சுட்டு எழுதினால் அதை 'சுட்டது' என்று பதிக்கும் தைரியம் உண்டு. இது முழுக்க முழுக்க என் சுய சிந்தனை ஆதங்கம்... ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கவலையில்லை
--
Ok. I "Like" it !!
ஈழத்தமிழன் VS ஈனத்தமிழன்
சொந்த நாட்டில் சோற்றுக்கே வழியின்றி
அன்றாடம் அல்லாடும் தமிழன் உண்டு.
பக்கத்தில், கண்ணெதிரே பிச்சையெடுத்து
... பசியாறும் பாவத் தமிழன் உண்டு.
வியாதியின் கொடுமையிலும் வறுமையிலும்
வாடிக்கொண்டிருக்கும் உள்ளூர் தமிழனின்
விடியலுக்கு விடைகாணாமல்,
ஈழத்தமிழனக் "காப்பாற்ற"ப் போர்க்கொடி
என்ற பேரில் சுயபுகழுக்காக புறப்பட்டான்
ஈனத்தமிழன்....
-Richard Felson (soulsolution)
இது சோல் அவர்களின் சொந்தக் கவிதையா அல்லது சுட்ட கவிதையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இதில் இருக்கும் உண்மை ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே!