நான் பாவியிலும் பாவி... என் இரட்சகருக்கு முன்னால் நான் ஒன்றுமேயில்லை; இந்த பாடலை மட்டுமே ஒரு வருடமாக தேடிக்கொண்டிருந்தேன்; இந்த பாடலில் முதல் வரியை நினைவுபடுத்தி பார்த்து சோர்ந்துபோனேன்; இன்று இந்த பாடலை ஆவியானவர் எனக்கு மீண்டும் எடுத்துகொடுத்தார்...நன்றி..!
ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை
சோர்ந்துபோன நேரம் என்னை தாங்கிக்கொண்ட கிருபை
-கிருபை... கிருபை... கிருபை.... தேவகிருபை (2)
1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை (2) -நான்
2. தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை தனித்து நின்றபோது உதவிசெய்த கிருபை (2) -நான்
3. பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை (2) -நான்
4. மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை (2) -நான்
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)