நடிகை நக்மா நாலுமாவடியில் வைத்து ஒரு சாட்சி சொன்னாலும் சொன்னார், இதில் சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களின் தலை உருளுகிறது; நடிகை நக்மா பின்மாறிச் சென்றுவிட்டாராம்; அவரைக் குறித்து சரியாக விசாரிக்காமலே மோகன் அவருக்காக சாட்சி கொடுத்துவிட்டாராம்; இது என்ன அநியாயம்..? அவர் பின்மாறிச் செல்லக் காரணமாக இருந்தவர்களே கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.இது உண்மையா..? நடிகை நக்மாவுக்காக மோகன் சி லாசரஸ் அவர்கள் கியாரண்டி கொடுத்தாரா, என்ன..?
நடிகைகள் எந்த நேரம் எந்த முடிவெடுப்பார்கள் என்பது யாருக்குத் தெரியும்? ஒரு வித பாப்புலாரிட்டிக்காக இதுபோன்ற மீடியா பிரபலங்களை மேடையேற்றுகிறார்கள்;அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு யாரை கண்காணியாகப் போடமுடியும்? மேடையில் முழங்கும் ஊழியர்களே தனிப்பட்ட வாழ்க்கையில் சறுக்கும் போது இதில் என்ன அதிசயம்,இது என்ன குற்றச்சாட்டு..?
இதற்கெல்லாம் ஒரே காரணம் மட்டுமே இருக்கமுடியும்,தனிப்பட்ட ஒருவர் மீதான பொறாமையுடன் கூடிய காழ்ப்புணர்ச்சியே இதுபோல குற்றஞ்சாட்ட வைக்கிறது; திரள்கூட்ட மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் வெற்றிபெற்றுள்ள மோகன் சி லாசரஸ் போன்றவர்களுக்கு நாம் உதவி எதையும் செய்யாவிட்டாலும் அவர்களைக் குறித்த இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பாதிருத்தல் நலமாகும்;
அவர் மீடியா புகழினாலோ அல்லது யாரோ ஒரு குறிப்பிட்ட பிரபலத்தின் ஆதரவினாலோ தற்போதிருக்கும் நிலையை அடையவில்லை; அவரிடம் இருந்த உண்மையான ஆத்தும பாரமே இந்த நிலைக்கு அவரை உயர்த்தியது; ஒரு வெற்றிகரமான நற்செய்தி ஸ்தாபனத்துக்குரிய அனைத்து இலட்சணங்களோடும் நடந்துவரும் இதுபோன்ற ஊழியங்கள் இல்லாவிட்டால் எப்படியிருந்திருக்கும்?
ஒருவர் பிரபலமாக இருப்பதால் அவரைக் குற்றஞ்சாட்டுகிறோம், சரி நாமெல்லாரும் சேர்ந்து அவரை அழித்து விடுவோம்...பிறகு என்ன செய்வதாக உத்தேசம்..? என்ன மாற்று திட்டம் வைத்திருக்கிறீர்கள்..?
Chill Sam => "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." => "Be ye followers of me, even as I also am of Christ.(1.கொரிந்தியர்.11:1) -மேற்கண்ட வாக்கியத்தின்படியும் ஆண்டவர் பேதுருவை அழைத்து "என் ஆடுகளை... மேய்ப்பாயாக.." என்று சொன்ன வாக்கியத்தின்படியும் "நம்மை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும்" எனும் வாக்கியத்தின்படியும் பின்பற்றத் தகுந்த மாதிரிகள் வேண்டும், இருக்கிறார்கள், இல்லாவிட்டால் சபையானது அகதிகள் முகாம் போலவே இருக்கும். தன் தலைவன் தவறானவனாகவே இருந்தும் தாவீது காத்திருந்தானே தவிர அவன் அபிஷேகிக்கப்பட்டிருந்தவனாக இருந்தும் கலகம் செய்யவில்லை.அதே நேரத்தில் தன்னைவிட மூத்த நிலையில் பிரதான அப்போஸ்தலனாக விளங்கிய பேதுருவின் தலைமையை ஏற்று செயல்பட்ட பவுலடிகள் அவர் தவறு செய்தபோது நேருக்கு நேராகக் கண்டிப்பதையும் பார்க்கிறோம்.
Chill Sam @விஜய்: நண்பரே, நான் விலாவாரியாக எதையும் சொல்லப்போவதில்லை; ஆனாலும் சுருக்கமாகச் சொல்லுகிறேன்; நடிகை நக்மாவைக் குறித்த இந்த செய்தியில் மோகன் சி லாசரஸ் அவர்களும் சம்பந்தப்படுத்துகிறாரே அதையே நான் விமர்சித்துள்ளேன்; // இந்தச் செய்தியை... சகோ.மோகன்.சி.லாசரஸ் அவர்களுக்கு அறிவியுங்கள் என்ற வார்த்தையைத் தவிர வேறு ஏதேனும் அவரை இழிவுபடுத்தும் வார்த்தை இருக்கிறதா சொல்லுங்கள்!!! // -என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்; ஆனால் கீழ்க்கண்ட செய்தியில் நீங்கள் சொன்ன தோரணை இருக்கிறதா என்று கொஞ்சம் நீங்களே பார்த்துசொல்லுங்களேன்... // My Tamil friends should read this file to know about the deception of the ministry of Mohan C Mohan C. Lazarus of India. by: Job Anbalagan Thangasamy //
Chill Sam // சகோ.சில்சாம், தாங்கள் அவசர அவசரமாகக் கட்டுரை வரையுமளவுக்கு, சகோ.மோகன்.சி.லாசரஸ் அவர்களை அசிங்கப்படுத்தும் நோக்கத்தை இதில் எங்கே பார்த்தீர்கள்? உங்களுக்குத் தெரிந்த வேற்றுமத நபர் ஒருவர் கர்த்தரை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று உங்க...ள் சபைப் பாஸ்டர் பகிரங்கமாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், சிலநாட்கள் கழித்து அதே நபர் ஒரு விக்கிரகக் கோவிலில் வழிபடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் கேள்விப்பட்டால். அவரை விசுவாசி என்று சபைக்கு அறிமுகப்படுத்திய பாஸ்டருக்கு அதை அறிவிப்பீர்களா? இல்லையா? இது பாஸ்டரை இழிவுபடுத்தி அவரது ஊழியத்தை அழிப்பதாகுமா? // // Vijay Kumar இந்தப் படத்துடன் இணைக்கப்பட்ட செய்தியானது சகோ.Job Anbalagan Thangasamy அவர்களது சொந்தக் கருத்தாகும். சகோ.ஜோப் அன்பழகன் அவர்கள் ஒரு மூத்த ஊழியர், சகோ மோகன்.சி.லாசரஸ் அவர்களுடைய நீண்டகால நண்பர். அவர் ஏன் அப்படி எழுதியிருக்கிறார் என்பதை அவரிடமே அறிந்து கொள்ளுங்கள். // மோகன் சி லாசரஸ் மூலம் அழைத்து பயன்படுத்தப்பட்ட நடிகை நக்மா ஒரு குற்றசெயலில் ஈடுபட்டு சிறையில் இருக்கிறார்;இதை மோகன் அறீந்தாரோ அல்லவோ தெரியவில்லை கொஞ்சம் அவரிடம் அறிவித்துவிடுங்கள் என்றா நீங்கள் சொல்லுகிறீர்கள்..? அதை அவருக்கே நேரடியாக சொல்லலாமே, இங்கே அதனைப் பதிக்க என்ன அவசியம்..? இதனால் தெரியவருவது யாதெனில் நோக்கம் நடிகை நக்மா பின்மாறிப்போய்விட்டாரே என்ற வேதனை பின்னுக்குத் தள்ளப்பட்டு மோகன் சி குற்றவாளியைப் போல சித்தரிக்கப்படுகிறார்;இதுவா நண்பர்கள் செய்யும் காரியம்..? அதாவது நீங்கள் சொன்னீர்களே,மோகன் சி யைக் குறித்த செய்தியின் நம்பகத்தன்மைக்கு அது அவருடைய நெருங்கீய நண்பராலேயே உறுதிசெய்யப்பட்டுள்ளது; மேலும் அவரது இரகசியங்களையெல்லாம் அறிந்தவர்களின் கருத்துப்படி மோகன் சி லாசரஸ் எனும் பிரபலமான ஊழியர் ஒரு மோசடியாளர் என்பது தானே நீங்கள் சொல்லவரும் செய்தி..? ஒரு துப்புரவு தொழிலாளி சரியான உடையணியவில்லை என்பது போல இருக்கிறது,உங்கள் கூற்று..! .
Chill Sam மேலும் நான் எனது கருத்துக்களைப் பதிய பின்னணியில் இருந்தது நீங்களோ அல்லது ஐயா ஜோப் அன்பழகனோ அல்ல,இந்த செய்தியினை வெளியிட்ட ஜாமக்காரன் தான்; எனக்கும் ஜாமக்காரன் வருகிறது; நானும் அந்த செய்தியைப் படித்தேன்;அதே செய்தியின் பிரதியை இங்கு க...ண்டதும் ஜாமக்காரனுக்கு எழுதுவது போலவே நான் எழுதினேன்; எனது பின்னூட்டங்கள் பெரும்பாலும் கொஞ்சநாளில் காணாமல் போகிறது அல்லது தணிக்கை செய்யப்படுகிறது;மேலும் மற்றவர் கருத்து சொல்ல இடையூறாக இவன் என்ன தான் சொல்லவருகிறான் என்று குழம்புமளவுக்கு நீண்டதாக இருக்கிறது; எனவே கொஞ்சம் மாறுதல் செய்து கட்டுரையாக (அல்ல,கட்டுரையைப் போல...) பதித்து சேமித்து வைத்துக்கொள்ளுகிறேன்;ஏனெனில் நானும் முன்னுக்குப் பின் முரணாக பேசக்கூடிய சாதாரண மனிதன் தானே,அப்போது பிறிதொரு சமயம் என்னை நானே சரிபார்த்துக்கொள்ள உதவும் அல்லவா..? ஆனாலும் உங்கள் அளவுக்கு என்னால் கட்டுரையெல்லாம் எழுத தெரியாது என்பதும் உண்மையே.ஆனாலும் எனது போராட்டம் என்னவென்றால் துருபதேசக்காரர்களையெல்லாம் விட்டுவிட்டு நமக்கு நாமே குழிதோண்டிக் கொள்ளுவது போல செயல்படக்கூடாது என்பதே; நமக்கு எதிராக இல்லாதவன் நம் பக்கம் சார்பில் இருக்கிறான் என்று ஆண்டவர் சொன்னாரல்லவா,நமக்கு எதிரானவர்கள் பெருகிவரும் நேரத்தில் நம் சார்பில் இருப்போரையும் பெலவீனப்படுத்தினால் யாருக்கு இலாபம்,என்று நீங்களே சொல்லுங்கள். நீங்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டும் ஏற்கனவே இந்து அடிப்படைவாதிகளால் கூறப்படுவதே; என்ன ஒரே வித்தியாசம் "இவர்கள் கூலிக்கு ஆள் பொருத்தி பொய் சாட்சி சொல்லவைத்து தங்களைத் தாங்களே பெரிய அற்புத சக்தி படைத்தவர்களாகக் காட்டிக்கொள்ளுகிறார்கள்" என்று நீங்கள் சொல்லவில்லை;அவர்கள் அதையும் துணிகரமாகச் சொல்லுகிறார்கள்
// Prason Christopher Robin சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் இப்போது புதிய ஊழியம் தொடங்கியுள்ளார். அலிகளுக்கு, ஆண் புணர்ச்சிக்காரர்களுக்கிடையில் ஊழியம் செய்ய சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் தனி ஊழியரை நியமித்து அந்த அலிகளையும் நாலுமாவடிக்கு அழைத்து... வந்து தனியாக அமரசெய்து, அவர்...களை சபை மக்களோடும், ஜெபிக்கவருகிறவர்களோடும் இரண்டற கலக்க திட்டமிட்டு அவர்களிடையே ஊழியம் தொடங்கிவிட்டார் என்று அறிந்தேன். இது ஆபத்தான முயற்சியாகும். அலிகள், ஆண் புணர்ச்சிகாரர்கள் ஆகியவர்களை (Gayism - Lesbianism) இறைவனின் படைப்பு என்று இவரும் நம்புகிறார். இப்படிப்பட்டவர்களை மக்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கக்கூடாது என்கிறார்கள். அலிகள், ஆண் புணர்ச்சிக்காரர்கள், பெண் புணர்ச்சி என்று பெண்ணோடு-பெண் சேர்ந்து பாவம் செய்யும் பெண்கள் ஆகியவர்கள் (Gayism -Lesbianism) பிறக்கும்போதே அப்படி மாறுப்பட்ட பால் உணர்ச்சி உள்ளவர்களாகவே பிறக்கிறார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். பிறப்பிலேயே அப்படியாக பிறந்தவர்கள் இலட்சத்தில் ஒன்றைத்தவிர, மற்றவர்கள் யாரும் இயற்கையின் படைப்பு அல்ல. அதைக்குறித்து விரைவில் மருத்துவ விஞ்ஞான உடல்கூறு விவரத்தோடு ஜாமக்காரனில் எழுதுவேன். //
Chill Sam அப்படியே விபச்சாரிகள் விபச்சாரிகளாகவே பிறக்கிறதில்லை; திருடர்கள் திருடர்கள் திருடர்களாகவே பிறக்கிறதில்லை; பைத்தியக்காரர்கள் பைத்தியக்காரராகவே பிறக்கிறதில்லை என்ற உண்மையையும் விஞ்ஞானப்பூர்வமாக எழுதி யாராவது நிரூபித்தார்களானால் நலமாக ...இருக்கும்;...பத்து கொலைசெய்தவன் ஊரை அடிச்சு உலையில் போட்டவனெல்லாம் சத்தியத்தைக் கேட்டு மனந்திரும்பி பரலோகத்துக்குப் போவானாம்,அலி என்று முத்திரை குத்தப்பட்டவன் மட்டும் இம்மையிலும் மறுமையிலும் தனிமைப்படுத்தப்பட்டே மறையணுமாம்...என்ன அநியாயம் இது, எல்லாரும் மொத்தமா கூவாகத்துக்கு ஒருமுறை போய்வரலாமா..? அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவனாம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)