by Chill Sam on Wednesday, 26 October 2011 at 14:52
Selwyn Joyson: // விஜய் அண்ணா சபை ஐக்கியம் தேவையற்றது என்ற அர்த்தத்தில் கூறி இருக்கமாட்டார் அந்த ஐக்கியம் நமக்கு பிராண்ட் இமேஜ் ஆகிவிடக்கூடாது என்ற meaningல் கூறியிருப்பார் என நினைக்கிறேன் //
தேவையானது தான் "ஆனாலும்", நல்ல்துதான் "ஆனாலும்" எனும் வார்த்தையையே பிரித்தாளும் சூழ்ச்சியின் சூத்திரமாக எதிரி பயன்படுத்துகிறான்; எனவே கையில் இருப்பதை கவிழ்த்துவிட்டு நெய்க்கு ஆதாரத்தைத் தேடிக்கொண்டிருக்காமல் நாம் கர்த்தருடைய வருகைபரியந்தமும் இரட்சிப்பைக் காத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
ஒரு சிறுவன் நெய் வாங்க கடைத் தெருவுக்குச் சென்றானாம்; அக்காலத்தில் நெய்யை தொன்னை எனப்படும் ஒருவகை ஓலை மடிப்பில் ஊற்றித் தருவார்கள்; ஆற்றைக் கடந்து இருப்பிடம் சேரும் கட்டத்தில் அவனுக்குள் திடீரென ஒரு யோசனை தோன்றியது; நாம் இந்த ஆற்றைக் கடப்போமா, நாம் கடந்தாலும் நெய் ஆற்றைக் கடந்துசெல்லுமா,கையிலே தொன்னை, தொன்னைக்குள்ளே நெய், யார் எதற்கு ஆதாரம் எது எதற்கு ஆதாரம் என்று யோசித்தவன்,முதலில் தொன்னையிலிருந்தே பரிசோதிக்கும் எண்ணத்துடன் தொன்னையைப் பார்த்து பேசினான், நீ நெய்யை தாங்கிக்கொண்டிருக்கிறாயா அல்லது நெய் உன்னை தாங்கிக்கொண்டிருக்கிறதா என்று கேட்டான்; தொன்னை அமைதியாக இருந்தது; எனவே தொன்னையைக் கவிழ்த்துப்பார்க்க முடிவுசெய்து சற்றும் தாமதியாமல் தொன்னையைக் கவிழ்க்கவும் நெய் முழுவதும் தரையிலே சிந்திப்போனது; இப்போது தெளிவடைந்தான்,ஒஹோ தொன்னையே நெய்யின் ஆதாரமாக இருந்தது, ஆனாலும் நெய் விலையேறப்பெற்றது, இப்போதோ அது முழுவதும் சிந்தி நஷ்டப்பட்டுவிட்டது; இனி என்ன, மீண்டும் சந்தைக்குச் சென்று வேறு நெய் வாங்கமுடியுமா,என்று மாலை மயங்கும் வேளையில் ஆற்றங்கரையிலிருந்து யோசித்துக்கொண்டிருந்தான்.
இரட்சிப்பு என்பது ஒரே ஒருமுறை நாம் பெற்றுள்ள கிடைத்தற்கரிய வாய்ப்பு ஆகும்;அதனை எந்தவொரு சூழ்நிலையிலும் இழந்துபோக நாம் அனுமதிக்கவே கூடாது என்பதை நினைவில் கொள்வோமாக. சபைகளில் தாறுமாறுகள் இருக்கிறது என்பது உலகப் பிரசித்தம்; தற்கால ஊடக மாயையினால் சிறுபொறியும் காட்டைக் கொளுத்திவிடும் அளவுக்கு பூதாகரப்படுத்தப்படுகிறது; ஆனாலும் உலகெங்க்ம் உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் ஆண்டவரை ஆராதிக்கும் சபைகள் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதே ஆறுதலான செய்தி..!
எனவே நண்பர்களிடம் நான் வேண்டிக்கேட்டுக்கொள்வது யாதெனில் மோசடி ஊழியர்களால் கெட்டுப்போன சபை அமைப்பை சுத்தம் செய்யவேண்டுமே தவிர சபை அமைப்பையே மாற்றியமைக்க முயற்சிக்கவேண்டாம்; அகற்றப்படவேண்டியது பீடமல்ல, பீடத்தில் இருப்பவனே; அந்த பீடத்தில் அமர்த்தப்படவேண்டியது பீடத்தில் அருகில் உத்தமத்துடன் நின்று சேவித்தவனே. அவன் சிறுபிள்ளையாக இருந்தாலும் சரி, மந்தைக்கு வெளியே ஆடுகளுக்கு மேய்ச்சல் இல்லையே..!
இன்னும் பல சபைகள் தோன்றட்டும், வட்டார ஜெபக்குழுக்கள் பெருகட்டும், வீடுகள் தோறும் வேத ஆராய்ச்சி நடைபெறட்டும்; அதற்கான பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும் தன்னார்வ தொண்டர்கள் தேசமெங்கும் எழும்பட்டும்; இந்த எல்லா முயற்சிகளுமே கர்த்தருடைய வருகை பரியந்தம் மாத்திரமே என்பதால் சோர்ந்துபோகாமல் ஓடுவோம், பந்தயப்பொருளைப் பெற்றுக்கொள்ளுவோம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)