப்பின் நற்செய்தியின் போது மகிழ்ச்சியை வாழ்த்தாகப் பகிர்ந்துகொள்ளுகிறோம்.அதேபோல எய்ட்ஸ் தினத்தன்று என்னவிதமான வாழ்த்தை நாம் பகிரமுடியும்..? இந்த நல்ல எயிட்ஸ் திருநாளில் உலகத்தார் அனைவரும் எய்ட்ஸ் வியாதியின் எல்லா பாக்கியங்களும் பெற்று இன்புற்றிருக்க வாழ்த்துகிறோம் என்று சொல்லமுடியுமா என்று யோசித்தேன். இந்த சமுதாயம் செய்யவேண்டிய முக்கியமானதொரு காரியத்தைப் புறக்கணித்துவிட்டு வேடிக்கையான பயனற்ற காரியங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுகிறதே என்று வேதனையாக இருக்கிறது.
எய்ட்ஸ் போன்ற வியாதிகளை நினைவுபடுத்துவது போன்ற வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது.அது,
” இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். ” (ரோமர்.1:26,27)
மேற்காணும் வசனப் பகுதியில் பவுலடிகள் 2000 வ்ருடத்துக்கு முன்பாகவே வெளிப்படையாக பட்டவர்த்தனமாக பிரச்சினையையும் பிரச்சினையின் பின்னாணியையும் அதற்கான காரண காரியங்களையும் அலசியிருக்கிறார். ஒருகாலத்தில் விடி போன்ற வியாதிகளே பிரபலமாக இருந்தது.இன்றோ எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோய் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. இது மனுக்குலத்தின் அவமானம்.இது நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும். இதுபோன்ற அருவருப்பான வியாதிகளைக் குறித்து வெட்கமில்லாமல் விவரித்தும் விளம்பரம் செய்தும் அதற்கு மருந்தில்லாமலும் தவிக்கும் உலகத்தீரே...ஒருமருந்தரும் குருமருந்தாகிய கிறிஸ்துவின் இரத்தம் உங்களுக்காக சிந்தப்பட்டதை உணர்வீரா..?