#I. கிறிஸ்து சபையின் மறுமலர்ச்சியைக் குறித்தும் எழுப்புதலைக் குறித்தும் தாகங்கொண்டோர் பிரச்சினைக்குரியவர்கள் போலத் தோற்றமளித்தாலும் அவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது சாத்தானே.
#II. அவனுடைய இராஜ்யம் இன்றைக்கு இணையத்தைப் பொறுத்தவரை தடுமாறிக்கொண்டிருக்கிறது; அவன் கர்த்தருடைய பீடத்தில் துணிகரமாக நுழைந்து அவருடைய ஆசாரியர்களையே வசப்படுத்திக்கொண்டு செய்துவந்த சூழ்ச்சிகள் இன்று வெளியரங்கமாகிவிட்டது.
#III. இப்போது எதிர்ப்பதும் பதுங்குவதும் போல வேடமிடுவது ஊழியர்களல்ல,சாத்தானே..!
#IV. இனி அவன் ஜம்பங்கள் இங்கே பலிக்காது; ஒவ்வொரு சபையிலும் இளைஞர்களே தேவ வைராக்கியத்துடன் எழும்பி ஆவன செய்வார்கள்.
#V. தரிசனம் வெல்லும்,பகையைக் கொல்லும்,தேவஜனம் சுத்தமும் பிரகாசமுமாக ஜொலிக்கும்;அன்று தங்கம் பித்தளையைப் போலவும் வெள்ளி ஈயத்தைப் போலவும் எண்ணப்படும்.
#VI. ஜனங்கள் மனிதனின் முகம் பாராது தேவபிரசன்னத்துக்காக தாகங்கொண்டு ஏங்கி நிற்பார்கள்.இராஜ்யம் வசப்படும்.
#VII. ஆவி என்ற பெயரில் ஆலின ஆலிங்கனம் செய்து வஞ்சித்த கள்ள சாத்தான் ஆணியடிக்கப்பட்டுவிட்டான்; இனி சபைகளில் வேதத்தைக் குறித்த தாகமே ஓங்கி நிற்கும்; ஆவிகளின் கொட்டம் அடக்கப்படும். குண்டலினிகள் வழிந்தோடி கழிவாகிப்போகும்.
"ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.