அன்பு சகோதரர் சில்சாம் அவர்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். வேலைப் பளு காரணமாக என்னால் பகல் நேரங்களில் எழுத முடிவதில்லை. தங்கள் எழுதிய விரிவான விளக்கத்துக்கு நன்றி. இந்த கருத்துப் பரிமாற்றத்தை வாசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு நான் சொல்லிக்கொள்வது சகோதரர் அவர்கள் சொன்னதுபோல இது வெறும் கருத்து பரிமாற்றமேயன்றி கருத்து வேறுபாடல்ல. சகோதரர் சில்சாம் அவர்களையும் அவர்களுடைய தனிப்பட்ட ஊழியத்தையும் நான் பெரிதும் மதிக்கிறேன்.
தங்களது சமீபத்திய கட்டுரையில் எனது எழுத்துக்களுக்குப் பின்னனியில் சிந்தனையாளர் ஒருவர் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நிச்சயமாக இருக்கிறார். அவர் நான் மிகவும் மதிக்கும் சகோ.சகரியாபூணன் அவர்கள் ஆவார்கள். அவருக்கு என்னைத் தெரியாது. நானும் அவரைப் பார்த்ததில்லை. தொலைபேசியில் கூட பேசியதில்லை. ஆனால் அவரது செய்திகள் ”செழிப்பு உபதேச சாக்கடையில்” மூழ்க்கிக்கிடந்த என்னுடைய வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டி போட்டது. எனது எழுத்துக்களில் அவரது பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
சபை மற்றும் ஆலயம் குறித்து:
தாங்கள் இன்றைய சபை ஒரு கட்டிடத்தின் கீழ் இயங்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமாக எழுதியிருந்தீர்கள். ஒன்றாய்க் கூடியிருக்க வாய்ப்பு, திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த வசதி, இதுபோன்ற பல வசதிகள் இருக்கிறது மறுப்பதற்க்கில்லை. அதனால்தான் நானும்கூட சபைக் கட்டிடம் தேவைதான் என்பதை ஆமோதித்து வருகிறேன். ஆனால் கூட ஒரு “ஆனாலும்…” சேர்த்து அது ஆலயம் அல்ல என்று எச்சரிக்கக் காரணம் அந்தக் கட்டிடமானது வெறும் கட்டிடம் என்பதையும் தாண்டி வேறு தளத்துக்குச் சென்றுவிட்டது என்பதுதான்.
தங்களது விளக்கங்களில் அக்கட்டிடத்தால் ஏற்படும் நன்மைகள் என்ற தளத்தில் மட்டுமே நின்று பேசுகிறீர்கள். அதன் இன்னொரு பக்கத்துக்கு இன்னும் தங்களிடமிருந்து போதுமான விளக்கம் வரவில்லை. ஒருவேளை நான் சரியாக கருத்துப்பரிமாற்றத்தைக் கொண்டு செல்லவில்லையா என்பது தெரியவில்லை. எனவே தங்களிடமிருந்து தெளிவான கருத்தைப் பெறும் வண்ணமாக சில கேள்விகளை தங்கள் முன் வைத்து தங்கள் விளக்கத்தைக் கோரலாம் என்று நினைக்கிறேன். அது இந்தக் கருத்துப் பரிமாற்றத்தை ஒரு நிறைவுக்குக் கொண்டுவரும். தங்கள் மீதுள்ள மரியாதையின் நிமித்தம் கேள்வி என்ற வாசகத்தைத் தவிர்த்து கோரிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்.
கோரிக்கை #1:
பழைய ஏற்பாட்டில் யூதர்கள் ஆசரிப்புக் கூடாரம் மற்றும் தேவாலயத்தில் ஆராதித்து வந்தார்கள். அவை தேவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. எனவேதான் ஆசரிப்புக் கூடாரத்தை எப்படி வடிவமைக்கவேண்டும், தேவாலயத்தை எப்படி வடிவமைக்கவேண்டும், உடன்படிக்கைப் பெட்டியை எப்படிச் செய்யவேண்டும் போன்ற மிக நுணுக்கமான கட்டளைகளை மோசேக்குக் கொடுத்தார். புதிய ஏற்பாட்டு சபைக்கு எல்லாமே சுதந்திரம், நம் விருப்பபடி செய்யலாம் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
புதிய ஏற்பாட்டு சபைக்கு எப்படிப்பட்டவர்கள் கண்காணிகளாக இருக்கவேண்டும், எப்படிப்பட்டவர்கள் உதவிக்காரராக இருக்கவேண்டும், சபையில் பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? விதவைகள் எப்படிப் பராமரிக்கப்படவேண்டும் போன்ற நுணுக்கமான விஷயங்கள் கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது, இவ்வளவு கொடுத்த தேவன் ஆலயம் கட்டும்படியோ அல்லது தாவீதுபோல நாம் விருப்பப்பட்டுக் கட்டினால் அதை எப்படிக் கட்டவேண்டும் என்ற முறைகளோ தரவில்லையே ஏன்? புதிய ஏற்பாடு முழுவதும் அலசினாலும் ஒரே ஒரு இடத்தில் கூட இல்லையே ஏன்??
புதிய ஏற்பாட்டு ஆலயம் என்பது நமது சரீரமாய் இருப்பதால் தானே தனிமனித ஒழுக்கத்தைக் குறித்து பக்கம் பக்கமாகப் பேசப்பட்டுள்ளது? இன்று ஒரு கிறிஸ்தவனிடத்தில் போய் கர்த்தரின் ஆலயம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அவன் தானே தேவாலயம் என்பதை உணராமல் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தைக் கைகாட்டுகிறானே! இது கடைசிகால வஞ்சகம் இல்லையா?
கோரிக்கை #2:
இன்றைய கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் அங்கு நடைபெறும் ஆராதனை முறை குறித்து தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். காரணம் அது கோவில்களில் நடைபெறுவது போலவே தூபம் காட்டுதல், மணி அடிப்பது. விக்கிரகம் போன்ற காரியங்கள் நடைபெறுகிறது. நான் இதைக் கேட்கக் காரணம் கட்டிடங்களை தேவாலயம் என்று முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் அவர்கள்தான். அதில் உள்ள தங்கள் ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் தங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அறிய உதவும்.
கோரிக்கை #3:
இன்றைய மெயின்லைன் சபைகளில் காணப்படும் ஆசாரியர் மற்றும் சாமானியர் முறை அதாவது Clergy-Laity முறை குறித்த தங்கள் கருத்தை அறிய வாஞ்சிக்கிறோம்.
என்னுடைய மற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க மறந்தாலும் இந்த மூன்றுக்கும் தங்கள் விளக்கத்தைத் தரும்படி மிக்கப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணம் தங்களது நிலைப்பாடு குறித்த சரியான புரிதல் இதன்மூலம் எங்களுக்கு உண்டாகும்.
இந்த முறைமைகளுக்கு எதிராக நாங்கள் சிரத்தையெடுத்து எழுதவும் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும் காரணம் ஆலயம் என்று சொல்லபடும் கட்டிடத்தில் ஆராதித்தால்தான் அது ஆராதனை என்ற நிலைக்கு விசுவாசிகள் இன்று வந்துவிட்டார்கள். ஆலயம் வைத்திருக்கும் பா\ஸ்டர்தான் மற்ற பாஸ்டர்கள் மத்தியில் கௌரவத்துக்குரியவர். தாங்கள் சொன்னதுபோல சபை என்பது சமுதாயத்தின் கௌரவ அடையாளமல்ல அது பாஸ்டர்களின் கௌரவ அடையாளம். ஒரு குறிப்பிட்ட அளவு விசுவாசிகள் சேர்ந்துவிட்டால் எப்பாடுபட்டாகிலும் கடன்பட்டாகிலும் ஒரு ஆலயத்தைத்தைக் கட்டிவிடுவது என்று பலர் இறங்கிவிடுகிறார்கள்.
ஆனால் கடைசியில் அந்தக் கடன்பாரம் விசுவாசியின் தலையில் சுமத்தப்படுகிறது. வட்டியும் கடனும் கட்ட அவர்கள் பாக்கெட்டுகளில் கைவைக்கப் படுகிறது. அவர்களைத் தக்கவைக்க ஆரோக்கிய உபதேசத்துக்குப் பதில் செவித்தினவுக்கேற்ற போதனைகள் தரப்படுகிறது. தசமபாகம் திணிக்கப்படுகிறது. ஆண்டவர் சொன்னார் என்று பொய்சொல்லி ஒரே ஆராதனையில் இரண்டு முறை காணிக்கை எடுக்கப்படுகிறது. பணத்துக்காகச் செய்யும் நயவஞ்சகப் போதனையினால் விசுவாசி இடுக்கமான பாதையைவிட்டு விசாலமான பாதைக்குள் வஞ்சகமாக இழுத்துச் செல்லப்படுகிறான். இப்படிப் பல தீமைகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது புதிய ஏற்பாடு சொல்லாத இந்த “ஆலய முறையே”.
எனக்கு அருமையான நண்பர் விஜய் அவர்கள் மீண்டும் என்னுடைய கருத்துக்கு பதிலாக ஒரு கட்டுரையை ”ஆலயம் தொழுதல்...” என்ற தலைப்பில் பதித்திருக்கிறார்கள்;அதற்கு நான் அளித்துள்ள பதில் பின்வருமாறு...நண்பரே, நீங்கள் கேள்வியே கேட்டாலும் பதில் சொல்ல நான் இங்கே இருக்கமாட்டேன்; பிரச்சினைகளை மட்டுமே பேசும் நாம் தீர்வை எட்டுவது எத்தனை சிரமம் என்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள். எனவே நான் இதுவரை என்னுடைய உபதேசமாகவோ கொள்கையாகவோ எதையும் அறிவித்ததில்லை; ஆனால் நீங்கள் அந்த ஆபத்தான மூலைக்கு என்னை தள்ள முயற்சிக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது; பிறகென்ன நானும் ஏதோ ஒரு முத்திரையைத் தரித்துக்கொண்டு அலையவேண்டும் அது தானே உங்கள் பேராசை (சிரிப்பு..?!)
அடுத்து ”கோரிக்கை” என்ற பெயரில் நல்ல பிள்ளையாகத் துவங்கி தீர்மானங்களையும் நீங்களே போட்டுவிட்டு என்னைக் கருத்து கேட்பது என்னை தனிமைப்படுத்துவது போல இருக்கிறது; “கோரிக்கை” என்ற பெயரில் விளக்கம் கோருகிறீர்கள்,சரிதானே, இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை..!
// இப்படிப் பல தீமைகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது புதிய ஏற்பாடு சொல்லாத இந்த “ஆலய முறையே”. //
முத்தாய்ப்பான இந்த கருத்தை மீண்டும் மறுக்கிறேன்; புதிய ஏற்பாடு என்பதே நம்முடைய புரிதலுக்காகவே. மற்றபடி புதியது ஏதுமில்லை.
”ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.” (1.யோவான்.1:1)
”ஆலயம்” ஏற்கனவே இருந்தது போலவே தொடருகிறது; இதற்கு உதாரணமாக எசேக்கியேல்.9:5 -ஐ சுட்டிக்காட்டியிருந்தேன்; எல்லாவற்றிலும் போலிகளையும் மாயத்தையும் புகுத்தும் எதிராளியானவன் இதில் குழப்பத்தை உண்டாக்கியிருந்தாலும் சர்வ வல்ல தேவனானவர் தலைமைத்துவத்த்தில் மாற்றத்தைக் கொண்டு இந்த நிலைமை சீர்செய்திருக்கிறார்.
மிஷினரிகள் எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறார்கள்; தங்கள் சொந்த பந்தம் சொத்து சுகமெல்லாம் விட்டுவந்து அறியாமையின் இருளில் இருந்தோர்க்கு கல்வி புகட்டி சுகாதாரம் சொல்லிக்கொடுத்து கலாச்சாரம் கற்றுக்கொடுத்து அவர்கள் இணைந்து தொழ ஆலயமும் கட்டிக்கொடுத்தார்கள்;அது இன்றைக்கு கள்ளர் குகையாகியிருக்கலாம்;அத்னை மீட்கவேண்டுமே தவிர இந்த அமைப்பே தவறு சொல்லக்கூடாது,நண்பரே. எங்கிருந்தோ வந்தவர்கள் செய்ததைவிட நாம் அதிகமாகவே செய்திடவேண்டும்.அதற்கேற்ப பேசி தீர்ப்பு செய்வோமாக.
இறுதியாக ஒரு தகவல்: சகரியா பூணன் அவர்களின் ஐக்கியத்தார் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள், ஒன்றைத் தவிர,அதாவது என்னைப் போன்ற சுயாதீன பணியாளர்களை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை; ஐக்கியம் கொள்வதுமில்லை;ஆனால் அவர்களும் சபைக்காக இடம்தேடி அண்மையில் எங்கள் பகுதியில் ஒரு பெரிய இடத்தை வாங்கியிருக்கிறார்கள்; கொஞ்சம் நிறைய பணம் புழங்குவதால் அவர்கள் கடன்வாங்காமலே சபையைக் கட்டியிருக்கிறார்கள்; சிலருக்கு வெளிநாட்டு உதவிகள் அபரிமிதமாகக் கிடைக்கிற்து;ஏழை ஊழியர்கள் நிலைமை வழக்கம் போல பரிதாபம்தான்.
கட்டிடம் முக்கியமல்ல,என்ற கொள்கையினாலோ என்னவோ டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் அவர்கள் சினிமா தியேட்டரிலும் பிறகு ம்யூசிக் அகாடமியிலும் ஆராதனை செய்தார்; கொஞ்சம் புரட்சிகரமாக இருந்தாலும் அது பலருக்கு ஏற்புடையதாக இல்லை; அதற்கேற்ப அந்த கூட்டத்தார் பல துண்டுகளாக சிதறிப்போனார்கள்;அவரும் ஆரம்பத்தில் நம்ம சாதுஜியைப் போல காவி வேடமிட்டு வந்தார்; பிறகு என்ன தெளிவு வந்ததோ சாதாரண உடைக்கு மாறி இரண்டாம் திருமணம் எல்லாம் செய்தார்; இளம் வ்யதில்யே மரித்தும் போனார்; அவருடைய போதனைக்கும் தற்கால சாதுவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாலேயே அவருடைய பழைய செய்திகளை இப்போதும் ஏஞ்சல் டிவியில் போடுகிறார்கள். ஜஸ்டின் அவர்களின் சபையின் பெயர் வானவில் என்பதை கவனத்தில் கொள்ளவும்; "வானவில், ஏஞ்சல், கழுகு, சிங்கம், வனாந்தரம், மணவாட்டி.." இதெல்லாம் யாருடைய முத்திரை என்று யோசித்துப்பாருங்கள்.
ஆலயம் தொழுதல்...தேவையில்லை,ஏனென்றால் நாமே ஆலயம்...அப்படியானால் இந்து தத்துவத்தில் உனக்குள் இறைவன்... நீயே இறைவன் என்ற தத்துவத்தின் பாதிப்பினால் ஒருவரைப் பார்த்து ஒருவர் வணங்குகிறார்களே,அது சரியா..? நாமும் கூட அதேபோல செய்வதை கவனத்தில் கொள்க..!”நீயே ஆலயம், உனக்கேன் ஆலயம்..” எனும் இந்த சிந்தனை வலுப்பெற்றால் நீயே இறைவன், உனக்கேன் இறைவன்..” என்பதும் சரி என்பது போலாகிவிடும் அல்லவா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)