சாமிக்கு (?) காணிக்கையாக படைக்கப்படும் முடியை பஸ்மமாக்கி அதிலிருந்து ப்ரோட்டீனைப் பிரித்தெடுத்து சாக்லெட் தயாரிக்கும் மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்.
விற்பனை வரி செலுத்தவில்லை 800 கிலோ தலைமுடி பறிமுதல்
அக்டோபர் 30,2011,23:05 IST
நகரி : திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து வாங்கிய, 800 கிலோ தலைமுடியை, விற்பனை வரி செலுத்தாமல் லாரிகளில் ஏற்றிச் சென்றதால், விற்பனை வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருமலையில், பக்தர்கள் பிரார்த்தனையாகச் செலுத்தும் தலைமுடியை, சேகரித்து வைக்கும் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கிடங்கு, அலிபிரி டோல்கேட் அருகே உள்ளது. இக்கிடங்கில் இருந்து, 800 கிலோ எடை கொண்ட, 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள தலைமுடியை, அனந்தபுரம் மாவட்டம் உரவகொண்டா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர், தலைமுடிக்குச் செலுத்த வேண்டிய, 4 சதவீத விற்பனை வரியைச் செலுத்தாமல், லாரிகளில் கொண்டு சென்றார்.
விற்பனை வரித்துறை அதிகாரிகள், தலைமுடியை ஏற்றிச் சென்ற லாரிகளை, திருப்பதி-ரேணிகுண்டா சாலையில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, விற்பனை வரி செலுத்தாதது தெரிய வந்ததால், மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.