Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தலர்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: அப்போஸ்தலர்
Permalink  
 


bereans: //சீட்டு போட்டு குலுக்கி எடுத்தவர்கள் அப்போஸ்தலர்களே தவிர கர்த்தர் கிடையாது!! உங்கள் வேத அறிவை தீட்டிக்கொள்ளுங்கள்!!//

 

சீட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பது என்பது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்கள் பின்பற்றிய ஒரு நடைமுறைதான். ஜெபித்து செய்கையில் அதில் தேவ சித்தம் வெளிப்படும்.

 

//அப்போஸ்தலர்கள் 12 பேர் தான் என்று வேதம் தெளிவாக கூறுகிறது!! நீங்கள் எத்துனை பேரை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்://

 

இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பவர்கள் எல்லாம் அப்போஸ்தலர் இல்லையென்றால் யார்?

 

ரோமர் 16:7. அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.

 

அப்போஸ்தலர் 14:14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்

 

//மேலும் சபையில் இந்த ஊழியங்கள் இருந்துக்கொண்டே இருக்கும் என்று எங்கே இருக்கிறது!!//

 

சபையும் இருந்து கொண்டே இருக்கும் என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

 

//அதான் வெளிப்படுத்தின விசேஷத்தில் தெளிவாக இருக்கிறதே ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்கள் என்று!!//

 

வெளி 21: 13. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

 

14. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

 

13 ம் வசனம் இஸ்ரவேல் ஜனங்களையும், 14 ம் வ்சனம் அவர்களோடு இயேசு கிறிஸ்து மூலமாக ஒட்ட வைக்கப்பட்ட புற ஜாதிகளையும் குறிக்கிறது.

 

வெளி 12: 2. உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;

 

12 அல்ல, நிறைய அப்போஸ்தலர்கள் இருந்திருக்கிறார்கள், சில கள்ள அப்போஸ்தலர்களளும் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

 

//அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும் என்று இல்லை மாறாக சபை சீர்பொறுந்தும்மட்டும் சில அப்போஸ்தலர்களை, சில தீர்க்கதரிசிகளையும், சில சுவிசேஷகரையும் சில மேய்ப்பரையும் சில போதகரையும் ஏற்படித்தினார்!! சபை சீர்பொறுந்த என்ன தேவைப்பட்டது, வார்த்தைகள்!! அந்த வார்த்தைகள் முதல் நூற்றாண்டிற்குள் எழுதியாகிவிட்டது!! அந்த காலம் வரை தான் இவர்கள் அனைவரும் தேவைப்பட்டார்கள்!!//

 

எழுதத்தான் அப்போஸ்தலர்கள் என்றால், 12 பேரும் எழுதிய மாதிரி தெரியவில்லையே? 13 ம் (or some no > 12) அப்போஸ்தலனாகிய பவுல் தான் நிறைய எழுதியிருக்கிறார்.

சபையில் ஏற்படுத்தினார் என்று தான் இருக்கிறதே தவிர சில காலத்திற்கு மட்டும், முதலாம் நூற்றாண்டுக்கு மட்டும் என்று நீங்க உளறுகிறபடி எதுவும் இல்லை. 

//அப்போஸ்தலர்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டவர்கள் மூப்பர்கள்!! இன்று சபைக்கு தேவை மூப்பர்களே தவிர இந்த 5 ஊழியர்கள் கிடையாது!!//

 

ஓகோ ... மூப்பர்கள் மட்டும் இப்ப தேவையாக்கும்? எதற்காக? இந்த மூப்பர்களை எந்த அப்போஸ்தலர் ஏற்படுத்துவாரோ?

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

அப்போஸ்தலன், இந்த பட்டத்தை குறித்து மேசியாவின் எதிரிகள் எதையெதையோ கற்பனை பண்ணி எழுதிக்கொண்டிருக்கின்றனர் அப்போது அப்போஸ்தல பணியின் முக்கியத்துவத்தை குறித்து ஸ்மித் விகிள்ஸ்வொர்த்தை குறித்து படிக்கும் போது காண நேர்ந்தது.

"அப்போஸ்தலன் என்ற பெயரை யாரும் அவ்வளவு லேசாக பயன்படுத்திவிட முடியாது அது தேவனது அழைப்பாலும் முன் குறித்தலாலும் ஏற்படுத்தப்படும் நியமனம்"

நவீன கால அப்போஸ்தலன் என பிறர் விகிள்ஸ்வொத்தை அழைத்தாலும் அதை அவர் கனமாக எண்ணாமல் தனக்கு அளிக்கப்பட்ட வரங்களை விட தேவ வல்லமை வெளிப்படுவதே முக்கியம் என்றார். ஆனால் இதையும் பாருங்கள் இந்த நிர்விசாரிகள் இகழுவார்கள். அவரது கூட்டங்களில் வெளிப்பட்ட தேவனுடைய வல்லமையையும் அவரது ஊழியத்தால் அமெரிக்க கண்டம், நியூசிலாந்து, ஸ்வீடன், அன்றைய சிலோன் எவ்வாறு அசைக்கப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அவரது ஊழியத்துக்கான பலன் இன்றும் இத்தேசங்களில் காணப்படுகிறது. விகிஸ்ஸ்வொர்த் போன்றோர் போகஸ் லைட்டுக்காகவும், ஏ.சி ரூமுக்காக அலையவும் இல்லை. 

ஏ.சி ரூமில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டிருக்கவும் இல்லை. சொத்துக்களையும் சுகங்களையும் துறந்து, கிறிஸ்துவின் நற்செய்தியை பற்றி ஓய்வு ஒழிச்சல் இன்றி பறை சாற்றினர். 

மிஷனரிகளை இகழுவதால் இந்த நரிகளை நாம் எதிர்க்கவில்லை, கிறிஸ்து அறிவிக்கப்படுவதை இவர்கள் எதிர்ப்பதை தான் கண்டிக்கிறோம். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
chillsam wrote:
 அப்போஸ்தலரே மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து பிழைத்தார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்..!

 

அங்கே இருந்தது எம் எல் எம் அல்ல, சம நிலைப் பிரமாணம்!


 images?q=tbn:ANd9GcTIOzHGNHoQLW9a2NEHur3YFExQQfLzqZlA34MDVNiORgQKUhizSg

 

ஒருவழியாக நான் கண்டுபிடிச்சிட்டேங்க...ஆத்துமப் பிசினுக்கு எம்மெல்லெம் மீது ஆர்வம் பிறக்கக் காரணமே இந்த பிரமிடு தான்...ஏனென்றால் அவங்க தலைவரு சொல்லிக்கொடுத்தது அதுதான்..! ஆபேலிலிருந்து அனைத்து முன்னோர்களும் பிரமிடு கட்டி தொழுது அதிலேயே அடக்கமானார்கள் என்று ஒரு தியரி உண்டு...எங்கேயோ இடிக்குது இல்லே..?

images?q=tbn:ANd9GcQrc3qX7pEYfs0ROYpkM0dDqkOE402ZFMqhmD3cLLHrPX2-z9NTcg

images?q=tbn:ANd9GcTukDuZKFY5bg4BPqzEX0XHJv-tl5NhI25xDxDgy-ffK8p94ydTEA

இந்த வரைபடத்திலுள்ள பிரமிடுதான் இவர்களுடைய எல்லா உபதேசத்துக்கும் அடிப்படை;இதனை இவருக்குப் பின்வந்த பிரன்ஹாமும் ஏற்றுக்கொண்டார்; அவரை ஏஞ்சல் டிவியின் சாதுவும் ஏற்றுக்கொண்டார்; இவர்கள் இருவரும் எனக்கு முக்கிய எதிரிகள் ஆவர்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:
 அப்போஸ்தலரே மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து பிழைத்தார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்..!

 

அங்கே இருந்தது எம் எல் எம் அல்ல, சம நிலைப் பிரமாணம்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote
அப்போஸ்தலர் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதால் மத்தியா அப்போஸ்தலரே.

 அதுங்க‌ தான் உளறுதுனா நீங்களுமா...ஆண்டவர் தம்முடைய சீடர்களிலிருந்து 12 பேரைத் தேர்ந்தெடுத்தார்;அவரால் அனுப்பப்பட்ட வேறு 70 பேரும் இருந்தனர்; அவ்வாறு ஏறக்குறைய 120 பேர் மேல்வீட்டறையில் கூடியிருந்தனர்; அவர்களில் யூதரின் வழக்கப்படி பெண்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை; இந்நிலையில் சீடர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்களே தவிர வேறு யாரையோ அல்ல,என்பதை நாம் கவனிக்கவேண்டும்..!

அப்போஸ்தலர் என்பது பணியே தவிர பட்டமல்ல...மடையனுங்களுக்கு எங்கே இதெல்லாம் விளங்கப்போவுது..? அப்போஸ்தலரே மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து பிழைத்தார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

சீட்டு மடியில் போடப்படும் காரியசித்தியோ கர்த்தரால் வரும். 

மத்தியா சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அப்போஸ்தலன் அல்ல... சொல்லவந்துட்டாருய்யா, இவுகளுக்கு சுவிசேஷம் அறிவிப்பது என்றால் அது அந்த 120 பேருக்குமான விஷயம் மட்டும்தான.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Others apostles who were called and sent we read in the Bible are:

Andronicus

Andronicus was the apostle described as being "of note among the apostles" (Rome16:7). He was one of the traveling evangelists who preached the Gospel from place to place and was likely one of the most prominent and successful envoys of the early Church.

Apollos

Apollos seems to have a remarkable ability to expound the scriptures (Acts18:24-28). Paul also includes him along with himself in the apostolate (1 Cor. 4:6, 9) and recommended him to Titus in Titus 3:13.

Barnabas

Although Barnabas was not one of the twelve, he stands out as the most important early apostle to the gentile after Paul. He is the central figure in the affair of the infant church (Acts11:19-15:41). He also received frequent mention in Paul's epistles (1 Cor. 9:6; Gal. 2:1, 9, 13; Col. 4:10).

Epaphroditus

It has been questioned whether Epaphroditus should be numbered among the apostles. But Paul answered this clearly inPhilippi2:25-30 by naming him as your messenger. The two Words, messenger and apostle, are the same original word in Greek.

James, the Lord's brother

Paul mentioned of this apostle in Gal, "But other of the apostles saw I none, save James the Lords brother". James was converted at the resurrection and joined the company of the believer. He was made an authority in theJerusalemchurch as bishop as implies in Acts 12:17.

Junias

Junias was among the first converts after Pentecost (Acts21:16). He is well known to the apostolate circle and is distinguished as apostle in the widest sense as missionary (1Cor. 15:7). He was faithful and sacrificial envoy of the Gospel as Paul's description of him testifies.

Matthias

Matthias was appointed to take the place in the apostolate which Judas vacated according to Acts 1:26. Apart from this, we do not know any that is authentic.

Paul

Paul is known as the apostle to the gentiles. The three missionary journeys of Paul and an account of cities and towns he visited are clearly indicated in Acts and Pauline epistles.

Because of his daring missionary journeys to the unknown land, Paul anticipated the early end of his earthly sojourn. Sentences like, "I have finished my course"; "I am now ready to be offered"; "To die is to gain"; "We that are in this tabernacles do groan," indicates that Paul was under no delusion as to the nearness of his possible martyrdom.

Tradition has always been cleared that he was beheaded in the reign of Nero inRomein A.D. 68.

Silas

The authority that makes Silas, "the merry singer" as has been called, among the apostate is Paul himself. Paul wrote about the "apostles of Christ," referring to Timothy, Silas and himself (1 Thess. 1:1, 2:6; 2 Thess. 1:1).

Silas was a faithful friend of Paul traveled together with him inPhilippi, Thessalonica and places to witnessed Christ.

Timothy

Timothy was not a Christian until he was converted probably during Paul's first visit to Iconium Lystra (2 Tim.3:10-11). He had a gentile father and a Jewish mother which made his witness to the gentile rather natural. Although a minor apostle alongside of a major apostle like Paul, Timothy nevertheless exercises an apostolic ministry.

And these are all the apostles named in the Holy Bible.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul: //ஏன் மத்தியாவைப்பற்றிய ஒரு விளக்கமும் இல்லை? //

 

ஏன் எல்லா அப்போஸ்தலர் பற்றிய எல்லா விளக்கமும் வேதத்தில் இருக்கா?? அப்போஸ்தலர் நடபடிகளில் முதலில் பேதுருவின் ஊழியம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் எல்லாம் பவுல் பற்றிதான் இருக்கிறதே தவிர வேறு எந்த அப்போஸ்தலர் பற்றியும் இல்லை. சுவிசேஷம் புறஜாதிகளுக்கு சென்றதை முக்கியப்படுத்திச் சொல்லும் வகையில் பவுல் செய்த ஊழியம் விரிவாக சொல்லப்படுகிறது. அதற்காக பிறர் அப்போஸ்தலர் இல்லை என்று ஆகி விடுமா?

பெரேயன்ஸ்:  //மத்தியா சீட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்கள், அவன் அப்போஸ்தலன் கிடையாது!!//

 

ஏன் அவர் என்ன உப்புக்கு சப்பாணியா? ஒரு கூடை நிறைய ஆப்பிள் இருந்து, ஒன்று கெட்டுப் போனால், இன்னொரு ஆப்பிளால்தான் அதை நிரப்ப வேண்டுமே தவிர தக்காளிப் பழத்தால் அல்ல!. அப்போஸ்தலர் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதால் மத்தியா அப்போஸ்தலரே.

//பவுலை கர்த்தராகிய கிறிஸ்து மற்ற அப்போஸ்தலர்களை அழைத்து அனுப்பியது போலவே அனுப்பினார்!! அப்போஸ்தலர் என்கிற வார்த்தைக்கு "சீட்டு போட்டு தேர்வு செய்யப்படுபவர்" கிடையாது!!//

அப்போஸ்தலர் என்ற வார்த்தைக்கு அனுப்பப்பட்டவன் என்றுதான் அர்த்தம். கூப்பிட்டும் அனுப்பலாம். சீட்டுப் போட்டும் அனுப்பலாம்.

//கர்த்தர் அனுப்பிய 12ம் அப்போஸ்தலரான பவுலையே வேதத்தில் எல்லா மொழிப்பெயர்ப்புகளும் சொல்லுவது போல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்!! உங்கள் கூட்டத்திற்கு இல்லாததை "சேர்த்து"க்கொள்வது கைவந்த கலையாயிற்றே!!//

 வேதத்தில் இருப்பதுதான் உங்க கண்ணுக்கு எப்பவும் தெரியாதே.

சபையில் 5 வகை ஊழியங்களை ஆண்டவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். சபை இருக்கும் வரை அப்போஸ்தர் இருப்பார்கள். அவர்கள் ஊழியமும் இருக்கும்.

II கொரிந்தியர் 11:13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

என்றால் நல்ல அப்போஸ்தலர்கள் என்று சிலர் இருக்கிறார்கள் என்று தெரிகிறதல்லவா?

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard