நம்முடைய எருசலேம் பல்கலைக்கழகமானது திரித்துவ உபதேசத்தை நம்புகிறது என்று நினைக்கிறேன்; அதனுடன் பல முன்னணி கிறிஸ்தவ தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது; ஆனால் அண்மையில் ஒரு பத்திரிகையில் வெளியான அறிவிப்பு அதிர்ச்சியளித்தது;அதாவது "சத்தியத்தின் வழி" என்றொரு பத்திரிகையில் அதன் ஆசிரியரான ஆமோஸ் (எ) மூ.மூகேந்தரன் என்பாருக்கு எருசலேம் பல்கலைக்கழகமானது டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், திரு.ஆமோஸ் அவர்கள் இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுதலிப்பவர், ஆத்மாவின் நிலையைக் குறித்தும் மாறுபாடான கொள்கையுடையவர்;திரித்துவ உபதேசத்துக்கும் எதிரானவர். அவருடைய பத்திரிகையை வாசிப்போருக்கு இது நன்கு தெரியும்; ஆனால் நம்முடைய பல்கலைக்கழகமானது சற்றும் ஆராயாமல் ஒரு துருபதேசக்காரருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறதோ என்று அஞ்சுகிறேன்.
ஏனெனில் இவருடைய பின்னணியானது பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்தையும் உபதேசத்தையும் மறுக்கும் யெகோவா சாட்சிகளின் ஸ்தாபகரான இரஸல் என்பாருடைய உபதேசத்தைத் தழுவியதாகும்.இது குறித்து நண்பர்கள் எச்சரிப்படையவும் மற்றவரை எச்சரிக்கவும் வேண்டுகிறேன்;இது சம்பந்தமான எந்தவொரு காரியத்தையும் நிரூபிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.
Tomsan KattackalRegarding the fact that Russell is not the founder of Jehovah's Witnesses I have answered in the link above.
திரு.Kattackal Tomsan அவர்களே, இரஸல் யெகோவா சாட்சிகளின் ஸ்தாபகர் இல்லை என்று நீங்கள் சொன்னாலும் அவர்கள் அதனை ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா..? "யெகோவா சாட்சிகள்" ஸ்தாபனத்தின் சொத்துக்களுக்கு யார் உரிமை தாரர் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்; தன் மனைவியை விவாகரத்து செய்த இரஸல் அவர்கள் தனது மனைவிக்கு தனது சொத்துக்களோ ஜீவனாம்சமோ தராதிருக்க தனது சொத்துக்களை தனது ஸ்தாபனத்த்துக்கு எழுதி வைத்ததும் அதனை அபகரிக்க இரஸலின் சீடரான ரூதர்ஃபோர்டு என்பவர் எழும்பி யெகோவா சாட்சிகள் ஸ்தாபனத்தை உருவாக்கியதும் வரலாற்று நிகழ்வுகள் அல்லவா..? நான் எழுதியுள்ளவற்றில் உள்ள தவறுகளைக் குறிப்பிடும் நீங்களே சரியான தகவலையும் தருவதற்கு பொறுப்பாளியாகிறீர்கள்.
//Jesus has asked us to go and preach the gospel, and not to sit and judge others.//
ஆம்,இயேசு உலமெங்கும் சென்று சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சொன்னார் என்பது உண்மையே.
ஆனால் உலகம் என்பதை யுகம் என்றும் அந்த யுகம் அப்போஸ்தலர் காலத்துடன் முடிந்தது என்றும் தற்போதைய யுகத்தில் ஏற்கனவே சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டோரிடம் அறுவடை நடைபெறவேண்டும் என்றும் மாறாக கிறிஸ்துவைக் குறித்து அறியாதோரிடம் விதைப்பு தேவையில்லை என்றும் அவர்களெல்லாரும் ஆயிரம் வருட அரசாட்சியில் ஒரு நிபந்தனையின்றி உயிர்ப்பிக்கப்பட்டு சுவிசேஷத்தைக் கேள்விப்படுவார்கள் என்றும் சொல்லி சுவிசேஷம் அறிவித்தல் என்பதற்கே ஒரு புதிய விளக்கத்தையும் பரலோகம் என்பதே பூலோகம் பரலோகமாக மாறுவது தான் என்பதையும் கூறி வேதவார்த்தைகளைப் புரட்டுபவர்கள் தானே இரஸலின் உபதேசத்தார்..? அவர்களைப் பொறுத்தவரை இயேசுவானவர் வெறும் தூதன் தானே..? அவர் இன்னும் சரீரப் பிரகாரமாக உயிர்த்தெழவில்லை தானே..? பிறகென்ன வேஷம்...எல்லாம் வெளி வேஷம்..வஞ்சக வேஷம்..! http://www.facebook.com/topic.php?topic=535&post=2099&uid=111179005589307#post2099
Tomsan KattackalI request, (read it beg) Br. Chill Sam to be a good debater rather than being a judge and scream "Beware, O! Christians" and so on. We are not asked to do such things. We are asked to defend and explain the faith with "meekness and fear" - 1 Peter 3:15.
As I told you repeatedly, the fact that there 35000+ denominations proves that there as many errors. If you find an error in another person try to:
1) ignore it out of love. 2) correct it out of love.
Crying foul and screaming is not becoming of a good Christian. We are not given the authority to judge. We are given the duty to love one another.
ஐயா சாந்தத்தையும் தயவையும் குறித்து எங்களுக்கு நீங்கள் சொல்லாதிருங்கள்;சாத்தானானவன் தன் காரியம் ஆக காலையும் பிடிப்பான்,காரியம் ஆனதும் கழுத்தையும் பிடிப்பான்,என்பதை அறிந்திருக்கிறோம்;
யார் எக்கேடு கெட்டுப்போனாலும் எனக்கென்ன,என் விசுவாசத்தைக் குறைகூற உங்களுக்கு உரிமையில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும்;
35,000 விதமான சபைப்பிரிவில் நீங்களும் ஒரு சபைப்பிரிவு தானே அப்படியானால் மற்ற 34,999 சபைகளைக் குறித்து நியாயந்தீர்க்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது..?
நான் செய்யக்கூடாது என்று சொல்வதையே நீங்கள் செய்வதால் என்னைவிட இரண்டு மடங்கு மோசமான காரியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்;
தேவத்துவத்தின் முப்பரிமாணத்தையும் ஆத்மாவின் நிலைமையைக் குறித்த சத்தியத்தையும் வேதமே நேரடியாகப் போதிக்கிறது;அதில் எந்தவித மார்க்கபேதமும் இல்லை;
ஆனால் இரஸல் எனும் மனிதன் ஏரியஸ் என்பாரின் பாதிப்பினால் உளறியவைகளை வைத்துக்கொண்டு "கிறிஸ்டியன் கரெக்டர்" என்ற நாமகரணத்துடன் சபைகளைக் குழப்புவது நீங்கள் தான்;
நீங்கள் கரெக்டர்,நான் மாத்திரம் டைரக்டர் என்று சொல்லுவது கொஞ்சமும் சரியல்ல..!
Richard Felson Confusion about Soul and Death is the basis of ALL false doctrines. Only when one is clear on this subject can one understand the deeper things. Otherwise all the other arguments will be in vain.
Christendom believes when a man dies he 'actually' does not die. This is the lie of Satan right in the Eden.
Chill Sam@ Richard Felson Yes,u r ryt...ஆம்,ஆத்துமாவைக் குறித்தும் மரணத்தைக் குறித்தும் நீங்கள் கொண்டிருக்கும் தவறான கொள்கைகளே உங்களுடைய எல்லா குழப்பத்துக்கும் காரணம்..!
சிறைக்குள் இருப்பவனுக்கு வெளியே இருப்பவர்கள் சிறைக் கம்பிக்குள் இருப்பது போலத் தோன்றுமாம்..!
//எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்...//
இதுகுறித்து சற்று மேலே ஜாண் அவர்கள் குறிப்பிட்டிருந்த கருத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டு ஏற்கனவே எழுதியதையே கிளிப்பிள்ளை மாதிரி எழுதி வைத்தால் அது உண்மையாகிவிடாது,நண்பரே;
"எல்லா மனுஷரும்" என்று பவுலடிகள் இங்கே குறிப்பிடுவது "எல்லா தரப்பு மக்களையும்" என்பதை நீங்கள் முந்தி அறியவேண்டியது;
அவர் "எல்லா தரப்பு மக்களும்" இரட்சிக்கப்படவேண்டுமென்று விரும்புகிறார்,ஆனால் "எல்லா தரப்பு மக்களுக்கும்" சுவிசேஷத்தைச் சொல்லும் பணியை நீங்கள் குறைசொல்லுகிறீர்களே..? அப்படியானால் "எல்லா தரப்பு மக்களும்" இரட்சிக்கப்படவேண்டும் எனும் தேவசித்தம் எப்படி நிறைவேறும்?
அடுத்தது எது சுவிசேஷம் என்பது..? நீங்கள் சுவிசேஷம் என்பது செத்தால் தானாகவே தெரியவரும்,அதாவது பாவத்தின் சம்பளம் என்பது மனிதன் செத்துப்போவது, செத்துப்போன அவனை உயிரோடு எழுப்பி சுவிசேஷம் சொல்லுவதே ஆயிரம் வருட ஆட்சியில் மேசியாவின் முக்கிய பணியாக இருக்கும்,என்ன நான் சொல்றது சரிதானே..?
இதையா அப்போஸ்தலர்கள் சுவிசேஷமாக சொன்னார்கள், மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்..!
ஐயா, மற்ற கலந்துரையாடல் தளத்தில் (forum) இருப்பதைப் போன்ற வசதி (Topic closed) இங்கே இல்லாததால் வாதம் நீண்டுகொண்டே போகிறது; நாகரீகம் கருதி நானும் எதிர்தரப்பின் உப்புசப்பற்ற வாதங்களை அனுமதிக்கவேண்டியதாகிறது.
நான் இங்கு பதித்துள்ள கட்டுரை தொ...டர்பான ஒரு மாற்றுக்கருத்தைக் கூட இங்கே எதிர்தரப்பினர் பதிக்கவில்லை; மாறாக மேலோட்டமாகவே கருத்துகூறுகின்றனர்;இது சோர்வை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
"திரித்துவ உபதேசமே தவறு" என்று கூறி சபைக்கெதிராக எழும்பி கலகம் செய்வோர் திரித்துவ உபதேசத்தை ஆதரிப்போரால் நடத்தப்படும் கல்லூரியில் சென்று டாக்டர் பட்டம் பெறுகிறார்களே,இது சரியா என்பதே இந்த கட்டுரையின் ஆதாரக் கேள்வியாகும்;இந்த வீண்பெருமை எதற்கு..?
"இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம்..." எனும் பாடலையும்
"தேனினிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே" எனும் பாடலையும்
... "எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே...இயேசு போதுமே" என்ற பாடலையும்
எந்தவித சங்கடமுமில்லாமல் யாராவது பாடினால் அவருக்கு நான் எல்லாவித ஊழியத்தையும் இலவசமாகச் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்.
இதற்கு எதிராக யாராவது எதையாவது எழுதினாலோ பேசினாலோ அவர்களுக்கு என்னால் ஒருக்காலும் நண்பனாக முடியாது.
இதையும் மீறி இந்த திரி வளருமானால் அதில் எத்தனை ஆயிரம் பேர் பின்னூட்டமிட்டாலும் தனியொருவனாக எதிர்க்க ஆயத்தமாக இருக்கிறேன்.கிறிஸ்தவ மாண்பைக் குறித்து (மேசியாவின்) எதிரிகளிடம் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம எனக்கில்லை.
(மேசியாவின்) எதிரிகள் இவ்வாறு கேட்பார்கள்,பாடலில் விசுவாசம் வளர்த்தோம் என்பதாக;ஆம்,வேதமானது புத்தகமாக அச்சிடப்படுவதற்கு முன்பதாகவே பாடலில் தான் விசுவாசத்தை வளர்த்தோம்.
Tomsan KattackalGreat, I think I have clearly stated that we do not deny the divinity of Jesus and we worship Jesus, despite that stating canards makes me rejoice, because Jesus asked us to rejoice in such situations.
இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் தன்மையை அவதூறு செய்வோர் அவர் நிமித்தம் மகிழுவார்களாம்..நல்ல ஜோக்..!
அடுத்தது பரி.ஆவியானவரைக் குறித்து விவாதிக்கத் துவங்கினால் பல தேவதூஷணங்கள் வெளிப்படும்; அதற்கு நான் காரணமாக இருக்கவிரும்பவி...ல்லை;
இயேசுவானவர் சிருஷ்டிக்கப்பட்டவரா,சிருஷ்டிகரா..?
ஆத்துமாவுக்கு மரணம் உண்டா இல்லையா..?
இயேசுவானவர் முன்பு மிகாவேல் தூதனானாக இருந்தவரா அல்லது தூதர்களையெல்லாம் உண்டாக்கினவரா..?
இந்த மூல உபதேசங்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் நழுவலாகவும் இதமாகவும் பதமாகவும் எழுதினால் மாத்திரம் எல்லோரையும் வஞ்சிக்கமுடியாது,ஐயா..!
Sathiyathin Vazhi Amos M கருத்து சொல்ல அனைவராலும் முடியும். கருத்தாய் சொல்ல சிலரால் மட்டுமே முடியும். வேதத்தை எழுதியவராலே எல்லாம் முடியும்.(முடிவுக்கு வரும்)
ChillSam @SathiyathinVazhiAmos M... வாங்க கதாநாயகனே...டாக்டர் பட்டம் எப்படி சூடா இருக்கா..? இங்கே மண்டையை பிச்சிண்டு இருக்கோம், இப்படி "நறுக்" கென தத்துவம் சொல்லிட்டு ஓடிப்போறது நியாயமா..?
உங்களுக்கு எதுக்கு டாக்டர் பட்டம்,அதுவும் வேசி மார்க்க... த்தாரின் டாக்டர் பட்டம் எதற்கு, ஏன் இந்த வெளி வேஷம், இதெல்லாம் வேத மாணாக்கனுக்கு அழகா..? டாக்டர் பட்டம் வாங்கியது யார், உங்க ஆத்துமாவா, இல்ல ஆவியா, இல்லனா மண்ணோடு மண்ணாகும் உடம்பா, ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லிடுங்க, இல்லேன்னா நீங்க போலி டாக்டர் அல்லது கம்பவுண்டர் நிலைக்கு தள்ளப்படுவீர்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)