Kingdom of GOD - தேவனுடைய இராஜ்யம் என்பது, தேவனுடைய ஆளுகையை குறிக்கிறது... இராஜ்யபாரம் என்பதே ஆளுகை செய்வதுதான். நம்மை ஆளுவது யார், யார் நம்மை ஆளுகை செய்யும்படியாய் நாம் அனுமதிக்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது. தேவன் நம்மை ஆளுகை செய்ய அனுமதிப்பதுதான் தேவனுடைய இராஜ்யத்தை தேடுங்கள் என்ற வார்த்தையில் காண்ப்படும் அர்த்தமாகும். நம்முடைய சிந்தனை, சொல் செயல் எல்லாவற்றையும் தேவனுடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுத்து அவர் சித்தப்படி வாழும்போது இம்மைக்கும் மறுமைக்கும் தேவையான அனைத்தையும் நாம் இயல்பாகவே பெற்றுக்கொள்வோம் என்பதே அதன் அர்த்தம்.
சாதாரண உலக அரசுகளே தம் மக்களுக்கு தேவையான காரியங்களை பொறுப்பெடுத்து நிறைவேற்றுகிறதென்றால் தேவ ஆளுகையில் இருக்கும் ஒருவருக்கு எல்லாவகை (இம்மை, மறுமை) தேவகளும் சந்திக்கப்படுவது ஆச்சரியமல்ல...
அந்த ஆளுகையை நாம்தான் தேடவேண்டும். அதை நாடித் தேடினால் தான் அந்த ஆளுகை நமக்குள் வரும். அந்த ஆளுகைக்கு தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள், இயல்பாகவே வேறொரு ஆளுகைக்குள் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அந்த வேறொரு ஆளுகையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எந்த ஆளுகையில் இருக்கிறார்களோ அந்த ஆளுகையின் நன்மை தீமைகளும் சொந்தம்.
பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தின அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைபவர்கள் யார்...? ஒரு இராஜா இருக்கிறார்... அவர் தம்மை எதிர்க்கிற தம் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிற ஒருவனோடு யுத்தத்திற்கு செல்கிரார் என வைத்துக்கொள்வோம்.... என்ன நடக்கும்... எதிரியின் ஆளுகைக்குள் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரப்படும். நல்ல இரஜா, பெரிய இராஜா அழைப்பு விடுப்பார்... என்னுடைய ஆளுகைக்குள் வந்துவிடுங்கள், நான் உங்கள் இராஜாவை அழிக்கப்போகிறேன் என கூறுவார்... அதை ஏற்றுக்கொண்டு அந்த அன்பின் இராஜ்யத்திற்குள், ஆளுகைக்குள் வந்துவிடுபவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் அந்த ஆளுகைக்குள் தேடிவராதவர்களுக்கு என்ன நடக்கும்..? எதிரி இரஜாவிற்கு என்ன தண்டனை கிடைக்குமோ அதுவே அந்த எதிரியோடு இணைந்து எதிர்த்து நிற்கும் அனைவருக்கும் கிடைக்கும்.
எத்தனைதான் வேத ஆராய்ச்சி செய்தாலும் அதை எழுதிய பரிசுத்தாவியானவரின் துணையில்லாமல் அதை வாசித்தால்.... எங்கள் ஊரில் படிப்பறிவே இல்லாமலிருந்தும் வேதத்தின் ஆசிரியராகிய பரிசுத்தாவியானவரின் துணையோடு அதை வாசிக்கும் ஒரு பாட்டிக்கு, ஆராச்சிமாணவர்களுக்குள்ள அறிவை விட பல கோடி மடங்கு அறிவு அதிகம்)