நாம் இங்கு துவங்கிவைத்த போராட்டம் வ்தனநூலில் படர்ந்து கிளைபரப்பிக்கொண்டிருக்கிறது. நம்முடைய நோக்கம் யாரையும் விரோதிப்பதோ அழிப்பதோ அல்ல.மாறாக த்வறான உபதேசங்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மாத்திரமே.
இதோ கீழ்க்காணும் வசனப் படத்தை நமது பக்கத்தில் பகிர்ந்து இதிலிருந்து ஒரு கேள்வி கேட்க எண்ணினோம்.ஆனால் மிகத் தந்திரமாக மேசியாவின் எதிரிகளான அந்த கும்பல் நம்மை ப்ளாக் பண்ணியிருக்கிறது.எனவே கவன ஈர்ப்பை முன்னிட்டு இங்கிருந்து அந்த கேள்வியை முன்வைக்கிறோம்.
இந்த வசனப் படத்தில் தேவனுடைய ஊழியர்களைக் குறைகூறப்படுகிறது.சரி, நிலைமை அப்படியிருப்பதால் அதைக் குறித்து நாங்களும் யோசிக்கிறோம்.ஆனால் நீங்கள் யார், நீங்கள் இயேசுவைக் குறித்த உங்கள் போதனை என்ன ? நீங்கள் எதை தேவனுடைய வழி என்கிறீர்கள் என்பதையும் தீர்வாக சொல்லலாமே..?
நம்முடைய தேவன் ந்ன்மைகளின் ஆதாரமாக இருக்கிறார்.நாம் ஒருவருக்காக ஒருவர் பிரார்த்திக்கும் போது நிச்சயமாகவே நம்மை ஆசீர்வதிக்கிறார். அதற்கான உத்தரவாதத்துடன் ஜெபிக்கிறவர்களே தேவ ஊழியர்கள்.ஆனாலும் சிலர் சரியாக இல்லாததால் இந்த உக்கிராணத்துவ ஊழியத்தையே சிலர் குற்றப்படுத்துவதை அனுமதிக்கமுடியாது.
நீங்களே சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கையில் மற்றவர்களைக் குறைகூற உங்களுக்கு எந்தவிதமான தார்மிக உரிமையும் இல்லை என்பதை நீங்கள் முந்தி அறியவேண்டியது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
(மேசியாவின்) எதிரிகள் உலகெங்கும் பரவியிருக்கிறார்கள்; அவர்களைக் குறித்து அறியாத கர்த்தருடைய பிள்ளைகளிடம் நாம் அவர்களைக் குறித்து வதனநூலின் (Facebook) பக்கங்களிலும் நாம் எழுதி எச்சரித்து வருகிறோம்; ஆனால் நாம் தமிழில் பின்னூட்டமிடவேண்டாம் என்று கோரப்படுவதால் குறிப்பிட்டதொரு பக்கத்திலிருந்து நாம் வெளியேறுகிறோம்; ஆங்கிலத்தில் எழுதி நாம் சாதிக்கப்போவது ஏதுவுமில்லை என்பதாலும் தமிழில் எழுதி எச்சரிக்கவே நாம் ஆர்வம் கொண்டுள்ளதாலும் இந்த பக்கத்திலிருந்து வெளியேறியிருக்கிறோம்.
Can you fill up the rest like 1*1*1, egg yoke, white, shell theory, three wheeler theory, states of matter ... and the myriad theories? Golda Jasmine? May be with the help of Chinna Pastor and Chill Sam.
Yeah br Kattackal Tomsan, you have examples of ice cube+water+water vapour!! You have example of Electrical wire (insulation+cable+electricity passing through that)!! Trinitarians search for nature and worldly examples to stand for their fabled doctrine!! And we choose the scriptures to disprove their THEORIES!!
Br I was a hardcore Trinitarian!! I can teach these people more of trinity than they know!!
@Ignatius Elango ஹலோ ஸார் நீங்க, கொடுக்கும் அனாலிஸிஸ் புத்திசாலித்தனமானது நான் கொடுக்கும் சாதாரண ஒண்ணாம் வாய்ப்பாடு முட்டாள்தனமானதா..? ஏன்,உங்களுக்கு ஒண்ணாம் வாய்ப்பாடு கூடவா தெரியாது,அதைப் போய் முட்டாள்தனமானது என்கிறீர்களே..?!
ஆண் பெண் ஆகிய இரு நபர்களை ஒரே மாம்சமாயிருக்கிறார்கள் என்று வேதம் சொல்லவில்லையா..? அப்படியானால் உங்கள் கூற்று பொய்யானதா அல்லது வேதம் சொல்லுவது பொய்யானதா..?
//Deu 6:4 Hear, O Israel: The LORD our God is one LORD.//
ஒருவரை ஒருவர் என்று சொல்லவேண்டிய அவ்சியமிராதே, ஆண்டவர் ஆதிமுதலாக பல்வேறு விதங்களில் தம்மை வெளிப்படுத்தியதாலே இவ்வாறு சொல்லப்பட்டது;அதனை மூலபாஷையிலிருந்து நீங்கள் எளிதாக அறியமுடியும்;
அறிவுஜீவிகள் வட்டாரத்தில் எந்தவொரு காரியத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் சொல்லப்பட்டு கொள்கைகளாக உருவெடுக்கும், புறக்கணிக்கப்பட்ட கொள்கையிலும் உண்மையிருக்கும்;இரண்டு பக்கமும் சமமாக ஆதரவாளர்கள் இருப்பார்கள்;ஆனாலும் உண்மை இரண்டல்ல, ஒன்றே...பிரிவினைக்குக் காரணம் மனிதனே..!
1+1+1...என்று போட்டு இறைத் தன்மையை கூட்டிப்பார்க்கச் சொன்னது யார் ஐயா,ஒன்று என்பது முழுமையானது,அது பின்னம் அல்ல,தசம எண் அல்லவா, அதனை கூட்ட அல்ல பெருக்க முயற்சித்தால் அதனை எத்தனை முறை போட்டு பார்த்தாலும் அதில் ஒன்று தானே வருகிறது;மேலும் அதனைப் பிரிக்கவும் முடியாது;எனவே திரித்துவத்தைக் குறித்து ஆராய்வதை விட்டுவிட்டு முதலில் வாய்ப்பாட்டை (Tables) கற்றுக்கொள்ளுவோமாக.
@Richard Felson //இவர்தான் அவர் அவர்தான் இவர். கேட்டால் இரகசியமாம்.//
ஒரு இரகசியம் என்பது வெளிப்படும் வரை மட்டுமே இரகசியமாகும்; வெளிப்பட்ட பிறகோ அது செய்தி (சுவிசேஷம்.)
பைத்தியக்காரன் எதைச் சொன்னாலும் நம்புவானுங்க; ஏனெனில் அவனுக்கு சொந்த அறிவே கிடையாது;எனவே அவன் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறானோ அவன் சொல்வதே வேதம் என்று நம்பி அதையே நான் கண்டது என்று சொல்லி கண்டதையும் பரப்புவான்...
(ஆடுறா ராமா... ஆடுறா ராமா...என்று மூன்றாம் பிறை திரைப்படத்தின் கடைசி ஸீனில் வருவது போல... நாயகியோ போகவேண்டிய இடத்துக்கு போய்க்கொண்டிருப்பாள்,இப்போது பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தவனே பைத்தியமாகி நிற்கிறான், கர்த்தருடைய நாளில் இரஸல் நிலைமை பாவம்,பரிதாபம்..!)
சுவிசேஷத்தில் குழப்பம் இல்லை. திரித்துவத்தை இன்னும் 'ரகசியம்' என்றுதானே நம்பவைக்கப்படுகிறது. ஒரே தேவன் என்று ஆயிரம் வசனங்கள் உண்டு. மூன்று என்று ஒரு வசனமும் இல்லை. பிசாசின் தந்திரம். வசனமே இல்லாமல் நம்பவைக்கிறான். பேய்த்தனத்துக்கடுத்த உபதேசம். கிறிஸ்துவின் உபதேசமோ...
II யோவான் 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
நண்பரே, தயவுசெய்து தெய்வத்துவத்தை இரண்டாகக் கூறுபோடாதிருங்கள்; வேதம் அவரை ஒருவர் என்று சொல்லியிருக்க,நாங்கள் செய்வதாக நீங்கள் சொல்லும் தவறை நீங்களே செய்கிறீர்களே..? மூன்றாகக் கூறுபோடுவோரும் கூட மீண்டும் இணைத்தே கூறுகிறார்கள், நீங்களோ பிரித்து வைத்து சுகம் காணுகிறீர்கள்; ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல கணவனும் மனைவியும் எண்ணிக்கையில் இரு நபராக இருப்பினும் வேதத்தில் அவர்கள் ஒன்றே என்று சொல்லப்படுவதை கவனத்தில் கொள்ளவும்.
எனது பெயரை Kattackal Tomsan Tag. செய்திருந்த காரணத்தினால் இங்கே எனது கருத்தை பதிவிட்டிருக்கிறேன். நான் எதிர்கருத்தை சொல்லும் காரணத்தினால் //Again a foolish analysis // என்றும் // ஒருவரை மூவர்... பைத்தியக்காரன் கூட நம்ப மாட்டான். வாழைப்பழக் காமெடி. // என்றும் எழுதி தனிப்பட்ட முறையில் தூஷண வார்த்தைகளால் தாக்குகிறார்கள்.
இதுவே எல்லா குழப்பத்துக்கும் ஆரம்பமாக இருக்கிறது என்பதை நடுநிலையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்; மேலும் இதுபோன்று இன்னொருவர் மனதைப் புண்படுத்தும் கூற்றுகளைத் தெரிவிப்போர் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் இல்லை;ஆனாலும் நான் பொறுமை காத்துவருகிறேன்.
தெய்வத்துவத்தை நாங்கள் கூறுபோடவில்லை. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவர் இயேசுவுக்கும் தேவனானவர். சாவாமையுள்ளவர், ஆதியந்தமில்லாத ஏக சக்கராதிபதி. அவருக்கு முன் ஒரு தேவன் இல்லை, அவருக்கு பின்னும் அவரைப்போல ஒருவருமில்லை. தேவன் ஒருவரே. மத்தியஸ்தர் ஒருக்காலும் பிதாவாக முடியாது. இயேசு கிறிஸ்து கீழ்ப்பட்டிருக்கும் நம்முடைய பிதாவாகிய ஒரே தேவனுக்கே சகல துதியும், கனமும், மகிமையும் உண்டாவதாக! பிரதான ஆசாரியர் ஒருபோதும் ஆராதிக்கப்படுபவராக ஆக முடியாது. அதுவும் இவர் நித்திய பிரதான ஆசாரியர் என்றே வேதம் சொல்கிறது. அனுப்பப்பட்டவரல்ல அனுப்பியவரே பெரியவர். பிதா என்னிலும் பெரியவர் என்று கிறிஸ்துவே கூறும்போது அவர் கூறாத ஒன்றிற்கு வக்காலத்து வாங்குவது அறிவுடைய செயலாக தோன்றவில்லை.
பிதா வேறு, குமாரன் வேறு.
இதுவே கிறிஸ்துவின் உபதேசம். நாங்கள் அதில் நிலைத்திருக்கிறோம்.
பிதாவாகிய தேவன், இயேசு கிறிஸ்துவுக்கும் தேவன். எங்கே இயேசு கிறிஸ்து பிதாவின் தேவன், அல்லது பிதாவாகிய தேவன் என்று ஒரே ஒரு வசனம் காண்பியுங்கள் பார்க்கலாம்.
ஏன் இயேசு கிறிஸ்து நானே பிதாவாகிய தேவன் என்னை ஆராதியுங்கள் என்று ஒருமுறையாவது சொல்லவில்லை? இயேசு கிறிஸ்து மரித்துப்போனாரே... சர்வ வல்ல தேவன் மரிப்பாரா? எல்லாவற்றையும் அறிந்த சீடர்கள் நீர்தான் மெய்யான தேவன் என்று ஒருபோதும் சொல்லவில்லை...?
Please, to the extent possible keep the conversation in English. The scriptures were not written in Tamil and we get no better info by discussing in Tamil. [It is not that I do not know Tamil, there are others who will not be able to understand the conversation.]
Many quote this verse to prove that the father and son are "one".
Joh 10:30 I and the Father are one."
If that make the two entities into one person, then these verses should make the 12 apostles into "one" person. John 17:22 ...that they [disciples] may be one even as we are one. John 17:11 ... that they [disciples] may be one, even as we are one.
Speaker is the same (Jesus), author is the same (John), language is the same (Greek).
For every sane mind, oneness that Jesus was oneness of Goal and nothing else!
@Richard Felson ஏன் ரொம்பவும் சிரமப்படுகிறீர்கள், யோவான் எழுதிய முதலாம் நிருபத்தின் மூன்றாம் அதிகாரத்தை நிதானமாக வாசிக்கலாமே..?
//1. நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
2. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.//
பிதா வேறு, குமாரன் வேறு எனும் கொள்கையை முதலில் மாற்றிக்கொண்டு இருவரும் ஒருவரே என்ற நிலைக்கு வந்தாலே செலுத்தப்பட்ட பலியானது எத்தனை மேன்மையானது என்று விளங்கும்.
மேலும் இயேசுவானவர் தம்மை ஆராதிக்கவோ வணங்கவோ தொழவோ வேண்டாம் என்று ஒருபோதும் சொல்லவில்லை;
அன்பின் அப்போஸ்தலனான யோவானும் ஆசிய ஜோதியான பவுலடிகளும் அவர் மெய்யான தேவன் என்று சொல்லியிருக்கிறார்கள்;இரண்டு சாட்சியினால் காரியம் உறுதிபடும் தானே..?
I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.
Yes, the scriptures tell that the husband and wife are one flesh, no doubt. It again is about the loyalty, faithfulness and things like that.
Last month my wife died, does that mean I cease to exist as flesh? Nay, Chill Sam, your logic and scriptural understanding is faulty.
She died, but the unity of love, purpose, dreams ... lives on and that is called oneness.
keep the discussion in English. Scriptures are not written in Tamil. There is no greater truth to be revealed by discussing in Tamil.
Please verify the scriptures against various translations and versions before accepting and taking it as proof. Rom 9:5 is translated variously by various translators depending on their theological stands, how will you say which one is right?
GNB Rom 9:5 they are descended from the famous Hebrew ancestors; and Christ, as a human being, belongs to their race. May God, who rules over all, be praised forever! Amen.
YLT Rom 9:5 whose are the fathers, and of whom is the Christ, according to the flesh, who is over all, God blessed to the ages. Amen.
Moreover, calling or addressing someone as God will not make them equal or comparable to the Father of Jesus.
Jesus called Jews as Gods, Satan is called as god of this world ... the Greek words are same.
Chill Sam, Deut 6:4 is a clear doctrinal statement that depends on no translator's skill. The sentence has only one clause and can be translated even a beginner in Hebrew. While you make claims of any sort, get some clear scriptural evidence than verses that has been translated variously.
The claims of "mystery" stuff regarding trinity is busted here:
Deu 30:11 For this commandment which I command thee this day, it is not hidden from thee, neither is it far off. Deu 30:12 It is not in heaven, that thou shouldest say, Who shall go up for us to heaven, and bring it unto us, that we may hear it, and do it? Deu 30:13 Neither is it beyond the sea, that thou shouldest say, Who shall go over the sea for us, and bring it unto us, that we may hear it, and do it? Deu 30:14 But the word is very nigh unto thee, in thy mouth, and in thy heart, that thou mayest do it.
There is no mystery, the commandments are straight forward.
Chill Sam, we know the merit of the sacrifice of Jesus and how hard it was on the father, for that we need not to violate the scriptures.
2Jn 1:9 Whosoever transgresseth, and abideth not in the doctrine of Christ, hath not God. He that abideth in the doctrine of Christ, he hath both the Father and the Son.
There is BOTH father and son as two different entities for those who are in Christ. Whoever exceeds (saying three or more) has no God! This rules out God and Jesus are one theory as well.
Chill Sam, Your logic is great! Jesus has not told that he should not be worshiped, so you need to worship! This is not the way a doctrine is stated!
Jesus said: Thou shalt worship the Lord thy God, and him only shalt thou serve. (obviously he was quoting from OT)
When Jesus told that you should ONLY worship GOD (obviously father) those words do not apply to you. While human teachers told Jesus is to be worshiped you found it as real commandment.
Do you know, at least, Jesus detested human commandments and traditions?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)