Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவன் தளத்தில் HMV ஆகிய நான் எழுதிய பின்னூட்டங்கள் !


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இறைவன் தளத்தில் HMV ஆகிய நான் எழுதிய பின்னூட்டங்கள் !
Permalink  
 


ஜாண்12 அவர்களுக்கு ஒரு பாராட்டு...

கர்த்தருக்குள் பிரியமான சகோதரரே,

கடந்த மூன்று வருடமாக இதுபோன்ற தளங்களில் ஆரோக்கிய உபதேசத்துக்காக எழுதிவருகிறேன். பல்வேறு பிரச்சினைகளையும் இதனால் சந்தித்திருக்கிறேன். தற்போது நான் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் என்னால் செய்யமுடியாத பணியை தாங்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருவது குறித்து அதிக சந்தோஷம். நிதானமாக முன்னேறுங்கள். உங்களைப் பாராட்டுவதற்காகவே இங்கே வேறொரு பெயரில் உறுப்பினரானேன். இன்னும் சில நாட்களில் எனக்கு எதிராக நோட் போட்டு வெளியேற்றிவிடுவார்கள். அதற்கு முன்பாக உங்களை மற்றுமொரு பரிசுத்த முத்தத்தினால் வாழ்த்துகிறேன். நீங்கள் எல்லா இகபர நன்மைகளும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திருக்க வேண்டும். உங்கள் விசுவாசத்தை கர்த்தர்தாமே கனம்பண்ணுவார்.அதிக நேரம் இங்கே செலவிடாமல் குடும்பத்தை கவனிக்கவும் மூத்த சகோதரன் என்ற முறையில் வேண்டி கேட்டுக்கொள்ளுகிறேன்.

தங்களுக்கு நான் அறிமுகமானவன் என்றால் தயவுசெய்து அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.நேரமிருந்தால் நம்முடைய தளத்தினைப் பார்வையிடவும். Yauwana Janam

எனது மெயில் முகவரி:

yauwanajanam@gmail.com

அன்புடன்,
“யௌவன ஜனம்”



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

தள சகோதரர்களுக்கு ஒரு அறிவிப்பு!

SUNDAR wrote:
எங்கள் பாட்டுக்கு ஏதோ எங்களுக்கு தெரிந்த கருத்துக்களை தியானித்து எழுதிகொண்டிருந்த தளத்துக்குள் வந்து  பொய்களை எழுதி குழப்பிவிட்டு நிம்மதி காண்பவர் நீங்கள்.

 ஐயா,நீங்கள் பாட்டுக்கு கண்டதையும் எழுதுவதற்கு இது குடும்ப புராணமோ அல்லது இராமாயணமோ மகாபாரதமோ அல்ல,இது தேவ காரியம் அல்லவா ? யார் அப்பாவியைப் போல பொய்களைப் பிணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தேவனும் தேவ மக்களும் அறிவார்கள். இதுவரை ஐயங்களையும் கேள்விகளையும் குறுக்குக் கேள்விகளையும் எழுதியதைத் தவிர வேறு ஏதாவது எழுதினேன் என்று சொல்லுங்கள், உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.

நீங்கள் சிவபெருமானின் அவதாரம் என்று (அந்த சாமியின் பெயரைச் சொல்லாமல்...) சொல்லிக்கொள்ளாவிட்டால் என்னிடம் சவால் விடவேண்டிய அவசியமில்லை, சிம்பிளாக நான் மறுபிறவி என்பதை நம்புகிறதில்லை என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் இப்போதும் நீங்கள் சூழ்ச்சியுடன் பொடிவைத்தே மறுக்கிறீர்களே தவிர நேரடியாக மறுக்கவில்லை. இந்து சாமிகள் ஒருகாலத்தில் வாழ்ந்த மனிதர்களே என்று நீங்கள் நம்புவதையும் மறுக்கிறீர்களா ? அதை எடுத்துச்சொல்லவா,கையில் வேதத்தை எடுத்தீர்கள் ? நீங்கள் முற்பிறவி நினைவுள்ளவர்  என்பதையும் மறுபிறவியில் நம்பிக்கையுள்ளவர் என்பதையும் ஆணித்தரமாக மறுத்துவிட்டு  அல்லது ஒப்புக்கொண்டு மற்றதை பேசுங்களேன்.

நான் ஆதாரமில்லாமல் இதுபோன்றதொரு குற்றச்சாட்டை உங்கள் மீது சுமத்தவேண்டிய அவசியமில்லை என்பதை உளத் தூய்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.எனது ஒரே நோக்கம் நீங்கள் மனமாற்றமடைவதே.உங்கள் கண் திறக்கப்பட்டு கண் திறக்கப்பட்டவன் கட்டுரைக்காக நீங்கள் மனம் வருந்தி (ஆண்டவரிடம்) மன்னிப்பு கேட்டு அதனை நீக்கவேண்டும் என்பதே எனது ஜெபம். மற்றபடி நீங்கள் குழம்பிப்போனவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆகும்.

பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தற்கு நாம் காரணமல்ல, மழை காரணமாகவோ என்னவோ கடந்த வாரம் பார்வையாளர் எண்ணிக்கை பொதுவாகவே குறைந்தே இருக்கிறது.நன்றி.



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

அரைவேக்காட்டு எட்வின்... - EDWIN SUDHAKAR, HMV (7)

HMV 3 days ago

அரைவேக்காட்டு எட்வின் அவர்களே, நீங்கள் திரு.சுந்தர் அவர்களின் மாயமான உபதேசத்தில் சிக்கி சீரழிந்து போகாதிருக்க உங்களுக்காக பாரத்துடன் ஜெபிக்கிறேன்.அதற்கான அன்பு ஒன்றும் யோக்கியமில்லை, அவர் இயேசுவானவர் தூதன் மாத்திரமே அவரைத் தொழுவது கூடாது என்ற கொள்கையையுடையவர். நீங்கள் விரும்பினால் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

அன்புடன், HMV


சகோ: Hmv  அவர்களே,
உங்களுடைய கருத்துக்கும்   எனக்காக ஜெபிபதர்க்கும்  மிக்க நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
சரி,சகோதரனே செல்போன் என்னிடம் இல்லை  என்னுடைய நண்பர்   செல்போன்  நம்பர் தருகின்றேன்  -9941196355 அல்லது உங்கள் நம்பரை எனக்கு கொடுங்கள் நான் உங்களுக்கு போன செய்கின்றேன் நாம் தேவனுடைய வார்த்தைகளை பகிர்ந்து கொள்வோம்
உடனடியாக பதிலளித்தமைக்கு நன்றி,எட்வின்.எனது தனி எண். XXXXXXXXXX இதில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்; உங்களிடம் போன் இல்லை என்று நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.எப்படியிருப்பினும் கர்த்தர் நல்லவர், அவருக்கு சித்தமானால் நாம் சந்திப்போம்.

அன்புடன்,HMV

avatar?id=1461591&m=75&t=1322142176

EDWIN SUDHAKAR

சகோ : Hmv  அவர்களே உங்களுக்கு நான் போன செய்தேன் ஒரு முறை ரிங்  அடித்தது பிறகு சுவிட்ச் ஆப் என்று வந்து விட்டது. உண்மையாகவே என்னிடம் போன் இல்லை என் நண்பரே இல்லையென்றால் நான் என் நம்பரை கொடுக்காமல் இருந்து இருக்க மாட்டேன்

சிரமத்துக்கு வருந்துகிறேன்,எட்வின்;என்னுடையதும் பழைய போன் தான்;அது பேட்டரி வீக்கானதால் ரிங் முடியும் முன்பு ஆஃப் ஆகியிருக்கிறது.அதை வீட்டிலே வைத்துவிட்டு ஒரு வியாதியஸ்தருக்கு ஜெபிக்க சென்றிருந்தேன்;வந்தபிறகு பார்த்தேன்.ஒரு மிஸ்ட் கால் இருந்தது;அது லேண்ட் லைன் போல இருந்ததால் ட்ரை பண்ணவில்லை;இன்னொரு மொபைல் எண்ணுக்கு அழைத்து அது என்னுடைய நண்பர் என்று அறிந்துகொண்டேன்.நான் தவறவிட்ட அழைப்பு வெளிநாட்டு எண் போலவும் அதே நேரத்தில் லோக்கல் நம்பர் போலவும் இருந்தது. (28310502).அந்த எண்ணை என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

மீண்டும் தயவுசெய்து முயற்சிக்கவும்.நன்றி.

yesterday

அன்பான எட்வின் அவர்களுக்கு,

கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தங்களுடனான தொலைபேசி உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது. என்னோடு நேரமெடுத்து பேசியதற்காக நன்றி கூறுகிறேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..!

அன்புடன்,”HMV”

 

 


HMV  5h, 47m ago

கர்த்தருக்குள் அன்பான எட்வின்,

நான் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய மடலை பகிரங்கமாக வெளியிட உதவிசெய்திருக்கிறீர்கள், இது நியாயமா ?

http://www.lord.activeboard.com/t46389983/topic-46389983/

அப்படியானால் உங்களுக்கு ஆண்டவருடைய காரியங்களைவிட ஒரு தனி மனிதனின் நட்பே பிரதானமாகத் தெரிந்திருக்கிறது.நான் உங்களோடு பேசிய அனைத்தையும் நிரூபிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.ஆனாலும் நீங்கள் மாயமான உபதேசத்தையே நம்புவேன் என்று உறுதியாக இருந்தால் உங்களை நம்பி என்னால் ஒன்றும் செய்யமுடியாது.யார் எப்படி போனால் எனக்கென்ன என்று யோசிக்கமாட்டீர்களா,சுந்தருக்கும் எனக்கும் என்ன தனி விரோதம் என்பதையாவது யோசிக்கமாட்டீர்களா ? சுந்தர் சிவபெருமானின் அவதாரம் என்பது மட்டுமல்ல,இயேசுவுக்குப் பிறகு பிறந்திருப்போர் அனைவருமே இயேசுவுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்தவர்களே,அவர்கள் இயேசுவின் இரத்தத்தால் உண்டான பாவ மன்னிப்பின் நன்மையை பெறும் வண்ணமாக அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் நம்புகிறார்.இதையும் இல்லையென்று அவர் மறுப்பாரானால் அவர் முழுவதும் மோசடியானவர் என்றே அர்த்தம்.ஏனெனில் இதற்கெல்லாம் நான் ஆதாரம் வைத்திருக்கிறேன்.நீங்கள் இதையெல்லாம் அவரிடம் நேரடியாகக் கேட்பதைவிட சுற்றி வளைத்து ஏதோ சந்தேகம் கேட்பது போல அப்பாவியாக கேட்டால் மட்டுமே மனந்திறந்து சொல்லுவார்.இது அவருடைய பாணியாகும்.நீங்களோ என்னைப் போட்டுகொடுப்பதுபோல நேரடியாகக் கேட்டதால் மிக எளிதாக மறுத்துவிட்டார்.இதுபோல பத்துக்கும் மேற்பட்ட வேதத்துக்கு விரோதமான கொள்கைகளை அவர் வகுத்து வைத்துள்ளார்.இன்னும் புத்தர் முகமது எல்லாருமே இறைவனால் அனுப்பப்பட்டவர்களே என்று எழுதியதெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லை போலும்.பாதாளத்தில் இரண்டு செக்‌ஷன் இருப்பதாக எழுதியது உங்களை பாதிக்கவில்லை.மேல் தட்டில் காமராஜர் போன்ற நல்லவர்கள் இருக்கிறார்கள்.,கீழ்தட்டிலோ கெட்டவர்கள் அவதிப்படுகிறார்கள் என்று எழுதியது உங்களுக்கு சம்மதம் போலும்.இப்படி வேதம் சொல்லாத கற்பனையான பல காரியங்களை ஆவியானவர் வெளிப்படுத்தினார் என்ற பெயரில் எழுதி கிறிஸ்தவ இணையத்தை மாசுபடுத்திவரும் காரணத்தினாலேயே என்னைப் போன்றோர் இவரை எதிர்க்கிறோம்.எங்களை காரணமில்லாமல் பகைக்கிறார். நான் உங்களிடம் சொன்னதுபோல 9ல் சரியாக இருந்து ஒன்றில் தவறினாலும் ஏற்பது இயலாத காரியம்.முழுவதும் சரணாகதி அடைவதே சிறந்த வழியாகும்.யோசியுங்கள்.

உங்களுடைய அனுமதியில்லாமல் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தை திருடியெடுத்து அவர் வெளியிட்டிருந்தால் அது நம்பிக்கை துரோகம்.நீங்கள் அதற்கு என்ன சமாதானம் சொல்லுவீர்களோ... காத்திருக்கிறேன்.

அன்புடன்,”HMV”



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
இறைவன் தளத்தில் HMV ஆகிய நான் எழுதிய பின்னூட்டங்கள் !
Permalink  
 


தள சகோதரர்களுக்கு ஒரு அறிவிப்பு!

HMV@Date: 5h, 30m ago

இது நான் நண்பர் எட்வின் அவர்களுக்கு எழுதியுள்ள மடல்.... இதையும் யாராவது களவாடி எடுத்து வெளியிடுவதற்கு முன்பதாக நானே வெளியிடுகிறேன்....

கர்த்தருக்குள் அன்பான எட்வின்,

நான் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய மடலை பகிரங்கமாக வெளியிட உதவிசெய்திருக்கிறீர்கள், இது நியாயமா ?

http://www.lord.activeboard.com/t46389983/topic-46389983/

அப்படியானால் உங்களுக்கு ஆண்டவருடைய காரியங்களைவிட ஒரு தனி மனிதனின் நட்பே பிரதானமாகத் தெரிந்திருக்கிறது.நான் உங்களோடு பேசிய அனைத்தையும் நிரூபிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.ஆனாலும் நீங்கள் மாயமான உபதேசத்தையே நம்புவேன் என்று உறுதியாக இருந்தால் உங்களை நம்பி என்னால் ஒன்றும் செய்யமுடியாது.யார் எப்படி போனால் எனக்கென்ன என்று யோசிக்கமாட்டீர்களா,சுந்தருக்கும் எனக்கும் என்ன தனி விரோதம் என்பதையாவது யோசிக்கமாட்டீர்களா ? சுந்தர் சிவபெருமானின் அவதாரம் என்பது மட்டுமல்ல,இயேசுவுக்குப் பிறகு பிறந்திருப்போர் அனைவருமே இயேசுவுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்தவர்களே,அவர்கள் இயேசுவின் இரத்தத்தால் உண்டான பாவ மன்னிப்பின் நன்மையை பெறும் வண்ணமாக அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் நம்புகிறார்.இதையும் இல்லையென்று அவர் மறுப்பாரானால் அவர் முழுவதும் மோசடியானவர் என்றே அர்த்தம்.ஏனெனில் இதற்கெல்லாம் நான் ஆதாரம் வைத்திருக்கிறேன்.நீங்கள் இதையெல்லாம் அவரிடம் நேரடியாகக் கேட்பதைவிட சுற்றி வளைத்து ஏதோ சந்தேகம் கேட்பது போல அப்பாவியாக கேட்டால் மட்டுமே மனந்திறந்து சொல்லுவார்.இது அவருடைய பாணியாகும்.நீங்களோ என்னைப் போட்டுகொடுப்பதுபோல நேரடியாகக் கேட்டதால் மிக எளிதாக மறுத்துவிட்டார்.இதுபோல பத்துக்கும் மேற்பட்ட வேதத்துக்கு விரோதமான கொள்கைகளை அவர் வகுத்து வைத்துள்ளார்.இன்னும் புத்தர் முகமது எல்லாருமே இறைவனால் அனுப்பப்பட்டவர்களே என்று எழுதியதெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லை போலும்.பாதாளத்தில் இரண்டு செக்‌ஷன் இருப்பதாக எழுதியது உங்களை பாதிக்கவில்லை.மேல் தட்டில் காமராஜர் போன்ற நல்லவர்கள் இருக்கிறார்கள்.,கீழ்தட்டிலோ கெட்டவர்கள் அவதிப்படுகிறார்கள் என்று எழுதியது உங்களுக்கு சம்மதம் போலும்.இப்படி வேதம் சொல்லாத கற்பனையான பல காரியங்களை ஆவியானவர் வெளிப்படுத்தினார் என்ற பெயரில் எழுதி கிறிஸ்தவ இணையத்தை மாசுபடுத்திவரும் காரணத்தினாலேயே என்னைப் போன்றோர் இவரை எதிர்க்கிறோம்.எங்களை காரணமில்லாமல் பகைக்கிறார்.நான் உங்களிடம் சொன்னதுபோல 9ல் சரியாக இருந்து ஒன்றில் தவறினாலும் ஏற்பது இயலாத காரியம்.முழுவதும் சரணாகதி அடைவதே சிறந்த வழியாகும்.யோசியுங்கள்.

உங்களுடைய அனுமதியில்லாமல் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தை திருடியெடுத்து அவர் வெளியிட்டிருந்தால் அது நம்பிக்கை துரோகம்.நீங்கள் அதற்கு என்ன சமாதானம் சொல்லுவீர்களோ... காத்திருக்கிறேன்.

அன்புடன்,”HMV”


  • ஐயா சுந்தர் அவர்களே, உங்களால் முடிந்த எல்லா குழப்பத்தையும் செய்துவைத்துவிட்டீர்கள், இதற்கு மேல் செய்ய உங்களிடம் என்ன இருக்கிறது, என்று நினைக்கிறீர்கள்..? நீங்கள் எரேமியா போன்ற தீர்க்கர்களின் வரிசையில் வைக்கப்பட்டாலும் கூட இப்போது உங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது சிரமம் ஐயா..?( நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறதாம்...biggrin )
  • நான் எனக்காக எதுவும் எழுதவில்லை, ஆனால் நீங்களோ உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் காத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவு. என்னைப் போல உங்களை எதிர்த்து எழுதுவோரை சாத்தானின் கூட்டத்தார் என்கிறீர்களே அது தூஷணமில்லையா ஐயா ?
  • பரிசுத்த வேதாகமத்தின் முதல் இரண்டு அதிகாரமும் வெவ்வேறு காலத்துக்குரியது என்று எழுதியதிலிருந்தே உங்களை எதிர்த்து எழுதுகிறேன்.நான் எழுதுவதை சகிக்காமல் என்னை சில்சாம் என்பவருடன் ஒப்பிடுகிறீர்கள், ஆனால் என்னைப் போன்ற ஓராயிரம் பேர் சிரித்துவிட்டு விலகிப்போகிறார்கள்,அந்த அளவுக்கு எனக்கு பொறுமையில்லை.எல்லோரும் இணைந்து எழுந்தால் அத்தனை பேரையும் சில்சாம் என்பீர்களோ..?

நான் அன்பு அவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாக எங்குமே எழுதவில்லை.ஆனால் அவருடைய அணுகுமுறையை பாராட்டினேன்.நீங்கள் இளைஞர்கள் இருவர் சேர்ந்து வயதான ஒருவரை சிறுமைப்படுத்துவதைக் கண்டித்தேன்.அதன் காரணமாகவே எட்வின் அவர்களை அரைவேக்காடு என்றேன்,அதில் என்ன தவறு, நீங்கள் இரு அரைவேக்காடும் சேர்ந்தால் ஒன்றாகி (1/2 + 1/2 = 1) விடுகிறதே, ஏன் வருந்துகிறீர்கள் ?

 

avatar?id=1211561&m=75&t=1290686990

 

மூத்த உறுப்பினர்
orangestar.giforangestar.giforangestar.giforangestar.gif

 

Status: Offline
Posts: 1002
Date: 3h, 10m ago

சகோ. சில்சாம் நீங்கள் HMV முக்காட்டை நீக்கிவிட்டு நேரடியாகவே எழுதலாம் நாங்கள் எல்லாம் ஒன்றும் அறியாத பாப்பாக்கள் அல்ல ரொம்ப மிளகாய் அரைக்க நினைக்காதீர்கள். 

HMV wrote:


சுந்தர் சிவபெருமானின் அவதாரம் என்பது மட்டுமல்ல,


தாங்கள் எழுதிய இந்த வார்த்தை எங்கு எப்பொழுது என்னால் எழுதப் பட்டது என்பதை சரியான ஆதாரத்துடன்  எனக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். உங்கள் மாய்மால வித்தைகளை எல்லாம் காண்பிக்காமல் சரியாக குறிப்பிடவேண்டும். மற்ற காரியங்கள் குறித்து நான் பிறகு எழுதுகிறேன்.

இதற்க்கு சரியான பதில்  தாங்கள் குறிப்பிடாவிட்டால் அடுத்தவர் தளத்துக்குள் வந்து துணிகரமாக பொய்களை எழுதி அவதூறு செய்திகளை எழுதிய காரணத்துக்காக தாங்கள் பதிவுகளை நீக்கலாமா?  என்று ஆலோசனை சொல்லுங்கள்.

உமக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை ஆனால் சாத்தானுக்கு என்மேல் நிறையவே விரோதம் இருக்கிறது!  எனவே கேட்ட கேள்விக்கு பதிலை தவிர  வேறு எதுவும் இங்கு எழுதவேண்டாம்.   

 

HMV@Date: 1s ago
SUNDAR wrote:

சகோ. சில்சாம் நீங்கள் HMV முக்காட்டை நீக்கிவிட்டு நேரடியாகவே எழுதலாம் நாங்கள் எல்லாம் ஒன்றும் அறியாத பாப்பாக்கள் அல்ல ரொம்ப மிளகாய் அரைக்க நினைக்காதீர்கள். 

HMV wrote:


சுந்தர் சிவபெருமானின் அவதாரம் என்பது மட்டுமல்ல,


தாங்கள் எழுதிய இந்த வார்த்தை எங்கு எப்பொழுது என்னால் எழுதப் பட்டது என்பதை சரியான ஆதாரத்துடன்  எனக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.


 ஐயா, நான் சில்சாம் சொல்லும்போது நம்பவில்லை.இப்போது உங்கள் சுயரூபம் தெரியவந்திருக்கிறது. நீங்கள் என்னை கேட்ட கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் கேளுங்களேன்.நீங்கள் முந்தின பிறவியில் யாராக இருந்தீர்கள் என்பது எனக்கு எப்படி தெரியும் ? நீங்கள் யாரிடமோ சொன்ன காரணத்தினாலேயே அந்த தகவல் எங்கும் பரவியிருக்கிறது.உங்கள் தனி அனுபவத்திலும் பழங்காலத்தில்நன்மை செய்யும் இந்து சாமிகள் இருந்ததாக எழுதியிருக்கிறீர்களே.அவ்வாறே நீங்களும் முற்பிறவியில் குறிப்பிட்ட இந்து சாமியாக இருந்ததாகக் கூறியது உண்மை.ஆனால் அதன் பெயரை கூற நீங்கள் அஞ்சினீர்கள், ஆனால் அதன் அடையாளத்தைக் கூறினதால் நான் புரிந்துகொண்டேன். அவ்வாறு சொல்லவில்லை என்பதை நிரூபிக்கவேண்டியது உங்கள் பணியாகும்.அதே போல நான் HMV அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பும் உங்களையே சாரும்.நான் சாதாரண உறுப்பினர்,என்னை நிர்வாகி என்ற ஆணவத்தினால் மிரட்டி ஒடுக்க நினைக்கும் உங்கள் இரக்கமும் தெய்வீக அன்பும் என்னை வியக்கவைக்கிறது.

ஒரு நிலையில்லாமல் அவ்வப்போது பல்டியடிக்கும் நீங்கள் எந்த ஆவியினால் நடத்தப்படுகிறீர்கள் என்று நன்றாக புரிகிறது. இந்த திரியின் ஆரம்பத்தில் நீங்கள் செய்த அறிவிப்புக்கும் இப்போதைய அறிக்கைக்கும் எத்தனை பெரிய வித்தியாசம்..! பாவம், நீங்களும் மனுஷந்தானே..!

உங்கள் எச்சரிக்கையின்படி நானாக விலகி ஓடிவிட்டால் ஜெபித்தேன், ஆண்டவர் தீமையை விலக்கினார் என்பீர்கள், நான் தைரியமாக நிற்க முடிவுசெய்தால் என்னை நீக்கிவிட்டு பகடி செய்வீர்கள், என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்களேன்..!

நான் வேண்டி கொண்டபடி என்னை நீக்குவதற்கு முன்பு எச்சரிக்கை விடுத்த உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன். மற்றுமொரு கோரிக்கை என்னை நீக்கினீர்களானால் எனது அனைத்து பதிவுகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கிவிடுங்கள், அப்போது தான் உங்கள் தளம் தூய்மையாக -தெய்வீக மணத்துடன் ஜொலிக்கும்...biggrin



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
RE: இறைவன் தளத்தில் HMV ஆகிய நான் எழுதிய பின்னூட்டங்கள் !
Permalink  
 


சுந்தரிடமோ விஷம் இருக்கிறது!

HMV@ Date: yesterday
SUNDAR wrote:
HMV என்னும் பெயரில் நமது தளத்தில்  எழுதி வரும் சில்சாம் சகோதரர்  பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!  என்ற திரியில்  ஒருபதிவில் அவர்  "சுந்தரிடமோ விஷம் அதிகம்" என்று பதிந்திருந்தார். 

 மதிப்பிற்குரிய திரு.சுந்தர் அவர்களே,விஷம் என்று நான் குறிப்பிட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட வேதனை குறித்து வருந்துகிறேன். ஆனால் உங்களிடம் விஷம் மாத்திரமல்ல, விஷமமும் இருப்பதை அறிந்து இன்னும் வேதனையாக இருக்கிறது.

HMV என்ற பெயரில் நான் எழுதுவது பிடிக்காவிட்டால், என் பெயர் என்ன என்று கேளுங்கள், அல்லது என்னோடு பேசிய உங்கள் நண்பரிடம் கேளுங்கள், எதற்கு என்னை தேவையில்லாமல் சில்சாம் எனும் பெயருடன் சம்பந்தப்படுத்துகிறீர்கள்?இது நிச்சயமாக விஷமமானது ஆகும்.நீங்கள் நேசன் என்ற பெயரிலும் சுந்தர் என்ற பெயரிலும் இன்னும் பல போலியான பெயர்களிலும் எழுதிவருவதால் உங்களுக்கு எல்லாரையும் சந்தேகமாக பார்க்கும் வியாதி பிடித்திருக்கிறது போலும்.இந்த கருத்துக்காக என்னை கோபிக்கவேண்டாம்,பொதுவாக சொல்லுகிறேன்.

விஷம் என்று நான் குறிப்பிட்டது உங்கள் போதனையைத் தானே தவிர உங்களை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். வேதத்துக்கு வெளியே அதாவது நமது கரங்களில் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமத்துக்கு வெளியே இருந்து வந்துசேரும் விஷயமனைத்தும் விஷமமான விஷமே என்பது எனது தீர்மானம் ஆகும்.

என்னை சில்சாம் என்ற பெயருடன் சம்பந்தப்படுத்தி வீண்பழி சுமத்தி என்னை நீக்குவதற்கு முயற்சிக்கிறீர்களோ என்று அஞ்சுகிறேன். அவ்வாறு என்னை நீக்குவதாக இருந்தால் முன்பதாக ஒரு எச்சரிக்கை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.நன்றி.


SUNDAR wrote:
"உண்மையில் உன்னிடம்  விஷம் இருக்கிறது அது  சாத்தானின் செயல்பாட்டை  முடிவுக்கு கொண்டு வரும் விஷம்.  அதுகுறித்து இங்கு அதிகம் எழுதப்பட்டு இருப்பதால் அவர் அவ்வாறு சொல்கிறார்"  எனவே அவர் சொன்ன  தீர்க்கதரிசனமான வார்த்தையை  குறித்து நீ சற்றும் கலங்கவேண்டாம் என்பதை சொல்லி  ஆண்டவர் என்னை தேற்றினார்.

 மதிப்பிற்குரிய திரு.சுந்தர் அவர்களே,

தங்களோடு நேருக்கு நேர் வாதாட கொடுத்த அருமையான வாய்ப்புக்காக நன்றி. மற்ற விவாதங்களில் நான் எதை எழுதினாலும் தேவையில்லாதவற்றை நான் எழுதுவதாகக் கூறி என்னை நீக்கிவிடுவதாக மிரட்டுவீர்கள் அல்லவா, ஆனால் இந்த திரி என்னை மையங் கொண்டிருப்பதால் என்னை நீங்கள் குறை கூறமுடியாது.

முதலில் என்னை உங்களிடம் மரியாதையாக  குறிப்பிட்ட கள்ளனைக் குறித்து சொல்லிவிடுகிறேன். உங்களோடு பேசியது சாத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அல்லது அது உங்கள் ஆழ்மனமாக இருக்கவேண்டும். மற்றபடி ஆண்டவர் எந்த மனுஷனையும் குறித்து மரியாதையாக குறிப்பிடமாட்டார். அவன், இவன் என்றே பேசுவார். இது என்னுடைய அனுபவம். ஏனெனில் அவர் தேவன். நீங்கள் நல்ல ஆவியை உடையவராக இருந்திருந்தால் யாருக்காகவும் அதை மாற்றாமல் எழுதியிருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் வேறு ஆவி இருக்கும் காரணத்தால் உங்களால் ஆண்டவரோடு பேசியதாக பொய் கூற முடிந்ததேயன்றி ஆண்டவருடைய பாணியில் கூட எழுதும் தைரியம் உங்களுக்கு இல்லை.

மேலும் உங்களை ஒருமையிலும் என்னை மரியாதையாகவும் விளித்த சாத்தானைக் குறித்து ஆச்சரியப்படுகிறேன். ஏனெனில் சாத்தானுக்கு என்மீது அவ்வளவு மரியாதை. ஏனெனில் நீங்கள் அவனுடைய நண்பனாகவும் நான் அவனுக்கு எதிரியாகவும் இருக்கிறேன் அல்லவா அதுதான் இரகசியம்.

ஏற்கனவே நான் வைத்த கோரிக்கையின் படி என்னை நீக்குவதாக இருந்தால் எனக்கு அவகாசத்துடன் கூடிய ஒரு எச்சரிக்கை விடுக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.நன்றி.

SUNDAR wrote:
HMV wrote:
என்னை சில்சாம் என்ற பெயருடன் சம்பந்தப்படுத்தி வீண்பழி சுமத்தி ...

நீங்கள் சில்சாம் இல்லை என்றால் "நான் சில்சாம் இல்லை என்பதை கர்த்தருக்குள் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன"  என்று எழுதிவிட வேண்டியதுதானே. 


 பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.சுந்தர் அவர்களே,உங்கள் கீழ்த்தரமான எண்ணம் ஈடேறப்போவதில்லை. நான் புனைப் பெயரில் எழுதுவது உண்மையாக இருப்பினும் இன்னொரு புனைப்பெயரைக் குறித்து நான் சத்திய பிரமாணம் செய்ய இயலாது.

இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காணவேண்டுமானால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன்,நீங்கள் மரபுக்கு விரோதமாக இங்கிருந்து நீக்கிய சில்சாம் என்பவரை மீண்டும் மன்னிப்பு கேட்டு அழைத்து வந்து உங்களுக்கு பதிலளிக்க கூப்பிடுங்கள்.அப்படி அவர் வந்துவிட்டால் நான் விலகிக்கொள்ளுகிறேன்.biggrin

நீங்கள் தெள்ளுபூச்சி என்றால் நான் மண்புழுவைப் போன்றவன். என்னைப் போன்ற சாதாரணமானவனுக்காக ஆனானப்பட்ட ஆவியானவரையே டிஸ்டர்ப் பண்ணுகிறீர்களே, அதனால் தானோ என்னவோ உங்கள் பக்கத்திலேயே இருக்கும் சாத்தான் எதையெதையோ உளறி தொலைக்கிறான்.


SUNDAR wrote:
தேவனின் வர்த்தைகள என்பது ஒரு காலத்தில் நேரடியாக தெளிவாக நான் கேட்டதுண்டு. எனவே அவரது வார்த்தைகள் பற்றி எனக்கு தெரியும். ஆனால் தற்போது நான் அதிகமாக மன்றாடி தேவனிடம் ஜெபிக்கும் போது என்  இருதயத்தில் உணர்த்தபட்டு என்னை சமாதானத்துக்குள் வழி நடத்தும் அல்லது  கண்டித்து  உணர்த்தி என்னை சங்கடத்துக்குள்ளாகும்   வார்த்தைகளையே ஆவியானவர் பேசியது என்று நான் இங்கு எழுதுகிறேன். அவைகள் ஒரு உணர்த்துதல் போலதான் வருமேயன்றி மிக தெளிவாக இருக்காது. அதற்க்கு ஒரு முழுமை வடிவு கொடுத்து எழுதும்போது யாரையும் மரியாதை  குறைவாக எழுதகூடாது என்று அவ்வாறு எழுதினேன்.   

ஐயா,நீங்கள் மும்பையில் வாழ்ந்த அனுபவம் உங்கள் எழுத்துக்களில் நன்கு தெரிகிறது.எப்படியென்றால் அங்கே நெரிசல் காரணமாக பொது இடத்தில் ஜனங்கள் சூழலுக்கு ஏற்ப அசைந்து நெளிந்து முட்டித்தள்ளி எரிந்து விழுந்து சபித்து இப்படி நவரசங்களும் காட்டுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

இப்படியே நேரத்துக்கு ஏற்றாற்போல சமாளித்து நவரசமும் காட்டுகிறீர்கள்,ஒரே சிரிப்பாக வருகிறது.வார்த்தைகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு கையில் கொடுக்கப்பட்டுவிட்டது.அதை விட்டு விட்டு இதுபோல அசரீரியைக் கேட்டு உளறுவது மதியீனமல்லவா ? இதுபோல நீங்கள் கண்ட சத்தத்தையும் கேட்டுவிட்டு உளறும் காரணத்தினாலேயே ஆவியானவர் அமைதியாகிவிட்டார்.உங்கள் மரியாதையைவிட அவருடைய மரியாதை அவருக்கு முக்கியமல்லவா,அதான் ட்ரெயினிலிருந்து இறங்கி வீட்டுக்கு வந்தபிறகும்  உடம்பு ஆடிக்கொண்டே இருப்பது போல நீங்களும் ஆண்டவர் பேசுவதாக பிரமையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

மேலும் இதுவரை உங்கள் உள்ளுணர்வையே ஆவியின் வெளிப்பாடு என்று நம்பி எழுதிய பரிதாப நிலை குறித்து மிகவும் வருந்துகிறேன்.அவ்வாறு தோன்றுவதையும் உள்ளது உள்ளபடி எழுதாமல் சொந்த அறிவினால் ஜோடித்து எழுதுவதாக ஒப்புக்கொண்டமைக்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.

ரொம்ப சாமர்த்தியம் ஐயா உங்களுக்கு,சினிமாக்காரன் கூட கதை திரைக்கதை வசனம் என்று தனித்தனியாக யோசித்து டீம் போட்டு எழுதுவான், நீங்களோ டி ராஜேந்தர் மாதிரி அத்தனையும் மொத்தமாக எழுதி கலக்குகிறீர்களே !

SUNDAR wrote:
ஆகினும் தேவனுடைய வார்த்தையை ராஜாக்களுக்கும் மற்றவர் களுக்கு எடுத்து சொன்ன தீர்க்கதரிசிகள் "உம்மை பற்றி கர்த்தர் சொன்னார்" என்றும் "கர்த்தர் உம்மை கைவிடுவார்" என்பது போன்றுதான்தான் சொல்வது வழக்கம்.

I சாமுவேல் 15:28 அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.

ஆண்டவராகிய  இயேசுகூட தான் தாயாரை பார்த்து ஸ்திரியே உனக்கும் எனக்கும் என்ன என்று ஒருமையில் சொன்னார். ஆனால் பிலாத்து விடம்  பேசும்போது "நீ" என்று சொல்லாமல் "நீர் சொல்கிறபடிதான்" என்று  மரியாதையோடுதான்  குறிப்பிடார். 

மேலும் கர்த்தர் கூட  தாவீதை பற்றி குறிப்பிடும்போது அவரை என்று குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
 
 ஏசாயா 55:3. உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். 4 இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும் அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.

 

ஐயா, இலக்கணத்தில் நேரடி (டைரக்ட்) பேச்சு என்றும் மறைமுக (இண்டைரக்ட்) பேச்சு என்றும் உண்டல்லவா,அந்த காரியம் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.ஆனாலும் உங்களை சரியானவனாகக் காட்டிக்கொள்ளும் அவசரத்தில் சம்பந்தா சம்பந்தமின்றி வசனங்களைப் போட்டு வியாக்கியான அனர்த்தமும் செய்து தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கும் பாவத்துக்குள்ளாகிறீர்களோ என்று அஞ்சுகிறேன்.

உங்களுக்கு வசனம் தெரிந்த அளவுக்கு அதன் பயன்பாடு தெரியவில்லையே, என்று வேதனைப்படுகிறேன். எதற்கெடுத்தாலும் பழைய ஏற்பாடுக்கு ஓடுவதே உங்கள் மிகப் பெரிய பெலவீனம் என்றும் நினைக்கிறேன். பழைய ஏற்பாட்டில் ஒரு காரியத்தைக் குறித்து ஆண்டவருடைய எண்ணத்தை அறியவே விசேஷித்த ஆவி பெற்ற மனிதர்கள் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களை விசேஷ்த்தவர்களாகக் காட்டிக்கொள்ளவில்லை, வேதமும் அவர்களைக் குறித்து நம்மைப் போல பாடுள்ள மனுஷர் என்றே சொல்லுகிற்து.ஆனால் புதிய ஏற்பாட்டிலோ பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு வெளிப்படையாக இருக்கிறது.

இயேசுவானவர் மாம்சத்தில் இருந்த நாட்களில் பேசியதையும் இன்னும் மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தைகளையும் வைத்து உங்கள் தரப்பை நீங்கள் வலுப்படுத்தமுடியாது.அடுத்து ஏசாயா காலத்தில் பேசிய ஆவியானவர் தாவீதைக் குறித்து பேசியதிலிருந்து என்ன விளங்குகிறது, ஏற்கனவே மரித்துப் போன தாவீதை ஏன் சர்வ வல்லவர் மரியாதையாகக் குறிப்பிடவேண்டும் இதையெல்லாம் யோசிக்கமுடியாதவண்ணம் உங்களுக்கு எல்லாம் மழுங்கிப் போயிருக்கிறதோ அல்லது மென்று விழுங்கிவிட்டீர்களோ தெரியவில்லை.

முடிந்தவரைக்கும் சமாளிப்பீர்கள், இல்லாவிட்டால் வாதத்தைவிட்டு  ஓடுவீர்கள், இதுதானே உங்கள் வழக்கம் ? நல்ல ஐடியா ஓடிவிடுங்கள்.ஆனால் உங்களிடம் பேசியது ஆவியானவர் அல்ல என்பதை எனக்கு உணர்த்திய ஆவியைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள்? இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் யார் சொல்லுவது உண்மையாக இருக்கும் என்பதை யார் அறிந்துசொல்லமுடியும்? நான் உங்களை சாத்தான் என்று சொல்ல நீங்கள் உங்களை எதிர்த்து எழுதுவோரையெல்லாம் சாத்தானின் கையாட்கள் என்று சொல்ல ஒரே குழப்பமாக இருக்கிறது,ஐயா. ஆனால் நான் மிக அன்போடு உங்கள் இன்னொரு வாய்ப்பு கொடுத்தேன்,உங்கள் மனதில் உணர்த்தியது அல்லது பேசியது சாத்தான் அல்லது உங்கள் ஆழ்மனம் அல்லது சுயம்.

காரணம் என்னவென்றால் எனக்கு ஆண்டவரைக் குறித்து தவறான காரியங்களைச் சொல்லும் உங்கள் மீது வரும் கோபத்தால் உங்களை எதிர்க்கிறேன்.நீங்களோ உங்களைக் குறித்து தவறாக நான் எழுதிய கோபத்தினால் என்னை எதிர்க்கிறீர்கள்.வித்தியாசம் புரிகிறதா? நான் உங்களை நேருக்கு நேராக விஷம் என்று எழுதியது உங்கள் மனதை வாதித்துக்கொண்டே இருக்கிறது,எனவே உங்கள் சுயம் எழும்பி உங்களுக்கு ஆதரவாக எதையோ சொல்லுகிறது,நீங்களும் அதை ஆண்டவர் உணர்த்தியதாக எண்ணிவிட்டீர்கள்,காரணம் உங்கள் மனசாட்சி இருண்டு போய்விட்டது.

 

SUNDAR wrote:
கர்த்தர் தம்முடய பார்வைக்கு நலமானதை செய்வாராக!

 

கடைசியாக, நீங்கள் இதுபோல அடிக்கடி ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பையும் நீதியையும் குறித்து சாட்டிவிடுவதால் கிருபையின் காலத்துக்கு வெளியே சென்று விடுகிறீர்கள். மேலும் சாதாரண குடியானவனைப் போல இப்படி நீங்கள் என்னை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று மிரட்டி சவால் விடுவதால் உங்கள் மாறுபாடான இரண்டு நிலைகள் வெளிப்படுகிறது.

தேவனைச் சேரும் நான்கு வழி பாவத்துக்கு மூன்று வழி சிருஷ்டிப்புக்கோ இரண்டு வழி இப்படி எல்லாவற்றையும் கூறுபோடும் உங்கள் செயல்பாடும் இரட்டை நிலையாகவே இருக்கிறது. ஒருபுறம் இரக்கமும் மன்னிப்பும் நிறைந்த இளகிய மனம் படைத்த சித்தர்கள் வழிவந்தவர் போன்ற வேடம்.மறுபுறம் எதிர்த்து எழுதுவோரை சாத்தானின் ஆட்கள் என்று பழிசாட்டி நியாயத்தீர்ப்புக்கு அனுப்பும் கொடூரமுகம்.

இத்தனையும் தேவனுக்காக அல்ல,நீங்கள் கண்டுபிடித்ததாகக் கூறும் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாததால் வந்த எரிச்சல். ஆனால் என்னைப் போன்ற எளியவர்களால் உங்களைப் போல சபிக்கமுடியாது,பெருமூச்சு மாத்திரமே விடமுடிகிறது.

(நான் ”சில்சாம்” அல்ல, “HMV”, போதுமா..? சில்சாமுக்கு உஙகளால் நிரூபணம் தர இயலாதது போலவே என்னால் “HMV” க்கும் நிரூபணம் தர இயலாது,ஐயா. நீங்கள் சீக்கிரமே சில்சாம் பைத்தியத்திலிருந்து விடுபட பிரார்த்திக்கிறேன்.biggrin)



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!

 

HMV@Date: 8 days ago
SUNDAR wrote:
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவித்துகோள்வது என்ன வென்றால்,  

 திரு.சுந்தர் அவர்களே,

சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதே என்று அமைதியாக இருக்கிறோம், உங்களுடைய எழுத்துக்களிலிருந்து தேவனுடைய அளவற்ற இரக்கமும் மன்னிக்கும் தன்மையும் வெளிப்படுவதைக் காட்டிலும் சுயபெருமையும் சுயநீதியுமே வெளிப்படுகிறது.

யார் மீதும் கசப்போ கோபமோ விரோதமோ இல்லையென்று நீங்கள் சொல்லுவதும் பொய்... ஏனெனில் உங்களுக்கு மாற்று கருத்தை எதிர்கொள்ளும் தைரியமே இல்லாத போது சர்வ வல்ல தேவனின் மன்னிப்பு அன்பு இரக்கம் போன்ற பெரிய பெரிய காரியங்களிலெல்லாம் பயிற்சி இருப்பது போலத் தோன்றவில்லை.அவையனைத்தும் விண்ணகக் காரியங்களல்லவா... நீங்களோ உலகப் பிரகாரமான காரியங்களில் தேவ காரியங்களை சம்பந்தப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

நீதிபதி நீதிமன்றம் என்றாலே அங்கு விசாரணையும் தீர்ப்பும் இருக்கும், வேண்டாம் விட்டுடுங்க சார்..!

(இறுதியாக ஒரே ஒரு ஜோக்... திகார் ஜெயிலில் வாடிக்கொண்டிருக்கும் ராஸா உங்களைத் தேடுகிறாராம்,மன்னிக்க.. biggrin)

ஏதேதோ பேசுகிறீர்களே ஐயா...ஒன்றுமே புரியவில்லை;நான் எப்போதாவது யாரையாவது விவாதத்துக்கு அழைத்தேனா, சொல்லுங்கள்; நீங்கள் எழுதுவதைக் குறித்து என்னுடைய கருத்தை சொல்லுகிறேன், அதுகூட உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது; நீங்கள் என்னை அவன் இவன் என்று திட்டவேண்டுமானால் தாராளமாக திட்டலாம், ஐயா...ஆனால் எனக்குள் இன்னொருத்தன் இருப்பதாகவும் அவனைத் திட்டுவதாகவும் மாய்மாலம் செய்யாதீங்க, சரியா...நான் உங்களிடம் இதுவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை, விவாதிக்கவும் அழைக்கவில்லை; எனக்குள் நான் மட்டுமே இருக்கிறேன், இறையருளை நம்புகிறேன், வேறென்ன வேண்டும் உங்களுக்கு..? ச்சும்மாவேனும் உங்களிடம் முழுக்க முழுக்க கடவுள் ஆவி பொங்கி வழிவதுபோலவும் மற்றவர்களிடம் இன்னொருத்தன் இருப்பது போலவும் கதை பண்ண வேண்டாமைய்யா.... பார்க்கிற மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களை சாத்தானின் தூதர்களாகப் பார்க்கவைக்கும் சாத்தானின் ஆவியினால் நீங்கள் பீடிக்கப்பட்டிருப்பதை மறைக்கவே எதிராளிகளிடம் இன்னொருத்தன் இருப்பதாக பழிபோடுகிறீர்கள் என்கிறேன்;இது நட்புக்கே இழுக்காகும்; எல்லாரிடத்திலும் எல்லாமும் எப்போதும் இருக்கலாம் வந்துபோகலாம் இல்லாமலும் இருக்கலாம் முழுவதும் தெய்வப்பிறவி யாருமில்லை முழுவதும் சாத்தானின் கூட்டம் யாருமில்லை;வேதத்தை வைத்து வாதிடும் அளவுக்கு நீங்கள் வேதத்தை மாத்திரமே சார்ந்திருப்பவர் அல்லவே.? எனக்கோ 23-ம் சங்கீதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது, நான் என்ன செய்யட்டும்..? ஆமா,உங்களுக்கு 23 ம் சங்கீதம் தெரியுமா, ஐயா..? நீங்க மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல யாரையோ மனதில் வைத்துக்கொண்டு என்னை எகத்தாளமும் பரியாசமும் செய்கிறீர்கள்... நான் கிறிஸ்தவர்கள் பண்ணும் கூத்தையெல்லாம் கண்டு சலித்துப்போய் இருப்பவன், என்னை சபிக்காதீர்கள், ஐயா..!

 

SUNDAR wrote:
 பூகம்ப இடிபாடுக்குள் மாட்டிய மனுஷனுக்கு இரக்கம் காண்பிக்க விருப்பம் இல்லாதவர்கள்  காண்பிக்க வேண்டாம்....அவர்களுக்காக பரிதபிக்கிறேன். 
 
அதே நேரத்தில் ...சாத்தனை மாத்திரம் நான் வெறுக்கிறேன். அவன் தலையை தேவன் விரைவில் நசுக்குவார் என்று எதிர்பாக்கிறேன்.  //

 


 தடாலடியாகக் கவிழ்வதும் படாரென எழுந்து சீறுவதும் திரு.சுந்தர் அவர்களுக்கு கைவந்த கலை போலும்..! விவாதத்தின் மேற்கண்ட பகுதியிலிருந்து எனக்கு தோன்றியதை எழுதுகிறேன்.

முதலாவது எந்தவொரு நிகழ்ச்சியும் இறைவனின் எச்சரிப்பாகவும் திருஷ்டாந்தமாகவுமே இருக்கிறது என்பதை சுந்தர் அறியாதிருப்பது ஒரு கொடுமை என்றால் சாத்தானின் தலை இன்னும் நசுக்கப்படவில்லை என்று அவர் நினைப்பது மாபெரும் கொடுமை... என்ன வசனம் தெரிந்து என்ன, அதற்குரிய வெளிச்சம் இல்லையே..?

லூக்கா

13 அதிகாரம்


1. பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

சாத்தானின் தலை என்பது ஆளுமை, அதாவது பாவம் மற்றும் மரணத்தின் மீதான அதிகாரம் எனில் அத்ன் கொடூரத்திலிருந்து தப்பிக்க அதன் மீது அதிகாரம் உடையவராக விளங்கும் இயேசுகிறிஸ்துவில் ஒருவன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏதோ எனக்குத் தெரிந்ததை சொன்னேன், இதுக்கெல்லாம் வசனம் கேட்காதீங்க ஐயா..!

அன்பு அவர்கள் இத்தனை நிதானமாகவும் பொறுமையாகவும் எழுதுவதையே ஏற்காமல் அவரையே எடுத்தெறிந்து பேசும் உங்களிடம் மாட்டி தப்பிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் இதுபோன்ற விவாதங்களை வளர்க்கும் நோக்கமே புதுப்புது தலைப்புகளில் சர்ச்சைக்குரிய காரியங்களை எழுதுவதற்காகவே என்பதை இதோ கண்டுகொண்டேன்;நீங்கள் ஒரு கட்டுரையின் பாதிப்பில் பல நூறு கட்டுரைகளுக்கான சர்ச்சைகளைக் கண்டுபிடிக்கிறீர்கள்; இந்த வகையில் நீங்களே வாதநோயினால் பீடிக்கப்பட்ட சாத்தானின் தூதுவனோ என்று ஐயப்படுகிறேன்; நான் உங்களை அவ்வாறு நியாயந்தீர்க்கவில்லை ஆனால் அதுபோல- அந்த வண்ணமாக- அந்த சாயலில் எனக்குத் தோன்றுகிறது, அவ்வளவு தான் ஒருவேளை இது தவறாகக்கூட இருக்கலாம், அதனால் என்ன அதற்கும் ஒரு மன்னிப்பு கேட்டால் போகிறது,என்ன நான் சொல்றது சரிதானே எட்வின்..?

 

SUNDAR wrote:
நீங்கள்  மாற்று பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும்  சகோ. சில்சாம்  இல்லை என்பதை கர்த்தருக்குள் உறுதியாக சொன்னால் மட்டுமே இனி உங்கள் பதிவு அனுமதிக்கப்படும். முகாந்திரமில்லாமல் பொத்தம் பொதுவாக எழுதி குழப்பத்தை  விளைவித்தால் உங்கள் பயனர் பெயர் முடக்கப்படும்.

 திரு.சுந்தர் அவர்களே, இந்த நிமிடம் வரை உங்களை நல்லதொரு மனிதராகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் இதுபோன்றதொரு கீழ்த்தரமான மிரட்டல் விடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.சில்சாம் என்பவரே ஒரு டூப்ள்கேட் என்றால் நான் அவருடைய டூப்ளிகேட் என்கிறீர்களே இது நியாயமா..? உங்களுக்கு சில்சாம் சம்பந்தமான ஏதோவொரு கிலி பிடித்திருக்கும் போலிருக்கிறது. சில்சாம் ஒருவேளை உங்கள் ஆபீஸில் எதிர்சீட்டில் இருக்கிறாரா என்று பார்த்துக்கொள்ளுங்கள். biggrin

ஐயா, என்னை நீங்கள் சில்சாம் என்பவருடன் ஒப்பிட்டதைவிட கோவை பெரியன்ஸ் ஆட்கள் யாருடனாவது ஒப்பிட்டு யோசித்திருந்தால் கொஞ்சம் கௌரவமாக இருந்திருக்கும். கடைசியாக, ஒரு சந்தேகம் இந்த தளத்தின் நிர்வாகி நேசன் என்பவர் தானே, நீங்கள் எப்படி என்னை மிரட்டுகிறீர்கள்? அவர் கேள்வி கேட்பார், நீங்கள் பதில் சொல்லுவீர்கள், இதுதானே இங்கு வழக்கம்? இப்படி இரண்டு இரண்டு பேராக எத்தனை ஜோடிகளோ ? இதுவும் நல்ல ஐடியா தான் ! நீங்க என்னை கேள்வி கேட்பது நல்ல தமாஷ் ! எப்படியோ என்னை குறிவைத்துவிட்டீர்கள்,எப்படியும் ஒழித்துகட்டிவிட்டே மறுவேலை பார்ப்பீர்கள் போலிருக்கிறது. பிறகு எந்த உரிமையில் ஓயாமல் சகோதரர் என்றும் நண்பர் என்றும் அழைத்துக்கொள்ளுகிறீர்களோ ? இயேசுநாதர் நண்பர்களை மட்டுமே நேசிக்க சொன்னாரா. ஐயா ?

 

Stephen wrote:
HMV wrote :

-------------------------------------------------------------------------
இந்த வகையில் நீங்களே வாதநோயினால் பீடிக்கப்பட்ட சாத்தானின் தூதுவனோ என்று ஐயப்படுகிறேன்; நான் உங்களை அவ்வாறு நியாயந்தீர்க்கவில்லை ஆனால் அதுபோல- அந்த வண்ணமாக- அந்த சாயலில் எனக்குத் தோன்றுகிறது, அவ்வளவு தான் ஒருவேளை இது தவறாகக்கூட இருக்கலாம், அதனால் என்ன அதற்கும் ஒரு மன்னிப்பு கேட்டால் போகிறது,என்ன நான் சொல்றது சரிதானே எட்வின்..?
--------------------------------------------------------------------------
ஐயா... HMV ...அவர்களே நீங்கள் இவ்வளவு துணிகரமா எழுதிவிட்டு நான் உங்களை அவ்வாறு நியாயந்தீர்க்கவில்லை ஆனால் அதுபோல- அந்த வண்ணமாக- அந்த சாயலில் எனக்குத் தோன்றுகிறது, என்று சொல்கிறேர்களே...இது உங்களுக்கே நியாமாக தோன்றுகிறதா..!..


 அன்பான சகோதரா, நான் எழுதியுள்ள சாயல் உங்களுக்குத் தெரியவில்லையா, இது முழுக்க முழுக்க இதே திரியில் திரு.சுந்தர் அவர்கள் எழுதியதன் பாதிப்பே.ஆம்,அவர் திரு.அன்பு அவர்களை எப்படி சூசகமாக தாக்கிவிட்டு சமாளிக்கிறாரோ அதுபோலவே நானும் முயற்சித்தேன். திரு.சுந்தர் அவர்களுக்கு எதிராக நீங்கள் எதாவது எழுதி பாருங்கள், உங்களுக்கும் இதே மரியாதை தான். ஆளாளுக்கு ஒரு ஓசி தளத்தை ஆரம்பித்து வைத்துக்கொண்டு உறுப்பினர்களையும் சேர்த்துவிட்டு இவர்கள் எழுதுவதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்று நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. எனக்கு சில்சாமும் ஒன்றுதான் சுந்தரும் ஒன்றுதான் இருவருமே  பிடிவாதக்காரர்கள். வாதம் என்றாலே எதிர்கருத்தை எதிர்கொள்ளும் மனோதிடமும் இருக்கவேண்டும். ஆனால் இங்கோ ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டால் கூட வாதத்துக்கே அழைக்கிறீர்கள்; எனக்கு வாதிடுவதில் நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே எனது ஐயங்களை கேட்கிறேன். நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் என்னை வெறுத்து விடாதிருங்கள், உங்கள் நட்பாவது எனக்கு லாபமாக இருக்கட்டும்.எல்லாவற்றுக்கும் நன்றி,நண்பர்களே..!

EDWIN SUDHAKAR wrote:
நீங்கள் எழுதும் வார்த்தைகளின் மேல் தான்  எனக்கு 
கோபமே  தவிர உங்கள் மேல் அல்ல  என் சகோதரரே...................

 அன்பான எட்வின் அவர்களே,நீங்கள் நட்புக்காகவோ வேறு காரணத்துக்காகவோ சார்புநிலை எடுப்பது தவறல்ல.ஆனால் அன்பு அவர்களைப் போன்றோருக்கு இரட்டிப்பான கனத்தைக் கொடுக்கச் சொல்லி வேதம் சொல்லுகிறது.அவர் சொல்லுவது தவறாக இருந்தாலும் நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதில் தாழ்மை இருத்தல் வேண்டும்.அன்பு அவர்கள் சுமார் 60 வயதுள்ள பெரியவர் என்பதை அறிவீர்களா..? நீங்கள் இன்னும் திருமணமானவரோ அல்லவோ ஐயா அன்பு அவர்கள் பல திருமணங்களை நடத்தியிருக்கக் கூடிய முதிர்ந்த் அனுபவமுள்ளவர்.நீங்கள் அவருடைய வயதை அடையும்போது உங்கள் அறிவின் நிலைமை என்னவாக இருக்குமோ அதைவிட இன்னும் தெளிவாகவும் பொறுமையாகவும்  இந்த வயதில் அன்பு அவர்கள் எழுதி வருகிறார்.அவர் எழுதும் பல விஷயங்களில் நியாயம் இருப்பதை நீங்கள் அறியவில்லை.

இன்னும் ஒரு இரகசியத்தை சொல்லுகிறேன், இன்றைக்கு சுந்தர் அவர்கள் எழுதும் பல காரியங்களின் பிதாமகன் அன்பு அவர்களே.! சுந்தரிடம் என்ன ஒரு நல்ல பழக்கம் என்றால் அவர் எந்தவொரு காரியத்தையும் உடனே ஏற்றுக்கொள்ளுவார் அல்லது எதிர்ப்பார். ஆனால் அதனால் அவர் அடையும் மாற்றத்தை யாரும் அறியாத வண்ணம் மறைக்க முயற்சிப்பார், ஆனால் அதை மறைக்க அவருக்குத் தெரியாது. இருவரையும் தொடர்ந்து வாசித்து வரும் நடுநிலையாளனான எனக்கு இருவரையும் நன்கு தெரியும். சுந்தர் அடித்த பல்டிகள் அநேகம்;ஆனால் அன்பு அவர்களோ இதுவரை நேர்த்தியாகவே எழுதி வருகிறார்.அவர் முன்னுக்குப் பின் முரணாக இதுவரை எழுதியதே இல்லை.

இருவரில் ஐயா அன்பு அவர்களிடமே விஷயம் அதிகம்; சுந்தரிடமோ விஷம் அதிகம். விஷம் இனிப்பாக இருக்கும். மருந்து கசப்பாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவும்.

 

SUNDAR wrote:
சில்சாம் என்னும் HMV என்னை  தனிப்பட்ட முறையில் குறை  சொல்வது அல்லது  என்னை தரம் தாழ்த்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். அதாவது என்னை கவிழ்ப்பதற்கு யார்கூட வேண்டுமானாலும் அவர் கூட்டு சேர அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவர் எழுத்துக்கள் காண்பிக்கிறது.
 
உண்மையில் இவ்விஷயத்துக்காக  நான்  பெருமை படுகிறேன். ஒரு பெரிய போதகர் அல்லது ஆவிக்குரிய நிலையில் பெரிய மனுஷர்  இப்படி ஒரு சாதாரண தெள்ளுபூச்சு போன்ற என்னை  துரத்தி துரத்தி வேட்டையாட வந்துள்ளார் என்றால், என்னுடய எழுத்துக்களில்  உண்மைகள் இருக்கிறது அது பலருக்கு சுடுகிறது என்பதை நிச்சயம் உணர முடிகிறது.
 
விஷம் இனிப்பாக இருக்கும் என்ற உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லி, என்மேல் ஏதாவது பழிபோடுவதிலேயே குறியாக இருக்கும் அவரை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்! 

திரு.சுந்தர் அவர்களே, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுவதால் உண்மையாகிவிடாது என்பதை அறிவீர்கள் என்று எண்ணுகிறேன், உண்மையில் நான் வெறும் வாசகனாக மட்டுமே இருந்திருக்கலாம் போலிருக்கிறது. நான் பயந்து பயந்து எழுதியதை வைத்து இவ்வளவு பெரிய பெரிய பழிகளை என்மீது போடுவீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுவதுபோல தாழ்த்தி மற்றொருவரை முகாந்தரமில்லாமல் தூஷிக்கிறீர்களே இது நியாயமா ? சில்சாம் என்பவரை நீங்கள் நீக்கிவிட்டீர்கள் அல்லவா, பிறகு அவர் எப்படி இங்கு வந்து எழுதுவார் ? அவர் எங்கே தன்னை பெரிய போதகர் என்று சொல்லிக்கொண்டாரோ அறியேன், ஏதோ நீங்கள் சொன்னபிறகே அவருடைய பெருமைகள் தெரிய வருகிறது.

நீங்கள் சரியான நிர்வாகியாக இருந்தால் மூத்த உறுப்பினரான அன்பு அவர்களை சரிநிகர் சமானமாக எழுதும் எட்வின் அவர்களைக் கண்டித்திருக்க வேண்டும்.அவருடைய வயதுக்குரிய மரியாதையை தர மனமில்லாமல் சமவயதுள்ளவரிடம் வாதாடுவது போல அவரோடு நீங்கள் இருவரும் பெருந்தன்மையுடன் அல்ல, பெருமையுடன்- எல்லாம் அறிந்த செருக்குடன் எழுதுவதைக் கண்டு மெய்யாகவே நான் மனவேதனை அடைந்தேன். அவரைப் போல பொறுமையாக எழுத எனக்குத் தெரியவில்லை, நீங்கள் ஏற்கனவே அறிந்தவண்ணமாக எனக்கு ஒன்றும் தெரியாது.

ஆனால் நீங்கள் பல விஷயங்களில் மார்க்க எல்லைகளை மீறி ஏதோ ஒரு ஆவி வந்து எல்லாவற்றையும்- வேதத்தில் இல்லாததைக் கூட போதிக்கிறது என்று அசட்டு தைரியத்தில் எதையெதையோ எழுதி வருகிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது. முழுவதும் வெள்ளையான ஒரு உடையில் ஒரு சிறிய கறை கூட எளிதாக தெரியும் அல்லவா, அதைப் போல நீங்கள் பொதுவாக நல்லவர் போலத் தெரிந்தாலும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உங்களிடம் உள்ள உபதேசப் பிழைகள் தெரிகிறது; அதனை மறுக்கவோ எனக்குத் தெரியவில்லை, என்ன செய்யலாம், சொல்லுங்கள்.

எனவே அன்பு போன்றவர்களை கோபித்துக்கொள்ளாமல் அவரிடம் கேள்விகளாகக் கேட்டு விஷயத்தை அறிந்து பிறகு நீங்கள் அறிந்தவற்றோடு ஒப்பிட்டு பாருங்களேன்.

எட்வின் உங்களுக்கு ஒரு வார்த்தை: நீங்கள் ஐயா அன்பு அவர்களைவிட நீங்கள் புத்திசாலியாக இருந்திருந்தால் முதலில் உங்களுடைய எழுத்துக்களில் பணிவும் தாழ்மையும் இருந்திருக்கும். அது இல்லாத உங்களிடம் எதுவுமே இருக்காது என்று நம்புகிறேன்.

ஆனால் அன்பு அவர்களிடம் அந்த பணிவும் தன்னடக்கமும் இருப்பதால் உங்களுக்கு பொறுமையாக பதிலளிக்கிறார், பாருங்கள்.அவருக்கு உங்களைப் போல  கொஞ்சமாவது பெருமையோ சுயமரியாதையோ இருந்திருந்தால், சுந்தர் அவர்கள் அடிக்கடி இங்கே எழுதப்படும் கருத்துக்களில் ஒத்துப்போகாதோர் தாராளமாக வெளியேறலாம் என்பதாக  எழுதும்போதே வெளியேறிருப்பார். அவர் பொழுதுபோக்க அல்ல சத்திய வேதத்தை காக்கவே உங்களோடு போராடுகிறார் என்று எண்ணுகிறேன்.

என்னை பொறுத்துக்கொள்ளும் எல்லோருக்கும் நன்றி, நண்பர்களே.

 

anbu57 wrote:
இத்திரியை துவக்கியவர் சுந்தர். மனிதர்களின் சரீரப்பிரகாரமான வேதனை சம்பந்தமாக அவரது கருத்தை வைத்தார். அக்கருத்துக்கு எதிராக நான் எனது விவாதத்தை வைத்தேன். இடையில் நீங்கள் புகுந்து, மனிதர்களின் பாவம் சம்பந்தமாக விவாதத்தை திசைதிருப்பி விட்டீர்கள்.

அப்படியே விவாதம் சென்று கொண்டிருக்கையில், மனிதர்களின் எல்லா பாவங்களையும் நாம் மன்னிக்க வேண்டும் என்ற கருத்தை சுந்தர் சொன்னதால், மீண்டும் விவாதம் திசை திரும்பியது. மனிதர்களின் எல்லா பாவங்களையும் நாம் மன்னிக்கவேண்டும் என்பதோடு, தேவனும் அவர்களை மன்னிக்கும்படி ஜெபிக்கவேண்டும் எனச் சொல்லி, ஜெபித்தல் சம்பந்தமாகவும் விவாதத்தை திசை திருப்பி விட்டார் சுந்தர்.

இப்படியாக நீங்கள் இருவரும் விவாதத்தை திசை திருப்பி, விவாதத்தின் ஒழுங்கை குலைத்துப்போட்டுவிட்டு, நான் ஒழுங்காக விவாதம் செய்யவில்லை என்கிறீர்கள்.


 ஐயா, கொஞ்ச வயதுள்ள எனக்கே இந்த மானிட்டரை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் தலை வலிக்கிறது, எதையும் முழுமையாக படிக்கமுடியவில்லை, எப்படியோ மனதில் மாறாத விசுவாசம் இருப்பதால் அதுகுறித்து மட்டுமே யோசித்து எதையோ எழுதுகிறேன்.

ஆனால் நீங்களோ இத்தனை நேர்த்தியாக வாதத்தை நடத்துவதுடன் வரிக்கு வரி வாசித்து கிரகித்து நாகரீகமான முறையில் விமர்சிக்கிறீர்கள், உங்களிடம் என்னைப் போன்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன்.

வாதத்தின் போக்கு திசை திரும்பியதை மிக அழகாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி, ஐயா. நான் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

anbu57 wrote:
 சாத்தானின் பிடியில் இருக்கும் ஜனங்களைக் காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் தேவன், நம் ஜெபத்தைக் கேட்டு என்ன செய்ய முடியும்?

 அதானே....சரியான கேள்வி..! (சுந்தரின் ?) தேவன் முதலில் தன்னை சாத்தானிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடிவந்து நமக்கு உதவி செய்வதற்காக நாம் ஜெபிக்கலாமா..? எனக்கென்னமோ அன்பு அவர்கள் சொல்வதிலேயே நியாயம் இருப்பதாக தெரிகிறது, சுந்தர் ஏமாற்றுகிறார்..!

அதாவது பூகம்பம் என்பது இறைவனின் கோபமே.ஆனால் அது இயற்கையின் சீற்றம் என்பது உலகத்தாரின் கூற்று, சாத்தானுக்கு இயற்கையின் மீது எந்த அதிகாரமும் இல்லை என்பதே நான் அறிந்த உண்மையாகும். விஞ்ஞானத்தின்படி பூகம்பம் என்பது இயல்பானதொரு நிகழ்வாகும், பூகம்ப ஆபத்துள்ள பகுதியில் மக்கள் வாழ்வதே பேரழிவுக்குக் காரணமாகிறது.

இதையெல்லாம் விட்டுவிட்டு இது முழுக்க முழுக்க சாத்தானின் சதி என்று சுந்தர் போன்றவர்கள் சொல்லுவார்களானால் சாத்தான் என்பவன் இறைவனைக் காட்டிலும் வல்லமையுள்ளவன் என்று ஆகும்.

இது சரியல்ல.

SANDOSH wrote:

சகோதரர் சுந்தர் அவர்களே, நீங்களும் இயேசு கிருஸ்துவை போல அற்புதங்கள் செய்திருக்கிறீர்களா? அதை பற்றி உங்கள் அனுபவங்களையும் கொன்சம் எழுதுங்கள்.


 சந்தோஷ் அவர்களே, நீங்க ரொம்ப பிரச்சினை பண்றீங்க... உங்களுக்கு பதிலளிக்க இங்கு யாருமில்லை....ஸாரி..!

 

// இந்தியாவில் தேவன் பயன்படுத்திய மனிதர்களில் பாலாசீர்லாறி போன்று எவரையும் பயன்படுத்தவில்லை என்று உறுதியாகக் கூறுவேன். சாம்பிளுக்கு ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இவருடைய கூட்டங்களில் திரளாய் அற்புதம் நடைபெறுவதுண்டு. இவருடைய நிழல் படும் இடங்களில் எல்லாம் அற்புதம் நடந்தது. அதற்காக இவருடைய நிழல் அனேகம் பேர் மீது பட வேண்டும் என்பதற்காக பெரிய விளக்குகள் மூலம் ஏது செய்தனர். ஆனால் இவரின் முடிவு என்ன? திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறினார். பின்பு சிறிது காலத்தில் கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒன்றே என்றார். அதன்பின்பு நானே கலியுகக் கல்கிபகவான் என்று கூறினார். தனக்கு மரணம் கிடையாது என்று கூறினார். சொல்லி சில நாட்களிலேயே மரித்தும் போனார். //

மேற்கண்ட வரிகளை வாசித்தபோது நமக்கு அருமையான நண்பர் சுந்தர் அவர்களின் ஞாபகமே வந்தது;ஒருவேளை அதே ஊர்க்காரர் என்பதால் பாலாசீர் லாறி அவர்களின் பாதிப்பும் இன்னும் அதே ஊரைச் சேர்ந்த யாகவா முனிவரின் பாதிப்பும் சுந்தர் அவர்களிடம் இருக்கிறதோ என்று யோசிக்கிறேன்.

சுந்தர் அவர்களிடம் பேசும் அதே ஆவி மேற்கண்ட மனிதர்களிடமும் பேசியது;அவர்கள் மூலம் அற்புத அதிசயங்களைச் செய்தது. சுந்தர் அவர்களின் தன்னடக்கம் காரணமாக இங்கே இரகசியமாக பணிபுரிகிறார், ஒருவேளை அவருக்கு கோபம் வந்துவிட்டால் அவரும் ஒரு முனிவரே..! biggrin

 



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
இறைவன் தளத்தில் HMV ஆகிய நான் எழுதிய பின்னூட்டங்கள் !
Permalink  
 


சகோ. எட்வின் சுதாகருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்

HMV@Date: October 22nd

கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொல்லாதிருக்க எட்வின் அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்;அதிக கேடுண்டாதிருக்க இனி அவர் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான காரியங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;

திரு.சுந்தர் அவர்களுக்கும் இது ஒரு நல்ல படிப்பினையாக இருக்கட்டும்; வேதத்தை எடுத்து போதிக்கவும் தியானிக்கவும் தேவனுடைய விசேஷித்த இரக்கமும் கிருபையும் வேண்டும்;அதைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் ஏட்டிக்கு போட்டி என்று எதையாவது எழுதிவிட்டு போகக் கூடாது.

எஸ்றா போன்ற வேத பண்டிதர்களே கருத்து சொல்ல அஞ்சிய காரியங்களில் புறசாதி மனுஷனான சுந்தர் போன்றவர்கள் காளான்களைப் போல எழும்பி கண்டதையும் போதிப்பதைக் காண சகிக்கவில்லை.

SUNDAR wrote:
HMV wrote:

கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொல்லாதிருக்க எட்வின் அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்;அதிக கேடுண்டாதிருக்க இனி அவர் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான காரியங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;

திரு.சுந்தர் அவர்களுக்கும் இது ஒரு நல்ல படிப்பினையாக இருக்கட்டும்; வேதத்தை எடுத்து போதிக்கவும் தியானிக்கவும் தேவனுடைய விசேஷித்த இரக்கமும் கிருபையும் வேண்டும்;அதைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் ஏட்டிக்கு போட்டி என்று எதையாவது எழுதிவிட்டு போகக் கூடாது.

எஸ்றா போன்ற வேத பண்டிதர்களே கருத்து சொல்ல அஞ்சிய காரியங்களில் புறசாதி மனுஷனான சுந்தர் போன்றவர்கள் காளான்களைப் போல எழும்பி கண்டதையும் போதிப்பதைக் காண சகிக்கவில்லை.


பவுலுக்கு வந்த துன்பங்களை அவர் பட்டியலிட்டிருப்பார் பாருங்கள். அவரும் கூட பல அறிய கருத்துக்களை  துணிந்து கூறியிருக்கிறார் தானே?

/...

ஆண்டவரை அறிந்துகொண்டதில் இருந்து கடந்த இருபது வருடமாக இந்த காரியங்களைதான்  நான் போதித்து வருகிறேன். அந்த இருபது வருடங்களில் என்னுடய உடம்பில் ஒரு இன்ஜெக்சன்கூட போட்டது கிடையாது. 


 அப்படியானால் ஆண்டவருடைய எச்சரிப்பின் சத்தத்தை எப்படி அறிவீர்கள், ஐயா..? எட்வினும் பவுலடிகளும் ஒன்றா..? எட்வின் அளவுக்கு பவுலடிகளுக்கு ஞானம் இருந்ததா என்ன..? நீங்கள் ஊசி போட்டதில்லை என்பது ரொம்ப சந்தோஷம்...ஆனா உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் இது பொருந்துகிறதா..? உங்களைப் போல‌ ரொம்ப சுயநலமானவர்களை நான் பார்க்கவில்லை;ஆண்டவர் ஒரு மனிதனை உணர்த்த அவன் பிள்ளைகளுக்கு அக்கிரமத்தை பலிக்கப்பண்ணுவார் என்பதை நீங்கள் அறியவில்லையே... நீங்கள் இப்போது எழுதும் அருவருப்பான விளக்கங்களின் விளைவினை உங்கள் சந்ததி சந்திக்கும் ஐயா..! நம்முடைய முன்னோர்களின் வரலாறே அதற்கு சாட்சி..? நீங்கள் பாலாசீர் லாறி போன்றோரை மிஞ்சுவீர்களோ... அவருடைய சந்ததியைப் பாரும்..!

SUNDAR wrote:
மொத்தத்தில் ஓன்று மட்டும் எனக்கு புரிகிறது. அதாவது சாத்தான் அதுதான் பிசாசு என்மேல் கடும் கோபமாக இருக்கிறன் என்பதே அது!  
 

 ஐயா, ஒருபாவமும் அறியாத என்மீது வீண்பழி சுமத்திவிட்டு உம்மை இயேசுநாதர் ரேஞ்சுக்கு உயர்த்திக்கொள்ளாதிரும்;நான் சாத்தானோ சாத்தானின் தூதுவனோ அல்ல; நீர் இயேசுவோ இயேசுவின் அடியவரோ அல்ல; இயேசுவானவர் போதிக்காதவற்றையெல்லாம் சொந்த ஞானத்திலும் ஒளியின் தூதனுடைய் வேடத்தைத் தரித்தவனான பொல்லாங்கனுடைய மாயத்தினாலும் தரிசித்து குப்பைகளைக் கிளறும் உங்கள் சந்ததிகளுக்கு சாபத்தையே வைத்துசெல்லுகிறீர்கள் என்று கருதுகிறேன்;

"என்று கருதுகிறேன்" எனும் வார்த்தையினால் எதைவேண்டுமானாலும் எழுத உரிமை படைத்த நீங்கள் என்னைக் கட்டுப்படுத்த இயலுமா என்ன? உங்களிடம் நான் வாக்குவாதம் செய்யமுடியுமா? இதுவரை ஊசி கூட போட்டதில்லை என்று சொல்லும் உங்கள் அறியாமையை சுட்டிக்காட்டவே முயற்சித்தேனேயன்றி உங்களை சபித்ததாகத் தோன்றவில்லை; நீங்கள் சபிக்கப்பட்டவராக இருந்தாலும் உங்களைக் காப்பாற்றும் வழி எனக்குத் தெரியாது; வேதத்துடன் கூட்டினால் என்ன விளைவு என்பதையும் வேதத்தில் இருப்பதை மறைக்க முயற்சித்தால் என்ன தீர்ப்பு என்பதையும் வேதமே தெளிவாக சொல்லுகிறதே..?

நான் யார் என்பதை குறித்து கவலைப்படாமல் உங்கள் பரிதாப நிலையைக் குறித்து யோசித்து பாருமய்யா...பொது விவாத மேடையில் எதிர்கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத நீர் எப்படி கர்த்தருடைய வேதத்தை எடுத்து போதிக்கமுடியும் என்கிறேன்..!

SUNDAR wrote:(Date: October 24th)
சம்பந்தபட்டவர்களிடமும் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். அத்தோடு  இனி எந்த ஒரு கடின வார்த்தையையும் இங்கு பயன்படுத்தகூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.

 "காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்." (நீதிமொழிகள்.20:30)

ஐயா, உங்களை உயர்த்திக்கொள்ளும் நோக்கத்தில் என்னை குற்றஞ்சாட்டுகிறீர்களே..? கடவுளையே நம்பியிருப்போருக்கு அவர் அறியாமல் ஏதும் நடைபெறாது என்பதை ஏற்கிறீர்கள் தானே,அப்படியானால் எட்வினுக்கு நேர்ந்த சிறு விபத்து நிச்சயமாகவே கடவுளுடைய எச்சரிப்பு என்பதே என்னுடைய எண்ணம்.

கடவுள் தகப்பனைப் போல சிட்சிக்கிறார், சாத்தானோ இரத்தம் சிந்த துன்புறுத்துகிறான். எட்வின் விபத்தில் (என்று நான் நினைக்கிறதில்லை, ஒவ்வொரு விபத்துமே நியமிக்கப்பட்டதே...) சிக்கினாலும் அதிகக் கேடு சம்பவிக்காத காரணம் கடவுளுடைய இரக்கமே.

இனியும் பரிசுத்த வேதாகமத்தில் இறையியல் கொள்கைகளுக்கும் முரணாக சொந்த ஞானத்தைப் பயன்படுத்தி வியாக்கியானங்கள் செய்வதை உடனே நிறுத்தாவிட்டால் கடும்விளைவுகள் உண்டாகும்;ஏனெனில் இது தேவதா காரியமல்லவா, இதில் வருவோர் போவோரெல்லாம் இஷ்டத்துக்கு கருத்து கூறக்கூடாது.

கர்த்தருடைய பெட்டி விழுந்துவிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் எட்டிப்பிடித்தவனை கொலை செய்த பயங்கரமான தேவன் நான் ஆராதிப்பவர். நீங்கள் புத்தனும் முகமதுவும் சந்தித்த லூசிபரையும் பரிசுத்த தேவனையும் இணைத்து யோசிக்கிறீர்கள். உம்மோடு நேருக்கு நேர் நின்று போராட எனக்கும் ஞானம் போதவில்லை ஐயா..!

EDWIN SUDHAKAR wrote:

HMV wrote:

__________________________________________________________________

கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொல்லாதிருக்க எட்வின் அவர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்;அதிக கேடுண்டாதிருக்க இனி அவர் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான காரியங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

 ___________________________________________________________________

 

சகோதரன் HMV அவர்களே நீங்கள் என் தவறுகள் நிமித்தம் அதாவது தேவனுடைய கற்பனை கட்டளைகள் போன்றவற்றை கை கொள்ளாததினால் நான் தண்டிக்க பட்டேன் என்று சொல்லிருந்தால் நிச்சயமாக உங்களை பாராட்டி ஆம் சகோதரனே நீங்கள் சொல்வது தான் உண்மை என்று சொல்லிருப்பேன்

 

ஆனால் நீங்களே நான் கர்த்தருடைய காரியங்களில் துணிகரமாகக் கருத்து சொன்னதினால் தான் தண்டனை என்று சொல்கின்றீர்கள்

 

சரி சகோதரனே நீங்கள் சொல்கின்றபடி நான் வேதத்திற்கு விரோதமான கருத்தை எழுதியிருந்தால் அது உங்களுக்கு இடறலாய் இருந்துயிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் இனி நான் எந்த காரியம் எழுதினாலும் தேவனிடத்தில் ஜெபித்து பின் எழுதிகின்றேன்

 

SUNDAR WROTE :

_____________________________________________________

சகோதரர் அவர்கள்  நலம் பெற்று வந்துவிட்டதால் இந்த திரி மூடப்படுவது நலம் என்று கருதுகிறேன்.
________________________________________________________________________________

 
 
எனக்காக ஜெபித்த  தள நிர்வாகிக்கும் மற்ற சகோதரர்களுக்கும் என் நன்றியை   தெரிவித்து கொள்கின்றேன்
 
 
 
என் தேவன் உங்களை அவருடைய சித்தத்திலே நடத்தி உங்களை ஆசிர்வதிப்பாராக
 
 
 
இப்பொழுது இந்த திரியை மூடிவிடலாம் இடையில் எழுதியதற்கு மன்னிக்கவும்......



-- Edited by EDWIN SUDHAKAR on Monday 24th of October 2011 03:18:28 PM


 நண்பர் எட்வின் அவர்கள் நலம்பெற்று திரும்பியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்; எனது துணிச்சலான கருத்துக்களால் தங்கள் மனம் புண்பட்டிருக்குமானால் அதற்காக மனம் வருந்துகிறேன்; திரு.சுந்தர் அவர்கள் என்னை அந்நியமாக பார்த்து ஏதேதோ யூகமான சேதிகளைச் சொல்லுகிறார்; மாற்று கருத்து சொல்லுவோரை எதிரிகளாக பாவிக்காதிருங்கள் என்று வேண்டுகிறேன்;நான் யார் என்பதை அறிய வேண்டுமானால் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பி விசாரிக்கலாம்;ஆனால் என்மீது பழிபோடுகிறீர்கள்; எனவே நான் இனி இங்கு எழுதுவது குறித்து அதிகம் யோசிக்கிறேன்.ஆனாலும் திரு.சுந்தர் அவர்களின் விசேஷித்த நற்குணங்கள் போற்றுதற்குரியது.உங்களிடம் கடவுளுக்கு பயப்படும் பயம் இருக்கிறது என்றே கருதுகிறேன்.



-- Edited by HMV on Friday 25th of November 2011 08:47:15 PM

__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

சுந்தர் அவர்களின் வேதபோதனைக்கு வசன ஆதாரம் தேவை!

HMV@Date: October 19th
 

நண்பர் ஜான் அவர்களே,
நேசன் என்பவரும் சுந்தரும் ஒருவரே. மற்றவர்கள் அவருடைய துதிபாடிகள். நான் இங்கே ஒரு விசித்திரப் பிறவியைப் போல.பேதுரு போன்றோர் மரணத்தைக் குறித்து கேட்டீர்களல்லவா, நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ளுங்கள், சொல்லுகிறேன், திரு.சுந்தர் அவர்கள் மறுசுழற்சி கொள்கையை நம்புகிறவர், ஆதலால் பேதுரு போன்றவர்கள் மரித்தாலும் வேறொருவர் ரூபத்தில் இன்னும் வாழுகிறார்கள். ஏனெனில் இயேசுவை அறிந்திராத பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மீண்டும் பிறக்கும் வாய்ப்பும் இயேசுவின் மூலமான இரட்சிப்பைப் பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. இந்து தேவர்கள் தேவியர் எல்லாருமே ஏற்கனவே வாழ்ந்த மனிதர்களே, அவர்களும் வெவ்வேறு ரூபத்தில் பிறந்துகொண்டு தானிருக்கிறார்கள். இன்னும் ஏதாவது விவரம் வேண்டுமானால் திரு.சுந்தர் அவர்களையே கேளுங்கள்.

 

John wrote:

கிழே உள்ள வசனத்தின் படி பவுல் மரணபிரமாணத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டார் பின்னே ஏன் மரித்தார்?


 அவர் தனக்கு சித்தமானபடியெல்லாம் செய்வார்,அவரை நோக்கி நீர் ஏன் இதை செய்கிறீர் என்று கேட்கத்தக்கவன் ஒருவனுமில்லை, இது அவருடைய தளம், எதுவேண்டுமானாலும் எழுதுவார், இஷ்டமிருந்தா பாருங்க, இல்லாவிட்டா வெளியேறுங்க, நீங்க என்ன இஸ்லாமியரைப் போல அவர் கழுத்தை வெட்டவா போறீங்க, பைபிள் எல்லோருக்கும் சொந்தம் என்பதால் நின்றுகொண்டும் படிப்பான், படுத்துக்கொண்டும் படிப்பான், தலைகீழாகப் பிடித்துக்கொண்டும் படிப்பான், தலைகீழாக நின்றுகொண்டும் படிப்பான், நீங்கள் யார் அதை கேட்பதற்கு..? ரொம்ப கேள்வி கேட்டீங்கன்னா தளத்தைவிட்டே நீக்கப்படுவீர்..!

அவர் யாரு தெரியுமா, ஆதிகாலத்துல சிவபெருமான்... வேதகாலத்திலோ யோசுவா... இப்படி அவர் இல்லாத காலமே இருந்ததில்லை; உங்களுக்கு நீங்க யாருடைய மறுபிறவி என்று தெரியணுமின்னா நல்ல பிள்ளையா லட்சணமா அடக்க ஒடுக்கமா இருந்து கற்றுக்கொள்ளணும் சரியா..? (Date: October 20th)



-- Edited by HMV on Friday 25th of November 2011 08:40:23 PM

__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
RE: இறைவன் தளத்தில் HMV ஆகிய நான் எழுதிய பின்னூட்டங்கள் !
Permalink  
 


முகாந்திரமில்லாமல் குற்றம் சொல்பவர்கள் கவனத்திற்கு!

HMV@Date: October 14th

// நான் எந்த வசனத்தையும் புரட்டி பொருள்கொள்வது இல்லை. இருப்பதை இருக்கிரபிரகாரமாகவே பொருள்கொள்கிறேன். //

அது எப்படி ஐயா இத்தனை துணிகரமாக பொய் சொல்ல உங்களுக்கு தைரியம் வருகிறது? அதுவும் கர்த்தருடைய காரியத்தில்..? வசனத்தை மட்டுமா புரட்டுகிறீர்கள், வேதத்தின் முதல் அதிகாரத்தையே புரட்டுகிறீர்களே...

நீங்கள் சொல்லுவது போல நான் ஒன்றும் அறியாதவன் தான் எனவே நான் அறியாததை, 'இதுதான் சரி' என்று எடுத்துச்சொல்லும் தைரியம் எனக்கில்லை; ஆனால் நீங்களெல்லாம் விசேஷித்த வெளிப்பாடுகள் உடையவர்கள் அல்லவா, எனவே ஆண்டவருக்குப் பக்கத்திலேயே இருந்து பார்த்ததுபோல பொய்களை எழுதுகிறீர்கள்; ஆமா,சாத்தான் ஆதியிலிருந்தே ஆண்டவரோடு இருந்தான் அல்லவா..?

உங்களை அன்போடு திருத்த முயற்சிக்கும் எல்லாரையும் தூக்கியெறிவதுபோல என்னையும் நீங்கள் தூக்கியெறிவதற்கு முன் அண்மையில் உங்கள் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள இரண்டு பொய்களை இங்கே குறிப்பிடுகிறேன்; ஒன்று யெப்தா சம்பந்தமாக எட்வின் கூறியது; வேதம் நேரடியாகச் சொல்லாததை அப்படியே விடுவதற்கு உங்களுக்கு தாழ்மையில்லாத காரணத்தால் யெப்தா தன் மகளை பலிகொடுத்தான் என்று துணிகரமாக அறிவிக்கிறீர்கள்; ஆபேலைக் குறித்தும் ஈசாக்கை பலிகொடுக்க முயற்சித்த ஆபிரகாமைக் குறித்தும் எழுதியுள்ள எபிரேய ஆக்கியோன் யெப்தாவைக் குறித்து ஏன் (வேதம் முழுவதுமே...) எதுவும் சொல்லவில்லை என்று யோசிக்க உங்களுக்கு நேரமில்லை போலும்.

அதேபோல ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் வேறு இரண்டாம் அதிகாரத்தின் காரியங்கள் வேறு என்பது; கிறிஸ்தவத்தைத் தவிர வேறெந்த மார்க்கத்திலும் இதுபோல துணிகரமாக கருத்துகூறும் சுதந்தரம் இல்லை என்பது உங்களுக்கு வசதியாகிவிட்டது போலும்.

நண்பர்களே நானும் இங்கே நட்பு நாடியே வந்திருக்கிறேன், ஆனால் உங்களுடைய நூதனமான உபதேசங்களும் விளக்கங்களும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

திரு.அன்பு அவர்களே, நீங்கள் யெப்தா என்ற பெயர் எபிரேய புத்தகத்தில் இருப்பதாகக் கூறியது ரொம்ப சந்தோஷம், யெப்தாவின் பெயர் பராக்கிரமசாலிகள் வரிசையில் வருகிறதே தவிர யெப்தா தன் மகளை பலிகொடுத்தார் என்று இருக்கிறதா? சாலமோன் பெயர் இல்லாததால் அவர் நரகத்திலேயே இருப்பார் என்று சிலர் சொல்லுகிறார்களே அது குறித்தும் கொஞ்சம் யோசியுங்கள்; "யெப்தா தன் மகளை பலி கொடுத்தார்" என்ற வசனத்தை நண்பர்கள் யாராவது சுட்டிக்காட்டினால் நான் மகிழ்ச்சியடைவேன்; மேலும் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தின் படைப்பும் இரண்டாம் அதிகாரத்தின் படைப்பும் வெவ்வேறானது என்பதையும் நிரூபிக்க வேண்டுகிறேன்.. இதுபோல வேதத்துக்கு சொந்த விளக்கங்களைத் தருவதற்கான உரிமையை எங்கே பெற்றீர்கள்,ஐயா..? உங்களிடம் விளக்கம் கேட்டால் சந்தேகம் கேட்கும் என்னிடமே கேள்வியை திருப்புவது ஏமாற்றமளிக்கிறது.(Date: October 14th)



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

யெப்தாவின் மகளுடைய பலியும் கர்த்தரின் மௌனமும்

HMV@Date: October 8th

 

யெப்தா தன் மகளை பலி கொடுக்கவில்லை,அவள் கன்னியாகவே இருந்துவிட்டாள் என்பதே வேத வல்லுனர்களின் கருத்தாகும்.வேதத்திலும் இதற்கு ஆதாரமில்லை.தலைச்சன் மகனையே நரபலியாக கொடுப்பார்கள், பெண் பிள்ளையை அல்ல.எனவே தலைச்சன் பெண் பிள்ளையாக இருந்தால் பெற்றோர் மகிழுவார்கள்.

 

SUNDAR wrote:

John wrote:

சுந்தர் அவர்களின் வேதத்திற்கு புறம்பான அனுபவங்களையும், போதனைகளையும் குறித்து கேள்வி எழுப்பலாமே?


 அடுத்து வேதத்துக்குபுறம்பான என்னுடைய போதனை என்னவென்பதை கொஞ்சம் சுட்டுங்கள் அதற்க்கு வசன ஆதாரம் தருகிறேன்.  

 வேதத்துக்குப் புறம்பான விளக்கங்களெல்லாம் வேதத்துக்குப் புறம்பானது தானே, சுந்தர்..? அவை எவை என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

திரு.எட்வின் அவர்களே,

"அவள் புருஷனை அறியாதிருந்தாள்" என்று வசனத்தின் இறுதியில் இருப்பதை ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறீர்கள்?

இஸ்ரவேலிலே அதன் எல்லைகளுக்குள் கர்த்தர் நிமித்தம் நரபலி செலுத்தப்பட்டதில்லை, நரஜீவன்கள் சம்பந்தமான பொருத்தனையின்படி அவை கர்த்தருடைய சமூகத்தில் ஏற்கப்படாது, அது ஈடுசெலுத்தி மீட்கப்படவுங் கூடாது என்பதால் அந்த பெண் திருமணம் செய்துகொள்ளாமல் கன்னியாகவே இருந்துவிட்டாள் என்பதே ஏற்புடையதாகும்; இதனை வலியுறுத்துவது போல,

"இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று."

என்று இந்த வேதப்பகுதி நிறைவடைகிறது; மேலும் நேரடியாக சொல்லப்படாத எந்தவொரு காரியத்திலும் சாதாரண மனிதர்களாகிய நாம் அவசரப்பட்டு முடிவுக்கு வராதிருப்பது நல்லது.

நீங்கள் திரு.சுந்தர் அவர்களைப் புகழுவது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை. ஆனால் அவர் கருத்து கூற முயற்சிப்பது வேதத்தைக் குறித்து என்றால் அந்த உரிமைக்கு ஒரு எல்லை உண்டு என்பதை அவர் முந்தி அறியவேண்டும். வேதத்தில் இல்லாததை- வேதத்தில் இல்லாததைக் கொண்டு நிரூபிக்க முயற்சிப்பவன் மடையன் மட்டுமல்ல, பைத்தியக்காரன் ஆவான். விகாரமான விளக்கங்களைக் கொடுப்பவன் விபச்சாரி ஆவான்.(Date: October 13th)



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

மனுஷர்கள் சிருஷ்டிப்பில் இருவேறு நிலைகள்!

EDWIN SUDHAKAR wrote:
 தேவன் இப்படி செய்வதற்கு காரணம் என்ன ? சகோதரர்கள் பதில் சொல்லுமாறு கேட்டுகொள்கின்றேன் மழுப்பாமல்  சொல்ல வேண்டும் அதாவது புரிகின்ற மாதிரி  சொல்லவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்...
HMV@Date: September 19th

 திரு.எட்வின் அவர்களே,

நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படவேண்டும், வேதம் தேவனுடைய வார்த்தை என்கிறீர்கள் அல்லவா, அதிலேயே வாசியுங்கள்; நீங்கள் நம்பும் தேவன் உயிரோடு தானே இருக்கிறார்? அப்படியானால் அவரிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் மனிதர்களிடம் கேட்கிறீர்கள்? அவர்கள் எந்த அதிகாரத்தில் பதில் சொல்லுகிறார்களோ, அதே அதிகாரமும் உரிமையும் அறிந்துகொள்ள உங்களுக்கு இல்லையோ? பாமரர்களாகிய நாங்களே வேதத்தை வாசித்து நம்பி சந்தோஷமாக இருக்கிறோமே!!!



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

மிருகங்கள் / இதர உயிரினங்கள் ஏன் துன்படுகின்றன?

HMV@ Date: September 9th

இந்த அளவுக்கு சிந்திக்கும் உங்களிடம் நிச்சயமாகவே பதிலும் இருக்கும்; ஆனாலும் அதிகப்படியான தாழ்மையினால் இவ்வாறு தெரிந்துகொள்ள கேட்பது போல கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்; நீங்களே சொல்லிவிடுங்கள்,ஐயா.



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

பிதாவாகிய தேவன் மீதும் அன்பு வேண்டும்

HMV@ Date: August 26th

திரு.சுகுமார் அவர்களே,ஏற்கனவே இருக்கும் குழப்பங்கள் போதாதென்று நீங்கள் வேறு புறப்பட்டிருக்கிறீர்களோ..? தாங்கமுடியாதையா..!



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

இரக்கமற்றவனுக்கு இரக்கமற்ற நியாயதீர்ப்பு!

HMV@ Date: June 27th

"கொஞ்சம் இரக்கங் காட்டுங்க, ஐயா..."

"இவ்ளோ போதுமா..?"

"இன்னுங் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க, ஐயா..."

"இவ்ளோ...? "

இப்படி கேட்டுக்கொண்டே வரும் நியாயஸ்தன் ஒரு கட்டத்தில் தன் கையிலிருக்கும் துப்பாக்கியை கீழே இறக்கிக்கொண்டே வந்து மைனர் குஞ்சுவை சுட்டுவிடுவான்.

சத்தம் கேட்டு ஓடிவரும் ஜனம்," மைனர் குஞ்சுவை என்னடா பண்ணினே..? " என்று கேட்கும்; "மைனர் குஞ்சுவை சுட்டுட்டேன் " என்பான், நியாயஸ்தன்;

"எங்கேடா சுட்டே " என்று கேட்டால், "அதான் சொன்னேனே " என்று சொல்லிக்கொண்டே புழுதி கிளப்பிக் கொண்டே போவான், நியாயஸ்தன்;

இரக்கத்தைக் குறித்த இந்த விவாதத்தை வாசிக்கும்போது ஏனோ நடித்த விவேக் நடித்த அந்த நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது; சர்வ லோக நியாயாதிபதியான ஆண்டவரும் நம்ம ஊர் அம்பேத்கரும் ஒன்றாக முடியுமா நண்பரே..?



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

பாவஞ்செய்வதை நியாயப்படுத்த துணியும் கிறிஸ்த்தவ கூட்டம்!

HMV@Date: June 26th
anbu57 wrote:
1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

மன்னிப்பவர் யாருங்க ஐயா, இயேசுகிறிஸ்துவா, பிதாவாகிய தேவனா..? இயேசுகிறிஸ்து மன்னிக்கிறவர் என்றால் அவர் எந்த ஸ்தானத்திலிருந்து மன்னிக்கிறார் என்பதையும் சற்று விளக்குங்களேன்...



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

இந்த உலகில் நடக்கும் எதுவும் காரணமின்றி நடக்கவில்லை!

HMV@ Date: May 3, 2011

சிந்தனையைத் தூண்டும் அருமையான கருத்து நண்பரே...

பகிர்ந்துகொண்ட செய்திக்கு நன்றி.



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

என்னைக் குறித்து...Rajan26

Rajan26 wrote:

இந்த உலகத்தின் படைப்பாளராகிய சர்வவல்லமை உள்ளவரின் நாமத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலும்   இந்த தளத்து அங்கத்தவர்களுக்கு அன்பின் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!!


 இயேசு தெய்வமா அல்லது வெறும் தூதனா என்று முதலிலேயே சொல்லிடுங்க, நண்பரே...ஏன்னா, அதுதான் இப்போ ஹாட் டாபிக்..!



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
இறைவன் தளத்தில் HMV ஆகிய நான் எழுதிய பின்னூட்டங்கள் !
Permalink  
 


வேத வசனத்தை பொருள்கொள்வது எப்படி?

HMV@Date: Apr 20, 2011
SUNDAR wrote:
BRO JOHN WROTE 
///வேதத்த்தை வாசித்து ஒரு வசனத்தை புரிந்து கொள்ளும்போது, நாம் புரிந்து கொண்ட விதம் மற்றொரு வசனத்தை Contradict பண்ணினால் வசனம் தவறல்ல, ஆனால் முதல் வசனத்தை குறித்த நம் புரிந்து கொள்ளுதல் தவறு என்று தீர்க்கவேண்டும்"///

உதாரணமாக:  நான் முதலில் ஆண்டவராகிய   இயேசு சொன்ன வார்த்தயாகிய கீழ்கண்ட வார்த்தையை படிக்கிறேன்.
 
மத்தேயு 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
இந்த வார்த்தைகள் மூலம் "தேவன் கொடுத்த நியாயப்பிரமாணமானது  அது முற்றிலும் நிறைவேறும்வரை ஒளிந்துபோகாது அல்லது முடிந்துபோகாது"  என்று பொருள் கொள்கிறேன்.
 
அடுத்து தொடர்ந்து படிக்கும்போது  பவுலின் நிரூபத்தில் உள்ள கீழ்கண்ட வசனத்தை படிக்கிறேன்: 
 
ரோமர் 10:4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
 
இப்பொழுது இயேசு ஒழிந்து போகாது என்று சொன்ன  நியாயப்பிரமாணமானது
எல்லாம் நிறைவேறும் முன்னமேயே  ஒழிந்தது அல்லது முடிந்தது என்று சொல்லப்பட்டிருப்பதை அறிய வருகிறேன்.   
 
உடனே நான் முதலில் பொருள் கொண்டது தவறு என்று எண்ணி திரும்ப அந்த முதல்  வசனத்தை படிக்கிறேன். அந்த வசனமோ மிக தெளிவாக "நியாயப் பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது" என்று சொல்கிறது. 
 
இந்நிலையில்  சகோ. ஜான்  சொல்வதுபோல் "வசனம் ஒருகாலும் தவறு அல்ல" என்பதை நான் ஏற்கிறேன். எனவே  அதை  நாம் பொருள் கொண்டவிதம்தான் தவறு என்று   எடுத்துகொண்டு, இரண்டு வசனமுமே  சரியாக வரும்படி  இதை எப்படி பொருள் கொள்ளுவது என்பது எனக்கு  தெரியாமல் முழிக்கிறேன்.

 
சுந்தர் அவர்களே, கடவுள் உங்களுக்கு மிக அதிகமான பொறுமையையும் மாத்திரமல்ல,ஞானத்தையும் அதனுடன் தாழ்மையையும் சேர்த்தே கொடுத்துள்ளார்;எனவே இவ்வளவு அழகாக நிதானிக்கிறீர்கள்;ஆனால் இறுதியில் தடுமாற்றம் ஏனோ?

நீங்கள் தீர்வை எட்டியபிறகும் திரும்பிப் பார்க்கவேண்டிய என்ற அவசியமென்ன? இயேசுகிறித்துவுக்குள் நியாயப்பிரமாணம் நிறைவேறியது என்பதே சரியான பதில்; நியாயப்பிரமாணம் கீழ்ப்படியாதவர்களுக்கும் அடங்காதவர்களுக்குமே கொடுக்கப்பட்டதாம்; நாம் தான் இயேசுவுக்கு கீழ்ப்படிய ஆயத்தமாக இருக்கிறோமே..? பிறகு எப்படி நியாயப்பிரமாணம் நம்மை கட்டுப்படுத்தும்? அது இயேசுவின் நிறைவேறிவிட்டதே..!



-- Edited by HMV on Friday 25th of November 2011 07:56:36 PM

__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?

HMV@ Date: Apr 13, 2011
SUNDAR wrote:
...இயேசு  தொழத்தக்க தேவன் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை ஆனால் ஒன்றான மெய்தேவனால் அனுப்பபட்ட   அவரை ஒரு தனி தேவனாக காட்டி, அவரை தொழுதுகொள்வதால் தாங்கள் ஏதோ ஒரு மேன்மையானவர்கள என்பதுபோல காட்ட   நினைப்பதுவே  சதியின் ஆரம்பம் ... 
...இயேசுவையும் அவரது மகிமையையும் அறியாமல் அவரை மிகாவேல்  தூதனதுக்கு சமமாக்கி அவரது தேவனுக்கு சமமான மேன்மையை ஒரு தூதனின் லெவலுக்கு குறைக்க நினைப்பதும் ஒரு மனுஷ தந்திரமே!   
 

 
ஆஹா...ஒண்ணுமே புரியலையே..!

HMV @ Date: Apr 18, 2011
 
 
EDWIN SUDHAKAR wrote:
John wrote..
__________________________________________________________________________________
இந்த தளத்தில் எழுதும் மற்ற சகோதரர்களின்  விசுவாசமும் இதுதானா? சகோ. சுந்தர் சொல்லுவதை ஏற்று கொள்ளுகிறீர்களா?
______________________________________________________________________________

நண்பர் john  அவர்களே, இயேசு கிறிஸ்து என்பவர் யார் ? தேவன் அவரை எப்படி உருவாக்கினார் ? என்பதை சில வரிகளில் நீங்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கின்றேன்.......

//தேவன் அவரை உருவாக்கினார் ?// -என்பதே தேவதூஷணம் என்பது என் கருத்து.

 

 

SUNDAR wrote:
HMV wrote:
EDWIN SUDHAKAR wrote:
John wrote..
__________________________________________________________________________________
இந்த தளத்தில் எழுதும் மற்ற சகோதரர்களின்  விசுவாசமும் இதுதானா? சகோ. சுந்தர் சொல்லுவதை ஏற்று கொள்ளுகிறீர்களா?
______________________________________________________________________________

நண்பர் john  அவர்களே, இயேசு கிறிஸ்து என்பவர் யார் ? தேவன் அவரை எப்படி உருவாக்கினார் ? என்பதை சில வரிகளில் நீங்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கின்றேன்.......

//தேவன் அவரை உருவாக்கினார் ?// -என்பதே தேவதூஷணம் என்பது என் கருத்து.


-----------------------------------------------------------------------------------------------

"தேவ தூஷணம்" என்ற வார்த்தையை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம்  சகோதரரே. மனுஷனாகிய நாம் நமது  கொள்கைக்கு மீறியது எல்லாமே தேவ தூஷணம் என்று  கருதலாம். தங்கள் கொள்கைக்கு மேலாதை  பேசும்போது ஆண்டவராகிய இயேசுவையும் கூட சில தேவ தூஷணம் சொல்கிறான் என்றார்களே. அனால் வசனம்  எந்த ஒரு காரியத்தை தேவதூஷணம் என்று சொல்கிறதோ அதுவே தேவதூஷணம்!   

"ஒருவர் தான் குமாரனை எப்படி உருவாக்கினார்" என்று கேட்பது வார்த்தை அளவில் கொஞ்சம சரியானது அல்ல தான். அதற்காக அது ஒரு தூஷணம் ஆகிவிடாது! 
 
நான் சரியாகவே கேட்கிறேன்,  தேவன் தன் குமாரனாகிய  இயேசுவை எவ்வாறு ஜெநிப்பித்தார்?

 
ஜநிப்பித்தல் என்பதும் உருவாக்குதல் என்பதும் சமமான ஒரே ஆதாரத்திலிருந்து ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள் தானா,சகோதரரே..?

//தேவன் அவரை உருவாக்கினார் ?//

//தேவன் தன் குமாரனாகிய  இயேசுவை ஜெநிப்பித்தார்?//

-எனும் தங்கள் கூற்றுக்கு நேரடி வசன ஆதாரத்தைத் தருவீர்களா..?

SUNDAR wrote:
HMV wrote:
ஜநிப்பித்தல் என்பதும் உருவாக்குதல் என்பதும் சமமான ஒரே ஆதாரத்திலிருந்து ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள் தானா,சகோதரரே..?

//தேவன் அவரை உருவாக்கினார் ?//

//தேவன் தன் குமாரனாகிய  இயேசுவை ஜெநிப்பித்தார்?//

-எனும் தங்கள் கூற்றுக்கு நேரடி வசன ஆதாரத்தைத் தருவீர்களா..?


சங்கீதம் 2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;


நீதிமொழிகள் 8:24 ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

சகோதரர் அவர்களே  ஜெநிப்பித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். மனுஷ வழக்கப்படி குழந்தை ஜெனிப்பதை மட்டுமே "ஜனித்தது" என்று கூறுவோம். மற்றபடி உருவாக்குதல் என்பது எந்தொரு பொருளையோ அல்லது உருவத்தையோ  உருவாக்குவதை  குறிக்கிறது.       


 

// ஜெநிப்பித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கிறது //

சிறிய வேறுபாடு தானா..எவ்வளவு "சிறிய" என்று விளக்க முடியுமா..?

//தேவன் அவரை உருவாக்கினார் ?//

 

அப்படியானால் தேவன் இயேசுவை உருவாக்கினார் எனும் கூற்றை திரும்பப்பெற உங்களுக்கு சம்மதமா, என்று அறிய விரும்புகிறேன். (Date: Apr 19, 2011)

John wrote:
நான் நண்பர் பெரேயன் மற்றும் டினோ ஆகியோருக்கு சொன்னதை இங்கேயும் பதிக்கிறேன். தேவனாகிய கர்த்தர் அல்லது கர்த்தர்(YHWH) போன்ற பதங்கள் எப்போதும் பிதாவையே குறிக்கின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

வேதத்திலே தேவனாகிய கர்த்தர் அல்லது கர்த்தர்(YHWH)  என்று வரும் இடமெல்லாமே அதரிசனமான காணக்கூடாத இறைவனையே குறிக்கவில்லை என்பது புதிய தகவலாக இருக்கிறதே; அப்படியானால் சர்வவல்ல தேவன் எப்போதுமே காணக்கூடாதவரல்ல, சில விசேஷித்த சமயங்களில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற நிலைக்கே நாம் வந்தாக வேண்டும் அல்லது நண்பர் டினோ அவர்களே ஒப்புக்கொண்டபடி அவர் பழைய ஏற்பாட்டிலும் பணியாற்றின இயேசுகிறிஸ்துவாகவே இருக்கவேண்டும்;அப்படியானால் இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டில் மிகாவேல் தூதனாக செயல்பட்டார் எனும் கொள்கையையுடைய அவர்கள் எப்படி அவரை யெகோவா தேவனுடன் ஒப்பிடமுடியும்? தேவசாயலில் வெளிப்பட்ட காரணத்தினால் மிகாவேல் தூதனை யெகோவா என்று அழைக்கமுடியுமா? சர்வவல்ல தேவனுக்கு இணையான அத்தனை வல்லமையுடன் தன்னை ஒரு தூதன் வெளிப்படுத்துவானா அல்லது அவனையும் யெகோவா என்று அழைக்கலாமா என்று சொல்லுவார்களா? (Date: Apr 21, 2011)

 

SUNDAR wrote:

HMV wrote:

-------------------------------------------------------------------------------------------

// ஜெநிப்பித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கிறது //

சிறிய வேறுபாடு தானா..எவ்வளவு "சிறிய" என்று விளக்க முடியுமா..?

//தேவன் அவரை உருவாக்கினார் ?//

 அப்படியானால் தேவன் இயேசுவை உருவாக்கினார் எனும் கூற்றை திரும்பப்பெற உங்களுக்கு சம்மதமா, என்று அறிய விரும்புகிறேன்.


 சகோதரரே ஜெநிப்பித்தார் என்பதற்கு நேரடி வசனஆதாரம கேட்டீர்கள் தந்துள்ளேன். இபொழுது எனது கருத்துக்களை எடுத்துகொண்டு ஏதோ புதிதாக பேசுகிறீர்கள்.   தங்கள் பதிவின் பொருள் என்னவென்பது எனக்கு புரியவில்லை. நான் எங்கும் "தேவன் இயேசுவை  உருவாக்கினார்" என்று சொல்லவில்லையே பிறகு என்ன வாபஸ் வாங்குவது.


EDWIN SUDHAKAR wrote:
John wrote..
__________________________________________________________________________________
இந்த தளத்தில் எழுதும் மற்ற சகோதரர்களின்  விசுவாசமும் இதுதானா? சகோ. சுந்தர் சொல்லுவதை ஏற்று கொள்ளுகிறீர்களா?
______________________________________________________________________________

நண்பர் john  அவர்களே  

இயேசு கிறிஸ்து என்பவர் யார் ? 
 
தேவன் அவரை எப்படி உருவாக்கினார் ?
 
என்பதை சில வரிகளில் நீங்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கின்றேன்.....

 தேவன் அவரை உருவாக்கினார் என்பதற்கும் தேவனால் ஜநிப்பிக்கப்பட்டவர் என்ற வார்த்தைக்குமுள்ள வித்தியாசத்தை இன்னும் சுந்தர் அவர்களோ எட்வின் அவர்களோ விளக்கவில்லை;இந்த தளத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்பதோடு சுந்தர் நிறுத்திக்கொண்டார்;ஆனால் அதுபோன்ற கூற்றை முன்வைத்த எட்வின் அமைதிகாக்கிறார்; இயேசுவானவர் சிருஷ்டிகரா சிருஷ்டிக்கப்பட்டவரா சிருஷ்டிப்பின் பணிக்காக சிருஷ்டிக்கப்பவரா என்பதைக் குறித்து விளக்க இயலாதோர் வேதத்தின் மற்ற போதனைகளுக்கு எவ்வாறு விளக்கம் தர முடியும் என்று புரியவில்லை. ஐயம் கேட்போரிடமே கேள்வியைத் திருப்பும் சாதுரியம் யாருக்குமே தெளிவைத் தராது. (Date: October 8th)




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard