பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள்(ஆடை) மேல கண்ணு போச்சுன்னா அம்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக் கொள் பெருமை என்ற வலையில் விழாதே - அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே - உன்னைப் பாதாளம் கொண்டு போய்விடும் அழிந்து போகும் உலகப் பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் நீ மரித்தால் நித்திய வீட்டில் - உன்னை நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் - நீ அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம் அழைத்தவர் உண்மையுள்ளவர் - உன்னை அநுதினமும் நடத்திச் செல்வாரே
http://tamilmp3songslyrics.com/songpage/Jabathoatta-Jeyageethangal-6-Cinema-Film-Movie-Song-Lyrics-Porutgal-meala-kannu/3675