1. கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவை களுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.
2. தாயின் பால் மறந்த குழந்தையைப் போல, நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
மேற்காணும் வாக்கியங்களின்படி இன்று எனக்கு நேர்ந்தது, கீழ்க்காணும் தொடுப்பில் உள்ள விவாதங்களை இன்று தான் கவனித்தேன்; முழுவதும் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவு கிரகித்துக்கொண்டேன். இது தெரியாமல் நான் மீண்டும் ஒரு விவாதத்தை நடத்தி கடந்த வாரம் முழுவதும் வீணாக்கிவிட்டதை எண்ணி வெட்கப்படுகிறேன், ஏற்கனவே மாறி மாறி சொல்லப்பட்ட விஷயத்தையே எத்தனை மதியீனமாக நான் எடுத்து போராடியிருக்கிறேன்..?!
அப்படியானால் ”ஒரே இலட்சியத்தில்” வெவ்வேறு நிறத்தில் தத்துவங்கள் வந்து விழுகிறது; இதையறியாத நான் ஒரு காரியம் அறியாத மூடனைப் போல இருக்கிறேன். இனி எனக்கு மிஞ்சிய கருமங்களில் நான் தலையிடாதிருக்க தூய ஆவியானவர் தாமே என்னை காத்துக்கொள்ளுவாராக.
”கருமம்” என்ற வார்த்தையைப் பார்த்ததும், “கர்மம்... கர்மம்..” என்று பெரியவர்கள் தலையிலடித்துக் கொள்ளுவதே நினைவுக்கு வருகிறது.