Selwyn Joyson:- /// செம மழை சென்னைல யாராச்சும் boat transport ஆரம்பிச்சா சூப்பரா வசூல் ஆகும். எங்க கிராமத்து ரோடு எவ்வளவோ பரவாயில்லை. ஆனா ஊனான்னா நாங்க ஜப்பான் சிங்கப்பூர் மாதிரி மாத்திடுவோம்னு ஓவரா பேசிடுவானுக. முதல்ல நல்ல ரோடு போடுங்கப்பா ... மனச்சாட்சி கொஞ்சம்கூட இவனுகளுக்கு இல்லையே..///
மேற்கண்ட சீஸனல் கருத்தை நண்பர் தனது பக்கத்தில் பதித்திருக்க நானும் சற்று ரிலாக்ஸ்டாக சில வரிகளை பதிவிட்டேன்; ஆனாலும் அவருடைய வரிகளை வாசிக்கும்போது சில எண்ணங்கள் தொன்றியதால் அதனை பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன்,பயனுள்ளதாக இருந்தால் நண்பர்கள் ஏற்கலாம் அல்லது புறக்கணிக்கலாம்.
Chillsam:- வேண்டாம் செல்வின், ஆட்சியாளர்களை நிந்திக்கக்கூடாது என்று வேதம் சொல்லுவதால் அவர்தம் மாண்பு கருதி கௌரவமான முறையிலேயே உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். நம்ம ஆட்களே சரியில்லாதபோது அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்..! இந்த எல்லா அக்கிரமத்துக்கும் அநியாயத்துக்கும் ஜெபிக்காதிருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக நான் அடிக்கடி கடந்துசெல்லும் குறிப்பிட்ட ரயில்வே (லெவல் க்ராஸிங் ) ட்ராக்கில் முன்பெல்லாம் அடிக்கடி விபத்துக்கள் நடக்கும்;அந்த கேட்டை கடக்கும்போது அடிக்கடி ஏதாவதொரு சிதைந்த வாகனம் அங்கே கிடக்கும்; ஆனால் அண்மைய காலங்களில் அதுபோன்று விபத்தின் அறிகுறியை நான் காணவில்லை; இது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
ஒரு குறிப்பிட்ட ஊரில் ஏதேனும் கொலையோ கொள்ளையோ நடந்தால் அதற்கு யார் பொறுப்பாளி, என்று நினைக்கிறீர்கள், அந்த பகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் அல்லவா,அதுபோலவே நம்முடைய பகுதியில் நடக்கும் எந்தவொரு குற்றசெயலுக்குமே நாம் பொறுப்பேற்றுக்கொண்டு ஜெபிக்கவேண்டும் என்று பரலோகத்திலிருக்கும் நம்முடைய எஜமானர் விரும்புகிறார். இப்படியே திருச்சபையில்- குடும்பத்தில் எங்கு அக்கிரமம் நடந்தாலும் அதற்கு நாமே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் ஏதேனும் அதிகப்பிரசங்கித்தனமாக புத்திசொல்லுவது போல எழுதியிருந்தால் நண்பர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
“ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.” (பிரசங்கி 10:20)
”நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.” (I தீமோத்தேயு 2:2)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)