Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊழியர்களை குறை சொல்வது...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: ஊழியர்களை குறை சொல்வது...
Permalink  
 


eloi4u wrote:
ஊழியத்துக்குப் போக மீதியை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொள்கிறார்., அதில் என்ன தவறு?

இன்றைய ஊழியங்களில் மிகப் பெரும் பிரச்சினைகளில் ஒன்று... ஒவ்வொரு ஊழியர்களும் ஊழியங்களை தங்கள் தனிப்பட்ட ஊழியமாக, சொத்தாக நினைப்பது. ஊழியம் என்பது என்ன? ஊழியம் யாருடையது...? எவ்வகை ஊழியமாக இருந்தாலும் அது ஆண்டவருடையது என்ற மனப்பான்மை போய்விட்டது. ஊழியர் என்பவர் ஆண்டவருடைய கரத்தின் கருவி மாத்திரமே என்ற எண்னம் மங்கிவிட்டது. அதனால் தான் தங்கள் திறமைகள் மற்றும் தாலந்துகளை நம்பி வருமானம் பார்க்க அனேகர் ஊழியத்தில் இறங்கிவிடுகிறார்கள். எனவே ஊழியம், சபை என்பதெல்லாம் தனிப்பட்ட மனிதரின் சொத்தாக மாறிக்கொண்டிருக்கிறது. சபை என்றால் என்ன? ஊழியம் என்றால் என்ன? சபை, ஊழியம் என்பவை யாருடையது..... என்ற தெளிவு வந்தாலே இப்படிப்பட்ட issues- க்கு விடைகிடைக்கும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

eloi4u wrote:
ஊழியத்துக்குப் போக மீதியை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொள்கிறார்., அதில் என்ன தவறு?

 ஊழியத்திற்கு போக மீதி இந்த இந்திய திருநாட்டில் வரும் என உண்மையிலேயே நம்புகிறீர்களா.... ஓ என் தாய்த்திருநாடே.... நீ என்று இத்துணை வளர்ச்சியுற்றாய்...!!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

eloi4u wrote:
 இதற்கு வசன ஆதாரங்கள் கொடுங்கள், இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம், பகிர்ந்து உண்ணலாம், அதற்கு தேவன் தரும் ஊதியத்தையும் அப்படி தியாகம் செய்ய வேண்டுவதில்லை என்ரு வேதம் தெளிவாகச் சொல்லியிருக்கிறதே? கொரிந்து திருச்சபையில் இதற்கு ஒப்பான தர்க்கத்தில் பவுல் இதைத்தானே சொல்லுகிறார்,

 

ஆடம்பரமாக வாழ்வது பற்றியா பவுல் எழுதியிருக்கிறார்? பவுல் தன் செல்வம் சொத்தெல்லாம் விட்டு விட்டுத்தான் உழியத்திற்கு வந்தார்.தான் ”பிழைக்க" காணிக்கை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

பவுலின் வாழ்க்கையைப் பாருங்கள். அது தான் ஆதாரம்



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

spetersamuel wrote:

வேதம் யாருக்கு கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்கவேண்டும் என கூறுகிறது என முதலில் வேதத்தை முழுவதும் வாசித்து புரிந்துகொண்டு அதன்பின் கருத்து கூறுங்கள். எல்லா பாஸ்டரும் பிரசங்கிக்கும் மல்கியாவை மட்டும் வாசிக்காமல் கூடவே உபாகமம் 26:12 போன்ற வசனங்களையும் வாசியுங்கள்... மல்கியா எருசலேம் தேவாலயத்தை குறித்து கூறுகிறதென்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.... மேலும் அது யாருக்காக எந்த சூழ்நிலையில் கூறப்பட்டதென்பதையும் ஆராயுங்கள்....


 என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனேகர் ஊழியர்கள். அவர்கள் யாருக்கும் நான் காணிக்கையை கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதில்லை, காணிக்கைக்காக அவர்கள் என்னிடம் நட்பு பாராட்டுவதும் இல்லை,. மனதில் ஏவுதல் இருந்தால் கொடுப்பேன், இல்லாவிட்டால் தரமாட்டேன். அதற்காக அவர்கள் வாங்கும் காரையும், விலையுயர்ந்த செல்போன்களுக்காகவும், லேப்டாப்களையும் பற்றி குறை சொல்ல மாட்டேன்., 



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:

 

அப்படி பள பள உடையுடன் காரில் வருபவர் இப்படிப்பட்ட உணவகத்தில் எப்படி சாப்பிடுவார். உடைக்கும் உணவகத்தும் பொருந்தாதே! எல்லோருக்கும் ஏதோ ஒரு மாம்ச பெலவீனம் இருக்கும் போல் தெரிகிறது.

 


 நம்ப முடியாவிட்டால் கர்த்தருக்கு சித்தமானால் விரைவிலேயே அவர் காரில் வந்து மதிய உணவு அருந்தும் உணவகத்தையும் அவர் உணவருந்துவதையும் போட்டோ எடுத்து போடுகிறேன்.

அவரைக்குறித்ததான மேலும் ஒரு குறுங்கட்டுரை உங்களுக்காக‌



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:


தன் சபையும் சபை மக்களும் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஒரு ஊழியக்காரனும் இருக்க வேண்டும்.சபையில் 50 சதவிகித மக்களுக்கு மேல் கார் வைத்திருந்தால் ஊழியரும் தன் சொந்த உபயோகத்திற்கென்று கார் பயன்படுத்தலாம்.இல்லாவிட்டால் ஏழைகளோடு ஏழையாக இருந்து ஊழியம் செய்வதுதான் ஒரு மேய்ப்பனுக்கு அழகு.ஒரு ஊழியக்காரனை சமுகத்தில், பொருளாதாரத்தில் உயர்த்தவா ஜனங்கள் காணிக்கை கொடுக்கிறார்கள்?


 இதற்கு வசன ஆதாரங்கள் கொடுங்கள், இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம், பகிர்ந்து உண்ணலாம், அதற்கு தேவன் தரும் ஊதியத்தையும் அப்படி தியாகம் செய்ய வேண்டுவதில்லை என்ரு வேதம் தெளிவாகச் சொல்லியிருக்கிறதே? கொரிந்து திருச்சபையில் இதற்கு ஒப்பான தர்க்கத்தில் பவுல் இதைத்தானே சொல்லுகிறார்,



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

>>தேவன் அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார் யாரிடமும் 1 ரூபாய் கூட கேட்பதில்லை, தன்னுடைய ஆடைகளை குறைந்த பட்சம் 5000க்கு கீழ் அவர் அணிவதில்லை, தன்னுடைய கிராமத்திலிருந்து காரில்தான் வருவார், வாரத்திற்கு 1 பாட்டில் விலையுயர்ந்த வாசனை திரவியத்தை செலவு செய்துவிடுவார்.

 ....

>>நாம் சாப்பிடுவதற்கே அருவருப்பு படும் சிறிய உணவகத்தில் தன் மதிய உணவை முடித்துக் கொள்வார். மற்ற வேளைகளில் அந்த பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் தான் அவரும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்வார்கள்.

 

 

அப்படி பள பள உடையுடன் காரில் வருபவர் இப்படிப்பட்ட உணவகத்தில் எப்படி சாப்பிடுவார். உடைக்கும் உணவகத்தும் பொருந்தாதே! எல்லோருக்கும் ஏதோ ஒரு மாம்ச பெலவீனம் இருக்கும் போல் தெரிகிறது.

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

spetersamuel wrote:

 ஹா... ஹா...ஹா...... ஆமாமா... உங்களுக்குரியதை முழுதும் கொண்டு ஏதாவது பாஸ்டருக்கு முதலில் கொடுங்கள்... மிச்சம் மீதி வைக்காதீர்கள்... அப்படி வைத்தீர்கள் என்றால் பின் பரலோக இராஜ்ஜியத்தில் நுழைய முடியாமல் போய்விட வாய்ப்புள்ளது....!!!


 நான் எவைகளைக் கொடுத்திருக்கிறேன்(ஊழியர்களுக்கு அல்ல) என்று இங்கே பிரசித்தம் பன்னவேண்டிய அவசியம் எனக்கில்லை, அதை தேவன் அறிவார், ஆகினும் நான் கொடுப்பதை வாங்கிக்கொண்டு என்னை பரலோகத்தில் என்னை அனுமதிக்க தேவன் பரிதானம் வாங்குகிறவர் அல்ல( தேவன் என்னை மன்னிப்பாராக), 

 

மாறாக எஜமானிடத்தில் ஒரு கழுதை ஏன் இத்தனை சுமைகளை ஏற்றுகிறீர் என்றாவது, என்னை எங்கே நடத்திக்கொண்டு இருக்கிறீர் என்றாவது கேட்காமல், தன் சுயத்தை விட்டுக் கொடுத்து அவர் பின்னால் நடந்து செல்லுமோ அப்படிப்பட்ட கீழ்படிதல் உள்ள வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாய் எனக்கென்று ஏற்படுத்தியிருக்கும் வாசற்தளத்தில் என் எஜமானராகிய கிறிஸ்து எனக்கு இளைப்பாறுதல் தருவார் என்று விசுவாசிக்கிறேன்.

 

மேய்ப்பனை எதிர்த்து ஆடு கேள்வி கேட்குமா? நான் விசத் தழையைத் தின்றால் என் மேய்ப்பர் அடிக்கும் அடி வலிக்கும் தான், ஆனால் அதை எதிர்த்து நான்  மந்தையை விட்டு ஓடிப் போய்விட்டால் சிங்கங்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் பலியாகவேண்டியிருக்கும் அல்லவா? 

 

அப்படியிருந்தால் தானே நான் தாழ்ச்சியடையேன்,நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். என்ற வசனங்களுக்கு பங்காளியாய் இருப்பேன். தேவனுக்கு சித்தம் இருந்தால் என்னால் பரலோக இராஜ்ஜியத்துக்கு குறைந்த பட்சம் 1000 பேராவது ஆதாயப்படுத்த முடியும் என்றால், என்னுடைய உயிரையும்(அதைவிட மேலாக‌ என்னிடம் கொடுக்க ஒன்றும் இல்லை) தேவனுக்கென்று கொடுத்து இரத்த சாட்சியாக மரிக்கவும் ஆயத்தமாக இருக்கிறேன்.



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஊழியம் செய்பவர்கள் தியாகத்தோடுதான் ஊழியம் செய்ய வேண்டும். உலக வேலை செய்பவர்கள் போல் உரிமைகள் எதிர்பார்க்கக் கூடாது. எல்லா சலுகைகளும் உள்ள உலக வேலை போல் தான் ஊழியமும் என்று நினைத்தால், அவர்கள் முழு நேர ஊழியத்திற்கு வராமலே இருக்கலாம். ஊழியர்கள் தன்னை ஒரு CEO என்று நினைத்துக் கொள்கிறார்கள்.சாம் P செல்லத்துரை 80,000 ரூபாய்க்கு கண்ணாடி வாங்கினார் என்று ஒரு செய்தி முன்பு சொல்லப்பட்டதே.

தன் சபை மக்களின் காணிக்கையில் வீடு கட்டுகிறார்கள். கார் வாங்குகிறார்கள்.ஒன்றும் இல்லாமல் இருக்கும் தன் எளிய சபை மக்களைக் காணும் போது என்ன நினைப்பார்கள்? அந்த காணிக்கை, இந்த காணிக்கை என்று எடுக்கிறோம், ஏன் தேவையிலிருப்பவர்களுக்கு உதவி செய்ய என்று , பண்டிகை காலங்களிலாவது ஒரு காணிக்கை எடுப்பதில்லை? ஊழியத்திற்கு கொடுப்பதைப் பற்றித்தான் எப்பொழுதும் கேட்கிறோம். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற வசனத்திலிருந்து ஏழைகளுக்கு கொடுப்பது எப்படி என்று ஏன் யாரும் பிரசங்கம் பண்ணுவதில்லை? சுயத்தை மற்றும் பணத்தை மையமாக வைத்தே நடைபெறும் நம் சபைகள் ஆண்டவருக்கு கண்டிப்பாக கணக்கு கொடுக்க வேண்டி வரும்.

தன் சபையும் சபை மக்களும் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஒரு ஊழியக்காரனும் இருக்க வேண்டும்.சபையில் 50 சதவிகித மக்களுக்கு மேல் கார் வைத்திருந்தால் ஊழியரும் தன் சொந்த உபயோகத்திற்கென்று கார் பயன்படுத்தலாம்.இல்லாவிட்டால் ஏழைகளோடு ஏழையாக இருந்து ஊழியம் செய்வதுதான் ஒரு மேய்ப்பனுக்கு அழகு.ஒரு ஊழியக்காரனை சமுகத்தில், பொருளாதாரத்தில் உயர்த்தவா ஜனங்கள் காணிக்கை கொடுக்கிறார்கள்?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//இன்று அவருடைய ஊழியர் காரில் சென்றால், கழுதையின் பயன்பாடு அறிவியல் வளர்ச்சியில் காராகிவிட்டது அதை மட்டும் குறைசொல்ல துணிவதும் பேதமை.//

கார் தேவை சரிதான், ஆனால் Benz, BMW, AUDI கார் தான் வேணும், நான் ராஜா வீட்டு பிள்ளையாக்கும் என்றால் அது ஆடம்பரம் இல்லாமல் வேறென்ன, காடு மேடு மலைகளில் செருப்பு தேய கைப்பிரதி, சுவிஷேச பிரதிகளை கொடுப்பவன் ஆண்டவர் பார்வையில் இவர்களை விட கீழானவனா. ஆடம்பர ஊழியர்களால் தான் மேசியாவின் எதிரிகள் ஊழியங்களின் தன்மைகளையே கேலிப்பொருளாக்கி அவதூறு செய்கின்றனர்.

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

spetersamuel wrote:

 பிழைப்பு உண்டாயிருக்கவேண்டும்... தவறில்லை ஆனால் ஆடம்பரம்........!!!!!

சொந்த காசில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; ஆனால் எப்படிப்பட்டவர்களிடம் காணிக்கை வாங்குகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஆடம்பரமாய் வாழ்வது தான் வேதத்தில் கூறப்பட்ட பிழைப்பா...???

காணிக்கை யாரிடத்தில் வாங்குகிறோம், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள் என கவலைப்பட தேவையில்லை என்பதுதான் புதிய ஏற்பாடு போதிக்கும் சமநிலைப் பிரமாணமா...??? நமக்கு வசதியானபடி வேதத்தில் பழைய ஏற்பாடை துணைக்கு அழைப்பதும், வசதியில்லாதபோது புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர் காலத்தை துணைக்கு அழைப்பதும்............... என்ன நியாயம்...

பொதுவுடைமை கொள்கை புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தான் துவங்கியது அதுவும் அப்போஸ்தலரிடமிருந்து,,, ஆனால் இன்று அது கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களிடம் சிக்கிவிட்டது... கிறிஸ்தவ நாடுகளிலும் சரி, கிறிஸ்தவர்களிடமும் சரி முதலாளித்துவமே மேலோங்கியிருக்கிறது.

எந்த சபையில் நோக்கினாலும் அதிக காணிக்கை கொடுப்பவர்கள் மற்றும் சமுதாயத்தில் பெரும்புள்ளிகள் பாஸ்டரின் வீடுவரை சென்று உறவாடுகிறார்கள். ஆனால் மற்றவர்கள்......

communism இல்லாத communion service - பெரும்பாலான சபைகளில் இதுதான் நிலைமை....

 


ஆடம்பரம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? தேவன் ஒருவரை ஏவுகிறார். அவர் காணிக்கை கொடுக்கிறார், ஊழியத்துக்குப் போக மீதியை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொள்கிறார்., அதில் என்ன தவறு?

 

தேவனுக்கு ஊழியம் செய்து அவரிடம் ஊதியத்தை எதிர்பார்க்காமல், தன்னுடைய வாடிக்கையாளர்களாகிய விசுவாசியிடம் தன்னுடைய ஊதியத்தைக் கேட்பதும், தசமபாகம் கொடுத்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றிப் பணம் பரிப்பதும் தான் தவறு,

 

எனக்கு ஒரு மூத்த நண்பர் இருக்கிறார் 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார், ஆனால் தேவன் அவரை ஊழியத்துக்கு அழைத்தார். எதேச்சையாக ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டிய சூழ்னிலை தன் முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பே தத்தெடுத்தார், இன்று ஊழியத்தோடு 40 குழந்தைகளை வைத்து ஆதரரித்து வருகிறார்,

 

வேலையைத் துறந்தார், முதலில் தன் வருமானத்தில் குழந்தைகளுக்கு 20% தன் குடும்பத்திற்கு 80% என்று தேவனிடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தைகள் காப்பகத்தை ஆரம்பித்தார்.

 

பிறகு 50% 50% என்று ஒப்பந்தத்தை மாற்றினார், இன்று குழந்தைகளுக்கு 80% தன் குடும்பத்திற்கு 20% என்ற நிலைக்கு வந்துவிட்டார்,

 

தேவன் அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார் யாரிடமும் 1 ரூபாய் கூட கேட்பதில்லை, தன்னுடைய ஆடைகளை குறைந்த பட்சம் 5000க்கு கீழ் அவர் அணிவதில்லை, தன்னுடைய கிராமத்திலிருந்து காரில்தான் வருவார், வாரத்திற்கு 1 பாட்டில் விலையுயர்ந்த வாசனை திரவியத்தை செலவு செய்துவிடுவார்.

 

இன்று அவருடைய குடும்பத்தில் அவருடைய குழந்தைகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் தத்தெடுக்கப்பட்டவகள் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும். தன் புத்திர சுவீகாரத்தைக் கூட மற்றவர்களின் குழந்தைக்காக சுருக்கிக் கொண்ட இளம் தம்பதிகள் அவர்கள். பெரிய பெரிய அரசியல்வாதிகள், உள்ளூர் பிரமுகர்கள் புகழ் அடைவதற்காகக் கொடுக்கும் அனைத்து பணத்தையும் துச்சமாக மதித்து மறுத்து வருகிறார்.

 

நாம் சாப்பிடுவதற்கே அருவருப்பு படும் சிறிய உணவகத்தில் தன் மதிய உணவை முடித்துக் கொள்வார். மற்ற வேளைகளில் அந்த பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் தான் அவரும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்வார்கள்.

 

கடந்த ஆண்டு பெய்த மழையில் அவருடைய வீடு இடிந்து விட்டது, இன்று தேவனுடைய சித்தத்தால் அருமையாக, இன்னும் விசாலமாகக் கட்டப்பட்டு வருகிறது, இத்தனைக்கும் தனக்கென 1 ரூபாய் கூட சேர்த்து வைத்துக் கொள்ளாதவர் அவர்

 

எங்களைப் போன்ற எளியவர்கள் மன‌தில் ஏவப்பட்ட காணிக்கையைக் கொடுப்பதை மாத்திரம் பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் போஷித்தும் வாழ்ந்தும் வருகிறார்.

 

காரில் வராமல்  பேருந்தில் வந்தால் 8 ரூபாயில் தன் பயனச்செலவை முடித்துக் கொள்ளலாம், 200 ரூபாய் சட்டை அணியலாம். என்றெல்லாம் யாரும் அவரிடம் கேட்பதில்லை காரணம் அவரது நேர்மை. 

 

 

இப்படிப்பட்ட வாழும் உதாரணங்களான சில தேவமனிதர்களை நேரடியாகப் பார்த்து பேசி பழகியதால் தான் இப்படி வாதிடுகிறேன்.

அவருடைய இனையதளம்:http://mercyfoundations.org/


__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

eloi4u wrote:
நமக்குள்ளவைகள் முழுவதையும் ஆண்டவருக்குக் கொடுக்கலாம். அதெப்படி நான் என் வருமானத்தில் தசம பாகத்தை மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னால் பணத்தாசையால் தேவனை ஏமாற்ற நினைக்கிறோம் என்று அர்த்தம்.

 

அப்படிப்பட்டவன் பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதைக் காட்டிலும் ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளியது என்று நம்முடைய அருள்நாதரும் சொல்லியிருக்கிறார்(லூக் 18:25).


 ஹா... ஹா...ஹா...... ஆமாமா... உங்களுக்குரியதை முழுதும் கொண்டு ஏதாவது பாஸ்டருக்கு முதலில் கொடுங்கள்... மிச்சம் மீதி வைக்காதீர்கள்... அப்படி வைத்தீர்கள் என்றால் பின் பரலோக இராஜ்ஜியத்தில் நுழைய முடியாமல் போய்விட வாய்ப்புள்ளது....!!!

இன்றைய காலத்தில் தைரியமாக மனைவியை சில பாஸ்டர்களின் கண்ணில் காட்ட முடியவில்லை... அது வேறு விஷயம்.....

வேதம் யாருக்கு கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்கவேண்டும் என கூறுகிறது என முதலில் வேதத்தை முழுவதும் வாசித்து புரிந்துகொண்டு அதன்பின் கருத்து கூறுங்கள். எல்லா பாஸ்டரும் பிரசங்கிக்கும் மல்கியாவை மட்டும் வாசிக்காமல் கூடவே உபாகமம் 26:12 போன்ற வசனங்களையும் வாசியுங்கள்... மல்கியா எருசலேம் தேவாலயத்தை குறித்து கூறுகிறதென்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.... மேலும் அது யாருக்காக எந்த சூழ்நிலையில் கூறப்பட்டதென்பதையும் ஆராயுங்கள்....



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

eloi4u wrote:

அந்தப்படியே தற்போது சுவிஷேசம் அறிவிக்கும் ஊழியர்களுக்கும், சுவிஷேசத்தினாலே அவர்களுக்கு பிழைப்பு உண்டாயிருக்க வேண்டும் என்பதும் தேவனுடைய கட்டளை.


 பிழைப்பு உண்டாயிருக்கவேண்டும்... தவறில்லை ஆனால் ஆடம்பரம்........!!!!!

சொந்த காசில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; ஆனால் எப்படிப்பட்டவர்களிடம் காணிக்கை வாங்குகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஆடம்பரமாய் வாழ்வது தான் வேதத்தில் கூறப்பட்ட பிழைப்பா...???

காணிக்கை யாரிடத்தில் வாங்குகிறோம், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள் என கவலைப்பட தேவையில்லை என்பதுதான் புதிய ஏற்பாடு போதிக்கும் சமநிலைப் பிரமாணமா...??? நமக்கு வசதியானபடி வேதத்தில் பழைய ஏற்பாடை துணைக்கு அழைப்பதும், வசதியில்லாதபோது புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர் காலத்தை துணைக்கு அழைப்பதும்............... என்ன நியாயம்...

பொதுவுடைமை கொள்கை புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தான் துவங்கியது அதுவும் அப்போஸ்தலரிடமிருந்து,,, ஆனால் இன்று அது கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களிடம் சிக்கிவிட்டது... கிறிஸ்தவ நாடுகளிலும் சரி, கிறிஸ்தவர்களிடமும் சரி முதலாளித்துவமே மேலோங்கியிருக்கிறது.

எந்த சபையில் நோக்கினாலும் அதிக காணிக்கை கொடுப்பவர்கள் மற்றும் சமுதாயத்தில் பெரும்புள்ளிகள் பாஸ்டரின் வீடுவரை சென்று உறவாடுகிறார்கள். ஆனால் மற்றவர்கள்......

communism இல்லாத communion service - பெரும்பாலான சபைகளில் இதுதான் நிலைமை....

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

spetersamuel wrote:
தசம பாகம் கொடுக்கிற ஒருவரின் மகனாவது மகளாவது அரசுப் பள்ளிக்கே செல்ல வழியில்லாதிருக்கும்போது, அவர்களிடமிருந்து காணிக்கை மட்டும் வாங்கி ஊழியம் செய்யும் ஊழியனின் பிள்ளை நகரத்திலேயே மிகப்பெரிய பள்ளியில் படிப்பதும், .... மற்றும் பல காரியங்கள், ஆடம்பரங்கள்.... 

 தசமபாகம் என்பது பழைய உடன்படிக்கையில் சொல்லப்பட்டது, புதிய உடன்படிக்கையில், நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைக்கிரயத்துக்கு வாங்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நாம் முற்றிலும் தேவனுக்கு சொந்தமான‌வர்கள், தன்னுடைய வருமானத்தில் 10 ஒரு பகுதி மட்டுமே தேவனுக்குச் சொந்தம், மற்றவைகள் நமக்குச் சொந்தம் என்று நினைப்பதும், போதிப்பதும், தவறானது நாம் தேவனுக்குக் கொடுப்பதாக‌ இருந்தால் நம் சொத்து,ஆவி, ஆத்துமா, சரீரம், குடும்பம், பிள்ளைகள், என்று நமக்குள்ளவைகள் முழுவதையும் ஆண்டவருக்குக் கொடுக்கலாம். அதெப்படி நான் என் வருமானத்தில் தசம பாகத்தை மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னால் பணத்தாசையால் தேவனை ஏமாற்ற நினைக்கிறோம் என்று அர்த்தம்.

 

அப்படிப்பட்டவன் பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதைக் காட்டிலும் ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளியது என்று நம்முடைய அருள்நாதரும் சொல்லியிருக்கிறார்(லூக் 18:25).



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

spetersamuel wrote:
golda wrote:
ஆடம்பரமின்றி , ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்தாலே போதுமானது. சபை காணிக்கையில் கார் வாங்கி ஊழியத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தங்கள் சொந்த அன்றாட வாழ்க்கைக்கும் (பிள்ளைகளை பள்ளிக்குச் சென்று விடுவது) பயன்படுத்துவது நியாயமா என்று தெரியவில்ல

 இது ஒரு முக்கியமான காரியம் சகோதரி.... சபையில் தசம பாகம் தருகிற 10 பேரின் சராசரி வருமானத்தில் வாழ்க்கையை உண்மையாய் வாழ்ந்தாலே பெரிய விஷயம். ஆனால் தசம பாகம் கொடுக்கிற ஒருவரின் மகனாவது மகளாவது அரசுப் பள்ளிக்கே செல்ல வழியில்லாதிருக்கும்போது, அவர்களிடமிருந்து காணிக்கை மட்டும் வாங்கி ஊழியம் செய்யும் ஊழியனின் பிள்ளை நகரத்திலேயே மிகப்பெரிய பள்ளியில் படிப்பதும், .... மற்றும் பல காரியங்கள், ஆடம்பரங்கள்.... மட்டுமல்ல இந்த பிள்ளைகளைக்காணும்போது இளக்காரமான பார்வை.... சமநிலைப் பிரமாணம் எங்கே.... 10 பேரின் தசம பாகத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், மீதி 990 பேரின் தசம பாகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவலாமே.... 


 ஊழியர்கள் என்றால் ஏதோ முற்றும் துறந்த துறவிகள் போலவும் உலக ஆசா பாசங்கள் இல்லாதவர்கள் போல இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பது வேதத்துக்கு முரனானது ஆகும்,.

 

ஊழியர்களுக்கு புஷிக்கவும் குடிக்கவும், மனைவியோடே விருப்பப்பட்ட இடங்களுக்குச் சென்று வரவும், சொந்தமாக வேலை அல்லது தொழில் செய்யாமல் இருக்கவும், உரிமை உள்ளது.

 

 

தன்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்து யார் மற்றவர்களுக்கு சேவகம் செய்வார்கள்? யார் சொந்தமாக ஒரு தோட்டத்தை உண்டாக்கி அதில் விளையும் கனிகளை சுவைத்துப் பார்க்காமல் இருப்பான்? யார் வீட்டில் மாடுவளர்த்து அதன் பாலை குடிக்காமல் இருப்பான்?

 

பழைய ஏற்பாட்டு நியாயப் பிரமானமும் இதைத்தான் சொல்லுகிறது போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.(உபா25:4)என்று தேவன் மாடுகளை நேசித்தா இதைச் சொன்னார்? இல்லை நம்மை நினைத்துதான் எப்படியெனில் உழுகிறவன் இந்த விளைச்சலில் நமக்கும் பங்கு உண்டு என்ற நம்பிக்கையோடே செய்வதற்காகவே தேவனால் அப்படிச் சொல்லப்பட்டது.

 

ஊழியர்கள் இருளிலே இருக்கும் நம்மை நித்திய வெளிச்சத்துக்கு நேராக நம்மை நடத்துவதன் பலன் மட்டும் வேண்டும், அதன் மூலம் அவர்களுக்கு ஆதாயம் ஏற்பட்டால் அதை நாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது பேதமை.

 

அந்தப்படியே பழைய உடன்படிக்கைக் காலத்தில் ஆசாரிய ஊழியம்செய்தவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும். தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் நீங்கள் அறிந்ததே...

 

 

அந்தப்படியே தற்போது சுவிஷேசம் அறிவிக்கும் ஊழியர்களுக்கும், சுவிஷேசத்தினாலே அவர்களுக்கு பிழைப்பு உண்டாயிருக்க வேண்டும் என்பதும் தேவனுடைய கட்டளை.

 

 

அப்படி இருக்கும் போது, அந்த ஊழியர் ஒரு இஞ்ச் அளவுக்கு மேக்கப் போடுகிறார், காணிக்கையில் வாங்கிய காரில் ஊழியரின் குழந்தை பள்ளிக்குப் போகிறது என்றால் தேவன் அவர்களை ஊழியத்திற்கு ஊதியம் கொடுத்து போஷிக்கிறார், அதற்காக நாம் கவலைப்பட வேண்டுவதில்லை.

 

நாம் கவலைப் படவேண்டிய ஒரே விசயம், அவர்கள் அரசாங்கத்திடம் தன் வருமானத்தை சரியாகக் கணக்குக் காட்டுகிறார்களா? வருமானவரி கட்டுகிறார்களா? என்பதைக் குறித்து மாத்திரமே..

 

 

அன்று இயேசு கிறிஸ்து கழுதையில் பயனம் செய்தார் அதை நாம் ஏற்றுக் கொண்டோம், ஏன் அந்தக் கழுதையில் ஒரு முடவனை ஏற்றி விட்டுவிட்டு, அவர் நடந்து வந்திருக்கக் கூடாது என்று எதிர்கேள்வி வைக்கவில்லை,

 

இன்று அவருடைய ஊழியர் காரில் சென்றால், கழுதையின் பயன்பாடு அறிவியல் வளர்ச்சியில் காராகிவிட்டது அதை மட்டும் குறைசொல்ல துணிவதும் பேதமை.

 

ஊழியர்களுக்கு ஆதரவாக நான் பேசவில்லை வேதம் சொல்வதை அப்படியே சொல்லியிருக்கிறேன். ஆதாரம் I கொரிந்தியர் 9 அதிகாரம்



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:
ஆடம்பரமின்றி , ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்தாலே போதுமானது. சபை காணிக்கையில் கார் வாங்கி ஊழியத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தங்கள் சொந்த அன்றாட வாழ்க்கைக்கும் (பிள்ளைகளை பள்ளிக்குச் சென்று விடுவது) பயன்படுத்துவது நியாயமா என்று தெரியவில்ல

 இது ஒரு முக்கியமான காரியம் சகோதரி.... சபையில் தசம பாகம் தருகிற 10 பேரின் சராசரி வருமானத்தில் வாழ்க்கையை உண்மையாய் வாழ்ந்தாலே பெரிய விஷயம். ஆனால் தசம பாகம் கொடுக்கிற ஒருவரின் மகனாவது மகளாவது அரசுப் பள்ளிக்கே செல்ல வழியில்லாதிருக்கும்போது, அவர்களிடமிருந்து காணிக்கை மட்டும் வாங்கி ஊழியம் செய்யும் ஊழியனின் பிள்ளை நகரத்திலேயே மிகப்பெரிய பள்ளியில் படிப்பதும், .... மற்றும் பல காரியங்கள், ஆடம்பரங்கள்.... மட்டுமல்ல இந்த பிள்ளைகளைக்காணும்போது இளக்காரமான பார்வை.... சமநிலைப் பிரமாணம் எங்கே.... 10 பேரின் தசம பாகத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், மீதி 990 பேரின் தசம பாகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவலாமே.... அதுதானே சமநிலைப்பிரமாணம்... யாக்கோபு சொல்வதுபோல நீங்கள் போய் குளிர்காய்ந்து இளைப்பாறுங்கள், உங்களுக்கு ஆண்டவர் உதவிசெய்வார் என சொல்லி அவர்களை வெறுமையாய் அனுப்பிவிடுவதா சமநிலைப் பிரமாணம்?...
ஊழியரின் வாலிப மகள் கட் பனியன் போட்டுக்கொண்டு கொயர் பிராக்ட்டீசில் பங்கேற்கலாம், ஆனால் சபையில் audio operator பையன் டீ சர்ட் போட்டால் திட்டு.... இது தான் சபைகளில் இன்றைய நிலை....

பாஸ்டரின் மகள் 700 கி.மீ. தூரத்தில் காரில் கொண்டு சென்று தன் காலேஜில் விடப்படும் நிலையில் கிராம ஊழியத்திற்காக வெளியூர் செல்லும் உதவி ஊழியர்கள், வாகன வசதியில்லாமல் அலைக்களிக்கப்படுவதுதான் நியாயமா???

நான் ஏதேதோ எழுதிவிடுவேன் சகோதரி இறுதியில் யாரையாவது காயப்படுத்திவிட்டோமே என எண்ணி வருந்துவதும் என் வாடிக்கை... எனவே தான் பொதுவாக எழுத சற்றே தயங்குவது...



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

>>அவர் T.V. ல் தோன்றும்போது அவருடைய முகத்தில் எத்தனை inch makeup போட்டிருக்கிறார் என்று மட்டும் கவனியுங்களேன்...

That is an occupational hazard. எண்ணை வழியும் முகத்தோடு கேமரா முன் நின்று பேச முடியுமா? அத்துடன் எந்த இஞ்சும் எனக்குத் தெரியவில்லை. மோசேயின் முகம் மேக்கப் போடாமலே பிரகாசித்தது என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். தேவ பிரசன்னமே நல்ல களையை கொடுக்கும்!

>>ஒன்று தாங்கள் காணிக்கை வாங்கும் மக்களில் மிகவும் வசதிகுறைந்த ஒருவர் வாழும் வாழ்க்கையை தாங்களும் வாழ வேண்டும

ஆடம்பரமின்றி , ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்தாலே போதுமானது. சபை காணிக்கையில் கார் வாங்கி ஊழியத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தங்கள் சொந்த அன்றாட வாழ்க்கைக்கும் (பிள்ளைகளை பள்ளிக்குச் சென்று விடுவது) பயன்படுத்துவது நியாயமா என்று தெரியவில்ல

>>அல்லது தாங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறோம்...

ஒரு ஊழியக்காரர் சொன்னது. மகன் பைக் வாங்கி ஓட்டிச் செல்கையில், சில விசுவாசிகள் எங்க காணிக்கைப் பணத்தில் தானே இப்படி வாங்குகிறீர்கள் என்று கேட்க, அவன் அதன் பின் வேலை பார்த்துக் கொண்டுதான் இனி ஊழியம் செய்வேன் என்று சொல்லி விட்டு, வேலை பார்த்துக் கொண்டுதான் ஊழியமும் செய்கிறான் என்று சொன்னார்.

வரவு என்ன, செலவு என்ன, யாருக்கு எவ்வளவு சம்பளம் என்று கணக்கு காட்டினாலே போதும். எந்த சபையிலும் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. சபையின் பண விஷயங்கள் ஒளிவு மறைவின்றி சபையார் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல, மனுஷருக்கும் முன்பாக யோக்கியமாக நடக்க விரும்புகிறேன் என்று பண விஷயத்தைப் பற்றித்தான் பவுல் சொன்னார்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

>> floor-ல வந்து பாருங்க...ஷூட்டிங் நேரத்தில் டீ ஷர்ட் ஜீன்ஸில் கும்முன்னு ஹீரோ மாதிரி இருப்பார்...

ஹீரோ மாதிரியா?? குட்டையாக அல்லவா இருப்பார்? டீ ஷர்ட் ஜீன்ஸ் ஒரு வசதிக்காக ஷூட்டிங் நேரத்தில் அணிவது.

>>அவருடைய தலைமுடியே விக் என்கிறேன், நம்புவதற்குத் தான் ஆளில்லை..!

மூக்கு கூட பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்று கண்டு பிடிச்சிருப்பீங்களே!

>>திருந்தி வந்த ஒரு நடிகையின் அழகை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து அவளை மீண்டும் நடிகையாக்கி விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர் தான் சாது...இதை மறுத்து என்மீது வழக்கு போடச்சொல்லுங்க...நான் நிரூபிக்கிறேன்..!

எந்த நடிகை என்று சொல்லுங்கள். இப்ப நடிக்கிறாங்களா என்று செக் பண்ணுவோம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
அவரிடம் என்ன உலகத்தின் மயக்கம் இருக்கிறது? கசங்கிய காவிதான் போட்டிருக்கிறார். அது பார்க்கக் கூட நல்லா இல்லை!

 floor-ல வந்து பாருங்க...ஷூட்டிங் நேரத்தில் டீ ஷர்ட் ஜீன்ஸில் கும்முன்னு ஹீரோ மாதிரி இருப்பார்... அவருடைய தலைமுடியே விக் என்கிறேன், நம்புவதற்குத் தான் ஆளில்லை..!

golda wrote:
அப்படி விலகினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்!!

 அப்புறம் என்ன வெங்காயம் உரிக்கறதுக்கா ஊழியத்துக்கு வந்தார்..? திருந்தி வந்த ஒரு நடிகையின் அழகை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து அவளை மீண்டும் நடிகையாக்கி விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர் தான் சாது...இதை மறுத்து என்மீது வழக்கு போடச்சொல்லுங்க...நான் நிரூபிக்கிறேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

________________________________________

அவரிடம் என்ன உலகத்தின் மயக்கம் இருக்கிறது? கசங்கிய காவிதான் போட்டிருக்கிறார். அது பார்க்கக் கூட நல்லா இல்லை! __________________________________________________________

ஹா..ஹா.. ஹா.... அவர் T.V. ல் தோன்றும்போது அவருடைய முகத்தில் எத்தனை inch makeup போட்டிருக்கிறார் என்று மட்டும் கவனியுங்களேன்... ஒரு சினிமா நடிகர் கூட அவ்வளவு போடமாட்டார்.... ____________________________________________________________

அப்படி விலகினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்!! பொல்லாங்காய் தோன்றுகிற தசம பாகத்தை போதிக்காதவர்கள் எத்தனை பேர்? என் சபை , என் ஊழியம் என்று சுயத்தை மையப்படுத்தாமல் ஊழியம் செய்பவர்கள் எத்தனை பேர்?

 ________________________________________

இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் சகோதரி.... இதற்காகத்தான் பாடுபடுகிறோம்... மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வராதா என ஏங்குகிறோம்.... ஒன்று தாங்கள் காணிக்கை வாங்கும் மக்களில் மிகவும் வசதிகுறைந்த ஒருவர் வாழும் வாழ்க்கையை தாங்களும் வாழ வேண்டும் அல்லது தாங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறோம்...



-- Edited by spetersamuel on Tuesday 4th of October 2011 10:46:49 AM

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard