Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ”சோதனைக்காரன்" என்பவன் யார்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
”சோதனைக்காரன்" என்பவன் யார்..?
Permalink  
 


by Chill Sam on Wednesday, 19 October 2011 at 09:12

சபையானது பரிசோதனைக்கு அப்பாற்பட்டது அல்ல..

by Immanuel Abraham on Tuesday, 18 October 2011 at 17:56

//சாத்தானுடைய சேனைகளின் திமிரைப் பார்க்க வேண்டுமானால்..., சில்சாம்,  விஜயகுமார்மற்றும் நவீன திவிரவாத களுடைய செயல்களைப் பாருங்கள், அப்பட்டமாகத் தெரியும். வேத வசனத்தின்படி சோதனைக்காரன் என்ற பதம் பிசாசானவனுக்கு மட்டுமே பொருந்தும்.//

420 சில்லறைப் பொறுக்கியான மிஸ்டர் காம் அவர்கள் தனது சபைக்குப் பார்வையிடுவதற்கு வரவிரும்பிய சகோதரர்களை சோதனைக்காரன் என்ற வார்த்தையினால் இகழ்ந்திருக்கிறார்; அதாவது சோதனைக்காரன் எனும் வார்த்தையானது வேதத்தில் சாத்தானைக் குறிக்கும் வார்த்தையாக இருப்பதினால் இவருடைய சபைக்கு வர விரும்பியவரும் சாத்தானின் தூதுவர்கள் என்கிறார்.

உண்மைக்கு மாறான இந்த கூற்றிலிருந்து தோன்றிய சிந்தனையே இந்த கட்டுரை. சோதனைக்காரன் எனும் வார்த்தையானது வேதத்தில் இடம்பெறும் சூழலை கவனத்தில் கொண்டு தொடர்ந்து கட்டுரையை வாசிக்கவும்.

"அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்." (மத்தேயு.4:3)

"And when the tempter came to him, he said, If thou be the Son of God, command that these stones be made bread."(Matthew.4:3)

"ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்."(1.தெசலோனிக்கேயர்.3:5)

" For this cause, when I could no longer forbear, I sent to know your faith, lest by some means the tempter have tempted you, and our labour be in vain." (1.thessalonians3:5)

மிஸ்டர் காம் அவர்கள் மிகவும் நல்லவர், திருட்டு ரயிலில் பயணம் செய்தவரல்ல; டிக்கெட் எடுத்தே பயணம் செய்வார்; ஆனாலும் டிக்கெட் பரிசோதகர் வரும்போது அவரைப் பார்த்து சாத்தான் என்ற பொருளில் சோதனைக்காரன் என்று இகழமாட்டார்;ஏனெனில் சோதனைக்காரன் என்பதற்கும் பரிசோதகர் என்பதற்குமுள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியும்.

சோதனைக்காரன் என்பவன் யார், ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகளை குற்றம் செய்தவர்களைப் போல சித்தரிப்பவன்; அல்லது குற்றம் செய்ய அஞ்சுபவர்களை குற்றம் செய்யத் தூண்டுபவன்; அல்லது செய்யாத குற்றத்தில் சிக்கவைத்து துன்புறுத்துபவன்;இதுபோன்ற செயல்களைச் செய்வோருக்கு இந்த தேசத்தில் பஞ்சமே இல்லை.

அதன்படி டிக்கெட் பரிசோதகர் ஒரு பயணியின் டிக்கெட்டை பரிசோதிக்கும்போது அவர் தனது பணியை செய்கிறார்; ஆனால் அவரே பயணியின் டிக்கெட்டை கையில் வாங்கியதும் கிழித்துப்போட்டுவிட்டு உள்நோக்கத்துடன் அவரைக் குற்றப்படுத்தி அந்த பயணியை டிக்கெட் வாங்காதவரைப் போல கீழ்த்தரமாக நடத்தி தண்டிப்பாரானால் அவர் பரிசோதகர் அல்ல,சோதகர்; ஆம்,பரிசோதகர் எனும் வார்த்தையிலுள்ள பரி.எனும் வார்த்தையானது தூய்மையான என்பதைக் குறிக்கும் அல்லவா?

எனவே வேதத்தில் சோதனை என்பதற்கு இரண்டுவிதமான பொருள் உண்டு என்பதை நாம் அறியவேண்டும்; ஆண்டவர் என்னை ரொம்ப சோதிக்கிறார் என்று சொல்வதற்கும் சாத்தான் சோதிக்கிறான் என்பதற்கும் வித்தியாசமுண்டு; இந்த வேறுபாடு ஆங்கிலத்தில் வாசித்தால் விளங்கும். ஆங்கிலத்தில் டெம்ப்ட்டர் (Tempter) என்றும் டெஸ்ட்டர் (Tester) என்றும் வித்தியாசப்படுத்தப்படுகிறது; இதன்படி சாத்தான் சூழ்ச்சியான திட்டத்தோடு பாவம் செய்யத் தூண்டுகிறான்; எனவே அவன் டெம்ப்ட்டர்.(Tempter) ஆண்டவரோ நம்முடைய விசுவாசத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சின்ன சின்ன பாடுகளை அனுமதித்து பொறுமையை விளங்கச்செய்வதால் டெஸ்ட்டர் (Tester) என்று கொள்ளலாம்.

இந்த உட்பொருட்களைக் கூட அறிய மனமில்லாதவர்களே இன்று ஆவிக்குரிய சபைகளின் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளுகிறார்கள்;இவர்களெல்லாரும் சோதனைக்கு அப்பாற்பட்டவர்களாம்; ஐயா உங்களுக்கு பசி,தாகம்,காம வேட்கை,தூக்கம் போன்ற புலன்களின் சோதனை இருக்கிறதல்லவா,அப்படியானால் நீங்கள் நிச்சயம் சோதனைக்கு அப்பாற்பட்டவரல்ல; உங்களுக்கு இது சம்பந்தமான மற்ற சங்கடங்களும் அழுத்தங்களும் இருந்தே தீரூம்.

உதாரணமாக புலன்களின் சோதனையைத் தாங்கமாட்டாமல் அதனை நிறைவேற்ற நீங்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளில் சாத்தான் குறுக்கிடுவான்;ஆண்டவரும் அருகில் நிற்பார்;உங்கள் செயல்களை இந்த ரெண்டு அமைப்பும் பார்வையிடும்;ஒன்று சோதிக்கும் அமைப்பு இன்னொன்று பரிசோதிக்கும் அமைப்பு.இதன்விளைவாக உங்கள் மாம்சத்தில் இப்போது சர்க்கரை வியாதி. இரத்தக்கொதிப்பு,கொலஸ்ட்ரால் போன்ற பெலவீனங்களும் தோன்றி உங்கள் உடலின் உள் உறுப்புகளும் வெளி உறுப்புகளும் சேதமடைந்திருக்கிறது.

எனவே நீங்கள் சோதனைக்காரனிடம் சென்றே ஆகவேண்டும்; அதாவது இரத்தத்தையும் மலத்தையும் சிறுநீரையும் சோதிக்கும் சோதனைக்காரனிடம் செல்லவேண்டும்;நீங்களெல்லாம் பரிசுத்தவான் என்பதால் உங்கள் மூத்திரமும் மலமும் அபிஷேகத்தில் நிரம்பி வழியாது;உங்கள் மூத்திரத்தையும் மலத்தையும் சங்கடமில்லாமல் கையில் வாங்கி பரிசோதிப்பவன் சாத்தான் கிடையாது; அவன் தரும் சோதனை அறிக்கையினால் நீங்கள் உங்கள் பிரச்சினையை அறியவும் மருத்துவம் செய்து உயிர் பிழைக்கவும் வழியுண்டாகும்.

சோதனைக்காரன் தொடர்பாக இதுபோன்ற உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்; சோதனை செய்தல் என்பதை பார்வையிடுதல் என்றும் சொல்லலாம்;உதாரணமாக ஒருவர் தனது வரவு செலவு கணக்கை தாக்கல் செய்கிறார் எனில் அதனை பார்வையிடுபவர் சோதனைக்காரன் அல்ல, அவர் பரிசோதிப்பவர்; ஆனால் அதில் எந்த தவறும் இல்லாதிருக்கும்போது மிரட்டி லஞ்சம் கேட்பவரே சாத்தானின் தூதுவர். கொடுப்பவரோ சாத்தானின் அடிமை ஆவார்.

420 சில்லறைப் பொறுக்கியான மிஸ்டர் காம் அவர்கள் தான் சாத்தானின் தூதுவனாக இருந்து கொள்ளையடித்து வைத்திருப்பவற்றையும் அவனுடைய ஆவியினால் பீடிக்கப்பட்டு நடத்தும் ஊழியத்தையும் பார்வையிட அனுமதிக்க மறுப்பதில் வியப்பேதுமில்லை;ஏனெனில் அவரை பரிசோதிக்க அல்லது அவரது ஊழியத்தின் வெற்றிகளைப் பார்வையிட விரும்பியவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதே இந்த இடைவெளிக்கும் எரிச்சலுக்கும் காரணமாக இருக்கமுடியும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard