ஊர்ப் பிரயாணத்தை முடித்துவிட்டு அத்தை இன்று வருகிறார்கள்,பார்த்து ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள், கவனிக்காவிட்டால் பிரச்சினை பண்ணுவார்கள்,ரொம்ப கவனித்துவிட்டால் பிரச்சினை வரும்வரை தங்கிவிடுவார்கள்; எனவே ஓரகத்திகளான நீங்கள் இருவரும் நவரசங்களையும் காட்டி நவரச நாயகிகள் என்று பெயர் எடுக்கவேண்டும், என்கிறேன்; ஓரகத்திகளில் ஒருத்தி சொல்லுகிறாள், என்ன தான் நவரசம் காட்டினாலும் எங்கள் அத்தை மயங்கமாட்டார்கள், நவரச நாயகிகள் என்று சொல்லுகிறார்களோ இல்லையோ நாராச நாயகிகள் என்று சொல்லாமலிருந்தால் சரி,என்றாளே பார்க்கலாம்...!
ஆமா, இந்த ஓரகத்தி என்றால் என்ன, ஓரகத்தியா ,ஓரவத்தியா, இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை யாரிடம் சென்று கேட்பது..? வழக்கம்போல நமது சிந்தனை குதிரையைத் தட்டிவிட்டதில் ஓரளவுக்க்கு பொருத்தமான அர்த்தம் கிடைத்தது,அதுவே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்;அதாவது ஓரகத்தி எனும் வார்த்தையே சரியாக இருக்கவேண்டும்; ஓரவத்தி என்பதும் புழக்கத்தில் இருந்தாலும் அதில் அர்த்தம் இல்லை.
ஓரகத்தி என்று எடுத்துக்கொண்டால் அதனை ஓர் + அகத்தி என்று பிரிக்கலாம்.இதன்படி அகத்தி என்பது ஒரு வீட்டின் பெண் அல்லது வாழ வந்தவள் என்று இருக்கும்;எப்படியெனில் அகமுடையான் என்பதே ஆம்படையான் என்று வழங்கப்படுகிற்தல்லவா அதேபோல அகத்தி என்பது அகம் எனும் வீட்டுக்குரியவள் என்ற பொருள் தரும்; ஓர் அகத்தி என்பதோ ஒரே வீட்டுக்கு வாழ வந்திருக்கும் இரண்டு பெண்கள் என்ற பொருளைத் தரும். எனவே ஓரகத்தி என்பதற்கு ஒரே வீட்டுக்கு வாழவந்திருக்கும் இரண்டு பெண்களை அதாவது அண்ணன் தம்பி ஆகிய இருவருக்கு வாழ்க்கைப்பட்டவர்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கும்.பிராமணர்கள் மனைவியை ஆத்துக்காரி என்று சொல்லுவதையும் கவனத்தில் கொள்ளுவோம்.ஆத்துக்காரி என்றாலும் அகத்துக்கு உரியவள் என்றே பொருள்.
இப்படி அர்த்தம் தெரியாமலே எத்தனையோ வார்த்தைகள் புழக்கத்திலிருக்கிறது; அதைக் குறித்தும் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாமே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)