by Chill Sam on Wednesday, 19 October 2011 at 13:23
இன்று காலையில் என்மீது அக்கறைகொண்ட ஒரு தெக்கத்தி நண்பர் போன்செய்து நான் 420 பார்ட்டியை அடிப்பேன் என்று எழுதிவிட்டதாகக் கூறி,வருத்தப்பட்டு,பாத்து எழுதுங்க ப்ரதர், என்றார்; நான் அதிர்ச்சியுடன் மறுத்தாலும் இல்லை அந்த வரிகளை வாசிக்கும்போது அதுபோன்ற அர்த்தமே வரும் என்றார்; நான் அந்த வரிகளைத் தேடியெடுத்து வாசித்துப்பார்த்தேன். அது பின்வரும் வரிகளே; அதில் நான் வெறுத்துப்போய் ஒதுங்குவதாகச் சொன்னபோது அந்த ஆள் பின்வரும் வரிகளால் என்னை சீண்டுகிறார்.
//Chill Sam ஹே சில்லற எங்கய்யா போகிறீர்? நில்லும் இன்னும் உங்க நாறவாய் வழியே இருதயத்திலுள்ளதெல்லாம் வரட்டும் என்னவெல்லாம் வருதுன்னு..? பார்ப்போம்.//
நான் பதிலுக்கு, // அடேய் மொக்கை சாமி...உனக்கு பயந்துக்கிட்டு நான் எங்கயும் போகலை... உன்னைப் போல போலி பெயரில் எழுதும் பேடி நான் அல்ல...இதோ இப்படித்தான் நேருக்கு நேராக அடிப்பேன்... வலிச்சா பொறுத்துக்கோ...வழிஞ்சா துடைச்சுக்கோ... உன்னைப் போல மொட்டைக் கடிதாசி பார்ட்டி நானல்ல...// என்று எழுதுகிறேன்; இதில், // இதோ இப்படித்தான் நேருக்கு நேராக அடிப்பேன்...// என்ற வரிகளே அந்த ஆளை நான் அடிப்பேன் என்று சொன்னதாக அர்த்தப்படுகிறதாம்; இதில் அதுபோன்ற அர்த்தம் வருமானால் நண்பர்கள் சொல்லட்டும்,நான் மன்னிப்பு கேட்கிறேன்.
சிலர் முதுகில் குத்துகிறார்கள், சூழ்ச்சி செய்கிறார்கள்,நான் கைக்கூலி என்று அவதூறு செய்கிறார்கள், போலிப் பெயரில் எழுதுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள், இன்னொரு ஆணின் நெஞ்சை நக்குவதாக எழுதி அவமானப்படுத்துகிறார்கள்; இதையெல்லாம் எழுதுவது ஆவிக்குரிய சபைகளின் பாதுகாவலராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு மனுஷன்; ஆனால் அந்த ஆளுக்கு உள்ளூரிலேயே நல்ல பெயர் இருப்பதாகத் தெரியவில்லை;ஆனால் நானோ நடுநிலையுடன் பிரச்சினைகளின் அடிப்படையில் எழுதிவருகிறேன்; நேருக்கு நேராக பெயரைக் குறிப்பிட்டு ஆதாரத்துடனே எதையும் எழுதுகிறேன்;அந்த பொருளிலேயே நேருக்கு நேராக "இதுபோல" அடிப்பேன் அதாவது தாக்குவேன்,அதாவது எழுத்தால் தாக்குவேன் என்கிறேன்.
Christopher Danasingmathavangala kurai solluradha kuraichuko sam its not good god not like this
Christopher Danasing தயவுசெய்து... தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுகிறேன், பொத்தாம்பொதுவில் இதுபோல என்னை குறைசொல்லுபவனாக சித்தரிக்காதிருங்கள்; என்னுடைய நோக்கம் அதுவல்ல, வேதத்துக்கு முரணானவற்றைப் போதிப்பவர்களும் செயல்படுவோரும் கேள்விகேட்க முடியாதவர்கள் அல்ல.
இந்தியா போன்றதொரு ஜனநாயக நாட்டில் இருந்துகொண்டு நீங்கள் இவ்வளவு குறுகிய மனதுடன் எப்படி சிந்திக்கிறீர்கள்?
மீடியா என்பது என்ன,குறைகளை அறிவதும் அதனை களைவதும்தானே..? குறைகளை ஏன் களையவேண்டும், எப்படி களையவேண்டும் என்று கேளுங்கள், சொல்லுகிறோம்..! அல்லது குறைகளைக் களைவோரின் தகுதி என்னவென்று சொல்லுங்கள், கேட்டுக்கொள்ளுகிறோம்.
ஆனால் குறைகூறுவதே தவறு என்பீர்களாகில் பிரச்சினை ரொம்ப முற்றிவிடும் ஆபத்து உண்டு.
//i know that but avangala kadavul pathupar sam bcoz they cheating in god name so adhapathi neenga kavala padatheenga sam //
ஒரு மனுஷன் தனக்குத் தானே செய்துகொள்ளும் கேடுகளுக்கும் சமுதாயத்துக்கு செய்யும் கேடுகளுக்கும் வித்தியாசமுண்டல்லவா..?
அதன்படி மோசடியாளர்கள் சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இது தான் கிறிஸ்தவமோ என்று பொதுமக்கள் எண்ணிவிடாதவண்ணம் சரியானதை ஓங்கி சொல்லியாக வேண்டும், நண்பரே.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)