// ஆராதனை மையங்களின் பெயர் கொண்டாட்ட மையங்களாக மாறி வருகிறது. மேய்ப்பர்கள் எல்லாம் ஆராதனை வீரர்களாக ப்ரமோஷன் பெற்றுவிட்டார்கள். ஆடுகளை மேய்ச்சலில் நடத்தவேண்டிய மேய்ப்பர்கள் ஆடுகளுக்கு ”தண்ணி” காட்டிக்கொண்டிருக்கிறார்கள். //
மேற்காணும் கருத்தை எனது வாலில் பற்ற வைத்திருந்தேன்... அதில் பின்னூட்டமிட்ட நண்பர்களின் கருத்திலிருந்து எனக்குத் தோன்றியதை இங்கே பகிருகிறேன்
புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்களண்டையில் நடத்துபவர்களை நல்ல மேய்ப்பருக்கு மாதிரியாக வேதம் குறிப்பிடுகிறது.ஆனால் வறண்ட நிலங்களிலும் வறட்சியான பள்ளங்களிலும் தங்கள் மந்தையை மேய்க்கும் சில மேய்ப்பர்கள் கானல்நீரை நோக்கி தங்கள் மந்தையை விரட்டுகிறார்கள்;அதோ தெரிகிறது பார்,மினுக்குது பார்,அது தான் ஜீவநதி,அதை நோக்கி உன்னை நடத்துகிறேன்,உன்னிடம் இருப்பதையெல்லாம் என்னிடம் கொண்டு வா என்பதே தற்கால மேய்ப்பர்களின் கான்செப்டாக இருக்கிறது; மாற்று மார்க்கங்களில் எப்படி சிலர் மென்மையாகவும் சிலர் தீவிரமாகவும் ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்களோ அதுபோலவே கிறிஸ்தவத்திலும் இருக்கிறது. நம்முடைய அழைப்பில் இதுபோன்ற இருவித நிலை இல்லையென்றாலும்ஆடியும் பாடியும் வறண்டு காய்ந்துபோன காம்புகளை இரத்தம் வர கறந்துகொண்டிருக்கிறார்கள்,நம்முடைய ஊழியர்கள். இப்படி இருவித தாறுமாறான சந்ததியைப் பெற்றெடுத்த தாயாகிய சபையை ஒழுங்குபடுத்தியாக வேண்டும்; நாமும் அதன் மக்களானதால் சாட்டையை எடுத்து சுழற்றவேண்டும். அப்போதும் சிலர் மிக மென்மையாக வந்து நம்மிடம், ஏன் ப்ரதர் டென்ஷன் ஆகறீங்க என்று கேட்டாலும் வியப்பில்லை..!
Rabi Robin // பெரும்பாலான ஊழியர்கள் இயேசுவை வணங்கும் (ஆராதிக்கும்) மக்களை உருவாக்குகின்றார்களேயன்றி, இயேசுவை பின்பற்றும் மக்களாக அவர்களை மாற்றவில்லை!!! எனென்றால் அவர்களும் இயேசுவை பின்பற்றவில்லை!!!!!! //
மாற்றம் விரும்பும் சில நண்பர்கள் மேற்கண்டவாறு நிதானிக்கிறார்கள்; உண்மை நிலையென்னவெனில் ஊழியர்கள் விசுவாசிகளை இயேசுவை வணங்கவோ அல்லது ஆராதிக்கவோ உருவாக்கவில்லை, அவ்வாறு செய்திருந்தால் முதல் முயற்சியே பரிசுத்தத்தைக் குறித்த போதனையாகவே இருந்திருக்கும். அந்த பரிசுத்தம் அவர்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டிருக்கும். ஏனெனில் வேதம் சொல்லுகிறது,
ஆனால் இங்கே நடப்பது என்னவென்றால் பெரும்பாலும் தங்களையே முன்னிறுத்தி தங்களையே பிரசங்கித்து தங்களுடன் மக்களை சேர்த்துக்கொள்ளவே பாடுபடுகிறார்கள். ஆனால் நம்முடைய ஆண்டவர் என்ன சொன்னார்,
“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.” (மத்தேயு.12:30)
இதைக் குறித்த அச்சம் சிறிதுமின்றி துணிகரமாக முன்னேறுகிறார்கள். எனவே நண்பர் ராபினுக்கு நான் சொல்லுவது என்னவென்றால்,’இயேசுவே உம்மை ஆராதிக்கிறேன் ’, என்று சொல்லும் மக்கள் எதிரே நிற்கும் ஹீரோவையே ஆராதிக்கிறார்கள்; ஹீரோவும் வாயில் இயேசுவைச் சொன்னாலும் மக்களின் ரியாக்ஷன் மீதே கவனத்துடன் இருப்பதால் இயேசுவையல்ல,மக்களையே ஆராதிக்கிறார்.
அம்மா தாயே தாய்க்குலமே அங்கே இங்கே கடனை உடன வாங்கி லட்சக்கணக்கா செலவு பண்ணி என்னையே ஹீரோவாக்கி விசிடி போட்டிருக்கிறேன்....எல்லாம் ஊழியத்துக்காகவே...எல்லாரும் ஆளுக்கொன்றாக நூறு ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போகணும் என்கிறார். சினிமா தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இரசிகனே தெய்வமாம்...அதுபோலவே இங்கேயும் நடக்கிறது.
ஆனால் ஆதியில் இவ்வாறு மக்களைப் பார்த்து ஆண்டவரை ஆராதிக்கும் வழக்கம் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.மக்களிடமிருந்து பூசைப் பொருட்களை வாங்கிச் சென்று தெய்வ சந்நிதானத்தில் படைக்கும் இந்து மக்களைப் போன்றே அன்றும் தேவாலயத்திலும் நடைபெற்றிருக்கும்.இன்றும் அதேபோல ஆராதனை நடத்துபவர் உட்பட எல்லோருமே ஒரே திசையை நோக்கி நின்று ஆராதிக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.
இவர்கள் எழுப்புதலுக்காகக் கூட்டம் போடுவதன் அதிகப்பட்ச நோக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டமே ஆன் தி ஸ்பாட் குறைந்தது 10,000 சிடி விற்பதே. ஒரு சிடியின் விலை 100ரூபாய் தயாரிப்பு செலவோ முதலீட்டைத் தவிர்த்து அதிகப்பட்சம் 12 ரூபாய். முதலீடு காணிக்கை கொடுத்த மக்கள் பணம் அல்லவா,எனவே அது சேர்க்கப்படவில்லை.ஆக,ஆயிரம் சிடியே விற்றாலும் ஒரு இலட்சம் தேறுகிறது.லாபமோ சுமார் 88 ஆயிரம் ரூபாய்.வருமான வரி விற்பனை வரி வாட் வரி போன்ற எல்லாம் சுவாகா....அதுவும் ஒரே நாளில்....இதே ஜெர்ஸன் எடின்பரோ, ஆல்வின் தாமஸ் போன்ற ஸ்டார் பாடகர் என்றால் நிச்சயமாக விற்பனை 10,000 ஆயிரத்தை தாண்டும்; இங்கே கூடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், அவர்கள் பொதுவாகவே செலவு செய்வதைக் குறித்து கவலைப்படமாட்டார்கள்; எனவே எப்படியும் கிடட 10 லட்சம் ஒரே ஒரு கொண்டாட்டத்தில் கலெக்ஷன் ஆகிறது.
இப்போது யாருக்கு உண்மையிலேயே எழுப்புதல் இறங்கும் என்று நண்பர்கள் சொல்லட்டும்..! நூறு ரூபாய் கொடுத்து யூஸ் அன் த்ரோ அடிப்படையில் சிடி வாங்குவதைவிட்டு அந்த காசில் பைபிள் வாங்கி வாசித்தால் நித்தியத்துக்கான வழியை அடையலாம். சிடி வாங்குவதை நிறுத்தினாலே போதும் இதுபோன்ற போலிகள் தானாகவே மறைந்துபோவார்கள் அல்லது அநியாய கொள்ளை தடுக்கப்படும்.
சிடியை விட புத்தகமே மதிப்பு மிக்கது. வாள்முனையைவிட பேனா முனை வலியது என்பார்களே... எல்லா வாளும் வெற்றியைத் தராது போலவே எல்லா பேனாவும் சிறந்தது அல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)