அண்மையில் ஈரோட்டில் வைத்து நடைபெற்ற சிஸ்வா தரிசன முகாமில் சினிமாக்காரர்களான மைனா திரைப்பட இயக்குநர் பிரபு சாலமன் மற்றும் குருத்துவ பட்டம் பெற்று சினிமாக்காரரான மதுரை சம்பவம் திரைப்பட இயககுனர் யுரேகா ஆகியோர் மக்கள் மத்தியில் தோன்றி சொன்ன சாட்சிகள் மக்களை எழுப்புதல் அடைய வைத்ததாம்..! சபையிலேயே அந்த திரைப்படங்களைப் போட்டு காட்டினாலும் காட்டுவார்கள் போலும்.இவங்களுக்கு கலெக்ஷன் மட்டுந்தானே குறியாக இருக்கிறது..?! இன்று ஒரு இளைஞர் இந்த காரியத்தைக் கூறி மிகவும் வருத்தப்பட்டார். மிஷினரி பணிக்காக நடைபெறும் ஒரு முன்னோடி இயக்கத்தின் தரிசன முகாமில் சுயாதீன திருசசபைகளின் பேராயராக தன்னை அறிவித்துக்கொண்டவரின் முன்னிலையில் இதுபோன்ற அக்கிரமங்கள் நடைபெறுமானால் கிறிஸ்தவ்ம் இனி மெல்ல சாகும்..சாகட்டும்... சாகவேண்டும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த படத்தின் டைரக்டர் யுரேகா என்பவர் ஈரோட்டில் வைத்து சிஸ்வா மிஷன் நடத்தும் புதிய தரிசன முகாமில் கலந்து கொள்ளுகிறாராம். பத்திரிகையில் அது குறித்த அறிவிப்பு அதிர்ச்சியைத் தந்தது; காரணம்,மதுரை சம்பவம் திரைப்பட டைரக்டரின் பெயருக்கு முன்னால் "Rev."என்று இருந்தது. இது குறித்து விசாரிக்க Siswa அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது பொறுப்பற்ற பதிலே கிடைத்தது.
அவர்கள் எடிட்டர் என்று கொடுத்த மற்றொரு எண்ணில் ப்ரிண்டர் பேசினார்;அவர் நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் வேறு ஏதேதோ நியாயங்களைச் சொல்லி தன் எஜமானரின் செயலை நியாயப்படுத்தினார்.எஜமானர் என்று நான் குறிப்பிடுவது ஆண்டவரை அல்ல, மனிதனை, அந்த மனிதர் பிஸப்பு ப்ரகாஸு..!
இந்த தரிசன முகாமில் இவரோடு மைனா திரைப்பட டைரக்டர் பிரபு சாலமனும் கலந்துகொள்ளுகிறார்.அவர் ஏற்கனவே தனது சினிமா வெற்றிக்காக ஆண்டவரை (???) மகிமைப்படுத்தினவர் (???) என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவம் எங்கே போகிறது..?
இவர்களெல்லாம் கோடம்பாக்கத்தில் சினிமா துறையிலிருந்து கொண்டே ஆண்டவரை மகிமைப்படுத்துகிறார்களாம். அவர்கள் மகிமைப்படுத்தும் இலட்சணத்தை பின்வரும் தொடுப்பில் சென்று பார்க்கவும்.