சேலம், 6 அக்டோபர் 2011, 08:10 ஐ.எஸ்.டி.: சேலத்தில் திருஷ்டி பூசணிக்காயை உடைத்து நடு ரோட்டில் போட்டதால் ஏற்பட்ட விபத்தில் 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் களரப்பேட்டை சாலையில் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் தன் தந்தையுடன் சென்று கொண்டிருந்தார் 12 வயதுச் சிறுமி. சாலையில் உடைத்துப் போட்டிருந்த பூசணித் துண்டு வழுக்கி விட்டதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தையும் மகளும் சாலையில் சரிந்து விழுந்தனர். அப்போது பின்னான் வந்துகொண்டிருந்த டிராக்டர் அந்தச் சிறுமி மீது ஏறியதில், சிறுமி அந்த இடத்திலேயே பலியானார்.
சேலம் மாநகரில் நேற்று முதல் நகர ஆணையர் திருஷ்டி பூசணியை சாலையின் நடுவே உடைத்துப் போடக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தார். பூசணிக்காயை சாலை நடுவே உடைத்துப் போடாமல் ஓரமாக எடுத்துப் போட்டு சாலையை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். அதையும் மீறி, பல்வேறு இடங்களில் பூசணிக் காய்களை உடைத்து சாலை நடுவே போட்டிருந்தனர்.