// பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்கள் கூடும் இடம் சபையல்ல, பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்களே சபை //
இது நண்பர் விஜய் அவர்களின் கூற்று; இதில் ஜனங்கள், சபை, பிரித்தெடுத்தல், கூடுமிடம் ஆகிய முக்கிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது; இதனை ஆடுகள் மந்தை கூடுமிடம் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் தனி மரம் தோப்பாகாது என்பது போல ஒரு ஆடு என்பது மந்தையாகாது; ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகளையே மந்தை என்கிறோம்; அவை எங்கே ஒன்றுகூட்டப்படுகிறதோ அந்த இடமே கூடுமிடம் அல்லது தங்குமிடம் என்று சொல்லப்படுகிறது; இதன்படி மந்தையானது மேய்ச்சலுக்கு செல்லும் போதும் திரும்பவரும்போதும் பராமரிக்க ஒரு கண்காணி தேவைப்படுகிறான்.அந்த கண்காணி உண்மையானவனாக இராதிருந்தாலோ பொறுப்பில்லாதவனாக இருந்தாலோ மந்தைகளுக்கு ஆபத்துதான்;ஒன்று ஆபத்து உள்ளேயிருந்து வரும் அல்லது வெளியிலிருந்து வரும்;எப்படியோ ஆடுகளே நஷ்டப்படும். மந்தையின் மேய்ப்பன் மாத்திரமல்ல,ஆடுகளும் அவற்றின் குணாதிசயத்துக்கு ஏற்ப பல்வேறு ஆபத்துகளுக்குள்ளாகிறது;அப்போது மேய்ப்பன் உண்மையாக இருந்தும் ஆடுகளின் சுயாதீனத்தால் உண்டான இழப்பு மேய்ப்பனுக்கே துக்கமாகிறது.
இதனால் நான் சொல்ல வருவது யாதெனில் ஆடுகளோ மந்தையோ கண்காணியில்லாமல் அதன் நோக்கம் முழுமையடையாதது போலவே சபை கூடிவருதலை சார்ந்து தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாத விசுவாசியின் அழைப்பும் முழுமையடையாது;இயேசுவானவர் சிந்திய இரத்தத்தின் நோக்கமும் நிறைவுபெறாது.
எனவே நண்பர் விஜய் அவர்களின் கூற்றினால் இலக்கணப் பிழை மட்டுமல்ல, கருத்து பிழையும் உண்டாகுமோ என்று யோசிக்கிறேன்; அவர் தனது கருத்தை விவரித்தால் ஒருவேளை தெளிவுண்டாகலாம்;
நான் சொல்லுவது // பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்கள் கூடும் இடமே சபை, பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்களே சபையல்ல..!//
ஆலயத்தில் ஆர்கன் எனும் இசைக்கருவி இருக்கிறது;அதில் குறைந்தது ஐந்து ஆக்டட் இருக்கும்;அதைப் போன்றதே சபையும்;
வீணையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இணைக்கப்பட்ட நரம்புகள் வீணையல்ல,வீணையில் இணைக்கப்பட்டு இசையாக இனிப்பதே நரம்புகள்.
மரம் ஆப்பிள் அல்ல,மரத்தில் ஆப்பிள் பழுத்திருக்கிறது; பறித்து உண்போம், பசியாறுவோம்..!