"இறைவன்" எனும் தளத்தில் பதித்த இந்த பதிவே எனது இறுதி பதிவாகிவிட்டது.ஒரு வாரத்துக்கு முன்பதாகவே என்னை நீக்கியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.ஆனால் ஏனோ நீக்கவில்லை.மிருகங்கள் இப்படியே நடந்துகொள்ளும்.தன்னிடம் சிக்கிக்கொண்ட இரையை முழுவதும் அடித்து சாப்பிடாமல் கொஞ்சமாக துன்புறுத்தி திடீரென்று அடித்து கொன்று ஆசையைத் தீர்த்துக்கொள்ளும்.அவ்வாறே தினமும் ஆவியில் நடத்தப்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் சுந்தர் அவர்களும் நடந்து கொண்டிருக்கிறார்.சுந்தர் அவர்களின் சுந்தரமான முடிவுக்காக ஒரு நன்றி..!
இந்த வரிகள் என்னுடையது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். அது ஜாமக்காரன் இதழிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இனி ஒரு பதிவு போட்டால் நீக்கிவிடலாம் என்று காத்திருந்தாரோ என்னவோ, எப்படியிருந்தாலும் வெளிப்படையாக செயல்படாத இவர்களெல்லாம் சேர்ந்து தேவ ராஜ்யத்தைக் குறித்து ஆராய்ச்சி செய்வதாக சொல்லிக்கொள்ளும்போது சிரிப்பாக இருக்கிறது. இவர்கள் ஆவியின் பெயரால் எதைவேண்டுமானாலும் யோசித்து கொள்கைகளையும் போதனைகளையும் அறிவிக்கலாம்.ஆனால் எதிர்கருத்து சொல்லுவோர் ஓடிவிடவேண்டும் என்பது சாத்தானின் குணம் அல்லவா ?
-- Edited by HMV on Friday 9th of December 2011 07:53:09 AM
// சரி, நீ பேசும் பாஷையில் உனக்கு திருப்திதானா? நீயே சொல்! பாஷையில் நீ கர்த்தரிடம் பேசியது என்ன? அல்லது உனக்கு பதிலாக ஆவியானவர்தான் பாஷை மூலம் உன் வாய்வழியாய் பேசினார் என்று எல்லாரும் கூறுவார்களே, அப்படியே வைத்துக்கொண்டாலும் உன் வாய் வழியாய் ஆவியானவர் பேசியது உனக்கு விளங்கினதா? என்றேன். அப்பப்பா! என்னை குழப்பாதீர்கள்! ஆவியில் நிறைந்து பாஷைகள் பேசி நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றாள். அதன்பின் என் மனைவியின் உற்சாகத்தை கெடுக்க நான் விரும்பவில்லை. அநேக நாட்கள் கர்த்தரின் பாதத்தில் இவைகளைக் குறித்து மிகவும் யோசித்தேன். என் சபையைச் சேர்ந்த சில குடும்பங்களோடு இவைகளைக்குறித்து பேசி பகிர்ந்துக்கொண்டேன். நீண்ட நாட்கள் நாங்கள் கூடி அடிக்கடி இதைக்குறித்தே பேசிக்கொள்வோம்.//
மேற்கண்ட வசனத்தை அறிந்தும் பலர் அதேபோன்ற பல பாஷை அனுபவத்தைப் பெறாதிருக்கிறார்களே என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள்; தனக்கு புரியும் இந்த வசனத்தின் அர்த்தம் பலருக்கு புரியவில்லையே என்றும் அங்கலாய்க்கிறார்கள். பிரச்சினை அதுவல்லவே, அன்று மேல்வீட்டறையில் பேசிய பல பாஷையின் அனுபவத்தில் அவர்கள் பேசியது அனைவருக்கும் புரிந்தது; நீங்கள் பேசுவதோ உங்களுக்கே புரிவதில்லை என்பதே பரிதாப நிலையாகும்; தவளையின் சத்தத்துக்கும் இடம் சுட்டி பொருள் விளக்கும் தீர்க்கதரிசிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள், ஐயா..! வயர்லெஸ் செட்டில் பேசுபவர் அவ்வப்போது "ஓவர்.. ஓவர்.." என்பது போலவே அர்த்தமில்லாததாகவும் சம்பந்தமில்லாததாகவும் இருக்கிறது நீங்கள் பேசும் அயல்மொழி..!
வசனத்தை நன்றாக கவனியுங்கள்,அன்று மேல்வீட்டறையில் கூடியிருந்தோர் பரி.ஆவியினால் நிரப்பப்பட்டு அயல்மொழி பேசினர்,எனவே எல்லோருக்கும் புரிந்தது;இன்றோ நீங்கள் பரி.ஆவியினால் நிரப்பப்படாமலே பேசுவதால் யாருக்கும் புரியவில்லை என்கிறேன்; பிரச்சினை எங்கே என்று புரிகிறதா..? சரி, பரி.ஆவியினால் ஒருவன் நிரப்பப்பட்டதன் அடையாளம் என்ன, அது அவன் அல்லது அவள் வாழ்க்கையில் வெளிப்படும் கனிகளாலேயே அறியப்படும்.எல்லோரும் பாஷை பேசுகிறார்களா, என்ன? பாஷை பேசாதவர்கள் மனிதர்கள் இல்லையா? செவித்திறன் இழந்தோரும் பேசும்திறன் இழந்தோரும் ஓவியத்திலும் இசையிலும் நடனத்திலும் சாதிக்கவில்லையா..?
OK, ஒரே ஒரு பிரபலமான அயல்மொழி வார்த்தைக்கு தயவுசெய்து யாராவது அர்த்தம் சொல்லுங்களேன்... "சங்கரலபலபா..!" இதில் சங்கர் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வருவதால் சங்கர் அல்லது சங்கரன் என்ற ஆளுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்கிறார்களா..?
எந்த இலக்கும் இல்லாமல் ச்சும்மா ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவதிலும் மழைக்காலத் தவளையைப் போல விடிய விடிய கத்துவதிலும் உனது சக்தியை செலவிடாமல் அந்த "உன்னத பெலனை" ஆத்தும ஆதாயம் செய்வதில் செலவிடுவாயா, நண்பனே..? ஆயிரங்கள் வயிறு பசித்திருக்க, மேல்வீட்டறையில் திருப்தியாக விருந்துண்டேன் என்பாயாகில் வாந்திபண்ணிப் போடப்படும் ஆபத்து உண்டு,ஜாக்கிரதை..!
"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து...எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்." (அப்போஸ்தலர்.1:8)
பரி.ஆவி வந்து பெலனடையச் செய்தது அயல்பாஷை பேசுவதற்கல்ல, சாட்சியாக நிற்பதற்கே; சாட்சியாக நிற்பது என்பது பாஷை பேசுவதல்ல,எஜமான் சொன்னதை செய்வதே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)