நமீதா எனும் பதினான்கு வயதுள்ள சிறுமி லுகேமியா எனும் கொடூரமான இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள்;அவளுடைய மூளைப் ப்குதியில் fungusஎனப்படும் பூஞ்சை பரவியிருப்பதால் வலது கண் பார்வையிழந்திருக்கிறாள்;மூளை செயலிழந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது.
கர்த்தருடைய பெரிதான கிருபையால் மூளையில் பூஞ்சை பரவுவது தடுக்கப்படுமானால் மீண்டும் வலதுகண்ணில் பார்வை திரும்ப வாய்ப்புண்டு; எனவே நம்முடைய தள நண்பர்கள் அனைவரும் இன்றிரவு நமீதாவுக்காக உருக்கத்துடன் வேண்டுதல் செய்யவும் இந்த செய்தியினை ஆங்கிலத்திலும் இன்னும் பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்து நண்பர்களுக்கு கடத்தவும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்போடு வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)