சகோ.Chill Sam நான் எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்லாமல் பக்கம் ப்க்கமாக எழுதிக்கொண்டுப் போகிறீர்கள். ஆண்டவரையும் அவரது ஆளுமையையும் நீங்கள் மட்டுமே இந்த உலகத்தில் ரசித்து ருசித்திருப்பீர்கள் போலும். இன்னும் நேரடியாகவே நான் கேட்கிறேன். கர்த்தரின் பண்டிகைகள் என்று நீங்கள் சொல்லுகிற யூதருடைய பண்டிகைகள் எல்லாமே நியாயப் பிரமாணத்தில் வருகின்றன. நியாயப்பிரமாணத்தின் படி ஒன்றைச் செய்தால் ஒன்றும் தவறாமல் அனைத்தையும் செய்து தீர வேண்டும். நீங்கள் திரும்பவும் நியாயப் பிரமாணத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பும் நியாயப் பிரமாணப் போதகராக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் கூறுகிறபடி கொண்டாட ஆரம்பித்தால் அடுத்து விருத்த சேதனம் முதற்கொண்டு எல்லாவற்றையும் செய்ய வேண்டுமே. என்ன சொல்கிறீர்கள்?
யூதர்களின் மீது ஒரு கிறிஸ்தவனுக்கு பாசம் எழும்புவது இயல்பானதுதான் என்றாலும் உங்கள் பாசம் அளவு கடந்தப் பாசமாக இருக்கிறது. அதை தயவு செய்து கிறிஸ்துவிடம் திருப்புங்கள்.
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.(ரோமர்14:13)
Chill SamArputharaj Samuel நீங்கள் குறிப்பிட்ட மூன்று வசனமும் இருதிறத்தாரையும் ஒப்புரவாக்கின தேவனின் அன்பை அறியாத மக்களுக்கு எதிராக பவுலடிகள் சொன்னது;
பழைய ஏற்பாட்டின் படி யூதருடைய பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஒருவன் பங்கேற்க விரும்பினால் அவன் அவசியம் விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டும் என்பதே நியமமாகும்; ஆனால் அது அவசியமல்ல,என்பதே பவுலடிகள் சொல்லும் இனிப்பான சேதி;
ஆனால் இந்த உலகத்தை ஸ்தாபித்தது முதற்கொண்டு ஆபிரகாம் ஈசாக்கை பலியிடத் துணிந்தது முதல் இன்னும் நோவா பேழையிலிருந்து வெளிப்பட்டது வரை பல்வேறு இனிமையான நினைவுகளை நோக்கி நம்மை இட்டுச்செல்லுவதே இந்த பண்டிகைக் காலம்;
கர்த்தர் மாறாதவர்,அவர் நியமித்த ஆண்டு கணக்கீடு ஒருபோதும் முடிந்துபோவதில்லை என்பதே நான் அறிந்த நற்செய்தி;அவர் ஒழுங்கின் தேவன்;அவர் நாளைப் பிறப்பிக்கிறார்,மாதத்தைப் பிறப்பிக்கிறார், வருடத்தையும் பருவங்களையும் அது சம்பந்தமான அனைத்து ஆசீர்வாதங்களையும் எழுதி கொடுத்திருக்கிறார்;
இப்போது ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது யாரென்று நீங்களே சொல்லுங்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எச்சரிக்கை:இது தமிழ் கிறிஸ்தவ தளத்தில் பதிக்கப்பட்டது.
நம்முடைய சமுதாயத்தில் பல்வேறுபட்ட கலாச்சார மக்கள் வாழுகின்றனர்;அவர்களுடைய விசேஷ தினங்களுக்கு நாம் வாழ்த்து கூறுவதும் நம்முடைய விசேஷ தினங்களுக்கு வாழ்த்துகூறுவதும் ஒருவித நாகரீகமாகும்; ஆனால் பரிசுத்த வேதாகமத்திலிருந்து மாத்திரமல்ல, நம்முடைய வேர்களிலிருந்தும் ஆதாரத்துடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைக்கு நாம் அந்நியராக இருப்பது வருத்தமளிக்கிறது;அதில் இணையாவிட்டாலும், அறிந்துகொள்ள முயற்சிக்காவிட்டாலும் வாழ்த்துகூறும் பெரிய மனதுகூட இல்லாத கிறிஸ்தவர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
அந்த அளவுக்கு யூத எதிர்ப்புணர்வு உரோம சாம்ராஜ்யத்தால் உண்டாக்கப்பட்டு அவர்களுடைய இரத்தத்தில் கலந்திருக்கிறது; யூதர்கள் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்றவர்கள் என்ற கசப்பு நம்மிடையே மறையும்வரை நமக்கும் மன்னிப்பே இல்லை..!
// "நான் பக்கம் பக்கமாக எழுதியதையெல்லாம் புறக்கணித்துவிட்டு நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே ஒரு வரியை மட்டுமே கேள்வியாக எழுப்பிக்கொண்டிருப்பது போலிருக்கிறது." //
சகோ. Chill Sam ”அந்த” ஒரே ஒரு வரிக்குப் பதில் கூறாமல் பக்கம் பக்கமாக எழுதினால் என்ன சொல்வது? நீங்கள்தான் வசனத்தின் மூலமாக எனக்கு ஒன்றுமே தெரியாது என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டீர்களே! உங்கள் பார்வையில் ஒன்றும் தெரியாதவனிடம் இருந்து எப்படி தெரிந்து கொள்ள முடியும்? நான் எழுப்பின கேள்வி வேதாகமப் பூர்வமானது என்று நம்புகிறேன். எழுப்பின நியாயமான கேள்விக்கு பதில் தராமல் வசனங்களை பயன்படுத்து ஜாடை பேச்சு பேசுவது சரியல்ல.
உண்மையிலேயே நான் இன்னமும் முழுதும் கற்றுணர்ந்தவன் அல்ல. இன்றளவும் ஒரு வேதாகம மாணாக்கனாகவே இருந்து வருகிறேன். அதே வேளையில் எல்லா போதனைகளையும் கருத்துகளையும் புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் அணுக முயற்சிக்கிறேன். அதுவே சரியான முறை என்றும் நம்புகிறேன்.
ஒரு கிறிஸ்தவன் பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் புதிய ஏற்பாட்டை வாசிப்பதை விட புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் பழைய ஏற்பாட்டை வாசிப்பதே தெளிவான அணுகுமுறை ஆகும். நீங்கள் கூறுவது சரி என்றால் அதற்கான நியாயமான வேதாகம விளக்கம் தாருங்கள்.
நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் வெற்றியே நாம் கிறிஸ்துவை, அவர் நமக்காகச் சிலுவையில் செய்து முடித்ததை எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதைப் பொறுத்துதானே?
ஆஹா...நீங்களும் வேத மாணவனா..? கூல் டவுன் பிரதர்... வசனத்தை வைத்து சண்டையிடுவது எனக்கும் பிடிக்காது என்பது உங்களுக்கே தெரியும்;எனவே பெரும்பாலும் வசனத்தைக் குறிப்பிடாமலே எழுதுவது என்னுடைய பாணி; ஆனாலும் ஒரு நல்ல நண்பரைப் புண்படுத்தும் வண்ணம் நான் குறிப்பிட்ட வசனம் அமைந்திருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன்;ஆனாலும் வசனம் நம்மிருவருக்கும் பொதுவானது என்பதால் அந்த வசனத்துக்கு என்னைத் தாழ்த்துகிறேன்;நீங்கள் நம்முடைய ஆண்டவரையும் அவருடைய ஆளுமையையும் இரசித்து ருசித்தால் மட்டுமே நான் சொல்லுவதெல்லாம் உங்களுக்குப் புரியும்;அதற்காகவே நான் எரேமியா புத்தகத்திலிருந்து (33:20&25)வசனத்தைப் போட்டு விளக்கம் கேட்டேன்;நான் சுற்றி வளைத்து சொல்லக் காரணமே இதிலுள்ள விசேஷித்த தன்மைதான்.
உதாரணமாக தமிழ்நாட்டில் ஆட்சி மாறியதும் அம்மா செய்த முதல் காரியம் என்ன, பண்டிகையை மாற்றினார் அல்லவா? பண்டிகை மட்டுமா அது, அது கால அட்டவணை சம்பந்தமானது அல்லவா? ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கே தன்னுடைய தலைமைச் செயலகம் ஆட்சி மொழி மற்றும் காலக் கணக்கீடு ஆகியன முக்கியமாக இருக்குமானால் சர்வ வல்லவருக்கு இன்னும் எத்தனை அதிகமாக இருக்கும்? இதனை யூதரின் பண்டிகைகள் மற்றும் சடங்குகளாக மாத்திரமே பார்க்கவில்லை, இது படைப்பு சம்பந்தமானது மாத்திரமல்ல, அவருடைய இரண்டாம் வருகை சம்பந்தமானது.
வேதத்தில் நள்ளிரவில் வருடம் பிறந்ததாகவோ அதற்காக ஆலயம் திறந்து வழிபாடு நடத்தியதாகவோ ஆதாரம் உண்டா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
வேதத்தை பின்பற்ற வேண்டும் எனில் வேதத்தின் வழியே தானே வேதாகமத்தைப் புரிந்து கொள்ள முடியும். யூதர்களின் வழிப் புரிந்து கொள்ளல் என்பது வேதாகமத்திற்கு ஏற்றதா? வேதாகமத்தை மொழி பெயர்க்க ஏன் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும்? தேவனுடைய வார்த்தை ஒரு போதும் யூதருடைய வார்த்தையாக அவர்களுடைய தனிச் சொத்தாக முடியாது.விவாதம் வேறு திசையில் திரும்புகிறது. விசயத்துக்கு வருகிறேன். கிறிஸ்துவைக் கொண்டாடாமல் யூதருடைய பண்டிகைகளைக் கொண்டாடிதான் என்ன பிரயோஜனம்?
நாம் இங்கே ஒரு ஓரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் போல இருக்கிறதே,நம்முடைய தளத்திலேயே இதனைத் தொடரலாமே...நான் பக்கம் பக்கமாக எழுதியதையெல்லாம் புறக்கணித்துவிட்டு நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே ஒரு வரியை மட்டுமே கேள்வியாக எழுப்பிக்கொண்டிருப்பது போலிருக்கிறது.
"கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.
ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்,
அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது." (ஏசாயா.29:10 13)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நான் கிறிஸ்து மட்டுமே நம் கொண்டாட்டமாகவும் பண்டிகையாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லுகிறேன். நீங்களோ நிழலாக இருந்தவை தொடர வேண்டுமா அல்லது பாபிலோனிய மார்க்கத்தில் இருந்து ச்பைக்குள் நுழைந்த பண்டிகைகள் போதுமா என்று கேட்கிறீர்கள். எல்லா விடயத்திலும் நீங்கள் யூதர்களையே பின்பற்ற விரும்புகிறீர்களா?
நண்பரே நான் யூதரையல்ல,வேதத்தையே பின்பற்ற விரும்புகிறேன்; வேதம் அருளப்பட்ட காலத்துக்கும் தற்போதைய காலத்துக்குமான தொடர்புகளை அறிய விரும்புகிறேன்; அதனை யூதர் வழியே அறிந்து மகிழ்கிறேன்; யூதர் நமக்கு அந்நியர் என்பீர்களா? யூதருடைய வேதத்தை அவர்களுடைய அனுமதியில்லாமல் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு அதற்கு அவரவர் இஷ்டப்படி வியாக்கியானம் செய்வதெல்லாம் போக அவர்களுடைய காலக் கணக்கீட்டு முறையையும் குறை சொல்லுவீர்களா?
"உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால்..." (லூக்கா 19:43)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நீங்கள் கூறுகிற ஒரு விடயம் தவறு என்று சொல்லுகிற நான் ஏன் உங்களை உளவு பார்க்க வேண்டும். ஒருவேலை உங்கள் மனதில் நீங்கள் அப்படிப் போலும். பெரிய மனது :(
ஏழு பண்டிகைகளின் பெயரைச் சொல்லும் போதே அவைகள் கிறிஸ்துவில் எப்படி நிறைவேறியுள்ளன, பொருந்துகின்றன என்பதை சொல்லிவிடலாமே. அடிப்படையான காரியத்தைக் கொண்டு ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுகிறீர்களே என்ற ஆதங்கத்தில் தான் கேட்டேன். உதாரணமாக, .
சிலதை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது, நண்பரே; எழுத்தாளரான உங்களுக்குத் தெரியாததல்ல,நம்முடைய சிந்தையில் இருப்பதை கால நேர சூழ்நிலையினைக் கருத்தில் கொள்ளாது அங்குமிங்குமாக சிந்தினால் நாம் சொல்லவரும் கருத்தானது சிதைந்து போகுமே..!
ஆயினும் இதோ நீங்கள் என்னை மிக அருமையாகக் கணித்திருக்கிறீர்கள், அந்த சந்தோஷம் ஒன்றே போதும், அடுத்த ஒரு வருடத்துக்குத் தேவையான மகிழ்ச்சியில் நான் நிறைந்துவிட்டேன், ஆம்,"ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுகிறேன்", இதைவிட என்னை எளிமையான முறையில் வேறு யாரும் பாராட்டமுடியுமா..?
எனக்கு நல்லதொரு கட்டுரைத் தலைப்பைக் கொடுத்தமைக்காக நன்றி... "ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுதல் என்றால் என்ன..?"
ஏழு பண்டிகைகளைக் குறித்த உங்கள் அறிவு அபாரம்.. .நான்கு பண்டிகைகளுக்கு மட்டுமே விளக்கம் சொன்ன நீங்கள் மற்ற மூன்றுக்கு விளக்கம் சொல்லாமல் நழுவியதில் ஏமாற்றம்..!
சரி நீங்கள் சொன்னதிலிருந்தே கேட்கிறேன், ஆண்டவருடைய தியாகத்தை நாம் நினைவுகூற பஸ்கா பண்டிகையைக் குறித்த போதனை எந்த வகையிலாவது பாதிக்குமா, அலலது கத்தோலிக்க மார்க்கத்தால் அருளப்பட்ட லெந்து பண்டிகையே போதுமா..?
வாரங்களின் பண்டிகை என்ற பெயரில் ஐம்பது நாட்கள் கொண்டாடப்பட்ட யூதரின் பண்டிகையில் இல்லாத மேன்மை கத்தோலிக்கம் அருளிய லெந்து பண்டிகையில் கிடைக்கிறதா..?
ஏனெனில் யூதரின் பண்டிகைக் கொண்டாட்டத்தை மந்தப்படுத்தவே அதற்கு முன்னதாகவே கொண்டாடி முடிக்கும் வண்ணமாக வேறு சில சடங்குகளுடன் "லெந்து காலம்" தரப்பட்டது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் வந்து பதிவிட சிலருக்கு கௌரவம் தடுக்கிறது; ஆனாலும் நாம் கௌரவம் பாராது, பெரிய மனது பண்ணி அவர்களோடு கலந்துரையாடி, அந்த கருத்துக்களை சிந்தாமல் சிதறாமல் இங்கே கொண்டு வந்து சேர்க்கும் அரும்பணியைச் செய்துகொண்டிருக்கிறோம். அவ்வாறு நம்முடைய தளத்தைப் புறக்கணிக்கும் நண்பர்களில் ஒருவரான திரு.அற்புதம் அவர்களின் கருத்துக்கள் வதனநூலில் எனது பக்கத்தில் பதிக்கப்பட்டுள்ளது, அதனை இங்கே பகிர்கிறேன்.
இங்கேயும் அங்கேயும் அடியேன் பதித்திருந்த சில எளிமையான வாதங்களுக்குரிய பதிலை இதுவரை தராத நண்பர்கள் பலர் அமைதியாக இருக்க நண்பர் அற்புதம் அவர்களாவது மனமுவந்து சில வரிகள் எழுதியது குறித்து அதிகமகிழ்ச்சி...
நீங்கள் கூறும் வேதாகமப் பண்டிகைகளை அப்போஸ்தலர்கள் ஏன் ஆசரிக்கவில்லை, உபதேசமாகக் கூட கூறவும் இல்லை? ஏனெனில் அவர்களுக்கு கிறிஸ்துவே கொண்டாட்டமாக இருந்தார். நமக்கு கொண்டாட சில பண்டிகைகள் தேவைப்படுகின்றன. இஸ்ரவேலருக்கு ஏழு பண்டிகைகள் கொண்டாட வேண்டுமென்று தேவன் கூறினதை லேவியராகமத்தில் வாசிக்கிறோம். அவை வருங்காரியங்களுக்கு நிழலாயிருந்தன. அவை கிறிஸ்துவைப் பற்றினவை. கிறிஸ்து வந்த எல்லாவற்றையும் செய்து முடித்த பின் அவை தானாகவே Void ஆகிவிடுகின்றன.
நண்பரே நிழல் என்பதால் கேட்கிறேன், நிழல் என்பது உண்மையின் பிரதிபலிப்புதானே, அப்படியானால் நிழல் ஒழிந்தது என்றால் உண்மையே ஒழிந்தது என்று ஆகுமே..? எனவே நிழலை நிஜமென்று எண்ணாமல் நிழலின் நிஜத்தையறிய வேண்டுமென்றே வேதம் சொல்லுகிறது..! அதைவிட கொடுமை,நிழலையும் நிஜத்தையும் தொலைத்துவிட்டு கட்டாயத்தின்பேரில் புறசாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக்கொண்டு அதனை மேன்மைப்படுத்தும் ராஜ்யத்தின் புத்திரர்..!
"புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்." (எரேமியா.10:2)
இஸ்ரவேலரின் ஏழு பண்டிகைகளும் கிறிஸ்துவில் நிறைவேறிவிட்டது என்பதை உங்களால் நிரூபிக்கமுடியுமா,நண்பரே..?
அப்படியல்ல சகோ. Chill Sam . நிழலைப் பார்த்துக் கொண்டிருக்காமல் நிஜத்தை பாருங்கள் என்று சொல்லுகிறேன். அவை வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது என்று வேதம் சுட்டிக் காட்டும்போது, அவற்றின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது என்று சொல்லும் போது..... இல்லை இல்லை என்ன இருந்தாலும் நிழல் நிழல்தான். அதில் தான் அதிக ஆசீர்வாதம் என்று சொல்ல முடியுமா. நிஜம் இருந்தால் தானே நிழல் உண்டாகும். அந்த நிஜம் (இயேசு ) வருகிற வரைக்கும் நிழல் அவர்களுக்குத் தேவையாயிருந்தது. அதன் பின் இயேசுவே வந்த பின்னர் நிழல் எதற்கு?
ஏழு பண்டிகைகள் குறித்து உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா என்ன?
// ஏழு பண்டிகைகள் குறித்து உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா என்ன? //
அண்ணாச்சி, நாம் ஒருவரையொருவர் உளவு பார்த்துக்கொண்டிருக்கிறோம்; உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள், உங்கள் மூலம் நான் எதையாவது அறிந்துகொள்ளவே ஆவலாக இருக்கிறேன்; எனக்குத் தெரிந்ததெல்லாம் மிகமிக சாதாரணமாகவும் தேவையற்றதாகவும் கூட இருக்கலாம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Arputharaj Samuelயூதர்களைப் பின்பற்றுவதுதான் ஆதிநிலை ஏகுதல் என்று சொல்ல வருகிறீர்களா சகோ.சில்சாம்? நீங்கள் கொடுத்த கட்டுரை லின்க் கொடுக்கும் தகவல்கள் நீங்கள் சொல்பற்றிற்கு போதுமான ஆதாரமாக இல்லை. ஏற்கனவே கி.பி மற்றும்ம் கி.மு என்று இருந்ததை மாற்றிவிட்டார்கள். வேதாகமம் காட்டும் வழிக்கு முரணானதாக இருக்கிறது உங்கள் கருத்து.
ChillSamநான் அவ்வாறு சொல்லவில்லையே,ஆண்டவரே எல்லாவற்றையும் சொல்லிவிடவில்லை,நண்பரே;ஆய்ந்தறிய வேண்டியது ஆவி பெற்றோரின் உரிமையாகும்;இதே கேள்வியை நீங்கள் சென்ற வருடமும் எழுப்பினீர்கள்,எனவே இந்த ஒரு வருடமாக அதுகுறித்து ஏதும் ஆராய முற்படவில்லை என்பது விளங்குகிறது,மாறாக நானே எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்,ஆனால் எனக்கோ சர்ச்சையில் சிக்கிக்கொள்ள மனமில்லை;ஆனாலும் ஒரு காரியத்தை மட்டும் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்;பண்டிகைகளையும் சடங்குகளையும் நிறுத்திவிட்டு இன்னொரு அமைப்பில் நாம் இணைந்துகொள்ளுவது தான் மெய்யான கிறிஸ்தவம் என்கிறீர்களா?
பண்டிகைகளையும் சடங்குகளையும் ஒழித்துவிட்ட தேவன் ஒழிந்துபோகவில்லை;அவர் நம் மத்தியிலே சிருஷ்டிகராக இருக்கிறார்;அவர் சிருஷ்டித்த சர்வமும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறது;அதில் நாமும் இருக்கிறோம்;இதுகுறித்து நான் ஒரு முழு கட்டுரையைப் படைத்தால் அதில் கேள்விக்கு இடமிராது என்பது உண்மையே;ஆனாலும் அதில் எனக்கு ஏனோ விருப்பமில்லை. உதாரணமாக, நேற்று மாலை எனது நண்பர்களிடம் ஒரு அடையாளத்துடன் இந்த விசேஷித்த நாளைக் குறித்து சொல்லி வேதத்தின் ஆதாரத்துடன் ஆராதித்தோம்;இன்று காலை அந்த அடையாளம் நிறைவேறியது, ஆம் இந்த நாளில் நாம் செய்யும் ஆராதனையை அங்கீகரிக்க ஆண்டவர் வானத்திலிருந்து தம்முடைய நல்ல பொக்கிஷசாலையைத் திறந்து மழையின் மூலம் நம்மோடு பேசுவார்;இது ஆதிமுதலே அவரை நம்பியிருக்கும் பரிசுத்தவான்களுக்கும் அவருக்குமான அடையாளமாக இருந்தது;இது இந்த வருடம் மாத்திரமல்ல,இந்த நியமத்தை என்றுமுதல் நினைவுகூருகிறோமோ அன்று முதல் அதாவது 2004 ம் வருடம் முதலாக நிறைவேறி வருகிறது;அன்றிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சத்தைக் குறித்த் செய்தியை நாங்கள் கேள்விப்படவில்லை;நான் ஒரு வசனத்தைப் பதிக்கிறேன்,அதற்கான பொருளை சொல்லுவீர்களா..?
குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,
அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.
வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்,
அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். "(எரேமியா.33:20,21,25,26)
நான் சொல்லுகிறேன், யூதருடைய புனிதமான தெய்வீக ஒழுங்குகளை அங்கீகரிக்க மனமில்லாத அந்நிய சாம்ராஜ்யங்கள் அவர்களிலிருந்து பிரிந்துவந்த யூதக் கிறித்தவர்களையும் யூதரல்லாத கிறித்தவர்களையும் வஞ்சித்து மதம் மாற்றியது;அப்போஸ்தலர்களால் சபை நடத்தப்பட்ட முதல் நூற்றாண்டு வரை எல்லாம் சரியாகவே இருந்தது; அதன்பிறகு சபையானது உபத்திரவங்களைத் தாக்குபிடிக்கமுடியாமல் சிதறிய சபையானது போலியாகக் கிடைத்த சில சலுகைகளை மத சுதந்தரம் என்று நினைத்தது;இதனால் வேறு சில புதிய முறைமைகளுக்கு தங்களை விற்றுப்போட்டார்கள்; அதில் ஒன்று தான் கத்தோலிக்க மார்க்கம் அமைத்துக்கொடுத்த கால அட்டவணையைப் பின்பற்றுவது;அதில் குறித்த காலத்தில் இராக்காலமும் பகற்காலமும் உண்டாகாதபடி ஆண்டவருடைய ஆதி பிரமாணம் மாற்றப்பட்டது;அனைத்து நியமங்களும் தலைகீழ் மாற்றத்துக்குட்பட்டது; இதைக் குறித்து தானியேல் தீர்க்கனும் சொல்லவில்லையா,
"உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்." (தானியேல்.7:25)
யூதரையும் யூதக் கலாச்சாரத்தையும் முற்றிலும் வேரறுக்கச் செய்யவே (மேசியாவின்) எதிரிகள் இந்த சூழ்ச்சியை செய்தனர்; இயேசுவானவரைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்க மறுக்கும் (மேசியாவின்) எதிரிகளும் கூட இந்த அமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்பட்டிருப்பது ஆச்சரியமாகும்;ஆனால் வேதமோ இன்றளவும் மாற்றப்படவில்லை;வேதத்தைப் புரிந்துக்கொள்ள முதலில் யூதரின் பண்டிகைகளையும் கலாச்சாரத்தையும் குறித்து அறிந்திருக்கவேண்டுமென்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்;இவை பண்டிகைகள் மற்றும் சடங்குகளை ஆசரிப்பதைக் குறித்த காரியமல்ல,இது சிருஷ்டிகரைக் குறித்த படைப்பின் இரகசியமாகும்;இது குறித்து நான் அதிகம் எழுதவேண்டியிருக்கும்;ஆனாலும் நான் இதுவரை எந்த கொள்கையையும் அறிவித்து இங்கே செயல்படாத காரணத்தால் என்னுடைய பாணியை மாற்றிக்கொள்ளாமல் வழிப்போக்கனைப்போல இருக்கிறேன்,வழிப்போக்கன் எதையும் ஸ்தாபிக்கவேண்டிய அவசியமில்லை,அவன் தன்னை அனுப்பியவரைத் தவிர யாருக்கும் கட்டுப்பட்டவனும் அல்ல..!
இவை யூதப் பண்டிகைகளா அல்லது பரிசுத்த வேதாகமத்தின் பண்டிகைகளா..,என்று மாத்திரம் யோசியுங்கள்,எல்லாம் புரியும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அண்மையில் ஃபேஸ்புக் (facebook)' கில் யூதரின் பண்டிகையான சம்பந்தமான ஒரு வாழ்த்து அட்டையை எனது பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்;அது சம்பந்தமாக நண்பர்கள் பல்வேறு மாற்றுக்கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்;அதனை இங்கே சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறேன்.
இன்று பரிசுத்த வேதாகமம் கூறும் மெய்யான புதுவருடப் பிறப்பு ஆகும்; இத்தனை காலம் மறைக்கப்பட்டிருந்ததுடன் அந்நியமாகவும் எண்ணப்பட்டது; வழக்கமாக கிறிஸ்தவர்களாகிய நாம் இதனை யூதர்களின் பண்டிகை என்றே நினைத்திருந்தோம்.
ஆனால் இது யூதர்களுடையது மாத்திரமல்ல, பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது என்ற தெளிவை தற்காலத்தில் பெற்றிருக்கிறோம்; இதன் விளைவாக யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவர்களால் இன்றளவும் ஆசரிக்கப்பட்டுவரும் பண்டிகைகளின் முக்கியத்துவத்தையும் அவை எவ்வாறு கிறிஸ்துவின் நிறைவேறியது அல்லது நிறைவேறப்போகிறது என்பதையும் ஆய்ந்தறியும் நல்வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டியிருக்கிறது.
Jeyaseelan Jawaharthat is fine...but we r not supposed to follow the old tradition according to the new testemonent...that time god had lot of reasons to bring such tradition to jews.jews had no colture,no king ,no traditional customs....so god brought all those things...these customs will not give anything to the spritiual person who is in christ..but it will be very useful for anti christ who is going to come..because anti christ will deny jesus is the son of god....he will deny al thosee things which we got spritually from god...so please dont give importance to the jewish tradition. st paul clearly says.." why u still giving importance to the days ,years and months.i think my effort will be in vain''......he mentioned the same traditions only...please dont do it.sorry for my bad tranlation...
Yom Kippur and the Gospel: The Blood that makes Atonement.
Jeyaseelan Jawaharok.what u r trying to say? jesus said '' beieve the gospel''/............no problem.he preached among the jews(isrelies) community only.... so he said like that/..........it does not mean every one follow jews tradituion;;
ChillSamநானாக எதையும் சொல்ல முயற்சிக்கவில்லை, நண்பரே...நான் கொடுத்துள்ள லிங்க்'கை படித்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்களேன்... நான் பண்டிகை கொண்டாடவோ சடங்குகளைச் செய்யவோ உங்களை அழைக்கவில்லை என்பதை மாத்திரம் நினைவில் கொள்ளவும்.
ChillSamஇஸ்லாத்தின் ஆதாரம் குரான் எனில் கிறிஸ்தவத்தின் ஆதாரம் கத்தோலிக்கம் எனில் பரிசுத்த வேதாகமத்தின் பெருமைக்குரிய மூத்த குடிமக்கள் வானத்தின் கீழெங்கும் பரவியிருக்கும் யூத இனம் மாத்திரமே. அவர்கள் மாத்திரமே 5772 எனும் மிகப் பெரிய எண்ணுள்ள வருடக்கணக்கை வைத்திருக்கிறார்கள்;ஒரு சுதந்தர தேசத்துக்கு காலக் கணக்கும் வருடக் கணக்கும் கலாச்சாரமும் செலாவணியும் எத்தனை கௌரவமிக்கது அல்லவா..? எனவே யூதப் பண்டிகைகளின் வழியே சென்று முழு வேதத்தையும் கற்பதும் கற்பிப்பதும் எளிதாகும்;எனவே யூதர்களின் பாரம்பரியம் என்று தயவுசெய்து பிரித்துப்பார்க்கவேண்டாம்;
ஏனெனில் அனைத்தும் கிறிஸ்துவில் நிறைவேறிவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் இன்னும் நிறைவேறாத விரைவில் நிறைவேற இருக்கும் மூன்று முக்கிய காரியங்கள் உண்டு;அதன் இரகசியம் யூதப் பண்டிகைகளிலேயே மறைந்துள்ளது.
Jeyaseelan Jawaharplease dont connect islam to christianity,,,,,it is the religion of anti christ...Anti christ deny jesus is the son of god and jesus Resurrection& crucification acccording to the bible...islam deny jesus is the son of god and deny jesus crucification and resurrection.Muslim not worship our father...but the fallen angel .he sits in the place og god and make everone worship him..
Dave WisdomThough we need not follow the customs & rituals of the Jews, having a knowledge of the festivals of the Israelite people will surely help us understand the seasons of the Bible ( as Bro.Chill Sam said ). We follow the roman calender & celebrate the roman new year & share wishes on that day. what's more, we celebrate the birth of our LORD on a pagan roman holiday ( every sensible Christian knows that our LORD was not born on 25th Dec ). Brother, though we are not bound by the laws of the Old Testament, what is the sin in following the New Year on Rosh Hashanah. Just for fun: By the way we Tamilians are forced to change Tamil New Year every five years.
Happy Rosh Hashanah to Bro.ChillSam & all my Jewish brothers. Have a Blessed Year.
எனக்கருமையான நண்பரே, உங்கள் ஊருக்கு என்னை அழைத்துச் செல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம், எனக்கு ஒரு பெலவீனம் உண்டு, நான் உங்கள் வீட்டுக்கு வரும்வரை வழியில் பார்க்கும் ஒவ்வொரு வீட்டையும் உங்கள் வீடாக இருக்குமோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டே வருவேன்,ஆனாலும் எனது கவனம் உங்கள் மீதே இருக்கும், நீங்கள் உங்கள் வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் வரையிலும்..!
எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால், நாம் ஒரு குறிப்பிட்ட உண்மையைத் தேடிச்செல்லும் போது அதனை சற்றும் ஆராயாமல் மறுக்கக்கூடாது சரியா..? ஆம்,இன்றைய கிறிஸ்தத்தின் பின்னணியிலிருப்பது கத்தோலிக்கமே; அதனை ஆதிநிலை ஏகச் செய்வதற்கே வார்த்தையாகிய பட்டயத்தை ஆவியானவர் சுழற்றிக்கொண்டிருக்கிறார்; வசனப் புரட்சி வெடித்த காரணத்தினாலேயே இன்றைக்கும் பாரம்பரிய கட்டுகள் தளர்ந்துகொண்டிருக்கிறது; நாம் யார் நாம் யாருக்கு சொந்தம் யாரிடம் சேவகம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் காலந்தள்ளுவது எகிப்திலிருந்த இஸ்ரவேலரையே நினைவுபடுத்துகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)