"இம்மானுவேல் ஆபிரகாம்" என்பவர் தமிழ் கிறிஸ்தவ சகோதரர்களிடையே தொடர்ந்து சலசலப்புகளை உண்டாக்கி சீப் பாப்புலாரிட்டி தேடிக்கொண்டிருக்கிறார்;அதில் அவர் அசிங்கமாகத் தோற்றுப்போகப்போவது உறுதி;எங்கோ இருக்கும் என்னை மையப்படுத்தி அவதூறான காரியங்களை எழுதிவருகிறார்; அவருக்கு என்னாலியன்ற மட்டும் நாகரீகத்துடன் தகுந்த பதில் கொடுத்து வருகிறேன்; இந்நிலையில் அவர் என்னை மையப்படுத்தி பதித்திருந்த ஒரு அலப்பறையில் இந்து நண்பர் போர்வையில் பதிவிட்டிருந்த ஒருவர் பொத்தாம்பொதுவில் யாரையோ தாக்குகிறார்;எல்லோரையும் போலி ஐடி பெயரில் எழுதுகிறார்கள் என்று தூஷிக்கும் மிஸ்டர் காம் இதற்குத் தகுந்த பதிலை இந்நேரம் எழுதியிருக்கவேண்டும்; ஏனெனில் இந்த பதிவில் பதிக்கப்படும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் செய்யவேண்டிய அவரையே சாரும்;ஆனால் அவர் இதுவரை இதற்கு தகுந்த பதில் கொடுக்காத காரணத்தால் முதன்முறையாக அவர்மீதே எனக்கு சந்தேகம் வருகிறது; இதுபோல எத்தனை போலி ஐடிக்களை உருவாக்கிவைத்துக்கொண்டு புழுதி கிளப்பிக்கொண்டிருக்கிறாரரோ அறியேன்; ஆனாலும் நான் நிலைமையை சமாளிக்கும் வண்ணமாக எனது உற்ற நண்பரான மிஸ்டர் "காம்" அவர்களையும் விட்டுக்கொடுக்காமல் ஒரு பின்னூட்டத்தை அங்கே பதித்திருக்கிறேன்; அது சற்று நீண்ட பதிலாக இருப்பதால் அதனை தனி திரியாக சேமிக்க விரும்பி இங்கே பகிர்கிறேன்.
Selva Dhurai
//உங்களை வைத்து இந்த மதமே இப்படித்தான் என்று சொன்னால் ,அது உண்மை . நீ எப்படி மத சகோதரரர்களிடம் எப்படி(?) நடந்து கொள்கிறாய் என்பதையே காட்டுகிறது. உன்னை நீ முதலில் சுய பரிசோதனை செய் ,பின்னர் பிறரை குறை சொல்லலாம் . விமர்சனம் என்பது உன்னுடையதை எல்லோராலும் ஏற்றுகொள்ளாவிட்டாலும் சரி , உன்னை தூற்றும் படியாக இருக்க கூடாது , இதைத்தான் நீ செய்கிறாய் ,//
மதிப்பிற்குரிய திரு.செல்வதுரை அவர்களே,நீங்கள் யாருக்கு எதிராகக் கருத்து சொல்லியிருக்கிறீர்களோ அறியேன்,ஆனாலும் என்னுடைய கருத்தை இங்கே பதிவுசெய்கிறேன்;இது என்னுடைய திரியாக இருந்திருந்தால் சம்பந்தமில்லாத உங்கள் கருத்தினை நிச்சயமாக நீக்கியிருப்பேன்.
ஏனெனில் ரெண்டு பேர் அடித்துக்கொண்டிருக்கும்போது அதனை வேடிக்கை பார்க்கும் ஒருவர் சமாதானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறாமல் இவர் ஏதோ வானுலகத்தில் இருந்து இறங்கியவர் போல கருத்து சொல்லுவாரானால் அவரைப் போன்ற சுயநலவாதி யாரும் இருக்கமுடியாது;
நீங்களும் கூட கிறிஸ்தவ சகோதரர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால் சோர்ந்துபோயிருக்கலாம்; அதனை சமாளிக்கும் வண்ணமாக ஒரு சமதர்மவாதியைப் போலிருந்து ஒரு திருக்குறளையோ அல்லது ஏதாவது நீதி நூலின் கருத்தையோ பதித்திருந்தால் உங்களுக்கு நானே ஒரு "ஹோ" போட்டிருப்பேன்; ஆனால் நீங்களோ எகத்தாளம் பண்ணுவதுடன் மதரீதியான மோதலாக இதனை மாற்ற முயற்சிக்கிறீர்கள்;
ஒரு காரியத்தை மனந்திறந்து ஒப்புக்கொள்ளுங்கள், மனிதன் சந்திரனில் குடியேறினாலும் அங்கேயும் கோபுரங்களையும் மசூதிகளையும் கட்டிவைத்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பான்; சித்தாங்கள் ஒருபோதும் மனிதனை இறைவனிடம் சேர்க்க உதவாது என்பதை மனதார நம்புபவன் நான்;
ஒருவேளை எங்களிடம் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு நாங்கள் (முன்னாள் இந்துக்கள்..) இந்துக்களாக இருந்ததே காரணம் என்று நான் சொன்னால் அதனை உங்களால் மறுக்கமுடியுமா?
நமக்குள் பிரச்சினை வேண்டாம் நண்பரே...நாம் இருவருமே நமது இலக்குகளை நிர்ணயிப்பதிலும் அதனை எட்டுவதிலும் கவனம் செலுத்துவோம், மற்றவருக்கும் இயன்றமட்டும் உதவிசெய்வோம்.
உண்மையில் நண்பர்கள் Vijay KumarFrancis SomerwellPrason Christopher Robin அண்ணன் Ponnudurai Joseph பொன் ஜோ போன்றவர்கள் பிரச்சினைக்குரியவர்கள் போலத் தோற்றமளித்தாலும் அவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது சாத்தானே; அவனுடைய இராஜ்யம் இன்றைக்கு இணையத்தைப் பொறுத்தவரை தடுமாறிக்கொண்டிருக்கிறது; அவன் கர்த்தருடைய பீடத்தில் துணிகரமாக நுழைந்து அவருடைய ஆசாரியர்களையே வசப்படுத்திக்கொண்டு செய்துவந்த சூழ்ச்சிகள் இன்று சந்தி சிரிக்கிறது;
பிசாசு தப்புசெய்யவைப்பான் அம்போவென்று விட்டுட்டு போயிடுவான்;ஆண்டவரோ தப்புசெஞ்சாலும் தயவோடு வந்து தாங்கிநிற்பார்;இது திரைப்படத் தத்துவமல்ல சில்சாமின் சிந்தையில் வெளிப்பட்டது;எனது பாசத்துக்குரிய மிஸ்டர் காமுக்கு நிகழ்ந்ததும் அதுவே;இதுவரை அவர் கடந்த சுமார் ஆறு மாத காலமாக சாத்தானின் கைப்பாவையாக ஆட்டம் போட்டதை ஒப்புக்கொள்ளுவாரா? அப்போதாங்க அவர் பெரிய மனுஷன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)