கர்த்தரைப் புகழும் புனிதமான சொல்லான அல்லேலூயா விவாதப் பொருளாகியிருக்கிறது; இது சம்பந்தமாக நாம் பதிந்துள்ள கருத்துக்கள்:
#உபதேசியார் கேட்கும் போதெல்லாம் ஒரு "அல்லேலூயா" போட்டுவிட்டால் நமக்கு பிரச்சினையில்லை; அப்போதாவது சீக்கிரம் முடிக்கமாட்டாரா என்ற ஏக்கத்திலேயே நிறைய பேர் "அல்லேலூயா" போட்டு தொலைக்கிறாங்களாம்..!
#இது வயர்லெஸ் செட்டில் அடிக்கடி "ஓவர்,ஒவர்" என்று சொல்லுவதைப் போலவே இருக்கிறது.
#அல்லேலூயா எனும் வார்த்தையில் தேவனுடைய நாமமும் அடங்கியிருக்கிறது;அது ஒரு கூட்டுச் சொல்லாகும்.
#இவ்வாறு அடிக்கடி அர்த்தமில்லாமலும் உணர்வில்லாமலும் சொல்லப்படும் அல்லேலூயாக்களால், தேவனுடைய நாமம் வீணிலே வழங்கப்படுகிறது.
#இதோ இங்கேயும் கூட தேவனுடைய நாமத்தை வீணிலே அதாவது மீண்டும் மீண்டும் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
#இதுபோன்ற பாவத்தை செய்து நியாயப்பிரமாணத்தை மீறிவிடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே யூதர்கள் "அடோனாய்" (Adonai) எனும் மாற்று வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்;அதன் பொருள் எஜமானர் என்பதாகும்;அதையே ஆண்டவர் என்றும் சொல்லுகிறோம்;அந்த ஆண்டவரே நம்மில் இயேசுவாக வெளிப்பட்டார்; உள்ளே வந்தவரை வெளியே இருந்து அழைப்பது குழந்தைத்தனமல்லவா..? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்.
// Prince Samuel இதே போல் தான் ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது praise the Lord என்று சொல்வதும் அர்த்தமில்லாமல் எதோ வணக்கம் சொல்வது போல் ஆகி விட்டது.. இதற்கு பதிலாக Good morning என்று சொல்லலாமே...?? அதையாவது அர்த்தம் புரிந்து கொள்வார்கள்......//
அதைவிட சிறந்தது "ஷலோம்" என்று சொல்லுவதே...அதையே ஆண்டவரும் கற்றுகொடுத்தார்;அதிலிருந்து பிறந்ததே முகமதியர்கள் சொல்லும் "அஸ்ஸலாமு அலைக்கும்.."
இதுகுறித்து நான் நகைச்சுவையாக யோசிப்பேன், "ஷ" எனும் சொல் முகமதியர்களால் ஏன் உச்சரிக்கமுடியவில்லை, அவர்கள் நாவறண்டு போயிருக்கிறது; காரணம்,அவர்கள் பாலைவனத்திலிருந்ததே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)