Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரு.இம்மானுவேல் ஆபிரகாம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியரா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
திரு.இம்மானுவேல் ஆபிரகாம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியரா..?
Permalink  
 


by Chill Sam on Thursday, 06 October 2011 at 15:38

David Joseph:-

//With due respect to the Ordained Pastor.Immanuel Abraham//

ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் திரு.இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களைக் குறித்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வீண்பழியை சுமக்கும் அளவுக்கு திரு.இம்மானுவேல் அவர்கள் மோசமானவராக வாய்ப்பில்லை என்பதை வதனநூலின் நண்பர்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்; அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அல்லது அபிஷேகிக்கப்பட்ட ஊழியராக இருநதிருந்தால் அதை எப்போதோ தனது கிரியையினால் நிரூபித்திருப்பார்;அவரே நிரூபிக்க விரும்பாத ஒரு காரியத்தில் அவரைக் கட்டாயப்படுத்தி தள்ள முயற்சிப்பது வீணான பிரச்சினைகளை உருவாக்கும் முயற்சியாகும்.

எப்படியெனில் இவர்கள் சபை என்ற பெயரில் கூடுவதே சட்டவிரோதமானதாகும்;அருகிலுள்ள காவல் நிலையத்தில் இதற்காக அனுமதி பெற்றிருப்பார்களோ என்னவோ,ஆனால் ஆட்சி மாறியதும் "சர்ச்" என்று போடுவதைத் தவிர்த்துவிட்டு "சென்டர்" என்று தங்கள் ஆராதனைக் கூடங்களின் பெயரை வேக வேகமாக மாற்றிவருகிறார்கள்;சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து அரசாங்கத்தையும் ஏமாற்றி சட்டவிரோதமாக ஆட்களைக் கூட்டி மிரட்டி தசமபாகம் வசூலிக்கும் பகல் கொள்ளையர்களான இவர்களை எப்படி "அங்கீகரிக்கப்பட்ட போதகர்" என்போம்?

இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததும் அன்னா ஹசாரேவின் கோரிக்கை என்ன, லோக்பால் மசோதாவில் பிரதமரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே; ஆனால் சற்றும் எதிர்பாராமல் யாரும் கோராமலே ஜனாதிபதி பிரதீபா (பாட்டி)ல் அவர்கள் தனது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டார்.

ஆனால் இயேசுவின் பெயராலும் அவருடைய ஆவியின் பெயராலும் ஊழியம் செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் திரு.இம்மானுவேல் போன்றவர்கள் தங்களுடைய நேர்மையை நிரூபிக்க இதுவரை முயற்சிக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.

அன்பிற்கும் மதிப்பிற்க்கும் உரிய பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களுக்கு,

 

Chill Sam பொதுவாகவே, 'என்னை கேள்வி கேட்க நீ யார்' என்ற மனோபாவம் ஒழிக்கப்படவேண்டும், இது அன்பின் இராஜ்யத்தவருக்கு தகுதியல்ல;

எனக்கும் சில கோபங்கள் உண்டு,ஆனாலும் சில நியாயங்கள் அதைவிட முக்கியமானது அல்லவா..?

இதோ எல்லோரையும் சீண்டிவிட்டு விட்டு எதிராளியானவன் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறான்.
Devamanohar Michael....// basement is very weak.//

To Immanuel Abraham....இந்த கட்டுரையில் முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளேன்; ஆனாலும் எனக்கு திரு.இம்மானுவேல் ஆபிர"கம்" பதிலளிக்காமல் கம்'மென்றே இருப்பார்;ஏனெனில் அவரிடம் பதில் இருக்காது... என்பது எனக்குத் தெரியும்.

இது ஜனநாயக நாடானதால் நாம் எங்கும் ஆண்டவரை ஆராதிக்கிறோம், அரசாங்கமும் மத நல்லிணக்கம் கருதி கண்டுங் காணாமலும் இருக்கிறது; ஆனால் சத்தியத்துக்காக நிற்பதாகக் கூறி சட்டம் பேசும் இவர்கள் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறார்களா..?

"ஜெபவீடு" அல்லது "ஆராதனைக் கூடம்" என்று போட்டுக்கொண்டு அதிகாரப்பூர்வமற்ற முறையில் சர்ச் நடத்தும் இவர்கள் அதற்கான முறைப்படியான அனுமதியை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றிருக்கிறார்களா என்று கேட்கிறேன்;

மேலும் "மதகுரு" ஸ்தானத்தில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் அதற்கான அரசாங்க அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்களா..?

வருமான வரி முதலான காரியங்களில் நேர்மையாக இருக்கிறார்களா..?

சபையை சொஸைட்டியாகப் பதிவு செய்யாமல் ட்ரஸ்ட்டாகப் பதிவுசெய்து குடும்பத்தாரை மட்டுமே அதில் உறுப்பினராக்கும் மர்மம் என்ன?

மேலும் ஆராதனை என்ற பெயரில் இருக்கும் பத்து பேருக்கு தேவையில்லாமல் ஒலிபெருக்கியை அலறவிட்டு உள்ளே இருப்பவரையும் வெளியே இருப்பவரையும் பைத்தியமாக்குகிறார்கள்; சத்தம் போடுவதே ஆவி இறங்குவது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்;ஆவியின் நிறைவு என்பது சிந்திக்கத்தூண்டுமே தவிர சிந்தையை மழுங்கவைப்பதல்ல;ரொம்ப விவரமாக எழுத எனக்கே சங்கடமாக இருக்கிறது,மன்னிக்கவும்.

மொத்தத்தில் திரு.இம்மானுவேல் ஆபிரகாம் வெறும் "காம்" மட்டுமே,அவர் சரியானவரல்ல என்று இதோ விளங்கிவிட்டது.

""க்ரூப்"" எதற்கு, நான் கேட்கிறேன்,உங்க சபையில் ஆடுவது "குண்டலினி ஆவியல்ல, பரிசுத்தாவியே.." என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்..? இந்த ஒரு காரியத்துக்கு மட்டும் பதில் சொல்லுங்கள், நீர் நேர்மையானவரா இல்லையா என்பது அதிலேயே தெரிந்துவிடும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard