Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்" என்று விட்டுவிடலாமா..?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: "அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்" என்று விட்டுவிடலாமா..?
Permalink  
 


chillsam wrote:


அவரோடு ஒத்துப்போகாததால் எனக்கு ஒருமாத வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் லட்சக்கணக்கான பணம் நஷ்டம்;ஆமாம், அடுத்த வாரம் ருமேனியா போலந்து போன்ற நாடுகளில் நடைபெறும் வேத மாணவர் மாநாட்டுக்கு இந்திய பிரதிநிதியாக இவர் செல்லுகிறார்;இவருடன் இவர் விரும்பும் ஒருவரை அழைத்துச்செல்லலாம்;அந்த வாய்ப்பை எனக்குத் தருவதாகச் சொன்னார்; நானும் அரைமனதுடன் சம்மதித்திருந்தேன்,ஆனால் நான் அவர்களை வைராக்கியத்துடன் எதிர்ப்பதைப் பார்த்து அஞ்சியோ என்னவோ ஸாரி சொல்லிவிட்டார்; எனக்கு அப்பாடா என்று இருந்தது;ஆனாலும் உளவாளியாகச் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேனே என்று கஷ்டமாக இருந்தது;


 ஆண்டவருக்காக எல்லாவற்றையும் குப்பையாக எண்ணியதற்கு பாராட்டுக்கள்.



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
"அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்" என்று விட்டுவிடலாமா..?
Permalink  
 


கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக வேதமாணாக்கர் இயக்கத்தவருடன் ஆரோக்கிய உபதேசத்தை முன்னிட்டு போராடிக்கொண்டிருக்கிறேன்; நேற்று என்னை சந்தித்த ஒரு நண்பர், நீங்கள் ஏன் அவர்களுடைய தள‌த்தில் சென்று எதிர்கருத்தை சொல்லுகிறீர்கள்,அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் என்று தானே வேதம் சொல்லுகிறது;அவர்கள் சொல்லுவதை அவர்கள் சொல்லட்டும் நீங்கள் சொல்லுவதை நீங்கள் சொல்லுங்கள், ஏன் தேவையில்லாமல் வாதாடுகிறீர்கள், மேலும் கீழ்த்தரமான தூஷணமான வார்த்தைகளையும் பயன்படுத்துகிறீர்கள், இதனால் புதியவர்கள் இடறலடைவார்கள் என்று சொன்னார்; நான் சொன்ன நியாயங்கள் எடுபடவில்லை.

எனது பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தாலோ அல்லது எனது கருத்துக்களை மேற்கோள் காட்டி விமர்சித்தாலோ மட்டுமே அதற்கு பதிலாக நான் எனது கருத்தை பதிவிட்டிருக்கிறேன்; நான் மாற்றுக் கருத்தை சொல்லும் காரணத்தினால் கொஞ்சமும் நாகரீகமில்லாமல் பல்வேறு தூஷண வார்த்தைகளால் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்; இதுவே எல்லா குழப்பத்துக்கும் ஆரம்பமாக இருக்கிறது என்பதை நடுநிலையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்;மேலும் இதுபோன்று இன்னொருவர் மனதைப் புண்படுத்தும் கூற்றுகளைத் தெரிவிப்போர் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் இல்லை;ஆனாலும் பொறுமை காத்துவருகிறேன்.

கடந்த சுமார் ஐந்து வருடங்களாக என்னோடு நட்புரீதியில் பழகிக்கொண்டிருக்கும் அந்த நண்பர் தான் வேதமாணாக்கர் உபதேசத்தை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறி மாயம்பண்ணிக் கொண்டிருக்கிறார், அதனை நேற்று கண்கூடாக அறிந்தேன்; எப்படியெனில் நேற்று அவர் முன்னிலையில் என்னை போன் மூலம் தொடர்பு கொண்ட மற்றொரு நண்பர் இந்த வேதமாணாக்கர் மற்றும் யெகோவா சாட்சி உபதேசக்காரர்களை அறிவது எப்படி என்று கேட்கவும் நான் அவர்களைக் குறித்த சில அடையாளங்களை சொல்லிக்கொண்டிருந்தேன்; இது வேதமாணாக்கர் கூட்டத்தைச் சேர்ந்த எனது நண்பரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை, போலும்;அப்படியும் அவரை சமாதானப்படுத்தும் எண்ணத்தோடு உங்கள் முன்பாகவே உங்களைக் குறித்த முக்கிய அடையாளங்களை சொல்லுகிறேனே, வருத்தப்படுகிறீர்களா,ஏதேனும் தவறாக சொல்லிவிட்டேனா, என்றதற்கு,அவரையும் மீறி கோபத்தை வெளிப்படுத்திவிட்டார்; நீங்கள் ஏன் அவர்களைக் குறித்தே ஓயாமல் பேசிக்கொண்டும் அவர்களிடம் வாதாடிக்கொண்டும் இருக்கிறீர்கள்;அவர்கள் அதுபோல செய்கிறார்களா என்றார்.

நான் சொன்னேன், என்னங்க இப்படி சொல்றீங்க,ஒரு குறிப்பிட்ட சபைக்குச் செல்லும் புதிய விசுவாசியான ஒரு சகோதரியை வசப்படுத்தி அவர் மூலம் இன்னும் சிலரையும் சேர்த்து வேத ஆராய்ச்சி என்ற பெயரில் அவர்கள் வீட்டில் வாராவாரம் வகுப்பு நடத்தி இதோ 35 வாரம் ஆகிவிட்டது;அந்த வகுப்பின் இடையில் சென்ற நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கொடுத்தார்கள் தெரியுமா,நீங்கள் இதுபோல திடீரென இடையே வந்து கேள்விகேட்டால் உங்களுக்குத் தெரியாது,நீங்க ஆரம்பத்திலேயே வந்திருக்கவேண்டும் என்கிறார்கள்;இன்னொரு கேள்விக்கு நீங்க தொடர்ந்து வந்தாலே அதற்கான பதில் கிடைக்கும்;அந்த பாடம் இன்னும் வரவில்லை என்றார்கள்;ஆனால் அந்த குடும்பம் இதோ சபையைவிட்டும் பொதுவான கிறிஸ்தவத்தைவிட்டும்  விலகிப்போய்விட்டது,இதுபோல ஒரு புதிய விசுவாசியை தந்திரமாக பேசி மயக்கி மாறுபாடானதைப் போதித்து சபையை விட்டு கடத்தி செல்லுவது நியாயமா என்றதற்கு, அவர் எகத்தாளமாக சிரித்துக்கொண்டே சொல்லுகிறார், எங்கே போயிட்டாங்க,அவங்களும் ஒரு சபைக்கு தானே போறாங்க,உங்களுடையதே சரியானது என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்,உங்களுடைய விசுவாசம் 1800 வருடம் பழமையானது என்று எதைவைத்து சொல்லுகிறீர்கள்,அதற்கு தான் அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்,ஆண்டவரே வந்து பலன் கொடுப்பார், நீங்க அவங்கள் பற்றி பேசிக்கொண்டும் அவர்களோடும் வாதாடிக்கொண்டும் இருப்பதே வேஸ்ட் என்றார்;நான் கோபத்துடனும் வைராக்கியத்துடனும் கேட்டேன்,ஏங்க,இன்னொருத்தன் பெண்டாட்டிய இழுத்துகிட்டு போய் அவளும் அங்கேயும் குடித்தனம் தானே பண்றா என்பது எத்தனை மோசமாக இல்லை..? என்றேன்;அதற்கு அவர் விடாப்பிடியாக சொல்லுகிறார்,அவங்களும் இன்னொரு மதத்திலிருந்துதானே வந்தாங்க என்பதாக.

இறுதியாக நான் சொன்னேன், இதப்பாருங்க உங்களோடு நேருக்கு நேர் வாதம் செய்ய எனக்கு விருப்பமில்லை; உங்கள் உபதேசமே அன்றைக்கு இயேசுவானவர் சிலுவையில் அறையப்படக் காரணமாக இருந்தது;இயேசு தம்மை தேவகுமாரன் என்று கூறி தேவனுக்கு சமமாக்கியதாலே அவரை சிலுவையிலறைந்தார்கள்;அதனைத் தொடர்ந்து அவருடைய சீடர்களையும் அவ்வாறே துன்புறுத்தினார்கள்;அந்த வகையில் ஆண்டவரே சந்தித்து குதிரையின் மீதிருந்து கீழே தள்ளும் வரை பவுலடிகளும் ஒரு முன்னாள் வேத மாணவர் தானே என்று சொன்னதும் ஓவென சிரித்து, நல்லா ஜோக்கடிக்கிறீங்க ப்ரதர் என்றார்;அந்த சிரிப்பிலேயே எனக்கு எல்லாம் புரிந்துபோனது; இவருடன் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக வீணாக்கிவிட்டேனே, தேவையற்ற நட்பு பாராட்டினேனே என்று வெட்கப்பட்டேன்.

அவரோடு ஒத்துப்போகாததால் எனக்கு ஒருமாத வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் லட்சக்கணக்கான பணம் நஷ்டம்;ஆமாம், அடுத்த வாரம் ருமேனியா போலந்து போன்ற நாடுகளில் நடைபெறும் வேத மாணவர் மாநாட்டுக்கு இந்திய பிரதிநிதியாக இவர் செல்லுகிறார்;இவருடன் இவர் விரும்பும் ஒருவரை அழைத்துச்செல்லலாம்;அந்த வாய்ப்பை எனக்குத் தருவதாகச் சொன்னார்; நானும் அரைமனதுடன் சம்மதித்திருந்தேன்,ஆனால் நான் அவர்களை வைராக்கியத்துடன் எதிர்ப்பதைப் பார்த்து அஞ்சியோ என்னவோ ஸாரி சொல்லிவிட்டார்; எனக்கு அப்பாடா என்று இருந்தது;ஆனாலும் உளவாளியாகச் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேனே என்று கஷ்டமாக இருந்தது;

இங்கே தியாக தீபங்கள் போல வேஷம் போடும் இவர்களுக்கு வெளிநாட்டில் ராஜமரியாதை,விமான டிக்கெட் ஸ்டார் ஹோட்டல் உபசரிப்பு;நான்கே நாட்கள் மாநாடு ஆனால் ஒரு மாதத்துக்கும் மேல் சுற்றுலா;ஆங்கிலத்தில் செய்தியளித்தால் கொள்ளை பணம்..!

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையே இனியும் நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் (மேசியாவின்) எதிரி நம்முடைய மந்தைகளுக்குள் பலத்த சேதங்களை ஏற்படுத்துவான் எனப்தை கவனத்தில் கொள்ளுவாயாக.நசல்கொண்டதும் பலவீனமானதுமான ஆடுகள் மேல் விசேஷித்த கவனம் கொள்ளுவாயாக. அவையே இந்த ஓநாய்களின் இலக்கு ஆகும்.வஞ்சிக்கப்படுகிறவர்களுக்கும் இதில் பங்கும் சுயாதீனமும் உண்டு என்றாலும் நம்முடைய கண்ணுக்கு எதிரே ஒருவன் குழியில் விழுந்தால் நாம் பார்த்துக்கொண்டிருக்கமுடியுமா? அவனை விழாமல் தடுக்கவே நாம் நியமிக்கப்பட்டிருந்தால் நம்மை நியமித்தவரே அதை செய்யட்டும் என்று சொல்லுவோமா, சிந்திப்போம்,செயல்படுவோம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard