Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தவளை வித்துவான்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
தவளை வித்துவான்கள்..!
Permalink  
 


by Chill Sam on Monday, 24 October 2011 at 01:43

// தேவனையே நோக்கிப் பார்த்து எல்லா விதங்களிலும் விசுவாசத்தில் வளரும் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகளுக்குள் அதிகாரம் செலுத்துவதற்கு ஒழுங்கற்றுத் திரிகிற எந்த ஒரு நபரையும் குழுக்களையும் அரசாங்கத்தையும் பரிசுத்த வேதாகமும் தேவ ஊழியக்காரர்களும் அனுமதிப்பதே இல்லை.//

இது ஒரு பெந்தெகொஸ்தே சபைத் தலைவரின் அறிவிப்பு; சபை என்பது ஏதோ சுயாட்சி அதிகாரம் பெற்ற தனிஅமைப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்,இந்த தவளை வித்துவான்கள்..! அப்படியானால் பெந்தெகொஸ்தே பாஸ்டர்களுக்கு வங்கி கணக்கு இல்லையா...அறக்கட்டளை அமைக்கப்படவில்லையா...அவர்கள் பெயரில் சொத்துக்கள் இல்லையா...காணிக்கை பணத்துக்கு வரவு- செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுவதில்லையா...? அது தணிக்கை செய்யப்படுவதில்லையா..?

ஒழுங்குபடுத்தப்பட்ட சபைகளில் ஊழலும் திருட்டும் இருப்பதை மறுப்பதற்கில்லை;ஆனால் அவற்றுக்கும் கணக்கு இருக்கிறது; கேள்வி கேட்க ஒரு அமைப்பு இருக்கிறது;அது தேசத்தின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்பட்டே இயங்குகிறது; ஆனால் பெந்தெகொஸ்தே சபைகளிலோ எந்த கணக்கும் இல்லை,எனவே வழக்கும் இல்லை. ஒழுங்குபடுத்தப்பட்ட சபைகளில் ஊழல் குற்றச்சாட்டு எழுவதற்குக் காரணமே அங்கிருக்கும் கட்டுப்பாடு தான்;ஆனால் பெரும்பாலான ஆயர்கள் சொந்தமாக காரோ வீடோ இல்லாமல் தாங்கள் மாற்றப்படும் இடத்துக்கெல்லாம் தியாகத்துடன் சென்று ஆண்டவரை மட்டுமே முன்னிறுத்தி பணிசெய்து ஓய்வுபெற்றிருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்; அவர்களெல்லாம் இந்த பெந்தெகொஸ்தே போதகர்களைப் போல துணிகரமாகவும் பதட்டமாகவும் பேசவே மாட்டார்கள்; அவர்களுடைய அடையாளமே அவர்களுடைய முகத்தில் தவழும் அமைதியும் சாந்தமுமே.

ஆனால் இந்த பெந்தெகொஸ்தே போதகர்களைக் குறித்து ஆண்டவர் தீர்க்கன் மூலம் பின்வருமாறு இடித்துரைக்கிறார்,  "அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்; திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்."(ஏசாயா.56:10,11)

இந்த பெந்தெகொஸ்தே வாயாடியின் அறிவிப்பு என்ன சொல்லுகிறது,என்னுடைய சபைக்குள் ஒரு குழுவையோ அரசாங்கத்தையோ கேள்வி கேட்க அனுமதிக்கமாட்டேன்;காரணம் வேதமும் அதை அனுமதிக்கவில்லை என்பதாக;இவரை கேள்வி கேட்கவோ கணக்கு கேட்கவோ யாரையும் அனுமதிக்கமாட்டாராம், ஆனால் வேதமும் அனுமதிக்கவில்லை என்பது வேதப்புரட்டல்லவா..?

பவுலடிகளைவிட பெரிய ஊழியக்காரரா,இவர்..? பின்வரும் வசனத்தில் மாத்திரமல்ல, பல இடங்களில் காணிக்கையைக் குறித்தும் அதனை நிர்வகிக்கவேண்டிய ஒழுங்கைக் குறித்தும் இன்னும் அரசாங்கத்துக்கும் அதன் அதிகாரிகளுக்கும்  முன்பாக சபையார் சாட்சியுடன் நடந்துகொள்ளவேண்டியதைக் குறித்தும் வேதம் சொல்லவில்லையா..?

"இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்." (அப்போஸ்தலர்.24:16,17)

ஒழுங்குபடுத்தப்பட்ட சபை நிர்வாகம் அரசாங்கத்தில் சர்ச் என்றே பதிவுசெய்யப்பட்டு இயங்குகிறது; ஆனால் பெந்தெகொஸ்தே சபைகளோ பெயர்ப் பலகையில் ஒன்றாகவும் அரசாங்கத்தில் வேறொன்றாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது;எப்படியெனில் அரசாங்கத்தில் அறக்கட்டளை என்று பதிவு செய்யப்பட்டிருக்கும்; சபைக்கோ ஜெப வீடு என்ற பொதுவான பெயர் இருக்கும்; அறக்கட்டளை விதியின்படி அதனை நிர்வகிக்கும் உரிமையைத் தவிர வேறெந்த உரிமையும் அதன் நிர்வாகிக்கு இருக்காது;ஆனால் உண்மையில் அந்த நிர்வாகி அரசாங்கத்தை ஏமாற்ற பெயருக்கு ஒரு அறக்கட்டளையை நிறுவிவிட்டு சொத்துக்களையோ தன் பெயரிலோ தன் மனைவி பெயரிலோ வாங்குவார்;காணிக்கை பணத்தையோ முழுக்க முழுக்க சொந்த செலவுகளுக்கும் சிடி போட்டு வியாபாரம் செய்வதற்கும் செலவிடுவார்;சிடி விற்று கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரியோ விற்பனை வரியோ செலுத்துவதில்லை;போதாக்குறைக்கு நிலபேரம் திருமண பேரம் முதலிய பக்கவழி வருமானங்களும் வகைதொகையின்றி குவிகிறது;எனவே இவர்களுடைய ஊழியத்தில் ஒருவித திமிர்த்தனமும் ஆணவமும் காணப்படும்;தாழ்மையென்பதே இருக்காது; எஜமானர்களைப் போலவே நடந்துகொள்ளுவார்கள்; ஏழைகள் வீட்டுக்குப் போகமாட்டார்கள்; ஏழைகளுக்கு கல்விக்காகவோ சுகவீனங்களுக்காகவோ திருமணம் மற்றும் வீடு கட்டும் காரியங்களுக்கோ உதவி செய்யமாட்டார்கள்;ஆனால் அந்த ஏழை மக்களின் தசமபாகத்தை மட்டும் மிரட்டி உருட்டி வாங்கிவிடுவார்கள்;தசமபாகத்தைக் குறித்து நேரடியாக பேசாவிட்டாலும் தங்கள் கைத்தடிகளை விட்டு மறைமுகமாக சாட்சி என்ற பெயரில் எடுத்துவிடுவார்கள்.

இப்படி பல வகைகளிலும் வந்து குவியும் திரளான பணத்துக்கு கணக்கு தரமாட்டார்களாம்; அரசாங்கமோ சபையின் மூப்பரோ இவர்களை கேள்வி கேட்கமுடியாது வேதமே சொல்லிவிட்டதாம், தவளைக்கு தீர்க்கதரிசனம் சொல்லி பிழைக்கும் சர்ப்பங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சபையாரை வேண்டுகிறேன்.

மேற்கண்ட கருத்தின் பாதிப்பில் என் மனதில் உதித்த கருத்து, இதனை எனது வதனநூலின் தனி விவர பக்கத்தில் பதித்திருக்கிறேன், அது...

”அபிஷேகம் நிறைந்த- ஒழுங்குபடுத்தப்பட்ட- நிர்வாக அமைப்புள்ள சபைகள் இன்றைய தேவை. மார்க்க கல்வி இன்றியமையாத உடனடி தேவை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard