by Chill Sam on Sunday, 25 September 2011 at 18:51
இறையியல் மற்றும் உபதேச்த்தில் மாறுபாடானவற்றைப் போதிப்போரின் மையமாக ஆதியாகமத்தின் முதல் ஐந்து அதிகாரங்கள் விளங்குகிறது;அதிலிருந்தே பல்வேறு சர்ச்சைக்குரிய கொள்கைகளை பலரும் ஆராய்ந்து வேத ஆராய்ச்சி என்ற பெயரில் போதித்து வருகிறார்கள்;ஆனால் காரியத்தின் கடைத்தொகை அல்லது மையப்பொருள் அதுவல்ல என்பதை பலரும் உணருகிறதில்லை.
உதாரணமாக ஒரு நண்பர் அண்மையில் என்னிடம் கேட்ட கேள்வி, அரபிதேசத்தின் சீனாய் மலை என்று பவுல் எழுதுகிறாரே,சீனாய் மலை அரபி தேசத்திலா இருக்கிறது,மேலும் அரிஸ்தர்க்கு என்பவரைக் குறித்து பவுல் எழுதுகிறாரே,அவர் யார் அவர் என்ன செய்தார் என்ன ஆனார் என்பது குறித்து ஏதாவது தெரியுமா,என்று கேட்டார்; அதற்கு நான் சொன்னேன்,வேதத்தின் எது அதிகமாக சொல்லப்பட்டுள்ளதோ அதைக் குறைவாகவும் எது குறைவாகச் சொல்லப்பட்டுள்ளதோ அதை அதிகமாகவும் தேடக்கூடாது.
உதாரணமாக ஒரு பிரயாணத்துக்காக இரயிலைப் பிடிக்க சென்ட்ரல் இரயில் நிலையத்துக்குச் செல்லவேண்டும், ஆனால் இரயிலைத் தவறவிடும் சூழ்நிலை; அதனால என்ன,இரயில் செல்லும் பாதையிலுள்ள பல்வேறு நிலையங்களில் ஏதோ ஒன்றில் நீங்கள் ஏறிக்கொள்ளலாம்; அதை விட்டுவிட்டு இரயிலைக் குறைசொல்லுவதோ தன்னைத் தான் நொந்துகொள்ளுவதோ தேவையற்றது அல்லவா..?
சென்ட்ரலில் தவறவிட்ட இரயிலை பெரம்பூரிலோ அரக்கோணத்திலோ அல்லது ஜோலார்பேட்டையிலோ பிடிக்கமுடியும்;ஆனால் டிக்கெட்டும் சமயோசித்த அறிவுமே தேவை. உங்கள் டிக்கெட்டில் யாரும் பயணிக்கவில்லை என்பதையும் நீங்கள் செல்லும் இரயில் எங்கே செல்லுகிறது என்பதையும் அறிந்திருந்தால் போதுமே; மற்றபடி சென்ட்ரலில் யார் யார் இந்த ரெயிலில் ஏறினார்கள், யாரெல்லாம் தவறவிட்டார்கள் என்பதா,ஆராய்ச்சி..?
இதேபோல சினிமா தியேட்டருக்கு தாமதமாகச் செல்லும் சிலர் கேட்கும் முதல் கேள்வி, கதை நிறைய போயிடுச்சா, என்னென்ன சீன் போச்சு,இவர் யார் அவர் யார் என்று பக்கத்து சீட்டு ஓயாமல் கேட்டு நச்சரிப்பார்கள்..!
அதுபோலவே ஓயாமல் ஆதாமைக் குறித்தும் ஏவாளைக் குறித்தும் சாத்தானைக் குறித்தும் அந்த கூட்டணி செய்த மீறுதல்களைக் குறித்தும் இன்னும் தேவர்கள் யார், மனிதர்கள் யார், தேவக்குமாரர்கள் யார், காயீனுக்கு எங்கிருந்து பெண் கிடைத்தது என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்காமல் நோவாவின் பேழைக்குள் அடங்கிய 8 பேரில் துவங்கிய உலகமே இது என்ற மாபெரும் உண்மையிலிருந்து மேலானவைகளை சிந்தித்து, ஆண்டவர் தாமே மாம்சத்தில் வந்து செய்து முடித்தவைகளுக்காக நன்றி செலுத்தி, அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவதும், பிறரை ஆயத்தப்படுத்துவதுமே நாம் செய்யவேண்டிய உடனடி பணியாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)