Chill Sam @ Richard Felson // Again it is to be understood that... 1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை //
திரு.ரிச்சர்டு அவர்களே, நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனத்துக்கான விளக்கத்தை நிதானமாகப் பகுத்து கொடுத்திருக்கிறேனே,ஒரு நாகரீகத்துக்காகிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் அதே வரிகளைக் குறிப்பிட்டால் என்ன அர்த்தம்..?
//Sorry I could not devote more time friends... Problem n tamil typing also. All I wanted to say is.. with out a clear cut understanding of death no further discussion will help. Pity the Christendom is following the first lie of the satan that 'you shall not die surely". That man will 'live' without a physical body even after death... which is nowhere in the bible. God said 'you shall surly die' and that is it. When you understand that then you will have to believe Jesus Died, was destroyed.... and God resurrected Him from the dead. The Only God Almighty is The Father. Of course there is our Lord and Saviour Jesus Christ... who is the son of God.... not The Father....//
உங்களுக்கு தமிழில் எழுத சிரமமாக இருக்கிறது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதை வாசித்ததும் ஒரே சிரிப்பாக வருகிறது; ஒருவேளை கெட்டவார்த்தைகளும் தூஷணமும் மாத்திரமே நன்றாக உங்களுக்கு எழுதவருமோ..? குறுகிய மனப்பான்மைகளை விட்டு விசால மனதுடன் விவாதித்தால் நாம் பல காரியங்களில் நல்லதொரு முடிவை எட்டமுடியும்,செய்வீர்களா?
ஏதேனிலே ஆதி மனிதனிடம் சாத்தான் சொன்ன பொய்யை நாங்கள் நம்பவில்லை, நீங்கள் தான் நம்பி மோசம் போய்க் கொண்டிருக்கிறீர்கள்; சாத்தான் ஆதி மனிதனிடம் சொன்னதும் அவன் செய்ததும் ஒரே முறை நடந்துமுடிந்த விடயமாகும்.அதன் விளைவாகவே மரணம் மனுக்குலத்தை ஆட்கொண்டது என்பதே வேதம் சொல்லும் ஆதார சத்தியமாகும்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு, கவனியுங்கள்,தேவன் சாகவே சாவாய் என்றார், சாத்தான் சாகமாட்டாய் மாறாக தேவர்களைப் போலாவீர்கள், என்றான், சரியா, அப்படியானால் தேவன் சொன்னதின் மறுபாதி என்ன, சாகவே சாவாய்,செத்து பிசாசின் மகனாகப் போய்விடுவாய்; இங்கே சாதல் என்பது சர்வ வல்லவருடனான ஐக்கியத்தை இழப்பது மாத்திரமே;ஆனால் ஆதி மனிதனுக்கோ சாதல் என்றால் என்னவென்றே தெரியாது; ஏனெனில் அவனே முதல் ம்னிதன்.
இந்நிலையில் சாத்தான் சாவதில்லை என்று சொன்னபோது ஸ்திரீயே வஞ்சிக்கப்பட்டாள்; மாம்ச மரணமானது ஒருவனை உலகியல் நடைமுறைகளிலிருந்து பிரித்துவிடுவதுபோலவே அன்று ஆதி மனிதனுக்கும் நிகழ்ந்தது, என்ன நிகழ்ந்தது? அவன் சிருஷ்டிகருடைய மண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். அதுவே மனிதனுக்கு நடந்த முதல் மரணம்; இங்கே தேவன் சொன்னது நூறு சதவீதம் நிறைவேறியது.
நற்செய்தியின் படி அனைவரும் கிறிஸ்துவுக்குள் (பாவத்துக்கு) மரித்து (நித்திய) ஜீவனுக்காக பிழைத்திருப்பது போலவே அன்று ஆதிம்னிதன் சாத்தானுக்குள் மறுபடியும் பிறந்து மரணத்துக்காக சாகாதிருந்தான்; இதனால் சாத்தான் சொன்னதும் நூற்றுக்கு நூறு நிறைவேறியது; ஆதி மனிதன் சாத்தான் சொன்னது போலவே சாகவில்லை; மாறாக தேவர்களைப் போல அதாவது தள்ளப்பட்ட தூதனுடைய ஆளுகைக்குள்ளே வந்தான்.
இன்று தன்னைத் தானே தேவன் என்று சொல்லிக்கொண்டு பலரும் ஆராதிக்கப்படவிரும்புவதே அதற்கு சான்றாக இருக்கிறது;இதே வாய்ப்பை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் வழங்க ஆயத்தமாகவிருந்து முதலாவது தன்னை வணங்கச்சொன்னான்; தொழத்தக்கவர் சர்வ வல்லவர் மட்டுமே என்பதை மறந்து மனிதர்களை வணங்கத் துணிந்த மனிதன், சர்வ வல்லவரே மாம்சத்தில் வந்து தாம் இழந்ததை மீட்கமுடியும் என்ற மாபெரும் உண்மையை ஏற்கமனமில்லாமல் கண்கள் செருகிப்போய் குருடனாக இருக்கிறான்;இது தானையா ஆதியிலேயே தேவன் ஆதிமனிதனுக்குக் கொடுத்த சாபம்..!
எல்லோரையும் இரட்சிக்க இரட்சகரால் முடியும் என்று நம்பும் நீங்கள் அவர் மாம்சத்தில் வந்ததை மறுதலித்தால் எப்படி இரட்சிக்கப்படமுடியும்? என் தேவன் மிருக பலியையோ நரபலியையோ விரும்பாதவர் தூதனை பலியாக்கி மீட்டுக்கொண்டார் என்பது எத்தனை கொடூரமான சிந்தனை என்பதே உங்களுக்குப் புரியவில்லையே..? அவர் தம்மாலே தாம் இரட்சிப்பை உண்டுபண்ணினார், சுயரத்தத்தினால் என்னை மீட்டுக்கொண்டார் என்பதே நான் நம்பும் சத்தியமாகும்; இதை அசத்தியம் என்று சொல்லும் உரிமை உங்களுக்குக் கிடையாது;ஏனெனில் உங்களிடம் உத்தரவாதம் தரும் அப்போஸ்தலர் யாரும் இல்லை..! என்னிடம் ஒரு அப்போஸ்தலர் இருக்கிறார்,அவர் தேவனால் அனுப்பப்பட்டவர்,அவரே தேவன், அவரே சிருஷ்டிகர், அவரே மீட்பர்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)