by Chill Sam on Wednesday, 02 November 2011 at 00:40
வேதத்துக்கு விரோதமாக செயல்படுவோரும் வேத வசனத்தைத் திரிப்பவர்களும் எடுத்துக்கொள்ளும் நிலை என்னவென்றால், ”அன்றைக்கு அந்த காலத்தின் மக்களுக்கு தேவையான விதத்தில் வெளிப்படுத்திய தேவன் இந்த கடைசி காலங்களில் தம்மை விசேஷமாக வெளிப்படுத்துகிறார்;ஆனால் அபிஷேகம் இல்லாதோர்க்கு இது புரியாது...” என்கிறார்கள்.
இதனை ஏற்க இயலாதோரைக் குறித்து அவர்கள் சிறிதும் கவலைப்படாமல் அன்று ஆண்டவரை எதிர்த்தது போல எங்களையும் இவர்கள் எதிர்க்கிறார்கள் என்று காரியத்தை நம்மீதே திருப்புகிறார்கள்.
உதாரணமாக ஜனநெருக்கடி மிகுந்த மார்க்கெட்டில் ஒரு திருடனைப் பார்த்து ஒருவன் சத்தம் போடாமல் பிடிக்க முயற்சித்தால் திருடன் மிக சாமர்த்தியமாக அவன் கையில் வைத்திருப்பது அவனுக்கு சொந்தமானது போல ஐயய்யோ ஐயயோ திருடன் திருடன் என்று கூச்சல் போடுவான்... திருடனைப் பிடிக்க வந்தவர் திடுக்கிட்டு நிற்பதற்குள் கூட்டம் கூடி திருடனைப் பிடிக்க முயற்சித்தவனுக்கே தர்ம அடி விழும்..!
அதுபோலவே வேதத்தில் இல்லாததைப் போதிக்க முயலும் ஒரு கள்ளப் போதகன் அல்லது கள்ளத் தீர்க்கதரிசியானவன் தன்னை உயர்த்திக்கொள்ள மற்றவரைக் குற்றஞ்சாட்டுகிறான்.
(இன்னும் வரும்..?)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)