by Chill Sam on Wednesday, 12 October 2011 at 01:00
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்." (லூக்கா 16:9)
நம்முடைய ஆண்டவர் சொல்லிச்சென்ற இந்த வசனத்தை நாம் செயல்படுத்தினோமோ இல்லையோ உலகம் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு வேகமாக செயல்பட்டு எத்தனையோ சமுதாயத் தளங்களை உருவாக்கி நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது;அதிலும் இலவசமாக..!
ஆனால் இராஜ்யத்தின் சுவிசேஷத்தை கிருபையால் பெற்றிருக்கும் தேவஜனமோ கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பகையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது;இதில் சபைத் தலைவர்களும் விதிவிலக்கல்ல, இன்னும் அவர்களே எல்லாவற்றுக்கும் மூலக்காரணமாக இருக்கிறார்கள்;
நண்பர்களை சம்பாதியுங்கள் என்று நம்முடைய ஆண்டவர் என்ன நோக்கத்துடன் சொன்னாரோ, நாம் சம்பாதித்த நண்பர்களைவிட பகையே அதிகம் போலத் தோன்றுகிறது; என்னைப் போன்றோர் சமாதானத்தையும் இணக்கத்தையும் உறவையும் நாடி இயன்ற மட்டும் சாத்வீகமாக எழுதி வருகிறோம்; ஆனால் கொஞ்சமும் நாகரீகமில்லாமல் முகமறியாத என்னைப் போன்ற அப்பாவிகளை (?) தூஷிப்பதைக் காண சகிக்கவில்லை; என்னை நேருக்கு நேர் பார்த்து நலன் விசாரித்தறிந்து எனக்கு சிங்கிள் டீ கூட வாங்கி தராத ஒரு நண்பருக்கு என்மேல் ஏன் அல்லது எங்கிருந்து அவ்வளவு கோபமும் பகையுணர்ச்சியும் வருகிறது? மெய்யாகவே எனக்கு இரகசியம் புரியவில்லை.
ஆனாலும் பாலைவன நீரோடை போல சில நல்ல நண்பர்களையும் இந்த சமுதாய நட்புணர்வு தளங்களால் என்னைப் போன்ற வழிப்போக்கர்கள் பெற்றிருக்கிறோம் என்பதே உண்மை..!
கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால் ஃபேஸ்புக் (Facebook) தளத்தை கிறிஸ்தவ நட்புணர்வுக்கு அடையாளமான த (க) ளமாக மாற்றிட உறுதிகொள்வோம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)