பட்டாசு தொழில் மாத்திரமல்லாமல் டாஸ்மாக் கடைகளிலும் இன்னும் பல்வேறு லாகிரி வஸ்துக்களையும் விற்போர் இந்த தேசத்தில் கோடிக்கணக்கில் உள்ளனர்,நணபரே.சந்தன மரத்தை வெட்டி பிழைப்போரும் கூட பரிதாபத்துக்குரியவர்களே..!
தொழில்களில் அழிவு சக்திக்காக ஓடுவோரும் உண்டு,ஆக்கு சக்திக்காக ஓடுவோரும் உண்டு;இதில் பட்டாசு தொழிலினால் மனிதம் அடையும் நன்மை என்ன..? வெடிகுண்டுக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள்..? மனிதத்தில் இருக்கும் வக்கிரத்தையும் வெறியையும் தூண்டவே இவை பயன்படுகிறது என்று யோசிக்கிறேன்;
நடுத்தர வயதான நானே நேற்று முழுவதும் கடந்த 24 மணிநேரமாக தூங்கவோ அமர்ந்திருக்கவோ முடியாமல் தவித்தேன்; வயதானவர்கள் எத்தனை வேதனைப்படுவார்களோ, மற்றவரைத் துன்புறுத்துவது தான் பண்டிகை கொண்டாட்டமா..?
மார்க்கத்தில் இதெல்லாம் கிடையாது;அதில் விளக்கேற்றுவதும் இறைவனைத் தொழுவதும் மட்டுமே இருக்கிறது; இவையெல்லாம் கமர்ஷியல் விஷயங்களாகும்;இதில் ஏழைகளை சம்பந்தப்படுத்துவது இன்னும் கொடுமை; அந்த முதலாளிகள் ஏழைக்ளுக்குக் கொடுப்பது அன்றாட கூலிகூட் இல்லை; அவர்கள் கொத்த்டிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள்; அவர்களில் பலருக்கு வருட சம்பளமே;அவர்களில் பலர் வாங்கியுள்ள கடனுக்கு வட்டியுடன் சேர்த்து கடனைத் தீர்க்கவே பணிபுரிகிறார்கள்; இன்னும் தற்காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்தரம் வந்துவிட்டதால் இதில் ஏழைகள் பயனடைவதாகச் சொல்லப்படுவதும் ஏமாற்று வேலையாகும்;முழுக்க் முழுக்க் வியாபாரம்... வியாபாரம்... வியாபாரமே..!
நான் தீர்மானமாக எழுதிவிட்டேன்,ஆனாலும் உங்கள் மாற்றுக்கருத்தையும் தயவுசெய்து பதியவும்;
மேலும் கிறிஸ்தவர்களும் இந்த பட்டாசு கலாச்சாரத்தில் இணைந்திருப்பது கொடுமையிலும் கொடுமை;ஒரு திருமணத்தில் ஜோடிகள் ஆலயத்திலிருந்து வெளியே வரும் நேரத்தில் பட்டாசு வெடித்தார்கள்;அதே நேரத்தில் இரண்டு வெண்புறாக்களையும் பறக்க விட்டார்கள்;பட்டாசு சத்தத்துக்கு அஞ்சியோ என்னவோ அவை பறந்த வேகத்தைப் பார்க்கவேண்டுமே...பறந்து ஓடியே போய் விட்டன... மனிதன் மற்ற ஜீவன்களைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பதில் மிருகத்தைவிட கேவலமாக போய்விட்டான் என்பது மாத்திரமே இதில் விளங்குகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நீங்கள் சொல்லும் கருத்து சில விதிவிலக்குகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். சற்று பொதுப்படையாக சிந்திப்போம், தீபாவளியன்று நடக்கும் வர்த்தகம் தான் அத்தொழிலை நம்பியுள்ள பல குடும்பங்களுக்கு சோறு போட்டுக்கொண்டிருக்கிறது. ஒருவேளை பட்டாசு கலாச்சாரம் மாற்றமடைய வேண்டுமானால் இத்தொழிலை நம்பியுள்ள குடும்பங்களின் வரும்படி..... என்ன ஆகும்.
ஏற்கனவே சீனா மூலமாக இத்தொழிலுக்கென கடும் போட்டி உள்ளது. பட்டாசுகள் மூலமாக மகிழ்ச்சியை கொண்டாடும் வழக்கம் இன்றைக்கு நேற்று உள்ளதல்ல நண்பரே, பல காலமாக உள்ள வழக்கம் அது. ஏன் தென் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் காலங்களில் கிறிஸ்தவர்கள் பலர் பட்டாசுகள் வெடிப்பதில்லையா, சில ஆலயங்களிலெயே வெடிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் மட்டும் எப்படி பக்தி விருத்தி உண்டாகும் என்கிறீர்கள்?
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக வெடி சத்தம்...ஒருவேளை நான் புதியதாக குடியேறியிருக்கும் பகுதியிலுள்ளவர்கள் அதிகம் வெடி வெடிக்கிறார்களோ அறியேன்.
இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது? இந்தியாவிலுள்ள சுமார் 100 கோடிபேரும் தலா பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை வெடிபோட செலவிட்டிருக்கிறார்கள்;அதாவது இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 5000 கோடி முதல் 10000 ஆயிரம் கோடி ரூபாய் வரை வெடித்து குப்பையாகி உள்ளது.இதனை யோசிக்க யோசிக்க பிரமிப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
யார் இந்த கலாச்சாரத்தைக் கொண்டுவந்தது? இதனால் மனிதன் அடையும் நன்மை என்ன? நான்கு உறுப்பினர்கள் உள்ள ஒரு குடும்பத்துக்கு ஃபண்டு மூலமோ சேமிப்பு மூலமோ அல்லது சொந்த பணத்தின் மூலமோ சராசரியாக 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பட்டாசு வெடிகளும் மத்தாப்புகளும் வாங்கப்பட்டிருக்கிறது;அவை அத்த்னையும் நேற்று ஒரே இரவில் சிறுபிள்ளைகளின் ஆர்வத்தினால் வெடித்து தீர்ந்திருக்கும்;எனவே இன்றும் நாளையும் தொடர்ந்து வெடி வியாபாரம் பலமாக நடைபெறும். சிவகாசியிலிருந்து வரும் தகவலின்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 10 சதவீதம் பட்டாசுகளின் வியாபாரம் உயர்ந்துகொண்டே வருகிறதாம்;
இதன் பலன் என்ன? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து செய்யும் பிரச்சாரங்களையெல்லாம் கடந்து நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரின் எச்சரிக்கைகளையெல்லாம் மீறி இந்த பட்டாசு கலாச்சாரம் பரவியிருக்கிறது,என்றால் இதனால் மனிதன் அடையும் ஆன்மீக நன்மை என்ன என்று யோசிக்கவேண்டும்.யார் இதனை இயக்குகிறார்? அரசாங்கம் மக்களுக்கு கட்டளை போட்டதா? மானிய விலையில் பட்டாசுகளை விநியோகிக்கிறதா? எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்தும் மக்கள் பட்டாசுக்கு மட்டும் மானியம் கேட்பதுமில்லை;விலையேற்றத்தைப் பொருட்படுத்துவதும் இல்லை;
ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாமல் பட்டாசு வெடி போட்டு அடையும் சுகம் தான் என்ன? மதம் இதனைப் போதிக்கிறதா என்றால் அவர்களும் இதனை விளக்கேற்றி கொண்டாடவே சொல்லுகிறார்கள்;விளக்கேற்றுவது எளிதானதா,வெடி போடுவது எளிதானதா? விளக்கேற்றுவதற்கு அதிக செலவாகுமா,பட்டாசுக்கு அதிகம் செலவாகுமா? விளக்கேற்றுவது பக்தியுணர்வைத் தருமா,பட்டாசு பக்தியுணர்வைத் தருமா? அன்று சூரனை சக்தி வதம் செய்தாள் என்று கொண்டாடும் பண்டிகையில் தாங்கள் வணங்கும் சக்தியையே லட்சுமி வெடி என்ற பெயரில் வெடித்து வதம் செய்கிறார்களே..?
எனவே இதில் ஆன்மிக உணர்வும் இல்லை, சுற்றுச்சூழலையும் கெடுக்கிறது;ஏழை எளிய மக்களுக்கு அதிகப்படியான பொருட்செலவும் கடன்சுமையும் ஏற்படுகிறது;தீக்காயங்களும் ஏற்படுகிறது;இதனைக் கொண்டாட இயலாத குடும்பங்களில் ஒருவித இயலாமையும் சோகமும் நிலவுகிறது;இதுபோன்றதொரு விழாவினால் இறையுணர்வு இறையருளும் கிடைப்பதுமில்லை;அப்படியானால் இப்படிப்பட்ட ஒருவிழாவின் மையநோக்கத்தை அறிவோமா..?
(தொடரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)