எனது நண்பர்கள் வட்டத்திலிருந்து சிலர் தங்களை விடுவித்துக்கொண்டதை அறிந்து பின்வரும் கோரிக்கையை நண்பர்கள் முன்பாக வைத்திருந்தேன்; அதற்கு பதிலளித்த சகோதரி சுஜாதா எனது சிந்தையை உலுக்கும் வண்ணமாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்கள்; அதில் அவர்களுடைய உளக் குமுறல் வெளிப்பட்டது; அதிலுள்ள நிதர்சனமும் தெரிந்தது; அன்று முதல் இன்று வரை கிறிஸ்து சபையின் ஆதாரங்களாக விளங்கும் சகோதரிகளின் மன வேதனையை அவருடைய கருத்து எதிரொலிப்பதாகவே உணருகிறேன்.
அதனை இங்கே தொகுத்து தருகிறேன்...
// அன்பர்களே, சில நண்பர்கள் எனது வட்டத்திலிருந்து விலகிச் சென்றிருக்கிறார்கள்; அவர்கள் யார் என்பதை அறிய இயலுமா? அப்படி அறிய வாய்ப்பிருந்தால் அவர்கள் விலகிச் சென்றதற்கான காரணத்தையறிந்து நம்மை சரிசெய்து கொள்ள உதவியாக இருக்குமே.? //
Sujatha Selwyn:
நம்மை சரி செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நன்று ! இன்று கிறிஸ்தவ உலகில், தங்களிடம் தவறு இருக்கும் என்று உள்நோக்கி பார்ப்பவர்கள் இருப்பதாக தெரியவில்லை. 'தாங்கள் மிகவும் தூயவர்கள், மற்ற எல்லாரும் பாவிகள்', என்ற பார்வை, எண்ணம்தான...் மேலோங்கி காணப்படுகிறது. அப்படி இல்லையென்றால் ஒருவரை ஒருவர் கடித்து துப்பி, புற மதஸ்தர் முன் சாட்சி இழந்து ஆவியின் கனி எள்ளளவும் இல்லாதவர்களையே காண்கிறேன். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் !
சகோதரி சுஜாதா அவர்களே,
நான் என்ன செய்யவேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்; நீங்கள் மிகவும் விரக்தியுடன் கருத்து சொல்லுவது போல இருக்கிறது; உங்களைப் போன்றோர் ஊருக்கொருவர் இருந்தாலும் போதும், உங்கள் மூலமே தேவன் தமது காரியத்தை நிறைவேற்றி முடிப்பார், சோர்ந்து போகாதிருங்கள். (1.கொரிந்தியர்.1:31)
ஒரு விதத்தில் விரக்திதான் சகோதரரே ! கிறிஸ்தவ உலகில் இன்று நடப்பதை எல்லாம் பார்க்கும் போது, விரக்தி இல்லாமல் எப்படி இருக்கும். இன்று சுற்றியும் பாருங்கள், மதத்தை வைத்து, இயேசுவை வைத்து, வேதத்தை வைத்து, தங்கள் வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொள்கி...றவர்கள்தான் அதிகம். கடவுளிடமிருந்து என்ன பெறலாம் என்றே பலரும் நினைக்கிறார்கள், கடவுளுக்கு என்ன செய்யலாம், அவ்ருக்கு எப்படி உபயோகப்படலாம் என்று யார் நினைக்கிறார்கள்?
எங்கும் வேதப்புரட்டு, மற்றவர்களை பாவிகள் என்று கூறும் கிறிஸ்தவர்கள் மத்தியில், சபையில், போதகர்களில், கொடிய பாவங்கள். யார் வேண்டுமானாலும் போதகர் ஆகிவிடலாம், அதற்கான அழைப்பு இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் யார் கவலைப்படுகிறார்கள் ?
வேத அடிப்படையில் இல்லாமல் புதுப்புது போதனைகளை சபைக்குள் புகுத்தும் போதகர்கள்.தாமே வேதத்தை படிக்க முயற்சி எடுக்காமல், யார் என்ன போதித்தாலும் தலையாட்டும் ஆட்டு மந்தைக் கூட்டம். ஆவியின் வரங்கள் ஒன்பதைப் பற்றியே பேசுகிறார்கள், ஆவியின் கனி ஒன்பதை உடையவர்களாக இருப்பதை விடுங்கள், யார் பேசுகிறார்கள் முதலில் ?
தீர்க்கதரிசனம் என்பதுதான் இன்று அதிகமாக துஷ்பிரயோகம் பண்ணப்படுகிற விஷயம். வேதத்தைப் பற்றிய ஆழமான அறிவு இல்லை. இதுதானே இன்றைய கிறிஸ்தவ உலகின் நிலை ? ஒரு ஒழுங்கும் இல்லை, கட்டமைப்பும் இல்லை, வெறுப்பாக இருக்கிறது.
இதற்கு நடுவில் தவறு செய்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக கூறிக்கொண்டு அசிங்கமாக சண்டை போடும் ஒரு கூட்டம்.
இதற்காகவா இயேசு தன் ஜீவனை விட்டார் என்று விரக்தியே வருகிறது. பிற மதத்திலிருந்து கிறிஸ்துவின் அன்பினால் மட்டும் ஈர்க்கப்பட்டு வந்த எனக்கு இதெல்லாம் பெரிய ஏமாற்ரமாக இருப்பதோடன்றி, கிறிஸ்தவத்தைப்பற்றி பிறர் மனதில் இருக்கும் கேவலமாண எண்ணங்கள் வருத்தத்தை தருகிறது.
நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள். எனக்கு தெரிந்ததை, என் வாழ்வில் நான் செய்ததை/செய்வதைக் கூருகிறேன். கடவுள் உங்களுக்காக வைத்திருக்கிற வேலை என்ன, உங்கள் அழைப்பு என்ன என்று அவரிடமே கேட்டு, அதை நிறைவேற்ற ஆயத்தமாய் இருந்தால் அவர் நிச்சயம் தன் சித்தத்தை செய்வார். என் சோர்வு என் வாழ்க்கையைப் பற்றியதல்ல, மேற்கூறியவைகளைப் பற்றியே !
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)