"இறைவன்" எனும் தளத்தில் பதித்த (அந்நியபாஷையும் என் அனுபவமும் ) எனும் இந்த பதிவே எனது இறுதி பதிவாகிவிட்டது. ஒரு வாரத்துக்கு முன்பதாகவே என்னை நீக்கியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.ஆனால் ஏனோ நீக்கவில்லை. மிருகங்கள் இப்படியே நடந்துகொள்ளும்.தன்னிடம் சிக்கிக்கொண்ட இரையை முழுவதும் அடித்து சாப்பிடாமல் கொஞ்சமாக துன்புறுத்தி திடீரென்று அடித்து கொன்று ஆசையைத் தீர்த்துக்கொள்ளும்.அவ்வாறே தினமும் ஆவியில் நடத்தப்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் சுந்தர் அவர்களும் நடந்து கொண்டிருக்கிறார்.சுந்தர் அவர்களின் சுந்தரமான முடிவுக்காக ஒரு நன்றி..!
இந்த வரிகள் என்னுடையது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். அது ஜாமக்காரன் இதழிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இனி ஒரு பதிவு போட்டால் நீக்கிவிடலாம் என்று காத்திருந்தாரோ என்னவோ, எப்படியிருந்தாலும் வெளிப்படையாக செயல்படாத இவர்களெல்லாம் சேர்ந்து தேவ ராஜ்யத்தைக் குறித்து ஆராய்ச்சி செய்வதாக சொல்லிக்கொள்ளும்போது சிரிப்பாக இருக்கிறது. இவர்கள் ஆவியின் பெயரால் எதைவேண்டுமானாலும் யோசித்து கொள்கைகளையும் போதனைகளையும் அறிவிக்கலாம்.ஆனால் எதிர்கருத்து சொல்லுவோர் ஓடிவிடவேண்டும் என்பது சாத்தானின் குணம் அல்லவா ?
SUNDAR wrote:
அன்பான தள சகோதர சகோதரிகளே இந்த தளத்தில் கடந்த சில நாங்களாக HMV என்ற பெயருக்குள் மறைந்து கொண்டு பதிவுகளை தந்துவரும் சகோதரரின் பதிவுகள் பற்றி அனைவரும் அறிவோம்.... நானும் இந்த தளத்தில் ஒரு நிர்வாகி என்ற முறையில் தற்காலிகமாக அவர் அவரது பயனர் பெயரை தடை செய்துள்ளேன்.
என்னை இத்தனை நாட்கள் பொறுத்துக்கொண்டதற்கு மிகவும் நன்றி நண்பர்களே. நான் எழுதியதையெல்லாம் இங்கேயே விட்டுச்செல்லுகிறேன்.ஆனாலும் தேவையற்ற அழுக்கைப் போல இருக்கும் என்னுடைய எழுத்துக்களை நீங்களே நீக்கிவிட்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
சகோ.HMV-ன் பயனர் பெயர் தடைசெய்யப்பட்டதில் எனது பதிவுகளுக்கும் பங்கிருப்பதாக நான் உணர்கிறேன். ஏனெனில், எனது பதிவுகளுக்கு HMV பின்னூட்டமிடும்போதுதான் சகோ.சுந்தருக்கும் HMV-க்கும் இடையிலான பிணக்கு வேகமாக வளர்ந்து, உச்சக்கட்டத்தை எட்டியது. எனவே இதுபற்றி எனது கருத்தைக் கூறுவது அவசியமென நான் கருதுகிறேன்.
ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமை என்பது இயல்பானதே. அவ்வகையில் சுந்தரின் பல கருத்துக்களை HMV எதிர்த்ததில் தவறு எதுவுமில்லை. ஆனால் HMV-ன் அணுகுமுறையில்தான் தவறு இருப்பதாக நான் அறிகிறேன். இதற்கு உதாரணமாக அவரது 2 பதிவுகள்:
இம்மாதிரி எதிராளியை தனிப்பட்ட முறையில் தாக்கும் பதிவுகளை அவர் தவிர்த்திருக்கலாம்.
சுந்தரைப் பொறுத்தவரை, சகோ.எட்வினுக்கு HMV எழுதின தனிமடலை பகிரங்கமாக வெளியிட்டது தவறுதான். மேலும், போலி பெயரில் HMV வந்துள்ளதாக தான் கருதியதை திட்டவட்டமாக அறிவித்ததும் தவறுதான்.
HMV-ன் பயனர் பெயரை முடக்குவதென்பது நிர்வாகியின் நிர்வாக வசதிக்கு உட்பட்டது. எனவே அதுபற்றி நான் கருத்துகூற விரும்பவில்லை.
HMV அவர்கள் என்னைப் பாராட்டி எனக்காகப் பரிந்துபேசியதையும் ஒரு பொருட்டாக நான் கருதவில்லை; எட்வினுக்கு எழுதின தனிமடலில் என்னை “யோக்கியமில்லை” என எழுதியதையும் ஒரு பொருட்டாக நான் கருதவில்லை. மனிதர்கள் இப்படியும் அப்படியும் மாறி மாறி பேசுவார்கள் என்பது யாவரும் அறிந்ததே! HMV-யும் முன்னுக்குப் பின் முரணான ஒரு பதிவைத் தந்துள்ளார்.
யௌவன ஜனம் தளத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.உங்கள் இயற்பெயர் இன்னது என்று அறிய விரும்புகிறேன். சொல்ல விருப்பமில்லாவிட்டால் பிரச்சினையில்லை.
சுந்தர் எனும் மாயப் பிசாசு பல்வேறு கள்ள் உபதேசங்களை (கருதுகிறேன், நினைக்கிறேன், எண்ணுகிறேன் என்ற வார்த்தைகளினால்...) செய்துகொண்டிருப்பது உண்மையே. எனக்கு அந்த ஆளுடன் போராட நேரமில்லாத காரணத்தினால் எப்படியும் போகட்டும் என்று விட்டுவிட்டேன்.ஆனால் நீங்கள் அங்கே சென்று அவமானப்பட நேர்ந்தது குறித்து மிகவும் வருந்துகிறேன். த்ங்களால் இயன்றதை ஆக்கப்பூர்வமாக செய்திடுங்கள்; நாம் யாருக்காக நிற்கிறோமோ அவரிடத்திலிருந்து நமக்கான புகழ்ச்சி நிச்சயமாக வரும்.ஒருபோதும் மனிதனைக் கண்டு அஞ்சவேண்டாம்.அவனால் ஒன்றும் செய்யவே முடியாது.ஏனென்றால் அவன் மனிதன் தானே,சாகப்போகிற மனுஷனுக்கு பயப்படவேண்டாம் என்று சர்வ வல்லவர் சொல்லவில்லையா..?
ஐயா, நான் உங்களுடைய தளத்தில் வாசித்து அறிந்த காரியங்களைக் குறித்து தெளிவு பெறுவதற்காக திரு.சுந்தர் அவர்களின் தளத்துக்கு சென்றேன்.ஆனால் அங்கே கசப்பான அனுபவங்களே கிடைத்தது.அதையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம் என்று பார்த்தால் நான் எழுதுவதையும் நீங்கள் எழுதுவதையும் ஒப்பிட்டு என்னை தேவையில்லாமல் திரு.சுந்தர் அவர்கள் விரோதிக்கிறார்கள்.ஆனாலும் நான் என்னைப் பொறுத்தவரையிலும் உளத் தூய்மையுடன் என் மனதில் எழுந்த கேள்விகளையே முன்வைத்தேன்.தற்போது என்னை நீக்குவதற்கு தீர்மானித்து இறுதி எச்சரிக்கை விட்டிருக்கிறார்.எனவே எனது பதிவுகளைக் காப்பாற்றிக்கொள்ளும்வண்ணமாக உங்களிடம் தஞ்சமடைந்திருக்கிறேன்.தயவுசெய்து எனக்கு அனுமதி வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நீங்கள் என்னை அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையினால் நான் இதுவரை எழுதியவற்றை இங்கே பதிக்கிறேன்.இதில் உங்களுக்கு சம்மதமில்லாவிட்டால் நீங்கள் தாராளமாக இவற்றை நீக்குவதற்கும் சம்மதிக்கிறேன்.நன்றி.