இளைஞர்கள் தன்னை எதிர்த்துவிட்டார்களே என்று வெறிகொண்ட மிஸ்டர் "காம்" வரைமுறையில்லாத வார்த்தைகளால் நம்முடைய சகோதரர்களை வசைபாடி வருகிறார். அவருடைய சில வரிகளை வாசிக்கும்போது இரத்தம் கொதிக்கிறது.அவருடைய அண்மைய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்,
//கிறிஸ்தவர்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு கிறிஸ்தவத்தை சீரழிக்கத் துணிந்து இப்படிப்பட்ட "படித்த காலிகள்" வலைதளத்தில் சுற்றுகிறார்களே..!? இவர்களது எழுத்தைப் படித்தால் இவர்கள் தங்கள் சொந்த சகோதர சகோதரிகளைக் கூட நிர்வாணப்படுத்தத் துணியும் திமிர்பிடித்த படுபாவிகளைப் போலவே காணப்படுகிறார்கள்.//
இவர் தீர்க்கதரிசியோ அல்லவோ வசனம் சொல்லுகிறது, இவர் உண்மையான ஊழியராக இருந்தால் இவருடைய ஆவி இவருக்கு அடங்கியிருக்கும்; பேசும் போதாவது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடுவோம்; ஆனால் எழுதும்போது அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை; பிழைதிருத்தும் நேரத்திலேயே தகாத வார்த்தைகளைத் தவிர்க்கமுடியும்;எனவே இந்த ஆளுடைய வரிகள் மன்னிக்கவே முடியாத வகையில் சென்று சேர்ந்துவிட்டது;இதனை மேலும் அலசி சூழ்நிலையை இரசாபாசமாக்க எனக்கு விருப்பமில்லை.
ஆனால் இந்த வரிகளை வாசிக்கையில் இந்த குண்டலின் பாஸ்டர்களின் அக்கிரமங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தது;ஆவியில்லாத சபைகளில் ஏதேதோ முறைகேடுகள் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் இவர்களில் பலர் தனது பேத்தி வயதுள்ள சின்னசிறு மொட்டுகளிடம் காமசுகம் தேடும் சபலத்தை நாம் அறிந்திருக்கிறோம்;சிறுவர்களுக்கும் அங்கே பாதுகாப்பில்லை பெரும்பாலான நிகழ்வுகள் அரங்கத்துக்கு வருவதேயில்லை; சிலர் தர்ம அடி வாங்கிக்கொண்டு உள்ளாடையோடு ஓடும் சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம்.
மேலும் முன்வரிசையிலுள்ள பெண்களின் குண்டலினி சக்தியைத் தூண்டி ஆடவிட்டுவிட்டு கண்கொட்டாமல் பார்த்து இரசிக்கும் பேடிகளையும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்;சபைக்கு வரும் பெண்களை நிற்கவைத்து உணர்ச்சியைத் தூண்டி ஆவியின் பெயரால் குதிக்கவைப்பது இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.இந்த அருவருப்பை இசை வாசிக்கும் பையன்கள் உட்பட சிரித்துக்கொண்டே பார்ப்பதை வாராவாரம் காணமுடியும். அவர்கள் தன்னிலை மறந்து விழுந்து புரண்டு கொண்டிருக்கும்போது மானங்கெட்ட இந்த ஈனப்பிறவிகள் நம்முடைய சகோதரிகளை வீடியோ படமெடுத்து சட்டவிரோதமான முறையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகிறார்கள்; இந்த குண்டலினி பாஸ்டர்களின் வீட்டம்மாவுக்கு மட்டும் ஒருபோதும் ஆவி இறங்கவே இறங்காது; ஏனெனில் இவருடைய குண்டலினி மேட்டரெல்லாம் அந்தம்மாவுக்கு அத்துப்படியாச்சுதே..!
இதன்காரணமாகவே பல சகோதரர்கள் சபைக்கு வருவதில்லை;தன்னுடைய மனைவி பிள்ளைகளையும் சபைக்கு அனுப்ப மறுக்கிறார்கள்;சகோதரிகள் கணவனை எதிர்த்துக்கொண்டு வரும்போது குடும்பத்தில் வீணான பிரச்சினைகள் வருகிறது;கணவனுக்குத் தெரியாமல் சகோதரிகள் கொடுக்கும் பணத்தையும் நகைகளையும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கொள்ளையடிப்பது குண்டலினி பாஸ்டர்களுக்கு சர்வ சாதாரணம்;இதுபோன்ற மோசடி கதைகள் ஏராளம் ஏராளம் உண்டு.இவர்கள் ஆராதிப்பது ஆவியானவரையெனில் யூதரைப் போன்று ஜனங்களைப் பார்த்து ஆராதிக்காமல் பீடத்தைப் பார்த்து ஆராதிக்கட்டும்;இவர்களே தேவனைப் போல நின்று கொண்டு தேவபிரசன்னத்துக்கு முதுகு காட்டவேண்டாமே.இதற்கு மேலும் மிஸ்டர் "காம்" என்று நான் அன்போடு அழைக்கும் குண்டலினி பாஸ்டர் வாயை வானம் மட்டும் நீட்டுவாரானால் பெந்தெகொஸ்தே பாஸ்டர்களின் அனைத்து அக்கிரமங்களும் இந்த அரங்கத்தை நாறடிக்கும்; அதன் விளைவு முழுவதையும் மிஸ்டர் "காம்" அவர்களே ஏற்கவேண்டியிருக்கும் என்று மிஸ்டர் "காம்" அவர்களை அன்போடு எச்சரிக்கிறேன். மேலும் தனது வரிகளுக்காக அவர் வருத்தம் தெரிவிப்பதுடன் இதுபோன்ற அருவருப்பான கூற்றுகளை உடனே அவர் திரும்பப்பெறவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
அப்படியே நேரடி ஒளிபரப்பு மாதிரியே எழுதியிருக்கிறேனா... நாங்கல்லாம் தீர்க்கதரிசிகளின் வழித்தோன்றல்கள் அல்ல, பாம்பு பிடிக்கிறவர்களாக்கும்..!
அதான் சொல்றேன்.. ஒரு சகோதரி தனியா வந்து காணிக்கை கொடுத்தா வாங்காதீங்க...மிஸ்டர் காம்...சகோதரிகள் ஆவியில் நிரம்பி குதிக்கும்போது கண்ணை தொறந்து பாக்காதீங்க...இப்படி பொது தளத்தில் புறமுதுகிட்டு ஓடும் நிலை வாராமலிருக்க, ஜனங்களுக்கு முதுகு காட்டி தேவ சமூகத்துக்கு முகத்தைக் காட்டி ஆராதிக்க பழகுங்க...
இன்னும் வெச்சுருக்கேன் உங்களுக்கு ...பெறவு தெரியும்,யாரு சர்ப்பம் யாரு சீட்ன் என்பது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)