Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஸ்தாபனங்கள் அல்லது சபைகள் (Denominationalism) ஒழிக்கப்படவேண்டுமா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: ஸ்தாபனங்கள் அல்லது சபைகள் (Denominationalism) ஒழிக்கப்படவேண்டுமா..?
Permalink  
 


chillsam wrote:
நீங்கள் குறிப்பிட்ட சிந்தனையிலும் கூட இறுதியில் எப்படி முடிகிறது, //அவர்களுக்கு போதிக்கிறேன் // யாருக்கு போதிக்கிறீர்கள்,  உங்களுக்கு நீங்களே..? அல்ல,குறைந்தது மூன்று, ஏழு, பன்னிரெண்டு என்று நீங்கள் போதிக்கும் எல்லை விரிவடைந்துகொண்டே இருக்கிறதல்லவா, அப்படியானால் நீங்கள் போதிக்கும் தளத்தின் அடிப்படையில் நீங்களும் ஒரு Denomination எனப்படுவீர்கள்.

 ஆம். அமைப்பை விட்டு விலகச் சொல்பவர்களும், தங்கள் கொள்கைக்கேற்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, மற்ற அமைப்புகளை குற்றம் சொல்கின்றனர்.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

BROTHER CHILLSAM,

சபைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதை சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் வெளி. 2.6 , 15 ல் சொல்லப்பட்டுள்ள நிக்கலாய் மத கிரியை என்றால் என்ன? என்பது மிகவும் முக்கியமானது, அதை பற்றி விவாதித்தால் தேவன் என்ன மாதிரி சபையை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஸ்தாபனங்கள் அல்லது சபைகள் (Denominationalism) ஒழிக்கப்படவேண்டுமா..?
Permalink  
 


by Chill Sam on Wednesday, 26 October 2011 at 13:55

எது ஐக்கியம்...யாருடன் ஐக்கியம்..? -என்ற தலைப்பில் அடியேன் வரைந்திருந்த கட்டுரையில் நண்பர் விஜய் அவர்கள் பின்வருமாறு தனது கருத்தைப் பதித்திருந்தார்; அதற்கு நான் அளிக்கும் பதில் நீண்டுவிட்ட காரணத்தால் தனி கட்டுரையாகப் பதிக்கிறேன்.

// அன்பு சகோதரர் சில்சாம் அவர்களே! மேற்கண்ட கருத்து Denominationalism-க்கு எதிரானதே தவிர விசுவாசிகளின் ஐக்கியத்துக்கு எதிரானதல்ல.//

நல்லது நண்பரே, என்னுடைய கருத்தும் கூட Denominationalism-க்கு ஆதரவாக அல்ல, விசுவாசிகளின் ஐக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தவே வெளிப்பட்டது; Denomination வேண்டாம் எனும் நீங்கள் ஒரு தனி மனிதனை Denomination என்பீர்களா; ஆம்,எதுவும் சரியில்லை,யாருமே யோக்கியமில்லை எனும் நிலையில் சபை அமைப்பை விட்டு சலித்துப்போய் வெளியேறும் ஒருவனை இந்த் உலகமும் மாம்சமும் பிசாசும்  நிம்மதியாக விட்டதில்லை. அதற்காகவே அவன் ஒரு குறிப்பிட்ட ஐக்கியத்தில் பிணைக்கப்பட்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்ட சிந்தனையிலும் கூட இறுதியில் எப்படி முடிகிறது, //அவர்களுக்கு போதிக்கிறேன் // யாருக்கு போதிக்கிறீர்கள்,  உங்களுக்கு நீங்களே..? அல்ல,குறைந்தது மூன்று, ஏழு, பன்னிரெண்டு என்று நீங்கள் போதிக்கும் எல்லை விரிவடைந்துகொண்டே இருக்கிறதல்லவா, அப்படியானால் நீங்கள் போதிக்கும் தளத்தின் அடிப்படையில் நீங்களும் ஒரு Denomination எனப்படுவீர்கள்.

ஒருநாள் உங்கள் வீட்டு வழியாக நான் வருகிறேன்;உங்கள் வீட்டிலிருந்து திரள் கூட்ட மக்கள் வெளியே வருகின்றனர்; எல்லாரும் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்டபோது விஜய் அவர்கள் வீட்டில் கூடும் வாராந்திர கூடுகை முடிந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த கூட்டம் நீங்கள் விரட்டினாலும் விடாமல் துரத்தி வந்து உங்களை சேர்ந்துகொண்ட கூட்டம், நீங்களும் மனதுருகி சேர்த்துக்கொள்ளுகிறீர்கள்; அந்த கூட்டம் வாரம் ஒருமுறை எப்படியாவது ஆராதிக்க கூடிவருகிறது;அந்த கூட்டத்துக்கு என்ன பெயர்,"விஜய் கூட்டம்". நீங்கள் எதை எதிர்த்து இயக்கம் தோற்றுவித்தீர்களோ அதுவே ஒரு Denomination  ஆகிறது,என்கிறேன்.

ஆம், நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏதோவொரு இஸத்தில் இருக்கிறோம் அல்லவா, உதாரணமாக ஜனநாயகம் என்பது நீங்கள் விரும்புவதாக இருந்தாலும் நீங்கள் ஊழியம் செய்வது பாஸிசத்துக்காக இருக்கலாம்; கம்யூனிஸக் கருத்துக்களில் ஊறியிருந்தாலும் முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருக்கலாம்; ஆனாலும் உங்களுக்குள் இருக்கும் ஜனநாயக உணர்வு என்பது ஒருபோதும் மறைந்துபோகிறதில்லை.

அவ்வாறே நாம் இருக்கும் சூழல் நமக்கு எதிராக இருந்தாலும் நாம் நம்முடைய நோக்கத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்; தலைமை சரியில்லாவிட்டால் தலைமையை மாற்றவேண்டும் அல்லது அந்த அமைப்பை விட்டு வெளியேறவேண்டுமே தவிர அமைப்பையே குறைகூறமுடியாது, அமைப்பை அழிக்கவும் முடியாது.

Denomination -என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்ளுங்கள், அந்த வார்த்தையானது அதிகமாகப் புழங்கும் இடங்களில் ஒன்று வங்கிகள் அல்லவா, வங்கிகள் இந்த வார்த்தையால் என்ன கேட்கிறது, நீங்கள் சமர்ப்பிக்கும் கரன்ஸிகளை வகைப்படுத்திக் கொடுக்கச் சொல்லுகிறது.

அவ்வாறே Denomination -எனப்படும் சபைகளை வகைப்பிரித்து சமர்ப்பிக்கப்போகிறவர் ஆவியானவர்; அவனவனுக்குரிய பலன்களைத் தரப்போகிறவர் குமாரனானவர்; இந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் பிதாவாகிய தேவன்; இதன்படி மேய்ப்பனுக்கும் மேய்ப்பனுக்கும் உரிய பலன்களையும் மேய்ப்பனுக்கும் மந்தைக்கும் உரிய பலன்களையும்  மந்தைக்கும் மந்தைக்கும் உரிய பலன்களையும் தருவதற்காக அவரே வருகிறார்.

நம்முடைய தேவனுக்கு "மந்தையின் துருக்கமே" என்றொரு பெயர் உண்டு;மந்தையின் துருக்கமானவர் மந்தைகளின் நலனுக்காக கண்காணிகளை வைத்திருக்கிறார்;அது மற்றொரு சாராருக்கு குறிப்பிட்ட Denomination ஆக தோன்றலாம்; Denomination -என்பார் யார் தங்கள் நோக்கங்களை எல்லைகளையும் வகையறுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டவர்கள்; இது தவறா..? சிந்தனையாளர்களால் கொள்கைகள் உருவாக்கப்பட்டு கொள்கைகளால் இயக்கங்கள் ஸ்தாபிக்கப்படுகிறது; ஒன்றுக்கு மேற்பட்டவரே இயக்கம்; இயக்கங்கள் பலவாக மாறும்போது Denomination ஆக மாறுகிறது.

"மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்." (மீகா 4:8 )

Denomination  எனும் வார்த்தையை ஸ்தாபனம் என்று சொல்லுவீர்களானால் அது எதன்மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்பதே கவனிக்கப்படவேண்டியதே தவிர ஸ்தாபனமே தவறல்ல; ஏனெனில் சேகரிக்கப்படும் ஆடுகளை பராமரிக்கும் ஸ்தலமும் பொறுப்புள்ள கண்காணியும் இருந்தே தீரவேண்டும்; இல்லாவிட்டால் தீமோத்தேயுவுக்கு பவுலடிகள் எழுதிய இரண்டு நிருபங்களும் வீணாகிப்போகும். கீழ்க்காணும் வசனம் மேலாண்மையைக் குறித்து வலியுறுத்துகிறது.

"உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே." (எபிரெயர்.13:17)

Obey them that have the rule over you, and submit yourselves: for they watch for your souls, as they that must give account, that they may do it with joy, and not with grief: for that is unprofitable for you. (Hebrew.13:17)

மணவாளன் ஒருவர், ஆனால் முறையே புத்தியில்லாதவர், புத்தியுள்ளவர் என்று இருவித அமைப்பில் தலா ஐந்து கன்னிகைகள்; ஒருவருக்கு எதற்கு பத்துபேர், என்று யோசித்தீர்களா? இதுவே இன்றைய சபைகளின்/ஸ்தாபனங்களின் மாதிரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

சபை எனும் கட்டிடம் தெய்வீகமானது அல்ல,என்பதால் அங்கே சமைத்து சாப்பிட்டு உறங்கி உங்கள் வீட்டு வரவேற்பரையைப் போல அங்கே அரட்டை கச்சேரிகளை நடத்தலாமா? நல்லவேளையாக நம்முடைய சபையினர் (பாரம்பரிய..?) சபை வளாகத்திலேயே அரட்டையடிக்கின்றனர்;அவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பக்தியும் இந்த கருத்தினால் கரைந்து விடப்போகிறது..!

அண்மையில் தமிழக முதலமைச்சர் கர்நாடக மாநிலத்தில் தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நேர்நிறுத்தப்பட்டார்கள்; விசாரணை முடிந்ததும் முதலமைச்சர் என்ற பந்தாவுடன் அவர் வெளியேறவில்லை; நீதிபதியின் ஆசனத்திலிருந்த நீதிபதி எழுந்து சென்ற பிறகே மற்றவர் வெளியேறவேண்டும் என்பது மரபாம், இந்த மரபும் மாண்பும் எங்கிருந்து வந்தது?

தேவாலயம் அதாவது இறைமக்கள் ஒன்றுகூடி ஆவியான தேவனை ஆராதிக்கும் இடம் புனிதமானது; அந்த ஆராதனையை முன்னின்று நடத்துபவரும் விசேஷித்தவர்;எனவே தான் அவர் மோசடி செய்தால் அதிர்ச்சியுடன் அவர் திருந்தவேண்டுமென போராடுகிறோம்;அவர் திருந்தாவிட்டால் அவரை வெளியேற்றுவோம் அல்லது அவரை விட்டு விலகுவோம்.

"ஸ்தாபனத்தை விட்டு வெளியே வா.." என்று இரஸல் துவங்கி பிரன்ஹாம் வரை அறைகூவல் விடப்படுகிறது; அதன் அதிர்வுகள் பல்வேறு தளங்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது; தற்காலத்தில் நம்முடைய வ்ரவேற்பறைக்கே வந்து அழைக்கும் ஏஞ்சல் டிவியின் முதலாளியான சாதுஜி இந்த இயக்கத்தை ப்ரன்ஹாம் வழியாக முன்னெடுத்து செல்லுகிறார்; ஆம்,ஸ்தாபனம் பாபிலோனிய ஆதிக்கத்துக்குச் சென்றுவிட்டது மணவாட்டியே ஸ்தாபனத்தைவிட்டு வெளியேறு, வனாந்தரத்துக்கு வா,அங்கே உனக்காக அவதரித்திருக்கும் தீர்க்கதரிசியை சேர்ந்துகொள், அவனுடைய வழிகாட்டுதல் இல்லாமல் நீ மணவாளனை அடையாளங் காணமுடியாது என்று என்று ஓங்கி ஒலித்தவர் கள்ளத்தீர்க்கதரிசியான ப்ரன்ஹாம்; தீர்க்கதரிசி சாதாரணமானவர் அவர் எலியாவின் ஆவியையுடையவர்,யோவான் ஸ்நானன் விட்டுச்சென்ற பணியைத் தொடருபவர், குமாரனால் வாக்களிக்கப்பட்டவர் என்பதெல்லாம் அவருடைய போதனையாகும்; அவர் வேறு யாருமல்லவாம், தன்னைப் பற்றி தானே முன்னிறுத்தி தன்னை வேதப் புருஷனாக உயர்த்திக்கொள்ளுகிறார். அவருக்கு முன்னோடியாக விளங்கியவர் யெகோவா சாட்சிகளின் (வேதமாணாக்கர்) ஸ்தாபகரான இரஸல்.

ஆரோக்கிய உபதேசத்தையே முன்னிறுத்தும் களங்கமில்லாத நண்பர்களின் எழுப்புதல் முயற்சியிலும் ஏதோ இடிக்கிறதே என்று பார்த்தால் அதன் பின்னணியிலிருப்பது மேற்கண்ட இரு கள்ளப்போதகர்களின் ஆதிக்கமே,இன்னும் ஊன்றி சிந்தித்தால் பல உண்மைகள் வெளிவரும்.

எப்போதோ சிலகாலம் தவறான ஒருவரிடம் இருந்திருப்போம்; அவருடைய புரட்சிகரமான கருத்துக்களால் கவரப்பட்டு அதைச் சுற்றியே சிந்திக்கத் துவங்கியிருப்போம்;ஒரு கட்டத்தில் அவரால் ஏமாற்றமடைந்து அவரைவிட்டு விலகிவிடுவோம்,விலகினாலும் நாம் யாரிடமிருந்து விலகினோமோ அவர் தனது சித்தாங்களால் நம்மை ஆக்கிரமித்திருப்பார்;உதாரணத்துக்கு திராவிட இயக்கம். அவ்வாறே கள்ளத்தீர்க்கதரிசியாக அறியப்பட்ட இரஸல் மற்றும் ப்ரன்ஹாம் போன்றோரின் உபதேசங்கள் பல செவிகள் கடந்து நம்மிடையே வந்து ஒருவித பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே நாம் புதிய ஏற்பாட்டில் அமைத்துக்கொடுக்கப்பட்ட ஆதார சபை அமைப்புக்கு விரோதமாக சிந்திக்காதபடி எச்சரிக்கையாக இருப்போமாக.

என்னுடைய கருத்தை நான் சரியாக எடுத்துரைக்காதிருந்தால் தயவுசெய்து அடியேனுக்கு சுட்டிக்காட்டுமாறு நண்பர்களை வேண்டுகிறேன்; நாம் சிந்திக்கும் மையப்பொருளைவிட்டு திசைதிருப்பாமல் இருக்கவும் வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard