by Chill Sam on Wednesday, 26 October 2011 at 02:22
நண்பர் விஜய் அவர்களின் முகப்பில் கீழ்க்கண்ட அருமையான கருத்து இடம்பெற்றிருக்கிறது;அந்த கருத்துக்கு எதிராக அல்ல அதனை இன்னும் ஆழமாக யோசித்து அந்த குறிப்பிட்ட கருத்தின் மறுபக்கத்தை நான் அலசுகிறேன்.
Bro.Justice Boshoff: When you talk about Jesus the first thing people ask you is: "Which church do you belong to?" - The disciple's reply: I belong to Jesus and I am the church, the temple of the Holy Spirit. I am part of the Body of Christ of which JESUS is the Head. My fellowship is with Jesus, my Lord and Master. I make disciples of Jesus and teach them to OBEY and follow Jesus
விசுவாசிகளிடத்தில் இயேசுவைப்பற்றிப் பேசுகையில் அவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி “நீங்கள் எந்த சபையைச் சார்ந்தவர்?” என்பதாகும். இக்கேள்விக்கு ஒரு சீஷன் என்ன பதிலளிப்பான் தெரியுமா? நான் இயேசுவைச் சார்ந்தவன், நானே பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யும் ஆலயமாய் இருக்கிறேன், நான் இயேசுவைத் தலையாகக் கொண்ட சரீரத்தின் ஒரு அங்கம், என் ஐக்கியம் என் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவுடன் இருக்கிறது. நான் சகல ஜனங்களையும் சீஷராக்கி இயேசுக்குக் கீழ்ப்படியும்படியும் அவரைத் பின்பற்றும்படியும் அவர்களுக்கு போதிக்கிறேன். - ஜஸ்டிஸ் போஷாஃப்
அதில் நான் பதித்துள்ள கருத்து... // நான் யாரையும் அதுபோன்ற கேள்விகளால் துன்புறுத்துவதில்லை; ஆனால் ஒரு கேள்வியை கட்டாயம் கேட்பேன்,அது என்னவென்றால்,"நீங்க எந்த ஐக்கியத்தில் (fellowship) இருக்கிறீர்கள்..?"//
சில புத்திசாலிகள் மேதாவித்தனமாக சொல்லுவார்கள், "எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." என்பதாக. ஆனால் பின்வரும் வசனத்தின் முற்பாதியிலுள்ள கருத்தை யாராவது கவனிப்பார்களா,"நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி..."
ஆம்,தேவனோடு மாத்திரமல்ல,கர்த்தருடைய பிள்ளைகளோடும் ஐக்கியம் வேண்டும்; மாத்திரமல்ல, ஒவ்வொரு ஆத்துமாவும் இன்னொரு முதிர்ச்சியடைந்த ஆத்துமாவோடும் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
"நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது."(I யோவான் 1:3)
உதாரணமாக அரசியலில் சேரமாட்டேன் என்று கூறி இயக்கம் தோற்றுவித்த அன்னா ஹஸாரே சூழ்நிலையின் கட்டாயத்தினால் ஒரு இயக்கத்தை அல்லது அமைப்பை தோற்றுவித்திருக்கிறார்; அதில் பல்வேறு குளறுபடிகளும் நிதிமோசடி குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கிறது;ஊழலுக்கு எதிராகப் போராடியவரின் அமைப்பே நிதிமோசடி குற்றச்சாட்டில் சிக்குவது வேடிக்கையானது தானே..? மனிதனால் தோற்றுவிக்கப்படும் எந்தவொரு அமைப்புமே பிரச்சினைக்குள்ளாகிறது என்பதால் அமைப்பே தேவையில்லை என்று சொல்லுவோமா..?
42 வருடங்களாக சர்வாதிகாரம் செய்த கடாஃபி வதம் செய்யப்பட்டிருக்கிறார்;இனி அந்த தேசம் சுதந்தர தேசமாம்;ஆனால் அதற்கு இனி தலைவரே இல்லை என்பது அர்த்தமல்ல;அந்த தலைவரும் இன்னொரு உலகளாவிய அமைப்புக்குக் கீழ்பட்டிருப்பார்;இதனை கிறிஸ்தவம் அல்ல,மோசேயின் காலத்திலேயே தேவன் கொடுத்துவிட்டார். பிரச்சினை என்னவென்றால் யாருமே சரியில்லை என்பவர் தானும் ஏதோ ஒன்றில் சரியில்லாதிருப்பார்; (இதற்குக் காரணம் அவர் தான் மட்டுமே சரியானவன் என்று எண்ணுவதே..) ஏனெனில் நாமெல்லாருமே மனிதர்கள்..!
மற்றொரு உதாரணமாக ஒரு மாணவன் அல்லது மாணவி நானே பள்ளி எனக்கென்று தனி பள்ளியும் தேவையில்லை ஆசிரியரும் தேவையில்லை,நான் படிக்கும் சம்பந்தமான அனைத்து விரிவுரைகளும் உபக்ரணங்களும் புத்தகத்திலும் இணையத்திலும் கிடைக்கிறது எனவே நான் எந்தவொரு அமைப்புக்கும் கட்டுப்படாமல் நேரடியாக தேர்வுக்கு செல்லுவேன்,முதல் வகுப்பில் தேர்ச்சியடைவேன் என்று சொல்லமுடியுமா..?
அதேபோல கிறிஸ்துவைப் பின்பற்றும் தீர்மானத்துடன் மனந்திரும்பும் ஒவ்வொரு சீடனும் கட்டுப்பாடானதும் நேர்மையானதுமான ஒரு அமைப்புக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட மேலாண்மை அல்லது தலைமைத்துவத்தின் கண்காணிப்புக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ளவேண்டும்; ஒருவேளை அதுபோன்றதொரு அமைப்பு வானத்தின் கீழெங்கும் இல்லை என்போமாகில் நிலைமை மிகப் பரிதாபமே அல்லது ஏதோவொரு அமைப்பை முன்னிறுத்தி அதற்காக வைராக்கியங்கொண்டாலும் அதுவும் ஆபத்தானதே;
ஒரு குறிப்பிட்ட அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டால் வெளியேறுவதும் பின்மாற்றத்தைத் தவிர்க்க புதிய அமைப்பை உருவாக்குவதும் அவரவருடைய ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடிப்படையில் தொடர்ந்து முன்னேறி செல்லுவதும் ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசியின் உரிமையாகும்.
மூன்றில் ஒருவராக பத்தில் ஒருவராக இருபதில் ஒருவராக நூறு பேருக்கு ஒருவராக நடத்துவோர் வழிகாட்டிகள் வேண்டும்;அவர்கள் முன்னோடிகளாகவும் முன்மாதிரிகளாகவும் விளங்கவேண்டும்; அந்த மாதிரியானது கிறிஸ்துவின் மாதிரியாக இருந்திடல் வேண்டும்; கிறிஸ்துவின் மாதிரி என்பது என்ன? கிறிஸ்துவானவர் தம்மை பின்பற்றிச்செல்ல தம்முடையவர்களை அழைத்தாலும் அவர் எப்போதும் பிதாவையே முன்னிறுத்தினார்;அதேபோல நாமும் கிறிஸ்துவை முன்னிறுத்தி நம்மைத் தொடரும் சீடர்களை நடத்தவேண்டும்; இந்த அமைப்பு தொழில்முனைவோர் (entrepreneur) மத்தியில் பிரபலமாக இருக்கும் தொழில் ஆலோசகர் (Mentor) அல்லது வழிகாட்டியின் பணியைப் போன்றதே.
குழுவின் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தை முன்னிட்டு குழுவானது சிறியதாக இருப்பது நல்லது; இதன்படி ஒரு குறிப்பிட்ட வட்டார சபையில் அதிகபட்சம் 300 குடும்பங்களுக்கு மேல் இருக்கக்கூடாது; சபையின் தலைவர் அல்லது மேய்ப்பர் இதனை உணர்ந்து விட்டுக்கொடுக்காவிட்டால் சூழ்நிலையே அதனை சாதிக்கிறது;சபைகள் பல்வேறு காரணங்களுக்காக உடைகிறதாக சொல்லப்பட்டாலும் அவை பெருக்கமடைகிறது என்பதே உண்மை. குழுவானது கூடும் பொதுவான இடம். நிதி ஆதாரங்கள். ஒழுக்கவிதிமுறைகள் எல்லாவற்றையும் வகையறுத்து கண்டிப்புடன் கடைபிடிக்கவேண்டும்.
தேவைப்பட்டால் தொடருவேன்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)