Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருச்சபையின் 80% குருவானவர்கள் மோசடியாளர்களா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
திருச்சபையின் 80% குருவானவர்கள் மோசடியாளர்களா..?
Permalink  
 


by Chill Sam on Saturday, 29 October 2011 at 13:46

அன்புக்குரிய நண்பர்க்ளே,கடந்த 25- ந்தேதி முதல் நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள்; எனக்கு நிறைய நேரம் இருந்து இந்த விவாதங்களை நடத்தவில்லை; இதில் பகிரப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்தும் ஏதோவொரு வகையில் திருச்சபையின் உயிர்மீட்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையினாலேயே தொடருகிறேன். சபை வைராக்கியத்துடன் கூடிய- ”சபைகூடி வருதல் அவ்சியமா” என்ற பொருளில் துவங்கிய விவாதத்தின் தற்போதைய நிலையானது ”மெயின்லைன் திருச்சபையின் 80% குருவானவர்கள் மோசடியாளர்களே..” என்ற படுபயங்கரமான குற்றச்சாட்டில் வந்து நிற்கிறது; திருச்சபையின் விரோதிகளுக்கு இந்த செய்தி அல்வா சாப்பிடுவது போலிருக்கும் என்பது மிகையல்ல. இந்த குற்றச்சாட்டை நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

விமான விபத்துக்களும் இரயில் விபத்துக்க்ளும் சாலை விபத்துக்களும் அன்றாட செய்தியாகிவிட்டது; ஆனால் பயணிப்போர் எண்ணிக்கை குறையவில்லை,காரணம் யாதெனில் விபத்துக்களைக் குறித்த செய்திகளை நாம் அதிகம் கேள்விப்பட்டாலும் அது விகிதாச்சார அளவில் மிகவும் குறைவு; உதாரணத்துக்கு ஒவ்வொரு சேவையிலும் 80% விபத்தில் மாளுகிறார்கள் எனில் ஒருவரும் எங்கும் பயணம் மேற்கொள்ளவே மாட்டார்கள்;ஏனெனில் உயிர் என்பது விலைமதிப்பற்றது, அதை தெரிந்தே இழக்க ஒருவரும் விரும்பமாட்டார்கள்.

அதேபோல ஒவ்வொரு துறையிலும் ஒப்பிட்டு பார்ப்போம், 80% சதவீத் பெண்கள் சரியில்லை, 80% சதவீத் ஆண்கள் சரியில்லை, 80% மருத்துவர்கள் சரியில்லை, 80% ஆசிரியர்கள் சரியில்லை, 80% அரசியல்வாதிகள், 80% சினிமாக்காரர்கள், 80%அதிகாரிகள், 80% உலகத் தலைவர்கள்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இது இறுதியில் எதைக் குறிக்கும் உல்கின் ஒட்டுமொத்த மக்களில் 80% சரியில்லை என்பதையே குறிக்கும். அப்படியானால் நாம் இங்கே இயேசுகிறிஸ்துவைக் குறித்து மேன்மையாகச் சொல்ல என்ன இருக்கும்?  சமுதாயத்தை மாற்றுவதற்குக் கட்டளைபெற்றுள்ள திருச்சபையானது சமுதாயத்தின் விபரீதங்களில் கலந்துவிட்டது மறுக்கமுடியாத உண்மையாகும்;

ஆனாலும் அதனை சீர்செய்யவேண்டிய தலைவர்களும் விலைபோய்விட்டார்களா என்பதே ஆச்சரியமாக இருக்கிறது; கர்த்தருக்கு ஒப்பான பரிசுத்தம் மாத்திரமே நமது நோக்கமாக இருக்குமானால் நம்முடைய பயணத்துக்கு முடிவிராது;ஆனால் அன்றாட வாழ்க்கையில் சாதாரண உலக மனிதரைவிட நம்முடைய தலைவர்களில் பெரும்பான்மையினர் மோசமாகிவிட்டார்கள் என்பது ஜீரணிக்கமுடியாத காரியமாகும்; அதிலும்  80% ஊழியர்களும் குருவானவர்களும் தலைவர்களும் விழுந்துபோய்விட்டார்கள் என்பதே நினைத்துப்பார்க்கமுடியாத பயங்கரமாக இருக்கிறது;

துடிக்கும் மனதைத் தேற்றிக்கொள்ள இப்படி யோசிக்கிறேன், விஷயம் அப்படியிருக்காது, இருக்கவும் கூடாது; பொதுவாகவே துர்ச்செய்தி வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதே இதற்குக் காரணமாக இருக்கும்; 20% சத்வீத பிரச்சினையே 80% பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது; உணர்வுள்ளோர் 10 % மாத்திரம் எழும்பினாலும் போதும் இந்த பிரச்சினையை இந்த தலைமுறையிலேயே சரிசெய்துவிடலாம்;கத்தியின்றி இரத்தமின்றி சாத்வீகமான முறையிலேயே இதனை சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை கொள்வோம்;மற்றபடி ஒருசிலர் மீது சேற்றை வாரியிறைப்பதினால் மட்டுமே பிரச்சினை தீர்ந்துவிடாது;மேலும் பிரச்சினையைக் குறித்து பெரிதாகப் பேசும் இளைஞர் கூட்டம் மாற்றுவழிகளை நோக்கி போக் எத்தனிக்கிறதே த்விர பிரச்சினையைத் தீர்க்க முனைப்பு காட்டுகிறதில்லை.

செல்வ செழிப்போடும் பெருமையோடும் அசைந்தாடிச் சென்ற டைட்டானிக் கப்பல் ஒரு சில நொடிகளில் மூழ்கிவிடவில்லை; சிறிதுசிறிதாகவே மூழ்கியது;சிறு ஓட்டையானது எவ்வளவு பெரிய கப்பலையும் கவிழ்த்துவிடும்; ஒரு துளி விஷமே குடம் பாலையும் கெடுத்துப்போடபோதுமானது; ஒரு நாள் செய்த தவறே ஒரு கன்னிகையை கன்னிமை இழந்தவளாக்கிவிடும்; பிரச்சினையை நான் குறைத்து மதிப்பிடவில்லை;என்றாலும் ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்த ஒரு இளைஞரே தன்னுடைய சபைத் தலைவர்களில் 80% மோசடியானவர்கள் என்று கூறுவதுடன் அங்கிருந்து வெளியேறாமலும் தவித்துக்கொண்டிருக்கிறார் என்றால் நிலைமையின் தீவிரத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது. நான் மிக எளிதாக சொல்லிவிடுவேன், அப்படிப்பட்ட மோசடியான ஐக்கியத்தின் இருக்கிறீர்கள் விலகி வெளியே வாருங்கள்,என்பதாக;ஆனால் அவர் கேட்பார், விலகி வந்தபிறகு நான் எங்கே செல்வேன்,யாருடன் ஐக்கியங் கொள்வேன்,என்பதாக.நண்பர் விஜய் கூறுவார், நீயே ஆலயம் உனக்கென்று ஆலயம் தேவையில்லை, நீயே உன்னை மேய்த்துக்கொள்ளும் நிலையை அடைய முயற்சி செய்,என்பதாக; இது வளர்ச்சியை நோக்கி நடத்துமா, தளர்ச்சியை நோக்கி நடத்துமா என்று தெரியவில்லை; முழுகும் படகைவிட்டு எல்லோரும் வெளியேறுவதைப் போன்ற செயல் யோக்கியமானதாக இருக்குமா..? இன்னும் ஆராய்வோம்....

இதோ இது சம்பந்தமாக என்ற "ஆலயம் தொழுதல்..." தலைப்பில் நண்பர் விஜய் அவர்கள் எழுதிய கட்டுரையில் இந்த கட்டுரைக்கு பின்னணியிலுள்ள பின்னூட்டங்கள், உங்கள் கவனத்துக்காக...

David Joseph:-    

//80% of the Clergy today are rotten and corrupt. //

Chill Sam: 

Is it True...can u give me the proof for this Statement..?

Johnson Raju:

Iyya Chill Sam  , Asking for proof is not justified (idhu nyayam illai). It can be true also. How can anyone say that I am not in that 80%?

Or, we can also take this opinion is little bit exaggerated. There is nothing wrong in it.

David Joseph:

@Johnson Raju... Respected Pastor I am referring the Clergy in mainline churches in south India.You could check with your friends in every CSI Diocese.To survive the pastors have to be part of the Bishop's support group.Else they will be posted in some தண்ணீர் இல்லாத காடு .

Politics is the bread and Butter of these people. Scheming, manuvering, cheating are all common events.

There are a number of websites and blogs which are focussed only on CSI.One of the vocal group is www.savecsi.net.Please also visit www.saveamericancollege.blogspot.com .You may also read Jamakaran online (the past 2 year issues ) in www.Jamakaran.com .

It is a sad statement but i would emphatically state there there is no righteousness in most of the mainline church pulpits.

Save American College Blogspot

// saveamericancollege.blogspot.com//

Chill Sam:

 ஐயா ஜாண்சன் அவர்களே,இந்தியாவில் 2ஜி எனப்படும் ஊழலில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துவிட்டதாம், நீங்கள் நம்புகிறீர்களா,அதை யாராவது நிரூபிக்கமுடியுமா,படித்தவர்கள் நன்கு அறிவார்கள், முறைகேடு நடைபெற்றிருந்தாலும் இது ஒரு கற்பனையான தொகை என்பதை. அதேபோல பல்வேறு காரணங்களுக்காக இடம் மாற்றப்படுவோரும் தேர்தலில் தோற்றுப்போனவர்களும் பதவிவெறி பிடித்தோரும் திருச்சபைக்கெதிராக எழும்பியிருக்கலாம்;ஒரு சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கலாம்;அந்தந்த வட்டாரத்தில் அதுசம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நண்பர் குறிப்பிட்ட வண்ணமாக 80% குருவானவர்கள் மோசடியாளர்கள் என்றால் அவர்கள் தொழுகை நடத்தவே தகுதியிழக்கிறார்கள்; அவர்களிடம் நன்மை வாங்கிப் புசிப்போரும் மாசுபட்டிருக்கிறார்கள்; இவ்வாறு 80% மோசடிசெய்த குருவானவர்கள் கொடுத்த திருமுழுக்கு திருமணம் புதுமனை புகுதல் மற்றும் இன்னபிற சுபகாரியங்களும் அமங்கலமாகிவிட்டன. இப்படிப்பட்ட சபையில் இனியும் அங்கம் வகிப்பது கொஞ்சமும் சரியல்ல,வரும் வாரத்திலேயே சபை புறக்கணிப்பு இயக்கம் ஒன்றை மக்கள் நடத்தட்டும்;பிறகு திருச்சபை நிர்வாகிகள் திருந்தாமல் இருப்பார்களா?

ஆம், நான் இரண்டு நிலையிலிருந்து இந்த குற்றச்சாட்டை அணுகுகிறேன்; ஒன்று 80% சதவீதம் குருவான்வர்கள் தீட்டுபட்டுவிட்டார்கள் எனில் அவர்களுக்கெதிரான இயக்கத்தை சபையார் உடனே துவக்கவேண்டும். இரண்டாவதாக பொத்தாம்பொதுவில் இதுபோல 80% குருவானவர்கள் மோசடியாளர்கள் என்று கூறி பொது மக்களை அச்சமூட்டாமல் மோசடியாளர்களை மட்டும் வரிசைப்படுத்தி இணையதளத்தில் அற்விக்கலாம்.

வியாபாரம் அரசியல் தொழில் இப்படி எல்லாவற்றிலும் கருத்துக்கணிப்பு தற்காலத்தில் பிரபலம் அல்லவா,திருச்சபையைக் குறித்தும் கருத்துக்கணிப்பு எடுத்து நிலைமையின் தீவிரத்தை இளைஞர்கள் கண்காணித்தால் என்ன..? எல்லோரும் யாருக்கோ என்னவோ என்று செல்லும் சுயநல போக்கின் காரணமாகவே சபை சீரழிந்திருக்கிறது;கண்மூடித்தனமாகக் குற்றஞ்சாட்டும் அதேநேரத்தில் இளைஞர்கள் கூடிநின்று திருச்சபை பீடத்துக்கு முன்பாக நின்று கதறி அழட்டுமே..!

80% குருவானவர்கள் எனும் பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டை மறுக்கிறேன்;நான் சந்திக்கும் பல குருவானவர்கள் அப்பாவிகள் நீதிக்காக நிற்பவர்கள் தன்னலமின்றி தூய உள்ளத்துடன் சேவை செய்பவர்கள். நாளை காலையில் திருச்சபை ஆராதனைக்காகச் செல்லும் திருச்சபை மக்கள் தொழுகையை நடத்திக்கொண்டிருக்கும் ஆயரைப் பார்த்து மனதில் நீரும் ஒரு மோசடியாளனோ என்று நிந்திப்பார்களானால் அவர்களுடைய ஆராதனையினால் யாருக்கு என்ன பலன் உண்டாகுமோ தெரியவில்லை.

Johnson Raju

Bro. Chill Sam I was born and brought up in Lutheran Church Compound. My two uncles were Lutheran Pastors, one uncle was and his son, my brother in law is Methodist Pastors. Another brother-in-Law is a Lutheran Pastor along with few other cosines. I studied in ECI, Church of Christ, and Gurukul Lutheran College.

As Brother David Joseph mentioned, vast majority of mainline Church pastors (Esp. CSI and Lutheran) are not even born-again believers. They smoke, use vulgar language, don't believe Bible as the Word of God and so on. Only thing... they don't hide anything unlike the pastors of so called Spiritual Churches.

//நாளை காலையில் திருச்சபை ஆராதனைக்காகச் செல்லும் திருச்சபை மக்கள் தொழுகையை நடத்திக்கொண்டிருக்கும் ஆயரைப் பார்த்து மனதில் நீரும் ஒரு மோசடியாளனோ என்று நிந்திப்பார்களானால் அவர்களுடைய ஆராதனையினால் யாருக்கு என்ன பலன் உண்டாகுமோ தெரியவில்லை.// Before knowing anything about the pastor, they don't need to look at the pastors suspiciously.

Francis Somerwell:

I admire the matured writing of Pastor Johnson, what a productive discussion and learning from each other. Pastor Johnson, when you are in India next please inform us, join our fellowship and dine with us. We have lot to learn from you.

True statement said by Pastor Johnson, I would like to second him: The mismatch between the traditional churches lacking spiritual teachings and going much on social work based since the Rev. Pastors are living far aways from God and just employed by Disease, there are no spiritual gifts and no fruit even, I don't have exact % of stats here but MOST of them are like what I mentioned.

At the so called revival churches are largely lacking transparency in terms of administrative, financial and governance openness. But certainly the preachings are good, the food for the souls but here again fruit is lacking in most churches.

The goodness and genuinity is seen only on exceptional cases! at both places This is a sad truth.

இறுதியாக இங்கே ஆறுதலான அம்சம் என்னவென்றால்,சீர்திருத்த சபையார் தங்கள் அமைப்பின் பெயருக்கேற்ப தங்கள் பிரச்சினைகளை அறிந்து சுயபரிசோதனை செய்யும் புனித பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்;ஆனால் இவர்கள் ஆவியில்லாதவர்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது; ஆவியில்லாதவர்கள் எப்படி உணர்த்தப்படுவார்கள் அல்லது உண்ர்த்துவிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை;ஆனால் ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று அதன் உச்சங்களைத் தொட்டுவிட்டதாக இறுமாந்திருப்போரோ கடினப்பட்டிருக்கிறார்கள், இணங்க மறுத்து எரிச்சல் கொண்டு எதிர்கேள்வி கேட்கிறார்கள்; இது குறித்து ஆண்டவர் சொன்ன ஒரு வசனத்துடன் நிறைவு செய்கிறேன்.

“ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.” (லூக்கா.18:13,14)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard